search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஐபோன் எஸ்.இ. கோப்புப்படம்
    X
    ஐபோன் எஸ்.இ. கோப்புப்படம்

    மேம்பட்ட ஆன்டெனாவுடன் உருவாகும் ஐபோன் எஸ்.இ. 2

    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எஸ்.இ. 2 ஸ்மார்ட்போனி்ன் அம்சங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.



    ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த தலைமுறை ஐபோன் எஸ்.இ. ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்கள் உண்மையாகும் பட்சத்தில் புதிய ஐபோன் எஸ்.இ. மாடல் அடுத்த ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.

    இதனிடையே புதிய ஐபோன் எஸ்.இ. 2 மாடல் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. அவ்வாறு புதிய ஐபோன் எஸ்.இ. 2 மாடலில் மேம்பட்ட ஆன்டெனா கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இதில் லிக்விட் க்ரிஸ்டல் பாலிமர் ஆன்டெனா டிசைன் கொண்டிருக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 

    இதற்கு தேவையான ஆன்டெனா உபகரணங்களை கரியர் டெக்னாலஜீஸ் மற்றும் முராடா மேனுஃபேக்ச்சரிங் நிறுவனங்கள் உற்பத்தி செய்து வழங்கும் என கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து ஆப்பிள் தனது ஐபோன் எஸ்.இ. 2 மாடலை அடுத்த ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கலாம்.

    ஐபோன் எஸ்.இ. கோப்புப்படம்

    புதிய ஆன்டெனா வடிவமைப்பை பொருத்தவரை புதிய ஐபோன் எஸ்.இ. 2 மாடலில் ஏ13 சிப்செட் வழங்கப்படலாம். இதே சிப்செட் தற்சமயம் விற்பனையாகும் ஐபோன் 11 சீரிஸ் மாடல்களிலும் வழங்கப்படுகிறது. இத்துடன் புதிய ஐபோன் மாடலில் 3 ஜி.பி. ரேம், 4.7 இன்ச் டிஸ்ப்ளே, டச் ஐ.டி. ஹோம் பட்டன் வழங்கப்படலாம்.

    இத்துடன் புதிய ஐபோன் சில்வர், ஸ்பேஸ் கிரே மற்றும் ரெட் என மூன்றுவித நிறங்களில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. புதிய ஐபோன் தவிர ஆப்பிள் நிறுவனம் ஐபேட் ப்ரோ, புதிய மேக்புக், ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி ஹெட்செட் உள்ளிட்டவற்றையும் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×