search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ரியல்மி 5 ப்ரோ - கோப்புப்படம்
    X
    ரியல்மி 5 ப்ரோ - கோப்புப்படம்

    பன்ச் ஹோல் டிஸ்ப்ளேவுடன் உருவாகும் ரியல்மி 6 ஸ்மார்ட்போன்

    ரியல்மி பிராண்டின் புதிய ரியல்மி 6 ஸ்மார்ட்போனின் நேரடி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.



    ரியல்மி 5 ஸ்மார்ட்போனின் அடுத்த தலைமுறை மாடலாக ரியல்மி 6 உருவாகி வருவதை உறுதிப்படுத்தும் வகையில், அதன் நேரடி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. 

    நவம்பர் 20 ஆம் தேதி ரியல்மி X2 ப்ரோ ஸ்மார்ட்போனையும், டிசம்பரில் ரியல்மி XT ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய ரியல்மி திட்டமிட்டுருக்கிறது. இந்நிலையில், ரியல்மி 6 ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி ரியல்மி 6 போனின் ரீடெயில் பாக்ஸ் மற்றும் நேரடி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

    ரியல்மி 5 மற்றும் ரியல்மி 5 ப்ரோ ஸ்மார்ட்போன்களில் நான்கு கேமரா செட்டப் வழங்கப்பட்ட நிலையில், ரியல்மி 6 ஸ்மார்ட்போனில் ஐந்து கேமரா செட்டப் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இணையத்தில் வெளியாகி இருக்கும் ரியல்மி 6 ரீடெயில் புகைப்படத்தின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த முடியாது. எனினும், இதன் விலை இந்திய மதிப்பில் ரூ. 10,000 வரை நிர்ணயிக்கப்படலாம்.

    ரியல்மி 6 லீக்

    இணையத்தில் வெளியாகி இருக்கும் புகைப்படங்களின் படி ரியல்மி 6 ஸ்மார்ட்போனில் பன்ச் ஹோல் ரக டிஸ்ப்ளே வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. லீக் ஆகியிருக்கும் புகைப்படங்களில் ரியல்மி 6 ஸ்மார்ட்போனின் மத்தியில் பன்ச் ஹோல் இடம்பெற்று இருக்கிறது. இதை சுற்றி பெசல்கள் தடிமனாக காணப்படுவதால் இது பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என தெரிகிறது.

    இதுதவிர ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டின் ஏ.ஒ.எஸ்.பி. பதிப்பை கொண்டிருப்பதும் தெரியவந்துள்ளது. இது கூகுளின் மொபைல் இயங்குதளம் ஆகும். புகைப்படங்களில் கலர் ஒ.எஸ். வெர்ஷன் மறைக்கப்பட்டு இருக்கிறது. இவைதவிர ஸ்மார்ட்போன் அம்சங்கள் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.

    புகைப்படம் நன்றி: 91mobiles
    Next Story
    ×