search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    சாம்சங் டபுள்யூ20 5ஜி
    X
    சாம்சங் டபுள்யூ20 5ஜி

    சாம்சங் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வெளியீட்டு தேதி

    சாம்சங் நிறுவனம் தனது புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் இந்த தேதியில் அறிமுகம் செய்யப்படும் என அறிவித்துள்ளது.



    சாம்சங் டபுள்யூ20 5ஜி ஸ்மார்ட்போன் நவம்பர் 19 ஆம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. இதனை சீனா மொபைல் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது. சாம்சங் டபுள்யூ20 5ஜி இரட்டை ஸ்கிரீன் கொண்ட ஃப்ளிப் போன் ஆகும்.

    இது கடந்த ஆண்டு சாம்சங் அறிமுகம் செய்த டபுள்யூ2019 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் ஆகும். எனினும், சாம்சங் டபுள்யூ20 5ஜி மாடல் புதிய வடிவமைப்பு கொண்டிருக்கிறது. சாம்சங் நிறுவனத்தின் முந்தைய டபுள்யூ சீரிஸ் போன்களில் இரட்டை டிஸ்ப்ளே மற்றும் ஃப்ளிப் வசதி கொண்டிருந்தது.

    சாம்சங் டபுள்யூ20 5ஜி

    ஸ்மார்ட்போனின் வெளிப்புறம் மற்றும் உள்புறங்களில் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கும். இது ஃப்ளிப் வடிவமைப்பில் மடிக்கக்கூடிய போன் ஆகும். முன்னதாக இதேபோன்ற வடிவமைப்பு கொண்ட மொபைல் போனினை சாம்சங் கடந்த வாரம் நடைபெற்ற சாம்சங் டெவலப்பர் நிகழ்வில் அறிமுகம் செய்தது.

    புதிய மாடல் புளூம் என்ற குறியீட்டு பெயரில் SM-F700F எனும் மாடல் நம்பரில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இதில் 6.7 இன்ச் மடிக்கக்கூடிய டிஸ்ப்ளேவும், 1 இன்ச் கவர் டிஸ்ப்ளே வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மோட்டோரோலா நிறுவனம் ஏற்கனவே புதிய ரேசர் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை நவம்பர் 13 ஆம் தேதி அறிமுகம் செய்வதாக அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×