search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    டி.சி.எல். மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்
    X
    டி.சி.எல். மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்

    7.2 இன்ச் ஸ்கிரீன் கொண்டிருக்கும் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்

    டி.சி.எல். நிறுவனத்தின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.



    சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான டி.சி.எல். 2020 சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் தனது புதிய ஸ்மார்ட்போன் மாடல்களின் விவரங்களை வெளியிட்டுள்ளது.

    அந்த வகையில் டி.சி.எல். நிறுவனம் டி.சி.எல். 10 ப்ரோ, டி.சி.எல். 10 5ஜி, டி.சி.எல். 10எல் பெயர்களில் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்திருக்கிறது. இத்துடன் தனது முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்களையும் டி.சி.எல். அறிவித்துள்ளது.

    சிலமாதங்ளுக்கு முன் டி.சி.எல். நிறுவனம் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்களை வெளியிட்டது. இந்த ஸ்மார்ட்போன் மூன்று விதங்களில் மடிக்கக்கூடிய திறன் கொண்டிருக்கும் என டி.சி.எல். தெரிவித்திருந்தது. 

    டி.சி.எல். மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்

    தற்சமயம் வெளியாகியிருக்கும் தகவல்களின் படி புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் 7.2 இன்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என்றும் இது பிளாஸ்டிக் மூலம் உருவாக்கப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த சாதனத்தில் பிளாஸ்டிக் மூலம் உருவாக்கப்பட்ட பெசல்கள் காணப்படுகிறது. 

    மேலும் டி.சி.எல். மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் எப்படி மடித்தாலும் தாங்கும் உறுதித் தன்மை பெற்றிருக்கும் என கூறப்படுகிறது. இதனை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்த முடியும் என தகவல் வெளியாகியுள்ளது. சிறப்பம்சங்களை பொருத்தவரை நான்கு பிரைமரி கேமராக்கள், ஆண்ட்ராய்டு இயங்குதளம் மற்றும் 5ஜி வசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    கேமராக்களை பொருத்தவரை இந்த ஸ்மார்ட்போனில் பிரைமரி சென்சார், சூப்பர் வைடு ஆங்கில், மேக்ரோ லென்ஸ், லோ லைட் சென்சார் உள்ளிட்டவை வழங்கப்படலாம். 5ஜி வசதி வழங்கப்படுவதால் இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 765 அல்லது ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர் வழங்கப்படலாம்.
    Next Story
    ×