search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஹானர் 9எக்ஸ் டீசர்
    X
    ஹானர் 9எக்ஸ் டீசர்

    விரைவில் இந்தியா வரும் ஹானர் ஸ்மார்ட்போன்

    ஹானர் பிராண்டின் புதிய ஸ்மார்ட்போன் ஹானர் 9எக்ஸ் என்ற பெயரில் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.



    ஹானர் பிராண்டு இந்திய சந்தையில் இந்த ஆண்டிற்கான தனது முதல் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஹானர் இந்தியா தலைவர் சார்லெஸ் பெங் ஹானர் 9எக்ஸ் ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு விவரங்களை வெளியிட்டு இருக்கிறார்.

    புதிய ஸ்மார்ட்போன் வெளியீடு ப்ளிப்கார்ட் தளத்தில் டீசர் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு இறுதியிலேயே இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், இதன் வெளியீடு தாமதமானது.

    ப்ளிப்கார்ட் தளத்தில் வெளியாகி இருக்கும் டீசரில் ஹானர் 4எக்ஸ் முதல் 8எக்ஸ் ஸ்மார்ட்போன்கள் வரிசைப்படுத்தப்பட்டு இருக்கிறது. ஹானர் 9எக்ஸ் ஸ்மார்ட்போன் ஏற்கனவே சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. சீனாவில் இந்த ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்பட்டது.

    ஹானர் 9எக்ஸ் டீசர்

    ஹானர் 9எக்ஸ் ஸ்மார்ட்போனில் ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, பாப் அப் கேமரா போன்றவை முக்கிய அம்சங்களாக இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் தவிர ஹானர் பிராண்டு ஹானர் மேஜிக் வாட்ச் 2 மற்று்ம மேஜிக் புக் லேப்டாப் போன்ற சாதனங்களையும் இந்தியாவில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சீன சந்தையில் வெளியாகி இருக்கும் ஹானர் 9எக்ஸ் ஸ்மார்ட்போனில் 6.59 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 2340x1080 பிக்சல் டிஸ்ப்ளே, கிரின் 810 ஆக்டா கோர் பிராசஸர், 48 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் முன்புறம் 16 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

    4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கும் ஹானர் 9எக்ஸ் ஸ்மார்ட்போனில் ப்ளூடூத் 5, ஜி.பி.எஸ்., டூயல் சிம் ஸ்லாட், ஆண்ட்ராய்டு பை சார்ந்த EMUI 9.1.1 இயங்குதளம் வழங்கப்பட்டு இருக்கிறது.
    Next Story
    ×