search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    கேலக்ஸி ஃபோல்டு 2 லீக்
    X
    கேலக்ஸி ஃபோல்டு 2 லீக்

    கேலக்ஸி ஃபோல்டு 2 ஸ்மார்ட்போன் புதிய விவரங்கள்

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஃபோல்டு 2 ஸ்மார்ட்போனின் புதிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.



    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஃபோல்டு 2 ஸ்மார்ட்போன் அடுத்த மாதம் 11-ம் தேதி அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங்கின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் கிளாம்ஷெல் வடிவமைப்பில் வெளியாகும் என கூறப்படுகிறது. 

    இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் கேலக்ஸி ஃபோல்டு 2 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும் இதன் முன்புறம் 10 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

    கேலக்ஸி ஃபோல்டு 2 ஸ்மார்ட்போனுடன் அறிமுகமாகும் கேலக்ஸி எஸ்20 சீரிஸ் போன்களில் ஸ்னாப்டிராகன் 865 சிலிகான் பிராசஸர் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. அந்த வகையில் அனைத்து பகுதிகளிலும் இம்முறை ஸ்னாப்டிராகன் பிராசஸர்களே வழங்கப்படும் என தெரிகிறது.

    கேலக்ஸி ஃபோல்டு 2 லீக்

    கேலக்ஸி ஃபோல்டு 2 ஸ்மார்ட்போனின் முன்புற கேமரா கேலக்ஸி நோட் 10 மாடலில் உள்ள சென்சாரை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இதுவரை வெளியாகி இருக்கும் ரென்டர்களில் கேலக்ஸி ஃபோல்டு 2 ஸ்மார்ட்போனில் ஒற்றை செல்ஃபி கேமரா வழங்கப்படும் என தெரியவந்துள்ளது.

    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்20 சீரிஸ் போன்களுக்கான உற்பத்தி பணிகளை துவங்கிவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் இவை கேலக்ஸி ஏ51 மற்றும் கேலக்ஸி ஏ71 போன்களுடன் உற்பத்தி செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. கேலக்ஸி ஏ51 மற்றும் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன்களின் விலை முறையே ரூ. 22,990 மற்றும் ரூ. 29,990 வரை நிர்ணயம் செய்யப்படலாம்.
    Next Story
    ×