search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஹானர் மேஜிக் வாட்ச் 2
    X
    ஹானர் மேஜிக் வாட்ச் 2

    விரைவில் இந்தியா வரும் ஹானர் ஸ்மார்ட்வாட்ச்

    ஹானர் பிராண்டின் புதிய ஸ்மார்ட்வாட்ச் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.



    சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஹானர் இந்திய சந்தையில் ஹானர் 9எக்ஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்நிலவையில், புதிய ஸ்மார்ட்போனுடன் ஹானர் பிராண்டு ஹானர் மேஜிக் வாட்ச் 2 மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக ஹானர் இந்தியா அதிகாரப்பூர்வ ட்விட்டர் அக்கவுண்ட்டில் தெரிவித்துள்ளது.

    வெளியீட்டு தேதி பற்றி எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை. சர்வதேச சந்தையில் ஹானர் மேஜிக் வாட்ச் 2 ஹானர் வாட்ச் மேஜிக் மாடலின் மேம்பட்ட பதிப்பாகும்.

    ஹானர் இந்தியாவின் சமீபத்திய ட்விட்டர் பதிவில் ஹானர் மேஜிக் வாட்ச் 2 டீசர் வெளியிடப்பட்டுள்ளது. ஹானர் பிராண்டு தனது ஸ்மார்ட்வாட்ச் பெயரை ஹானர் வாட்ச் மேஜிக் 2 இல் இருந்து ஹானர் மேஜிக் வாட்ச் 2 ஆக மாற்றலாம் என தெரிகிறது. முன்னதாக ஹானர் வாட்ச் மேஜிக் மாடலை அந்நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்திருந்தது.

    ஹானர் மேஜிக் வாட்ச் 2

    சர்வதேச சந்தையில் ஹானர் வாட்ச் மேஜிக் 2 கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்வாட்ச் 44 எம்.எம். மற்றும் 46 எம்.எம். என இருவித அளவுகளில் வெளியிடப்பட்டது. இதன் 44 எம்.எம். மாடல் விலை CNY 1,099 (இந்திய மதிப்பில் ரூ. 11,300) என்றும் 46 எம்.எம்.ம வேரியண்ட் விலை CNY 1,199 (இந்திய மதிப்பில் ரூ. 12,300) என நிர்ணயிக்கப்பட்டது.

    ஹானர் மேஜிக் வாட்ச் 2 மாடல் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் 42 எம்.எம். மாடலில் 1.2 இன்ச் வட்ட வடிவம் கொண்ட AMOLED டிஸ்ப்ளேவும், 46 எம்எம். மாடலில் 1.39 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இதன் பெரிய மாடலில் 14 நாட்களுக்கு பேக்கப் வழங்கும் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதன் 42 எம்.எமம். மெமரி மாடல் ஏழு நாட்கள் பேக்கப் வழங்குகிறது.
    Next Story
    ×