search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆப்பிள் பென்சில்"

    • ஐபேட் உடன் இணைத்ததும் ஆப்பிள் பென்சில் ஸ்லீப் நிலைக்கு சென்றுவிடும்.
    • புதிய ஆப்பிள் பென்சில் ஐபேட் ஓ.எஸ். அம்சங்கள் அனைத்திற்கும் சப்போர்ட் செய்கிறது.

    ஐபேட் பயனர்களுக்கு அதிக விருப்பங்களை வழங்கும் நோக்கில் ஆப்பிள் நிறுவனம் முற்றிலும் புதிய மற்றும் சற்றே குறைந்த விலை ஆப்பிள் பென்சில் (யு.எஸ்.பி. சி) மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த ஸ்டைலஸ்-இல் பிக்சல் பெர்ஃபெக்ட் அக்யூரசி, லோ லேடன்சி மற்றும் டில்ட் சென்சிடிவிட்டி போன்ற வசதிகள் உள்ளன.

    புதிய ஆப்பிள் பென்சில் மாடலில் மிக மெல்லிய வடிவமைப்பு, மேட் ஃபினிஷ் மற்றும் மேக்னடிக் ஃபிளாட் சைட் உள்ளது. இதை கொண்டு பென்சிலை ஐபேட்-இன் பக்கவாட்டில் கச்சிதமாக வைத்துக் கொள்ள முடியும். இதில் உள்ள யு.எஸ்.பி. சி போர்ட் ஐபேட் உடன் இணைந்து கொண்டு யு.எஸ்.பி. சி கேபிள் மூலம் சார்ஜ் ஆகும்.

     

    பேட்டரியை சேமிக்கும் நோக்கில், இதனை ஐபேட் உடன் இணைத்ததும் ஆப்பிள் பென்சில் ஸ்லீப் நிலைக்கு சென்றுவிடும். இந்த மாடலில் பிரெஷர் சென்சிடிவிட்டி அம்சம் வழங்கப்படவில்லை. புதிய ஆப்பிள் பென்சில் ஐபேட் ஓ.எஸ். அம்சங்கள் அனைத்திற்கும் முழுமையாக சப்போர்ட் செய்கிறது. இந்த மாடல் யு.எஸ்.பி. சி போர்ட் கொண்ட ஐபேட் மாடல்கள் அனைத்திலும் பயன்படுத்த முடியும்.

    இந்திய சந்தையில் புதிய ஆப்பிள் பென்சில் யு.எஸ்.பி. சி மாடலின் விலை ரூ. 7 ஆயிரத்து 900 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை அடுத்த மாத துவக்கத்தில் துவங்கும் என்று தெரிகிறது. கல்லூரி மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் இந்த மாடலை ரூ. 6 ஆயிரத்து 900 விலையிலேயே வாங்கிட முடியும்.

    ×