என் மலர்
தொழில்நுட்பம்

சியோமி
16 ஜி.பி. ரேம் கொண்டு உருவாகும் சியோமி ஸ்மார்ட்போன்
சியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதில் 16 ஜி.பி. ரேம் வழங்கப்படும் என தெரிகிறது.
சியோமி நிறுவனத்தின் Mi 10 மற்றும் Mi 10 ப்ரோ ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் சியோமி Mi 10 ப்ரோ வலைதள பக்கத்தின் ஸ்கிரீன்ஷாட் இடம்பெற்று இருக்கிறது.
இத்துடன் புதிய ஸ்மார்ட்போனில் 16 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை வெளியாகி இருக்கும் ஸ்மார்ட்போன்களில் அதிகபட்சமாக 12 ஜி.பி. ரேம் மட்டுமே வழங்கப்பட்டுள்ள நிலையில், புதிய சியோமி ஸ்மார்ட்போன் 16 ஜி.பி. ரேம் கொண்ட முதல் ஸ்மார்ட்போனாக இருக்கும் என தெரிகிறது.


மற்ற சிறப்பம்சங்களை பொருத்தவரை ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், 6.4 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன் வழங்கப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 108 எம்.பி. பிரைமரி கேமராவுடன் மொத்தம் நான்கு சென்சார்கள் வழங்கப்படுகிறது. இதே சென்சார் Mi நோட் 10 மற்றும் Mi நோட் 10 ப்ரோ மாடல்களிலும் வழங்கப்பட்டு இருக்கிறது.
இரு ஸ்மார்ட்போன்களை வித்தியாசப்படுத்த Mi 10 சீரிஸ் மாடல்களில் இரவு நேர புகைப்படங்களை அதிக துல்லியமாக வழங்க செய்யும் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்தனை அம்சங்களை சக்தியூட்ட 5250 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படும் என தெரிகிறது.
இத்துடன் 65 வாட் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம். இதனால் புதிய ஸ்மார்ட்போனை முழுமையாக சார்ஜ் செய்ய 35 நிமிடங்களே போதுமானதாக இருக்கும் என கூறப்படுகிறது.
Next Story






