என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    மோட்டோ ஜி சீரிஸ்
    X
    மோட்டோ ஜி சீரிஸ்

    மோட்டோரோலாவின் ஸ்டைலஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்

    மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி ஸ்டைலஸ் மற்றும் மோட்டோ ஜி பவர் ஸ்மார்ட்போன் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன.



    மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ஜி ஸ்டைலஸ் மற்றும் மோட்டோ ஜி பவர் ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்தது. இவற்றில் 6.4 இன்ச் மேக்ஸ் விஷன் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர், மூன்று பிரைமரி கேமராக்கள், 16 எம்.பி. செல்ஃபி கேமரா, பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

    புதிய ஜி ஸ்டைலஸ் கொண்டு புகைப்படங்களை எடிட் செய்வது, குறிப்பு எழுதுவது, வரைபடம் உருவாக்குவது என பல்வேறு அம்சங்களை இயக்க முடியும். ஸ்டைலஸ் சாதனம் ஸ்மார்ட்போனுடன் இணைந்து இயங்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனை அன்லாக் செய்யாமலேயே ஸ்டைலசை எடுத்து குறிப்புகளை எழுத முடியும்.

    மோட்டோ ஜி ஸ்டைலஸ்

    மோட்டோ ஜி ஸ்டைலஸ் சிறப்பம்சங்கள்:

    - 6.4 இன்ச் 2300x1080 பிக்சல் FHD+ IPS LCD மேக்ஸ் விஷன் டிஸ்ப்ளே
    - ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர்
    - அட்ரினோ 610 GPU
    - 4 ஜி.பி. ரேம்
    - 128 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 10
    - டூயல் சிம்
    - 48 எம்.பி. f/1.7, 1.6μm பிரைமரி கேமரா, குவாட் பிக்சல் தொழில்நுட்பம்
    - 16 எம்.பி. ஆக்‌ஷன் கேமரா, f/2.2, 2.0μm 117° அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா
    - 2 எம்.பி. மேக்ரோ சென்சார், f/2.2, 1.75μm, லேசர் ஆட்டோஃபோகஸ் (TOF)
    - 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, 1μm
    - கைரேகை சென்சார்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - யு.எஸ்.பி. டைப்-சி
    - 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - 10 வாட் சார்ஜிங்

    மோட்டோ ஜி பவர்

    மோட்டோ ஜி பவர் சிறப்பம்சங்கள்:

    - 6.4 இன்ச் 2300x1080 பிக்சல் FHD+ IPS LCD மேக்ஸ் விஷன் டிஸ்ப்ளே
    - ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர்
    - அட்ரினோ 610 GPU
    - 4 ஜி.பி. ரேம்
    - 64 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 10
    - டூயல் சிம்
    - 16 எம்.பி. f/1.7, 1.12μm பிரைமரி கேமரா
    - 8 எம்.பி. கேமரா, f/2.2, 1.2μm 118° அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா
    - 2 எம்.பி. மேக்ரோ சென்சார், f/2.2, 1.75μm
    - 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, 1μm
    - கைரேகை சென்சார்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - யு.எஸ்.பி. டைப்-சி
    - 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - 10 வாட் சார்ஜிங்

    மோட்டோ ஜி ஸ்டைலஸ் ஸ்மார்ட்போன் மிஸ்டிக் இன்டிகோ நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை 299.99 டாலர்கள் (இந்திய  மதிப்பில் ரூ. 21,450) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மோட்டோ ஜி பவர் ஸ்மார்ட்போன் ஸ்மோக் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை 249.99 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 17,870) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×