என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஆப்பிள்
    X
    ஆப்பிள்

    இரண்டு புதிய சாதனங்களுடன் புதிய ஐபேட் அறிமுகம் செய்யும் ஆப்பிள்

    ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு ஐபேட் மாடலுடன் இரண்டு புதிய சாதனங்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



    ஆப்பிள் நிறுவனம் அடுத்த தலைமுறை டேப்லெட் சாதனங்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் ஆப்பிள் நிறுவனம் அடுத்த தலைமுறை ஐபேட் மாடல்களில் இருந்து புதிய மாற்றத்தை செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    புதிய ஐபேட் சாதனத்திற்கென புதிய கீபோர்டினை ஆப்பிள் நிறுவனம் உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. இந்த கீபோர்டில் பில்ட் இன் டிராக்பேட் வழங்கப்படும் என தெரிகிறது. மேலும் ஆப்பிள் ஐபேட் ப்ரோ மாடலுடன் இந்த சாதனத்தையும் அறிமுகம் செய்ய இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    பில்ட் இன் டிராக்பேட் வழங்க இருக்கும் பட்சத்தில், ஐபேட் ஒ.எஸ். தளத்திலும் மாற்றங்கள் செய்யப்படலாம் என எதிர்பார்க்கலாம். இதுதவிர ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபேட் ஒ.எஸ். தளத்தில் மவுஸ் பயன்படுத்துவதற்கான வசதியினை சேர்க்கலாம் என கூறப்படுகிறது.

    ஐபேட்

    தற்போதைய ஐபேட் ஒ.எஸ். மவுஸ் சப்போர்ட் கொண்டிருக்கிறது. எனினும், இது அசிஸ்டிவ் டச் தொழில்நுட்பத்தின் நீட்சியாகவே உள்ளது. இந்த அம்சத்தினை செயல்படுத்த அக்சஸபிலிட்டி ஆப்ஷன் செல்ல வேண்டும். இவ்வாறு செயல்படுத்தினாலும், இது விண்டோஸ் அல்லது மேக் ஒ.எஸ்.இல் உள்ள வழக்கமான மவுஸ் பாயின்ட்டர் போன்று இருக்காது.

    புதிய தகவல்கள் உண்மையாகும் பட்சத்தில் இதுவரை இல்லாத வகையில், புதிய ஐபேட் பயன்படுத்துவது வழக்கமான நோட்பேட் மற்றும் டேப்லெட் போன்று மாறும். இதோடு புதிய மென்பொருள் அப்டேட் தற்போதைய ஐபேட் சாதனங்களுக்கும் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
    Next Story
    ×