என் மலர்
மொபைல்ஸ்
சியோமி நிறுவனத்தின் புதிய சிசி சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கான புதிய டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஸ்மார்ட்போனின் கேமரா விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
சியோமி நிறுவனம் தனது சிசி9 ஸ்மார்ட்போனில் 32 எம்.பி. செல்ஃபி கேமரா, பின்புறம் 48 எம்.பி. பிரைமரி கேமரா வழங்கப்படும் என அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இத்துடன் இரு கேமராக்களிலும் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் பகிர்ந்திருக்கிறது.
சியோமியின் புதிய சிசி சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஜூலை 2 ஆம் தேதி அறிமுகமாக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் லிட்டில் ஃபேரி என்ற குறியீட்டு பெயரில் உருவாக்கப்படுகிறது. இத்துடன் லிட்டில் பிரின்ஸ் என்ற பெயரில் மற்றொரு ஸ்மார்ட்போன் உருவாகி வருகிறது.

சியோமி சிசி9இ ஸ்மார்ட்போனின் விவரங்கள் கடந்த வாரம் TENAA வலைதளத்தில் லீக் ஆனது. இத்துடன் சிசி9 மெய்டு கஸ்டம் எடிஷன் ஸ்மார்ட்போனில் ஃப்ளிப் கேமரா வழங்கப்பட இருக்கிறது. புதிய சிசி சீரிஸ் ஸ்மார்ட்போனின் சிறிய வீடியோ ஒன்றையும் சியோமி தலைமை செயல் அதிகாரி பதிவிட்டிருந்தார்.
சியோமி மற்றும் மெய்டு நிறுவனங்கள் ஃப்ளிப் கேமரா போனினை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளன. அசுஸ் சென்ஃபோன் 6 போன்று கேமரா அமைப்பில் புதிய ஸ்மார்ட்போன் மூன்று கேமரா லென்ஸ் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

முன்னதாக M1904F3BC என்ற மாடல் நம்பர் கொண்ட சியோமி ஸ்மார்ட்போன் சீன வலைதளத்தில் லீக் ஆனது. இது புதிய Mi சிசி9இ ஸ்மார்ட்போனாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 6.39 இன்ச் AMOLED எஃப்.ஹெச்.டி. பிளஸ் டாட் நாட்ச் ஸ்கிரீன், 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என தெரிகிறது.
புகைப்படங்களை எடுக்க 32 எம்.பி. செல்ஃபி கேமரா, 49 எம்.பி. ஏ.ஐ. கேமரா, அல்ட்ரா-வைடு சென்சார், டெலிபோட்டோ லென்ஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இத்துடன் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படலாம் என தெரிகிறது.
ஹூவாய் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் மேட் எக்ஸ் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஹூவாய் நிறுவனம் தனது மேட் எக்ஸ் மடிக்கக்கூடிய 5ஜி ல்மார்ட்போனினை இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்தது. இதன் விற்பனை தேதி குறிப்பிடப்படாமல் பின்னர் துவங்கும் என ஹூவாய் தெரிவித்தது. வெளியீடு தாமதமான நிலையில் ஹூவாய் மேட் எக்ஸ் விற்பனை பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஹூவாய் நிறுவனத்தின் மேற்கத்திய பகுதிகளுக்கான தலைவர் வின்சென்ட் பேங் ஹூவாயின் மேட் எக்ஸ் மடிக்கக்கூடிய 5ஜி ஸ்மார்ட்போன் செப்டம்பர் மாத துவக்கத்திலோ அல்லது இறுதியிலோ அறிமுகமாகும் என தெரிவித்திருக்கிறார். புதிய ஸ்மார்ட்போன் 5ஜி சேவை கிடைக்கும் சந்தைகளில் ஆண்ட்ராய்டு இயங்குதளத்துடன் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹூவாயின் மடிக்கக்கூடிய 5ஜி ஸ்மார்ட்போன் தாமதத்திற்கு சீனாவில் 5ஜி சேவை வெளியீட்டில் ஏற்பட்ட தொய்வு தான் காரணம் என அவர் பேங் தெரிவித்தார். சாதனத்தில் வழங்கப்பட்டுள்ள P-OLED ஸ்கிரீன் மேம்படுத்தப்பட்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். இதன் மூலம் சாம்சங் சந்தித்த பிரச்சனைகளை ஹூவாய் சந்திக்கக்கூடாது என்பதற்காக மீண்டும் சோதனை செய்யப்பட்டது.

சிறப்பம்சங்களை பொருத்தவரை மேட் எக்ஸ் ஸ்மார்ட்போனில் 6.6 இன்ச் (2480x1148 பிக்சல்) மெயின் டிஸ்ப்ளேவும், ஸ்மார்ட்போன் திறக்கப்பட்ட நிலையில் 8-இன்ச் மெயின் டிஸ்ப்ளே (2480x2200 பிக்சல்), ஸ்மார்ட்போன் மடிக்கப்பட்ட நிலையில் பின்புறம் 6.4 இன்ச் (25:9. 2480x892 பிக்சல்) டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன் 7 என்.எம். 5ஜி மல்டி-மோட் மோடெம் வழங்கப்பட்டுள்ளது. பலோங் 5000 பிளஸ் கிரின் 980 பிராசஸர் கொண்டிருக்கும் ஹூவாய் மேட் எக்ஸ் ஸ்மார்ட்போனில் ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட் மற்றும் ஹூவாயின் நானோ மெமரி கார்டுகளை சப்போர்ட் செய்கிறது.
ஸ்மார்ட்போன் மடிக்கப்பட்ட நிலையில் வெறும் 11 எம்.எம். அளவு தடிமனாக இருக்கிறது. அதிவேக 5ஜி வசதியை வழங்கும் மேட் எக்ஸ் ஸ்மார்ட்போன் 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
ஹூவாய் நிறுவனத்தின் மேற்கத்திய பகுதிகளுக்கான தலைவர் வின்சென்ட் பேங் ஹூவாயின் மேட் எக்ஸ் மடிக்கக்கூடிய 5ஜி ஸ்மார்ட்போன் செப்டம்பர் மாத துவக்கத்திலோ அல்லது இறுதியிலோ அறிமுகமாகும் என தெரிவித்திருக்கிறார். புதிய ஸ்மார்ட்போன் 5ஜி சேவை கிடைக்கும் சந்தைகளில் ஆண்ட்ராய்டு இயங்குதளத்துடன் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹூவாயின் மடிக்கக்கூடிய 5ஜி ஸ்மார்ட்போன் தாமதத்திற்கு சீனாவில் 5ஜி சேவை வெளியீட்டில் ஏற்பட்ட தொய்வு தான் காரணம் என அவர் பேங் தெரிவித்தார். சாதனத்தில் வழங்கப்பட்டுள்ள P-OLED ஸ்கிரீன் மேம்படுத்தப்பட்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். இதன் மூலம் சாம்சங் சந்தித்த பிரச்சனைகளை ஹூவாய் சந்திக்கக்கூடாது என்பதற்காக மீண்டும் சோதனை செய்யப்பட்டது.

சிறப்பம்சங்களை பொருத்தவரை மேட் எக்ஸ் ஸ்மார்ட்போனில் 6.6 இன்ச் (2480x1148 பிக்சல்) மெயின் டிஸ்ப்ளேவும், ஸ்மார்ட்போன் திறக்கப்பட்ட நிலையில் 8-இன்ச் மெயின் டிஸ்ப்ளே (2480x2200 பிக்சல்), ஸ்மார்ட்போன் மடிக்கப்பட்ட நிலையில் பின்புறம் 6.4 இன்ச் (25:9. 2480x892 பிக்சல்) டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன் 7 என்.எம். 5ஜி மல்டி-மோட் மோடெம் வழங்கப்பட்டுள்ளது. பலோங் 5000 பிளஸ் கிரின் 980 பிராசஸர் கொண்டிருக்கும் ஹூவாய் மேட் எக்ஸ் ஸ்மார்ட்போனில் ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட் மற்றும் ஹூவாயின் நானோ மெமரி கார்டுகளை சப்போர்ட் செய்கிறது.
ஸ்மார்ட்போன் மடிக்கப்பட்ட நிலையில் வெறும் 11 எம்.எம். அளவு தடிமனாக இருக்கிறது. அதிவேக 5ஜி வசதியை வழங்கும் மேட் எக்ஸ் ஸ்மார்ட்போன் 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
சியோமியின் போகோ எஃப்1 ஸ்மார்ட்போனின் விலை இந்தியாவில் மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் புதிய விலையை பார்ப்போம்.
சியோமியின் போகோ எஃப்1 ஸ்மார்ட்போனின் விலை இந்தியாவில் மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 17,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. போகோ எஃப்1 ஸ்மார்ட்போன் சியோமி அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் ப்ளிப்கார்ட் தளத்தில் புதிய விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
போகோ எஃப்1 விலை குறைக்கப்பட்டிருப்பது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், விலை குறைப்பு எதுவரை வழங்கப்படும் என்பது பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. சமீபத்தில் போகோ எஃப்1 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 22,999 இல் இருந்து ரூ. 20,999-க்கு குறைக்கப்பட்டது. இதன் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி விலை ரூ. 2,000 குறைக்கப்பட்டு ரூ. 19,999 விலையில் விற்பனை செய்யப்பட்டது.
தற்சமயம் போகோ எஃப்1 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 17,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் போகோ எஃப்1 ஸ்மார்ட்போன் ஸ்டீல் புளு, கிராஃபைட் பிளாக் மற்றும் ரோஸோ ரெட் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது.

முன்னதாக ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெற்ற சிறப்பு விற்பனையில் போகோ எஃப்1 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் ரூ.17,999 விலையில் விற்பனை செய்யப்பட்டது. எனினும், இச்சலுகை ஜூன் 21 ஆம் தேதி வரை மட்டுமே வழங்கப்பட்டது. விலை குறைப்பு மட்டுமின்றி போகோ எஃப்1 வாங்குவோருக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதியும், ரூ. 3000 மதிப்புள்ள எக்சேஞ்ச் சலுகையும் வழங்கப்பட்டது.
போகோ எஃப்1 சிறப்பம்சங்களை பொருத்தவரை 6.18 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே மற்றும் நாட்ச் கொண்டிருக்கும் போகோ எஃப்1 மாடலில் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், 8 ஜி.பி. ரேம் மற்றும் லிக்விட்-கூல் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க 12 எம்பி பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, ஏ.ஐ. அம்சங்கள், 20 எம்.பி. செல்ஃபி கேமரா மற்றும், ஏ.ஐ. அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. ஐ.ஆர். ஃபேஸ் அன்லாக் வசதி கொண்டிருக்கிறது.
எல்.ஜி. நிறுவனத்தின் புதிய டபுள்யூ சீரிஸ் ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
எல்.ஜி. நிறுவனத்தின் புதிய டபுள்யூ சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜூன் 26 ஆம் தேதி அறிமுகமாக இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது.
முன்னதாக புதிய எல்.ஜி. ஸ்மார்ட்போனில் 2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் 12 என்.எம். பிராசஸர் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதுதவிர கூகுள் பிளே டெவலப்பர் கன்சோலில் வெளியான விவரங்களில் புதிய ஸ்மார்ட்போன் 6.2 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 720x1500 பிக்சல் டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் மற்றும் 3 ஜி.பி. ரேம் கொண்டிருக்கும் என கூறப்பட்டது.
மேலும் இந்த ஸ்மார்ட்போன் டபுள்யூ 10 என்ற பெயரில் அறிமுகமாகும் என்றும் கூறப்படுகிறது. எல்.ஜி. நிறுவனம் இந்தியாவில் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து நீண்ட காலம் ஆகிவிட்டது. இந்நிலையில், புதிய டபுள்யூ சீரிஸ் மூலம் அந்நிறுவனம் பட்ஜெட் பிரிவில் ரீ-எண்ட்ரி கொடுக்க இருப்பதாக தெரிகிறது.

எல்.ஜி.யின் புதிய டபுள்யூ சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் சாம்சங்கின் கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே எல்.ஜி. டபுள்யூ சீரிஸ் ஸ்மார்ட்போனின் டீசரை அமேசான் தனது அமேசான் ஸ்பெஷல்ஸ் பிரிவில் வெளியிட்டது.
எல்.ஜி. டபுள்யூ சீரிஸ் ஸ்மார்ட்போனில் நாட்ச் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. மேலும் இதனை பயனர் விரும்பும் வகையில் கஸ்டமைஸ் செய்து கொள்ளும் வசதியும் வழங்கப்படுகிறது. இத்துடன் ஏ.ஐ. மூலம் இயங்கும் மூன்று பிரைமரி கேமரா சென்சார்களும் வழங்கப்படுகிறது. இவற்றில் வழக்கமான லென்ஸ், வைடு ஆங்கிள் லென்ஸ் மற்றும் போர்டிரெயிட் மோட் புகைப்படங்களை எடுக்க ஒரு லென்ஸ் இடம்பெறுகிறது.
சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனின் கேமரா இந்த திறன் கொண்டிருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
சாம்சங் தனது கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன்களை ஆக்ஸடு 7 ஆம் தேதி நியூ யார்க் நகரில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்நிலையில், புதிய ஸ்மார்ட்போனில் புதுவித சவுண்ட் ஆன் டிஸ்ப்ளே எனும் தொழில்நுட்பம் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதன் மூலம் நோட் 10 ஸ்மார்ட்போனில் இயர்பீஸ் நீக்கப்படலாம் என கூறப்பட்டது.
தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனின் கேமரா அதிகளவு மாற்றம் செய்யப்படும் என கூறப்படுகிறது. கடந்த ஆண்டு சாம்சங் அறிமுகம் செய்த கேலக்ஸி எஸ்9 சீரிஸ் ஸ்மார்ட்போனில் டூயல் அப்ரேச்சர் தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த தொழில்நுட்பம் f/1.5 – f/2.4 என இருவித அப்ரேச்சர்களை மாற்றிக் கொள்ளும் திறன் கொண்டிருக்கிறது. தற்சமயம் சாம்சங் தனது நோட் ஸ்மார்ட்போனில் f/1.5 – f/1.8 – f/2.4 என மூன்று வேரியபிள் அப்ரேச்சர்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. புதிய தகவலை ஐஸ் யுனிவர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறது.
இதுதவிர கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் ஹோல் பன்ச் டிஸ்ப்ளே வடிவமைப்பை கொண்டிருக்கும் என தெரிகிறது. இம்முறை ஹோல் பன்ச் ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளேவின் மத்தியில் இருக்கும் என கூறப்படுகிறது. சில ரென்டர்களில் புதிய ஸ்மார்ட்போனின் முன்புறம் ஒற்றை செல்ஃபி கேமரா வழங்கப்படலாம் என கூறப்பட்டிருந்தது.
புகைப்படங்களை எடுக்க கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனில் மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. கேலக்ஸி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போனில் கூடுதலாக ToF ரக சென்சார் ஒன்று கூடுதலாக வழங்கப்படும் என தெரிகிறது. சாம்சங் தனது கேலக்ஸி நோட் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை 4ஜி மற்றும் 5ஜி என இரண்டு ஆப்ஷன்களில் வெளியிடும் என கூறப்படுகிறது.

கேலக்ஸி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போனில் 4150 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என தெரிகிறது. இதுதவிர இரு ஸ்மார்ட்போன்களிலும் 7 என்.எம். குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 / எக்சைனோஸ் 9825 சிப்செட் வழங்கப்படலாம்.
மெமரியை பொருத்தவரை கேலக்ஸி நோட் 10 சீரிசில் அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம் மற்றும் 1000 ஜி.பி. மெமரி வழங்கப்படும் என கூறப்படுகிறது. சாம்சங் தனது புதிய நோட் ஸ்மார்ட்போனில் ஹெட்போன் ஜாக் ஆப்ஷனை நீக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
மோட்டோரோலா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஒன் விஷன் ஸ்மார்ட்போன் இன்-ஸ்கிரீன் செல்ஃபி கேமராவுடன் அறிமுகம் செய்யப்பட்டது.
மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 21:9 சினிமா விஷன் எல்.சி.டி. ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது.
எக்சைனோஸ் 9609 பிராசஸர் கொண்டிருக்கும் மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போனில் 25 எம்.பி. இன்-ஸ்கிரீன் செல்ஃபி கேமரா, 1.8µm குவாட் பிக்சல் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இது குறைந்த வெளிச்சமுள்ள பகுதிகளிலும் தெளிவான புகைப்படங்களை வழங்கும்.
ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் கொண்டிருக்கும் மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போனிற்கு இரண்டு அப்டேட்கள் நிச்சயம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்புறம் 48 எம்.பி. பிரைமரி கேமரா, நைட் விஷன் மோட், OIS மற்றும் குவாட் பிக்சல் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமராவும் வழங்கப்படுகிறது.
ஸ்மார்ட்போனின் பின்புறம் 4D கார்னிங் கொரில்லா கிளாஸ் பேக் மற்றும் கிரேடியன்ட் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் கைரேகை சென்சாரும் ஸ்மார்ட்போனின் பின்புறம் வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனை சக்தியூட்ட 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 15 வாட் டர்போ பவர் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

மோட்டோரோலா ஒன் விஷன் சிறப்பம்சங்கள்
- 6.3 இன்ச் 1080x2520 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. டிஸ்ப்ளே
- 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் எக்சைனோஸ் 9609 பிராசஸர்
- 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஹைப்ரிட் டூயல் சிம்
- ஆண்ட்ராய்டு 9.0 (பை)
- 48 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.7, OIS
- 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.2
- 25 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
- கைரேகை சென்சார்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
- 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 15 வாட் டர்போ பவர் ஃபாஸ்ட் சார்ஜிங்
மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போன் சஃபையர் கிரேடியன்ட் அல்லது பிரான்ஸ் கிரேடியன்ட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விற்பனை ஜூன் 27 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தியாவில் மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போனின் விலை ரூ. 19,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மோட்டோரோலாவின் புதிய ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக நடைபெறுகிறது.
இந்தியாவின் நம்பத்தகுந்த ஸ்மார்ட்போன் பிராண்டுகளின் பட்டியலில் சீன ஸ்மார்ட்போன் நிறுவனம் அசுர வளர்ச்சி பெற்றிருக்கிறது.
சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒப்போ இந்தியாவில் நம்பத்தகுந்த ஸ்மார்ட்போன் பிராண்டுகளின் பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்திருக்கிறது.
மும்பையை சேர்ந்த டிரஸ்ட் ரிசர்ச் அட்வைசரி (Trust Research Advisory) எனும் ஆய்வு நிறுவனம் வெளியிட்ட சமீபத்திய அறிக்கையில், இந்தியாவின் நம்பத்தகுந்த ஸ்மார்ட்போன் பிராண்டுகளில் ஒப்போ மூன்றாவது இடம் பிடித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையின் படி 2019 ஆண்டி பட்டியலில் ஒப்போ நிறுவனம் ஏழு இடங்கள் முன்னேறி இந்த ஆண்டிற்கான டாப் 10 பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கோப்புப்படம்
தனது ஸ்மார்ட்போன்களில் மோட்டோரைஸ்டு ரக கேமரா, 10 எக்ஸ் வரையிலான ஹைப்ரிட் சூம் வசதி, ஃபாஸ்ட் சார்ஜிங், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் மற்றும் பெசல் லெஸ் டிஸ்ப்ளே உள்ளிட்டவற்றை வழங்கியதே ஒப்போ நிறுவனத்தை முன்னணி இடத்திற்கு கொண்டு வந்ததாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஐதராபாத்தில் மிகப்பெரும் ஆய்வு மற்றும் வளர்ச்சி மையத்தை இயக்கி வரும் ஒப்போ இந்தியாவில் தனது வியாபாரத்தை மேலும் பன்மடங்கு அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. ஐதராபாத் மட்டுமின்றி கிரேட்டர் நொய்டா பகுதியிலும் ஒப்போ உற்பத்தி ஆலை இயங்கி வருகிறது.
முன்னதாக சைபர்மீடியா ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அறிகக்கையில் அதிகம் விரும்பப்படும் புதுமை மிக்க மொபைல் போன் பிராண்டாக ஒப்போ தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஒப்போ நிறுவனம் இந்தியாவில் தனது ஏ5எஸ் ஸ்மார்ட்போனின் 4 ஜி.பி. ரேம் வெர்ஷனை விற்பனை செய்கிறது.
ஒப்போ நிறுவனம் தனது ஏ5எஸ் ஸ்மார்ட்போனினை இந்தியாவில் சமீபத்தில் அறிமுகம் செய்தது. முதற்கட்டமாக 2 ஜி.பி. ரேம் 32 ஜி.பி. மெமரி மாடல் ரூ.9,990 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்சமயம் இந்த ஸ்மார்ட்போனின் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விற்பனை செய்யப்படுகிறது.
ஸ்மார்ட்போனில் மெமரி தவிர வேறு எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. அந்த வகையில் ஒப்போ ஏ5எஸ் ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் ஹெச்.டி. பிளஸ் வாட்டர் டிராப் நாட்ச் ஸ்கிரீன், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு, ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 பிராசஸர், 4 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு ஓரியோ மற்றும் கலர் ஓ.எஸ். கொண்டிருக்கும் ஒப்போ ஏ5எஸ் ஸ்மார்ட்போனில் 13 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 8 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் ஒப்போ ஏ5எஸ் ஸ்மார்ட்போனில் பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்.டி. கார்டு ஸ்லாட் மற்றும் 4230 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கிறது.

ஒப்போ ஏ5எஸ் சிறப்பம்சங்கள்
- 6.22 இன்ச் 1520x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
- ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ பி35 12 என்.எம். பிராசஸர்
- IMG பவர் வி.ஆர். GE8320 GPU
- 2 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி
- 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 8.1 (ஓரியோ) மற்றும் கலர் ஓ.எஸ். 5.2
- 13 எம்.பி. பிரைமரி கேமரா, f/2.2
- 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
- 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
- டூயல் சிம் ஸ்லாட்
- கைரேகை சென்சார்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
- 4ஜிவோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 4230 எம்.ஏ.ஹெச். பேட்டரி
ஒப்போ ஏ5எஸ் ஸ்மார்ட்போனின் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ.12,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட், அமேசான், பே.டி.எம். மால், டாடா க்ளிக் மற்றும் ஸ்னாப்டீல் உள்ளிட்ட தளங்களில் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்சமயம் இதன் விற்பனை ஆஃப்லைன் மையங்களில் நடைபெறுகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய 5ஜி ஐபோன் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் மாடல்கள் பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளது. ஆப்பிள் நிறுவனம் 2020 ஆம் ஆண்டில் தனது 5ஜி ஐபோனினை அறிமுகம் செய்யும் என தகவல் வெளியாகியுள்ளது.
தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் அடுத்த ஆண்டு ஆப்பிள் நிறுவனம் மூன்று OLED ஐபோன்களை அறிமுகம் செய்யும் என தெரிகிறது. இதில் 5.42 இன்ச், 6.7 இன்ச் AMOLED டிஸ்ப்ளேவும், 5ஜி வசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் 6.1 இன்ச் OLED டிஸ்ப்ளே கொண்ட 4ஜி எல்.டி.இ. ஐபோன் மாடல் அடுத்த ஆண்டு அறிமுகமாகும் என தெரிகிறது.
2020 ஐபோன்களில் குவால்காம் நிறுவனத்தின் 5ஜி மோடெம் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. ஆப்பிள் மற்றும் குவால்காம் நிறுவனங்களிடையே சுமூக ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து இந்த தகவல் வெளியாகியிருக்கிறது. 2021 ஆண்டில் இருந்து அனைத்து ஐபோன்களிலும் 5ஜி வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது.

2022 அல்லது 2023 ஆம் ஆண்டுகளில் வெளியிடும் ஐபோன்களில் ஆப்பிள் தனது சொந்த 5ஜி மோடெம்களை பயன்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக வெளியான தகவல்களில் 2020 ஐபோன்களில் ஆப்பிள் நிறுவனம் குவால்காம் மற்றும் சாம்சங்கின் 5ஜி மோடெம்களை பயன்படுத்தும் என கூறப்பட்டது.
2020 ஐபோன் மாடல்களின் மற்ற சிறப்பம்சங்கள் மற்றும் ஹார்டுவேர் பற்றி எவ்வித தகவலும் இல்லை. கடந்த மாதம் வெளியான தகவல்களில் 2020 ஐபோன் மாடல்கள் ஃபுல் ஸ்கிரீன் டச் ஐ.டி. மற்றும் 3டி சென்சிங் பிரைமரி கேமராக்களை கொண்டிருக்கும் என கூறப்பட்டது.
விவோ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 712 சிப்செட், 32 எம்.பி. செல்ஃபி கேமராவுடன் விரைவில் அறிமுகமாக இருக்கிறது.
விவோ நிறுவனத்தின் புதிய இசட்1 ப்ரோ ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது. இந்திய வெளியீட்டை விவோ டீசர்களின் மூலம் தெரியப்படுத்தி இருக்கிறது. அந்த வகையில் புதிய விவோ ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 712 சிப்செட் வழங்கப்படுகிறது.
மற்ற சிறப்பம்சங்கள் தவிர புதிய விவோ ஸ்மார்ட்போன் பப்ஜி மொபைல் கிளப் ஓபன் 2019 இன் அதிகாரப்பூர்வ ஸ்மார்ட்போனாக இருக்கும் என கூறப்படுகிறது. முன்னதாக விவோ இசட்1 ப்ரோ ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படும் என விவோ அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது.
இதுதவிர விவோ இசட்1 ப்ரோ ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. விவோ இசட்1 ப்ரோ ஸ்மார்ட்போனில் வழங்கப்படும் புதிய ஸ்னாப்டிராகன் 712 சிப்செட் 10 என்.எம். ஃபின்ஃபெட் வழிமுறையில் உருவாக்கப்பட்டதாகும்.

புதிய பிராசஸருடன் ஆக்டா-கோர் க்ரியோ 360 சி.பி.யு. மற்றும் அட்ரினோ 616 ஜி.பி.யு. கிராஃபிக்ஸ் வழங்கப்படுகிறது. இதை கொண்டு 4K தரத்தில் வீடியோக்களை பதிவு செய்ய முடியும்.
மேலும் ஸ்னாப்டிராகன் எக்ஸ்15 எல்.டி.இ. கொண்டிருப்பதால் விவோ இசட்1 ப்ரோ ஸ்மார்ட்போன் கொண்டு அதிகபட்சம் நொடிக்கு 800 எம்.பி. (800 Mbps) வேகத்தில் தரவுகளை டவுன்லோடு செய்ய முடியும். இத்துடன் ஹெச்.டி.ஆர். 10 டிஸ்ப்ளே சப்போர்ட் மற்றும் பிரத்யேக ஏ.ஐ. (செயற்கை நுண்ணறிவு) என்ஜின் வழங்கப்படுகிறது.
புதிய ஸ்னாப்டிராகன் 712 பிராசஸர் தவிர, இசட்1 ப்ரோ ஸ்மார்ட்போனில் 32 எம்.பி. இன்-டிஸ்ப்ளே கேமரா, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் மற்ற விவரங்கள், இதன் வெளியீட்டு தேதி மற்றும் விற்பனை விவரங்கள் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
மற்ற சிறப்பம்சங்கள் தவிர புதிய விவோ ஸ்மார்ட்போன் பப்ஜி மொபைல் கிளப் ஓபன் 2019 இன் அதிகாரப்பூர்வ ஸ்மார்ட்போனாக இருக்கும் என கூறப்படுகிறது. முன்னதாக விவோ இசட்1 ப்ரோ ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படும் என விவோ அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது.
இதுதவிர விவோ இசட்1 ப்ரோ ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. விவோ இசட்1 ப்ரோ ஸ்மார்ட்போனில் வழங்கப்படும் புதிய ஸ்னாப்டிராகன் 712 சிப்செட் 10 என்.எம். ஃபின்ஃபெட் வழிமுறையில் உருவாக்கப்பட்டதாகும்.

மேலும் ஸ்னாப்டிராகன் எக்ஸ்15 எல்.டி.இ. கொண்டிருப்பதால் விவோ இசட்1 ப்ரோ ஸ்மார்ட்போன் கொண்டு அதிகபட்சம் நொடிக்கு 800 எம்.பி. (800 Mbps) வேகத்தில் தரவுகளை டவுன்லோடு செய்ய முடியும். இத்துடன் ஹெச்.டி.ஆர். 10 டிஸ்ப்ளே சப்போர்ட் மற்றும் பிரத்யேக ஏ.ஐ. (செயற்கை நுண்ணறிவு) என்ஜின் வழங்கப்படுகிறது.
புதிய ஸ்னாப்டிராகன் 712 பிராசஸர் தவிர, இசட்1 ப்ரோ ஸ்மார்ட்போனில் 32 எம்.பி. இன்-டிஸ்ப்ளே கேமரா, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் மற்ற விவரங்கள், இதன் வெளியீட்டு தேதி மற்றும் விற்பனை விவரங்கள் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
சியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் சாம்சங்கின் 64 எம்.பி. பிரைமரி கேமரா சென்சாருடன் உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சாம்சங் நிறுவனம் சர்வதேச சந்தையில் தனது ISOCELL பிரைட் GW1 64 எம்.பி. பிரைமரி கேமரா சென்சாரை சமீபத்தில் அறிமுகம் செய்தது. இந்த சென்சாரை சாம்சங் தனது கேலக்ஸி ஏ70எஸ் ஸ்மார்ட்போனில் வழங்கும் என்ற வாக்கில் இணையத்தில் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் சியோமியின் புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் சாம்சங்கின் 64 எம்.பி. ISOCELL பிரைட் GW1 கேமரா சென்சாருடன் உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய ரெட்மி ஸ்மார்ட்போனின் மாடல் நம்பர் மற்றும் இதன் சிறப்பம்சங்கள் பற்றி எவ்வித விவரங்களும் இதுவரை வெளியாகவில்லை.
எனினும், 64 எம்.பி. பிரைமரி கேமரா கொண்ட முதல் ஸ்மார்ட்போனை சியோமி வெளியிடலாம் என கூறப்படுகிறது. முதற்கட்டமாக இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகமாகி அதன்பின் மற்ற நாடுகளில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இது ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போனாகவும் இருக்கலாம் என கூறப்படுகிறது.

64 எம்.பி. ISOCELL பிரைட் GW1 சாசம்சங் நிறுவனத்தின் அதிக ரெசல்யூஷன் கொண்ட சென்சார் ஆகும். இது 0.8 மைக்ரோமீட்டர் பிக்சல் கொண்ட சென்சார் ஆகும். இதில் சாம்சங் டெட்ராசெல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பிகசல்களை ஒன்றிணைத்து ரெமோசைக் வழிமுறையில் குறைந்த வெளிச்சமுள்ள பகுதிகளிலும் 16 எம்.பி. தரத்தில் புகைப்படங்களை வழங்குகிறது.
சரியான வெளிச்சமுள்ள பகுதிகளில் இந்த சென்சார் 64 எம்.பி. தரத்தில் அதிக துல்லியமாக புகைப்படங்களை வழங்கும். பிரைட் GW1 சென்சாரில் டூயல் கன்வெர்ஷன் கெயின் வழங்கப்பட்டுள்ளது. இது சென்சார் பெறும் வெளிச்சத்தை எலெக்ட்ரிக் சிக்னலாக மாற்றுகிறது. இந்த சென்சார் ரியல்-டைம் ஹெச்.டி.ஆர். வசதியை 100 டெசிபல்கள் வரை சப்போர்ட் செய்யும் என சாம்சங் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த சென்சார் ஃபேஸ் டிடெக்ஷன் ஆட்டோ ஃபோகஸ் வசதியை வழங்குகிறது. வீடியோவை பொருத்தவரை நொடிக்கு 480 ஃபிரேம்கள் வீதம் (480 FPS) ஃபுல் ஹெச்.டி. ரெக்கார்டிங்கை சப்போர்ட் செய்யும். இத்துடன் சினிமா தர ஸ்லோ-மோஷன் வீடியோ கேப்ச்சர் வசதியும் கொண்டிருக்கிறது.
சர்வதேச சந்தையில் 64 எம்.பி. சென்சார் கொண்ட ஸ்மார்ட்போன்கள் இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங் ஏற்கனவே 48 எம்.பி. ISOCELL GM1 சென்சார் கொண்டிருக்கிறது. இதனை பல்வேறு ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் தங்களது ஸ்மார்ட்போன்களில் வழங்கி வருகின்றன.
இந்தியாவில் ரூ.6000 விலையில் ஃபுல் வியூ டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
லாவா நிறுவனம் இந்தியாவில் இசட்62 எனும் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இது அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த இசட்62 கோ எடிஷன் ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் ஆகும். முன்னதாக லாவா நிறுவனம் இசட்92 ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்தது.
புதிய இசட்62 ஸ்மார்டபோனில் 6.0 இன்ச் ஃபுல் வியூ டிஸ்ப்ளே, 2.5D வளைந்த கிளாஸ் வடிவமைப்பு, குவாட்கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ22 பிராசஸர், 2 ஜி.பி. ரேம், 16 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்டிருக்கும் லாவா ஸ்மார்ட்போனில் 3380 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க 8 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 5 எம்.பி. செல்ஃபி கேமரா, ஃபிளாஷ் மற்றும் ஏ.ஐ. அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. கூடுதலாக ஃபேஸ் அன்லாக், ஒ.டி.ஜி. போன்ற வசதிகளும் வழங்கப்படுகின்றன. புதிய லாவா இசட்62 ஸ்மார்ட்போன் மிட்நைட் புளு மற்றும் ஸ்பேஸ் புளு நிறங்களில் கிடைக்கிறது.

லாவா இசட்62 சிறப்பம்சங்கள்:
- 6.0 இன்ச் ஃபுல் வியூ IPS 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- 2 ஜிகாஹெர்டஸ் ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ22 பிராசஸர்
- 650MHz IMG பவர் வி.ஆர். GE83200 GPU
- 2 ஜி.பி. ரேம்
- 16 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 9 பை
- டூயல் சிம் ஸ்லாட்
- 8 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ்
- 5 எம்.பி. செல்ஃபி கேமரா
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 3380 எம்.ஏ.ஹெச். பேட்டரி
இந்தியாவில் லாவா இசட்62 ஸ்மார்ட்போனின் விலை ரூ.6060 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ஜூன் 18 ஆம் தேதி காலை 10.00 மணிக்கு துவங்குகிறது.
புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ததோடு, வாடிக்கையாளர்கள் தங்களின் பழைய டி.வி.யை கொடுத்து புதிய இசட்62 ஸ்மார்ட்போனினை இலவசமாக வெல்ல போட்டி ஒன்றை அறிவித்துள்ளது.






