என் மலர்
மொபைல்ஸ்
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ10இ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் இன்ஃபினிட்டி வி டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ10இ ஸ்மார்ட்போன் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கேலக்ஸி ஏ20 மற்றும் கேலக்ஸி ஏ50 ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றன. புதிய கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன் கேலக்ஸி ஏ10 மாடலின் லைட் எடிஷன் வேரியண்ட் ஆகும்.
புதிய கேலக்ஸி ஏ10இ ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களாக இன்ஃபினிட்டி வி டிஸ்ப்ளே, 8 எம்.பி. பிரைமரி கேமரா இருக்கின்றன. அமெரிக்காவில் ஏற்கனவே கேலக்ஸி ஏ50 ஸ்மார்ட்போன் விற்பனை செய்யப்படும் நிலையில், கேலக்ஸி ஏ10 மற்றும் கேலக்ஸி ஏ20 ஸ்மார்ட்போன்கள் வரும் வாரங்களில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
சாம்சங் கேலக்ஸி ஏ10இ சிறப்பம்சங்களை இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எனினும், இதில் 5.83 இன்ச் இன்ஃபினிட்டி வி டிஸ்ப்ளே, 8 எம்.பி. பிரைமரி கேமரா, 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படும் என தெரிகிறது.

கேலக்ஸி ஏ10 ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 720x1520 பிக்சல் இன்ஃபினிட்டி வி டிஸ்ப்ளே பேனல் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.9 லென்ஸ் மற்றும் 3400 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக வெளியான தகவல்களில் சாம்சங் கேலக்ஸி ஏ10இ ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 9 பை மற்றும் சாம்சங்கின் ஒன் யு.ஐ., எக்சைனோஸ் 7884 பிராசஸர், 2 ஜி.பி. ரேம் வழங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
புதிய கேலக்ஸி ஏ10இ ஸ்மார்ட்போனின் விலை 179.99 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.12,500) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
எல்.ஜி. நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய X சீரிஸ் எல்.ஜி. ஸ்மார்ட்போனில் மூன்று பிரைமரி கேமரா யூனிட் வழங்கப்பட்டுள்ளது.
எல்.ஜி. நிறுவனம் தனது X6 ஸ்மார்ட்போனினை கொரியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அந்நிறுவனம் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் கியூ60 என்ற பெயரில் அறிமுகம் செய்த மாடல் ஆகும்.
எல்.ஜி. X6 ஸ்மார்ட்போனில் 6.26 இன்ச் 19:9 ஹெச்.டி. பிளஸ் ஃபுல் விஷன் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 16 எம்.பி. பிரைமரி கேமரா, PDAF, 5 எம்.பி. 120 டிகிரி சூப்பர் வைடு ஆங்கிள் கேமரா, 2 எம்.பி. டெப்த் கேமரா மற்றும் 13 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
புதிய ஸ்மார்ட்போன் MIL-STD-810G தரச் சான்று பெற்றிருக்கிறது. இதனால் இந்த ஸ்மார்ட்போன் வைப்ரேஷன், அதிக வெப்பநிலை, குறைந்த வெப்பநிலை, தெர்மல் ஷாக் என பல்வேறு சூழ்நிலைகளில் சீராக இயங்கும். எல்.ஜி. X6 ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன் பிரத்யேக கூகுள் அசிஸ்டண்ட் பட்டன் வழங்கப்பட்டுள்ளது. இதில் ஹை-ஃபை குவாட் டி.ஏ.சி. மற்றும் டி.டி.எஸ். எக்ஸ் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இது இயர்போன்கள் இல்லாமலேயே ஆடியோவினை 7.1 சேனல் சிஸ்டத்தில் வெளிப்படுத்தும்.

எல்.ஜி. X6 சிறப்பம்சங்கள்:
- 6.26 இன்ச் 1520x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 19:9 ஃபுல் விஷன் டிஸ்ப்ளே
- 2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ P22 12 என்.எம். பிராசஸர்
- 650 மெகாஹெர்ட்ஸ் IMG பவர் வி.ஆர். GE8320 GPU
- 3 ஜி.பி. ரேம்
- 64 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம் ஸ்லாட்
- 16 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், PDAF
- 2 எம்.பி. டெப்த் சென்சார்
- 5 எம்.பி. சூப்பர் வைடு ஆங்கிள் லென்ஸ்
- 13 எம்.பி. செல்ஃபி கேமரா
- கைரேகை சென்சார்
- MIL-STD 810G தரச்சான்று
- கூகுள் அசிஸ்டண்ட் பட்டன்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி
எல்.ஜி. X6 ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் புளு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 295 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.20,510) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே, இன்-ஸ்கிரீன் கேமராவுடன் சாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஸ்மார்ட்போனில் 6.39 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி-ஒ எல்.சி.டி. ஸ்கிரீன், ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர், 6 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது.
சாம்சங் ஒன் யு.ஐ. சார்ந்த ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் கொண்டிருக்கும் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போனில் 32 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 8 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 16 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட்போனின் பின்புறம் கிரேடியண்ட் ஃபினிஷ் செய்யப்பட்டிருக்கும் கேலக்ஸி எம்40 மாடலில் கைரேகை சென்சாரும் பின்புறமாகவே வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் டூயல் சிம் ஸ்லாட், 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வழங்கப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் 3.5 எம்.எம். ஆடியோ ஜாக் நீக்கப்பட்டு யு.எஸ்.பி. டைப்-சி இயர்போன்கள் வழங்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி எம்40 சிறப்பம்சங்கள்
– 6.3 இன்ச் 2340×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி-ஒ எல்.சி.டி. டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
– 2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர்
– அட்ரினோ 612 GPU
– 6 ஜி.பி. ரேம்
– 128 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 9.0 (பை) மற்றும் சாம்சங் ஒன் யு.ஐ.
– ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
– 32 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.7
– 5 எம்.பி. டெப்த் சென்சார், f/2.2
– 8 எம்.பி. 123° அல்ட்ரா-வைடு ஆங்கிள் கேமரா, f/2.2
– 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
– கைரேகை சென்சார்
– யு.எஸ்.பி. டைப்-சி ஆடியோ
– டால்பி அட்மாஸ்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– யு.எஸ்.பி. டைப்-சி
– 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி
– ஃபாஸ்ட் சார்ஜிங்
சாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போன் மிட்நைட் புளு மற்றும் சீவாட்டர் புளு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.19,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விற்பனை ஜூன் 19 ஆம் தேதி முதல் அமேசான் மற்றும் சாம்சங் ஆன்லைன் தளங்களில் நடைபெறுகிறது.
அறிமுக சலுகைகள்:
ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ரூ.249 மற்றும் ரூ.349 சலுகைகளில் பத்து மாதங்களுக்கு 100 சதவிகிதம் கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது.
வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்களுக்கு ரூ.3750 மதிப்புள்ள கேஷ்பேக் கிடைக்கும்.
ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ரூ.198 சலுகையில் பத்து மாதங்களுக்கு இருமடங்கு டேட்டா வழங்கப்படுகிறது.
மோட்டோரோலா நிறுவனத்தின் ஒன் விஷன் ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மோட்டோரோலா நிறுவனம் இன்-ஸ்கிகீரன் கேமரா கொண்ட புதிய ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீடு ஜூன் 20-இல் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மோட்டோரோலாவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இடம்பெற்றிருக்கும் புதிய டீசரில் ஜூன் 20 ஆம் தேதி இந்தியாவில் புதிய பிரீமியம் சாதனம் அறிமுகமாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மோட்டோரோலா நிறுவனம் கடந்த மாதம் பிரேசில் நாட்டில் தனது ஒன் விஷன் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது.

புதிய டீசரின் படி மோட்டோரோலா தனது ஒன் விஷன் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 21:9 சினிமா விஷன் எல்.சி.டி. ஸ்கிரீன் வழங்கப்படுகிறது.
Let’s move a notch ahead with a wider perspective! Get ready to experience #ANewVision. Tag your binge-watch partner who needs to see this now! pic.twitter.com/FhhlLWFGQe
— Motorola India (@motorolaindia) June 10, 2019
முன்புறம் 25 எம்.பி. இன்-ஸ்கிரீன் கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த கேமராவில் 1.8µm குவாட் பிக்சல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இது குறைந்த வெளிச்சமுள்ள பகுதிகளிலும் செல்ஃபிக்களை மிக துல்லியமாக வழங்கும் என கூறப்படுகிறது. புதிய மோட்டோ ஸ்மார்ட்போனில் எக்சைனோஸ் 9609 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.

மோட்டோரோலா ஒன் விஷன் சிறப்பம்சங்கள்:
- 6.3 இன்ச் 1080x2520 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. ஸ்கிரீன்
- 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் எக்சைனோஸ் 9609 பிராசஸர்
- 4 ஜி.பி ரேம்
- 128 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஹைப்ரிட் டூயல் சிம்
- ஆண்ட்ராய்டு 9.0 (பை)
- 48 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.7, OIS
- 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.2
- 25 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
- கைரேகை சென்சார்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- யு.எஸ்.பி. டைப்-சி
- 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 15 வாட் டர்போ பவர் ஃபாஸ்ட் சார்ஜிங்
மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போன் சஃபையர் புளு மற்றும் பிரவுன் நிறங்களில் கிடைக்கிறது. பிரேசில் நாட்டில் இதன் விலை 299 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.23,520) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அசுஸ் நிறுவனத்தின் 6இசட் ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
அசுஸ் நிறுவனம் தனது ஃபிளாக்ஷிப் சென்ஃபோன் 6 ஸ்மார்ட்போனினை சமீபத்தில் ஸ்பெயின் நாட்டில் அறிமுகம் செய்தது. தற்சமயம் இந்த ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் தெரியவந்துள்ளது.
ப்ளிப்கார்ட் தளத்தில் வெளியிடப்பட்டு இருக்கும் டீசர்களில் அசுஸ் தனது 6இசட் ஸ்மார்ட்போனினை இந்தியாவில் ஜூன் 19 ஆம் தேதி அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காப்புரிமை விவகாரங்களில் அசுஸ் நிறுவனம் சென் மற்றும் சென்ஃபோன் என்ற வார்த்தைகளை பயன்படுத்த உயர்நீதிமன்றம் சமீபத்தில் தடை விதித்தது. இதன் காரணமாக அசுஸ் தனது புதிய ஸ்மார்ட்போனை 6இசட் என்ற பெயரில் அறிமுகம் செய்ய இருக்கிறது.

சிறப்பம்சங்களை பொருத்தவரை புதிய அசுஸ் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் 6.46 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் நாட்ச்-லெஸ் எல்.சி.டி. டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது.
ஸ்டாக் ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் மற்றும் சென் யு.ஐ. 6 கொண்டிருக்கும் புதிய சென்ஃபோன் 6 மாடலில் ஆண்ட்ராய்டு கியூ மற்றும் ஆண்ட்ராய்டு ஆர் உள்ளிட்டவற்றுக்கான அப்டேட் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் சென்ஃபோனில் ஃப்ளிப் கேமரா செட்டப் வழங்கப்பட்டுள்ளது.

அசுஸ் சென்ஃபோன் 6 சிறப்பம்சங்கள்:
- 6.46 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் நானோ எட்ஜ் IPS LCD 19.5:9 டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 6
- ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 855 7 என்.எம். பிராசஸர்
- அட்ரினோ 640 GPU
- 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
- 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. / 256 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் சென் யு.ஐ. 6
- டூயல் சிம்
- 48 எம்.பி. ஃப்ளிப் கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.79, 1/2″ சோனி IMX586, 0.8μm பிக்சல், லேசர் AF, EIS
- 13 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 125-டிகிரி அல்ட்கா வைடு லென்ஸ், f/2.4
- கைரேகை சென்சார்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
- 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- க்விக் சார்ஜ் 4.0 ஃபாஸ்ட் சார்ஜிங்
அசுஸ் 6இசட் ஸ்மார்ட்போனின் இந்திய விலை விவரங்கள் அடுத்த வாரம் தெரிந்து விடும்.
சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி பற்றிய விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனினை ஆகஸ்டு 10 ஆம் தேதி அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகியுள்ளது. தென் கொரியாவில் இருந்து வெளியாகும் தகவல்களின் படி சாம்சங் தனது புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனினை இரு மாதங்களில் வெளியிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனின் ரென்டர்கள் இணையத்தில் வெளியாகின. இதுதவிர சாம்சங் தனது கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போனினை ஜூலை மாதத்தில் மீண்டும் வெளியிடலாம் என கூறப்படுகிறது. இதற்கென சாம்சங் தனி நிகழ்வுக்கு ஏற்பாடு செய்வதாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் ஆகஸ்டு 9 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டு, ஆகஸ்டு 24 ஆம் தேதி விற்பனைக்கு வந்தது. இந்நிலையில், இந்த ஆண்டு கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் ஆகஸ்டு 10 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டு இதன் விற்பனை ஆகஸ்டு 25 ஆம் தேதி துவங்கும் என கூறப்படுகிறது.
இம்முறை கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் இரண்டு வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இதன் ப்ரோ வேரியண்ட் பட்டன்கள் நீக்கப்பட்டு பிரெஷர் சென்சிட்டிவ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் என தெரிகிறது. கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனின் இரு வேரியண்ட்களிலும் பிக்ஸ்பி பட்டன் நீக்கப்படும் என கூறப்படுகிறது.

புதிய கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனின் துவக்க விலை 1100 டாலர்கள் முதல் 1200 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.76,000-ரூ.83,000) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது.
இதுதவிர வெளியாகி இருக்கும் மற்றொரு தகவலில் சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போனினை அடுத்த மாதம் அறிமுகம் செய்யும் என கூறப்படுகிறது. இதற்கான நிகழ்வு இந்த மாதம் நடைபெற்று ஸ்மார்ட்போனின் விற்பனை ஜூலையில் துவங்கும் என தெரிகிறது.

முன்னதாக கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போனின் வெளியீடு ஏப்ரல் 26 ஆம் தேதிக்கு திட்டமிடப்பட்டது. பின் ஸ்மார்ட்போனில் பிழை இருப்பது உறுதி செய்யப்பட்டு, வெளியீடு தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்டது. பின் ஸ்மார்ட்போனிற்கு சாம்சங் பெற்ற முன்பதிவு தொகையையும் வாடிக்கையாளர்களுக்கு திரும்ப வழங்கியது.
புகைப்படம் நன்றி: 91mobiles/onleaks
இந்தியாவில் சியோமியின் போகோ பிராண்டு தனது எஃப்1 ஸ்மார்ட்போனின் விலையை ரூ.2000 குறைப்பதாக அறிவித்துள்ளது.
சியோமியின் போகோ பிராண்டு தனது எஃப்1 ஸ்மார்ட்போனினை கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அறிமுகம் செய்தது. இந்தியாவில் ரூ.20,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்ட போகோ எஃப்1 ஸ்மார்ட்போனின் விலை பின்னர் குறைக்கப்பட்டு ரூ.19,999 விலையில் விற்பனை செய்யப்பட்டது.
தற்சமயம் போகோ எஃப்1 ஸ்மார்ட்போனின் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ.2000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.17,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை குறைப்பு தற்காலிகமானது தான் என்றும் ஜூன் 9 ஆம் தேதி வரை குறைந்த விலையில் போகோ எஃப்1 ஸ்மார்ட்போனை பயனர்கள் வாங்கிட முடியும்.

போகோ எஃப்1 ஸ்மார்ட்போனின் மற்ற மாடல்களின் விலை குறைக்கப்படவில்லை. சியோமி நிறுவனம் தனது ரெட்மி 20 மற்றும் ரெட்மி 20 ப்ரோ ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அடுத்த மாதம் அறிமுகம் செய்ய இருக்கிறது. அந்த வகையில் சியோமியின் போகோ எஃப்2 ஸ்மார்ட்போன் இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகிறது. புதிய கேலக்ஸி நோட் 10 சீரிஸ் நான்கு மாடல்களில் வெளியாகும் என்றும் இது எல்.டி.இ. மற்றும் 5ஜி என இருவித வேரியண்ட்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது.
தற்சமயம் ரஷ்யாவில் இருந்து வெளியாகி இருக்கும் தகவல்களில் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனின் விலை 1100 முதல் 1200 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.76,450 முதல் ரூ.83,250) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. எனினும், இந்த விலை கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனின் டாப்-எண்ட் 5ஜி மாடல் அல்லது ஸ்டான்டர்டு எல்.டி.இ. மாடலின் விலையா என்பது பற்றி எவ்வித தகவலும் இல்லை.
மற்று மாடல்களுடன் கேலக்ஸி நோட் 10இ வேரியண்ட் ஒன்றும் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. ஒருவேளை இந்த வேரியண்ட் அறிமுகமாகும் பட்சத்தில் இதன் விலை ஸ்டான்டர்டு மாடலை விட குறைவாக நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. விலை குறைப்பு காரணமாக சில அம்சங்கள் நீக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களில் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனில் 3.5 எம்.எம். ஆடியோ ஜாக் நீக்கப்பட்டு, யு.எஸ்.பி. டைப்-சி சார்ந்து இயங்கும் இயர்போன்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. அந்த வகையில் யு.எஸ்.பி. டைப்-சி - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக் டாங்கில் ஸ்மார்ட்போனுடன் வழங்கப்படலாம் என தெரிகிறது.
புதிய கேலக்ஸி நோட் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் பட்டன்கள் நீக்கப்படும் என கூறப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 64 எம்.பி. பிரைமரி கேமரா சென்சார் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர கேலக்ஸி எஸ்10 பிளஸ் மாடலில் வழங்கப்பட்ட கேமரா யூனிட் புதிய நோட் சீரிஸ் ஸ்மார்ட்போனிலும் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனின் முன்புற பன்ச் ஹோல் கேமரா சிறியதாக்கப்பட்டு ஸ்மார்ட்போனின் மத்தியில் பொருத்தப்படும் என கூறப்படுகிறது. இவற்றுடன் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனை வேகமாக சார்ஜ் செய்ய 45 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம்.
ஒப்போ நிறுவனம் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட தனது ஸ்மார்ட்போனின் விலையை ரூ.2000 குறைப்பதாக அறிவித்துள்ளது.
ஒப்போ நிறுவனத்தின் கே1 ஸ்மார்ட்போன் இந்தியாவில் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் ரூ.16,990 விலையில் அறிமுகமான ஒப்போ கே1 ஸ்மார்ட்போனில் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளிட்டவை முக்கிய சிறப்பம்சங்களாக இருக்கின்றன.
இந்தியாவில் அறிமுகமாகி நான்கு மாதங்களாகி இருக்கும் ஒப்போ கே1 ஸ்மார்ட்போனின் விலையை குறைப்பதாக ஒப்போ தெரிவித்துள்ளது. அந்த வகையில் ஒப்போ கே1 ஸ்மார்ட்போனின் விலை ரூ.2000 குறைக்கப்படுகிறது. தற்சமயம் விலை குறைப்பை தொடர்ந்து ஒப்போ கே1 ஸ்மார்ட்போன் ரூ.14,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி எனும் ஒற்றை வேரியண்ட்டில் கிடைக்கும் ஒப்போ ஸ்மார்ட்போன் விலை முதல் முறையாக குறைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒப்போ கே1 ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் வலைதளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில் ப்ளிப்கார்ட் தளத்தில் புதிய விலை மாற்றப்பட்டுள்ளது.

ஒப்போ கே1 சிறப்பம்சங்கள்:
- 6.4 இன்ச் 2340x1080 பிக்சல் ஆன்-செல் AMOLED டிஸ்ப்ளே
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 660 14 என்.எம். பிராசஸர்
- அட்ரினோ 512 GPU
- 4 ஜி.பி. ரேம்
- 64 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் கலர் ஓ.எஸ். 5.2
- டூயல் சிம் ஸ்லாட்
- 16 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
- 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
- 25 எம்.பி. செல்ஃபி கேமரா
- இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 3600 எம்.ஏ.ஹெச். பேட்டரி
ஒப்போ கே1 ஸ்மார்ட்போன் ஆஸ்ட்ரல் புளு மற்றும் பியானோ பிளாக் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில், ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.
ஜூன் 11 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கும் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் டிஸ்ப்ளே, 128 ஜி.பி. மெமரி வழங்கப்படுகிறது. இத்துடன் புதிய ஸ்மார்ட்போனில் இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே வழங்கப்படுவதை சாம்சங் ஏற்கனவே உறுதி செய்துவிட்டது.
தற்சமயம் வெளியாகியிருக்கும் தகவல்களில் சாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 1080x2340 பிக்சல் இன்ஃபினிட்டி ஒ-டிஸ்ப்ளே, 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி, 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படும் என கூறப்படுகிறது. ஏற்கனவே வெளியான தகவல்களில் இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கும் என கூறப்பட்டது.

புகைப்படங்களை எடுக்க கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போனில் 5 எம்.பி. இரண்டாவது கேமராவும், 8 எம்.பி. அல்ட்ரா வைடு லென்ஸ் மற்றும் 32 எம்.பி. பிரைமரி கேமரா வழங்கப்படுகிறது. முன்புறம் 16 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. ஜூன் 11 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் கேலக்ஸி எம்40 டீசர் முன்னதாக அமேசானில் வெளியிடப்பட்டது.
அந்த வகையில் புதிய கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படலாம் என கூறப்படுகிறது. அமேசானில் வெளியிடப்பட்ட புகைப்படத்தில் ஸ்மார்ட்போனின் முன்புறம் மற்றும் பின்புறம் தெளிவாக காட்சியளித்தது.
முன்னதாக சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் விற்பனையில் இருபது லட்சம் யூனிட்களை கடந்ததாக அந்நிறுவனம் அறிவித்தது. இதுவரை கேலக்ஸி எம் சீரிசில் கேலக்ஸி எம்10, கேலக்ஸி எம்20 மற்றும் கேலக்ஸி எம்30 என மொத்தம் மூன்று ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
ஜூன் 11 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கும் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் டிஸ்ப்ளே, 128 ஜி.பி. மெமரி வழங்கப்படுகிறது. இத்துடன் புதிய ஸ்மார்ட்போனில் இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே வழங்கப்படுவதை சாம்சங் ஏற்கனவே உறுதி செய்துவிட்டது.
தற்சமயம் வெளியாகியிருக்கும் தகவல்களில் சாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 1080x2340 பிக்சல் இன்ஃபினிட்டி ஒ-டிஸ்ப்ளே, 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி, 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படும் என கூறப்படுகிறது. ஏற்கனவே வெளியான தகவல்களில் இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கும் என கூறப்பட்டது.

புகைப்படங்களை எடுக்க கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போனில் 5 எம்.பி. இரண்டாவது கேமராவும், 8 எம்.பி. அல்ட்ரா வைடு லென்ஸ் மற்றும் 32 எம்.பி. பிரைமரி கேமரா வழங்கப்படுகிறது. முன்புறம் 16 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. ஜூன் 11 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் கேலக்ஸி எம்40 டீசர் முன்னதாக அமேசானில் வெளியிடப்பட்டது.
அந்த வகையில் புதிய கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படலாம் என கூறப்படுகிறது. அமேசானில் வெளியிடப்பட்ட புகைப்படத்தில் ஸ்மார்ட்போனின் முன்புறம் மற்றும் பின்புறம் தெளிவாக காட்சியளித்தது.
முன்னதாக சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் விற்பனையில் இருபது லட்சம் யூனிட்களை கடந்ததாக அந்நிறுவனம் அறிவித்தது. இதுவரை கேலக்ஸி எம் சீரிசில் கேலக்ஸி எம்10, கேலக்ஸி எம்20 மற்றும் கேலக்ஸி எம்30 என மொத்தம் மூன்று ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் ஜூன் 6 ஆம் தேதி இந்த நோக்கியா ஸ்மார்ட்போனினை தான் அறிமுகம் செய்யும் என தகவல் வெளியாகியுள்ளது.
ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் ஜூன் 6 ஆம் தேதி நோக்கியா 6.2 என்கிற நோக்கியா X71 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக நோக்கியா தனது புதிய ஸ்மார்ட்போனின் வெளியீட்டை உறுதிப்படுத்தும் வகையில் டீசர்களை வெளியிட்டது.
எனினும், இந்த டீசர்களில் ஸ்மார்ட்போனின் விவரங்கள் இடம்பெறவில்லை. இந்நிலையில், நோக்கியா அநியூ என்ற ட்விட்டர் பக்கத்தில் ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா 6.2 ஸ்மார்ட்போனினை இதே நிகழ்வில் அறிமுகம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிமுக நிகழ்வு நடைபெறும் அதே நாளில் இந்தியாவிலும் நோக்கியா நிகழ்வு நடைபெறுகிறது. அந்த வகையில் இந்திய சந்தைக்கென சில அறிவிப்புகள் இடம்பெறும் என கூறப்படுகிறது. நோக்கியா அநியூ ட்விட்டர் பதிவில் நோக்கியா 6.2 ஸ்மார்ட்போன் மற்ற சந்தைகளை போன்று 290 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.20,200) விலையில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன் ரூ.16,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த வகையில் நோக்கியா 6.2 ஸ்மார்ட்போனும் இதே விலைப்பட்டியலில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நோக்கியா 6.2 ஸ்மார்ட்போன் நோக்கியா X71 மாடலின் சர்வதேச எடிஷனாக இருக்கும் என கூறப்படுகிறது.
சில வாரங்களுக்கு முன் நோக்கியா X71 ஸ்மார்ட்போன் தாய்வானில் அறிமுகம் செய்யப்பட்டது. சிறப்பம்சங்களை பொருத்தவரை மெட்டல் கிளாஸ் சான்ட்விச் வடிவமைப்பும் பின்புறம் கைரேகை சென்சாரும் வழங்கப்பட்டுள்ளது. 6.39 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் பியூர் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன் ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர், 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க செய்ஸ் சான்று பெற்ற 48 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8, 8 எம்.பி. 120 டிகிரி சூப்பர் வைடு ஆங்கிள் லென்ஸ், 5 எம்.பி. டெப்த் கேமரா வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0 வழங்கப்படுகிறது.
மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய ஒன் சீரிஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.
மோட்டோரோலா நிறுவனத்தின் ஒன் விஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அ்நிறுவனம் மற்றொரு ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனினை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக இணையத்தில் தகவல் வெளியானது.
இவை மோட்டோரோலா ஒன் ஆக்ஷன் மற்றும் மோட்டோரோலா ஒன் ப்ரோ என அழைக்கப்படலாம் என கூறப்பட்டது. இந்நிலையில், மோட்டோரோலாவின் ஒன் ஆக்ஷன் ஸ்மார்ட்போன் விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் வெளியாகியுள்ளது. இதில் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களும் வெளியாகி இருக்கிறது.

அதன்படி புதிய மோட்டோரோலா ஸ்மார்ட்போனில் 4 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்டிருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக வெளியான தகவல்களில் இந்த ஸ்மார்ட்போனில் எக்சைனோஸ் 9609 சிப்செட் வழங்கப்படும் என கூறப்பட்டது. இதே பிராசஸர் சாம்சங் கேலக்ஸி ஏ50 ஸ்மார்ட்போனிலும் வழங்கப்பட்டுள்ளது.
மோட்டோரோலா ஒன் ஆக்ஷன் ஸ்மார்ட்போன் ராணுவத் தரத்தில் உருவாக்கப்பட்டு MIL-STD-810G தரச்சான்றும் IP68 சான்றுடன் வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது. மோட்டோரோலா நிறுவனம் மோட்டோரோலா ஒன் ஆக்ஷன் ஸ்மார்ட்போனுடன், மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போனையும் அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது.
மோட்டோரோலா ஒன் விஷன் சிறப்பம்சங்களை பொருத்தவரை 21:9 அல்ட்ரா-வைடு டிஸ்ப்ளே கொண்ட மோட்டோவின் முதல் ஸமார்ட்போனாக இது இருக்கும் என கூறப்படுகிறது. இதில் 6.3 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே மற்றும் புதுவித ஹோல் பன்ச் வடிவமைப்பு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

புகைப்படங்களை எடுக்க டூயல் பிரைமரி கேமரா செட்டப்: ஒன்று 48 எம்.பி. சென்சார், OIS, F/1.7 அப்கரேச்சர் மற்றொன்று 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.2 அப்ரேச்சர் வழங்கப்படும் என தெரிகிறது. இதன் பிரைமரி கேமரா 12 எம்.பி. தரத்தில் புகைப்படங்களை வழங்கும் என கூறப்படுகிறது.
முன்புறம் பன்ச் ஹோல் டிஸ்ப்ளேவில் 25 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்படலாம் என தெரிகிறது. ஒன் விஷன் ஸ்மார்ட்போன் 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் என்றும் இத்துடன் 15 வாட் டர்போ பவர் சார்ஜர் வழங்கப்படும் என கூறப்படுகிறது.






