என் மலர்
தொழில்நுட்பம்

இணையத்தில் லீக் ஆன மோட்டோரோலா ஒன் ஆக்ஷன் ஸ்மார்ட்போன்
மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய ஒன் சீரிஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.
மோட்டோரோலா நிறுவனத்தின் ஒன் விஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அ்நிறுவனம் மற்றொரு ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனினை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக இணையத்தில் தகவல் வெளியானது.
இவை மோட்டோரோலா ஒன் ஆக்ஷன் மற்றும் மோட்டோரோலா ஒன் ப்ரோ என அழைக்கப்படலாம் என கூறப்பட்டது. இந்நிலையில், மோட்டோரோலாவின் ஒன் ஆக்ஷன் ஸ்மார்ட்போன் விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் வெளியாகியுள்ளது. இதில் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களும் வெளியாகி இருக்கிறது.

அதன்படி புதிய மோட்டோரோலா ஸ்மார்ட்போனில் 4 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்டிருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக வெளியான தகவல்களில் இந்த ஸ்மார்ட்போனில் எக்சைனோஸ் 9609 சிப்செட் வழங்கப்படும் என கூறப்பட்டது. இதே பிராசஸர் சாம்சங் கேலக்ஸி ஏ50 ஸ்மார்ட்போனிலும் வழங்கப்பட்டுள்ளது.
மோட்டோரோலா ஒன் ஆக்ஷன் ஸ்மார்ட்போன் ராணுவத் தரத்தில் உருவாக்கப்பட்டு MIL-STD-810G தரச்சான்றும் IP68 சான்றுடன் வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது. மோட்டோரோலா நிறுவனம் மோட்டோரோலா ஒன் ஆக்ஷன் ஸ்மார்ட்போனுடன், மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போனையும் அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது.
மோட்டோரோலா ஒன் விஷன் சிறப்பம்சங்களை பொருத்தவரை 21:9 அல்ட்ரா-வைடு டிஸ்ப்ளே கொண்ட மோட்டோவின் முதல் ஸமார்ட்போனாக இது இருக்கும் என கூறப்படுகிறது. இதில் 6.3 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே மற்றும் புதுவித ஹோல் பன்ச் வடிவமைப்பு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

புகைப்படங்களை எடுக்க டூயல் பிரைமரி கேமரா செட்டப்: ஒன்று 48 எம்.பி. சென்சார், OIS, F/1.7 அப்கரேச்சர் மற்றொன்று 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.2 அப்ரேச்சர் வழங்கப்படும் என தெரிகிறது. இதன் பிரைமரி கேமரா 12 எம்.பி. தரத்தில் புகைப்படங்களை வழங்கும் என கூறப்படுகிறது.
முன்புறம் பன்ச் ஹோல் டிஸ்ப்ளேவில் 25 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்படலாம் என தெரிகிறது. ஒன் விஷன் ஸ்மார்ட்போன் 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் என்றும் இத்துடன் 15 வாட் டர்போ பவர் சார்ஜர் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
Next Story






