search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    இணையத்தில் வெளியான 5ஜி ஐபோன் விவரங்கள்
    X

    இணையத்தில் வெளியான 5ஜி ஐபோன் விவரங்கள்

    ஆப்பிள் நிறுவனத்தின் புதிய 5ஜி ஐபோன் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.



    ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் மாடல்கள் பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளது. ஆப்பிள் நிறுவனம் 2020 ஆம் ஆண்டில் தனது 5ஜி ஐபோனினை அறிமுகம் செய்யும் என தகவல் வெளியாகியுள்ளது.

    தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் அடுத்த ஆண்டு ஆப்பிள் நிறுவனம் மூன்று OLED ஐபோன்களை அறிமுகம் செய்யும் என தெரிகிறது. இதில் 5.42 இன்ச், 6.7 இன்ச் AMOLED டிஸ்ப்ளேவும், 5ஜி வசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் 6.1 இன்ச் OLED டிஸ்ப்ளே கொண்ட 4ஜி எல்.டி.இ. ஐபோன் மாடல் அடுத்த ஆண்டு அறிமுகமாகும் என தெரிகிறது.

    2020 ஐபோன்களில் குவால்காம் நிறுவனத்தின் 5ஜி மோடெம் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. ஆப்பிள் மற்றும் குவால்காம் நிறுவனங்களிடையே சுமூக ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து இந்த தகவல் வெளியாகியிருக்கிறது. 2021 ஆண்டில் இருந்து அனைத்து ஐபோன்களிலும் 5ஜி வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது.



    2022 அல்லது 2023 ஆம் ஆண்டுகளில் வெளியிடும் ஐபோன்களில் ஆப்பிள் தனது சொந்த 5ஜி மோடெம்களை பயன்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக வெளியான தகவல்களில் 2020 ஐபோன்களில் ஆப்பிள் நிறுவனம் குவால்காம் மற்றும் சாம்சங்கின் 5ஜி மோடெம்களை பயன்படுத்தும் என கூறப்பட்டது.

    2020 ஐபோன் மாடல்களின் மற்ற சிறப்பம்சங்கள் மற்றும் ஹார்டுவேர் பற்றி எவ்வித தகவலும் இல்லை. கடந்த மாதம் வெளியான தகவல்களில் 2020 ஐபோன் மாடல்கள் ஃபுல் ஸ்கிரீன் டச் ஐ.டி. மற்றும் 3டி சென்சிங் பிரைமரி கேமராக்களை கொண்டிருக்கும் என கூறப்பட்டது.
    Next Story
    ×