search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    இந்தியாவில் மீண்டும் விலை குறைக்கப்பட்ட சியோமி ஸ்மார்ட்போன்
    X

    இந்தியாவில் மீண்டும் விலை குறைக்கப்பட்ட சியோமி ஸ்மார்ட்போன்

    சியோமியின் போகோ எஃப்1 ஸ்மார்ட்போனின் விலை இந்தியாவில் மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் புதிய விலையை பார்ப்போம்.



    சியோமியின் போகோ எஃப்1 ஸ்மார்ட்போனின் விலை இந்தியாவில் மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 17,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. போகோ எஃப்1 ஸ்மார்ட்போன் சியோமி அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் ப்ளிப்கார்ட் தளத்தில் புதிய விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    போகோ எஃப்1 விலை குறைக்கப்பட்டிருப்பது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், விலை குறைப்பு எதுவரை வழங்கப்படும் என்பது பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. சமீபத்தில் போகோ எஃப்1 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 22,999 இல் இருந்து ரூ. 20,999-க்கு குறைக்கப்பட்டது. இதன் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி விலை ரூ. 2,000 குறைக்கப்பட்டு ரூ. 19,999 விலையில் விற்பனை செய்யப்பட்டது.

    தற்சமயம் போகோ எஃப்1 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 17,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் போகோ எஃப்1 ஸ்மார்ட்போன் ஸ்டீல் புளு, கிராஃபைட் பிளாக் மற்றும் ரோஸோ ரெட் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது.



    முன்னதாக ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெற்ற சிறப்பு விற்பனையில் போகோ எஃப்1 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் ரூ.17,999 விலையில் விற்பனை செய்யப்பட்டது. எனினும், இச்சலுகை ஜூன் 21 ஆம் தேதி வரை மட்டுமே வழங்கப்பட்டது. விலை குறைப்பு மட்டுமின்றி போகோ எஃப்1 வாங்குவோருக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதியும், ரூ. 3000 மதிப்புள்ள எக்சேஞ்ச் சலுகையும் வழங்கப்பட்டது.

    போகோ எஃப்1 சிறப்பம்சங்களை பொருத்தவரை 6.18 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே மற்றும் நாட்ச் கொண்டிருக்கும் போகோ எஃப்1 மாடலில் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், 8 ஜி.பி. ரேம் மற்றும் லிக்விட்-கூல் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 12 எம்பி பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, ஏ.ஐ. அம்சங்கள், 20 எம்.பி. செல்ஃபி கேமரா மற்றும், ஏ.ஐ. அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. ஐ.ஆர். ஃபேஸ் அன்லாக் வசதி கொண்டிருக்கிறது.
    Next Story
    ×