என் மலர்
மொபைல்ஸ்
ஹெச்.எம்.டி. குளோபல் ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் ஐந்து கேமரா கொண்ட நோக்கியா ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது.
ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் இந்தியாவில் தனது ஃபிளாக்ஷிப் நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போனில் புகைப்படங்களை எடுக்க ஐந்து பிரைமரி கேமராக்கள்: இரு ஆர்.ஜி.பி. மற்றும் மூன்று மோனோக்ரோம் லென்ஸ் வழங்கப்பட்டிருக்கிறது.
மற்ற அம்சங்களை பொருத்தவரை நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனில் 5.99 இன்ச் குவாட் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர், 6 ஜி.பி. ரேம், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. IP67 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கும் நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் 3320 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

நோக்கியா 9 பியூர் வியூ சிறப்பம்சங்கள்:
- 5.99 இன்ச் 2560x1440 பிக்சல் குவாட் ஹெச்.டி. pOLED டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- 2.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 845 64-பிட் 10 என்.எம். பிராசஸர்
- அட்ரினோ 630 GPU
- 6 ஜி.பி. ரேம்
- 128 ஜி.பி. மெமரி
- ஆண்ட்ராய்டு 9.0 பை
- 12 எம்.பி. (2 x RBG, 3 x மோனோ) ஐந்து பிரைமரி கேமராக்கள், f/1.82, எல்.இ.டி. ஃபிளாஷ்
- 20 எம்.பி. செல்ஃபி கேமரா
- இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி (IP67)
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
- 3320 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- ஃபாஸ்ட் சார்ஜிங்
- வயர்லெஸ் சார்ஜிங்
நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் மிட்நைட் புளு நிறத்தில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ.49,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை இன்று (ஜூலை 10) முதல் ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெறுகிறது. ஜூலை 17 ஆம் தேதி முதல் மற்ற விற்பனை மையங்களில் கிடைக்கும்.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனின் புதிய டீசரில் வெளியாகியுள்ள தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
சாம்சங் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் ஆகஸ்டு 7 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில், சாம்சங் இந்தோனேசியா வெளியிட்டிருக்கும் டீசரில் கேலக்ஸி நோட் 10 எவ்வாறு சந்தைப்படுத்தப்படும் என்பது குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது.
டீசர் வீடியோவில் தரவுகள் கம்ப்யூட்டரில் இருந்து யு.எஸ்.பி. டிரைவிற்கு பரிமாற்றம் செய்யப்பட்டு அவை லேப்டாப்பில் இணைத்து மி்ன்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டு ஸ்மார்ட்போனில் பெறப்படும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. கேலக்ஸி நோட் 10 கொண்டு இவை அனைத்தையும் மிக எளிமையாக செய்ய முடியும் என சாம்சங் தெரிவிக்கிறது.

சாம்சங் ஸ்மார்ட்போனில் உள்ள டெக்ஸ் மோட் ஸ்மார்ட்போனினை டெஸ்க்டாப்பாக மாற்றுகிறது. பின் லேப்டாப்பிற்கு மாற்றாக இது மாறுகிறது. முந்தைய கேலக்ஸி நோட் 9 மற்றும் ப்ளூடூத் வசதி செயல்படுத்தப்பட்ட எஸ் பென் கொண்டு பயனர்கள் பிரெசன்டேஷன் செய்யும் முறை விளக்கியது. புதிய டீசரில் கேலக்ஸி நோட் 10 மாடலில் இந்த அம்சம் மேலும் மேம்படுத்தப்படும் என தெரிகிறது.
முன்னதாக வெளியான தகவல்களில் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனில் 20 வாட் ஃபாஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங் வழங்கப்படும் என கூறப்பட்டது. சிறப்பம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் 6.4 இன்ச் மற்றும் 6.7 இன்ச் என இருவித அளவுகளில் கிடைக்கும் என கூறப்படுகிறது.
இவை 4ஜி எல்.டி.இ. மற்றும் 5ஜி வேரியண்ட்களில் கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போன் எக்சைனோஸ் 9820 / ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம் மற்றும் 512 ஜி.பி. மெமரி வழங்கப்படும் என கூறப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க மூன்று பிரைமரி கேமரா வழங்கப்படலாம்.
ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் இந்தியாவில் நோக்கியா 6.1 ஸ்மார்ட்போனின் விலையை குறைத்திருக்கிறது.
இந்தியாவில் நோக்கியா 6.1 ஸ்மார்ட்போனின் விலை குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை குறைப்பு நோக்கியா இந்தியா வலைதளத்தில் மாற்றப்பட்டுள்ளது. இந்தியாவில் நோக்கியா 6.1 அல்லது நோக்கியா 6 (2018) ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன் 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி மற்றும் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் கூகுளின் ஆண்ட்ராய்டு ஒன் திட்டத்தில் அறிமுகமானது.
விலை குறைப்பின் படி நோக்கியா 6.1 ஸ்மார்ட்போனின் 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 6999 என்றும் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 9,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் தளத்தில் விலை குறைப்பு இதுவரை மாற்றப்படவில்லை.

இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் ரூ. 16,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. பின் இதன் 3 ஜி.பி. மாடல் விலை ரூ. 8,999 என்றும் 4 ஜி.பி. மாடல் விலை ரூ. 10,999 என மாற்றப்பட்டது.
சிறப்பம்சங்களை பொருத்தவரை நோக்கியா 6.1 ஸ்மார்ட்போனில் 5.5 இன்ச் 1080 பிக்சல் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 கொண்டு பாதுகாக்கப்படுகிறது. இத்துடன் ஸ்னாப்டிராகன் 630 சிப்செட், ஆன்ட்ரய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க 16 எம்.பி. பிரைமரி கேமரா, f/2.0 அப்ரேச்சர், டூயல் டோன் எல்இடி ஃபிளாஷ், செய்ஸ் ஆப்டிக்ஸ் மற்றும் 8 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. மெட்டல் யுனிபாடி வடிவைப்பு கொண்டிருக்கும் நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன் 6000 சீரிஸ் அலுமினியம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
ஒப்போ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
ஒப்போ நிறுவனத்தின் புதிய K1 ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில், ஒப்போ தனது K3 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
முன்னதாக ஒப்போ K1 ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் வெளியிடப்பட்டது. சிறப்பம்சங்களை பொருத்தவரை ஒப்போ K3 ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், கேம்பூஸ்ட் 2.0, ஆண்ட்ராய்டு பை சார்ந்த கலர் ஒ.எஸ். 6.0 வழங்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க 16 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது இத்துடன் 16 எம்.பி. பாப்-அப் ரக செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. 3டி கிரேடியண்ட் பேக் கொண்டிருக்கும் ஒப்போ K3 மாடலில் 3765 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் VOOC 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங் வழங்ப்பட்டுள்ளது.

ஒப்போ K3 சிறப்பம்சங்கள்:
- 6.5 இன்ச் 2340x1080 பிக்சல் FHD+AMOLED டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 710 10 என்.எம். பிராசஸர்
- அட்ரினோ 616 GPU
- 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. UFS 2.1 மெமரி
- 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. / 256 ஜி.பி. UFS 2.1 மெமரி
- டூயல் சிம்
- ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் கலர் ஒ.எஸ். 6.0
- 16 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.7, 6P லென்ஸ், PDAF, CAF
- 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
- 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
- இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
- 3765 எம்.ஏ.ஹெச். பேட்டரி,
- VOOC 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங்
ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் தனது நோக்கியா 9 பியூர்வியூ ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு விவரங்களை வெளியிட்டுள்ளது.
ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் ஐந்து கேமரா சென்சார்களை கொண்ட நோக்கியா 9 பியூர்வியூ ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் வெளியாகும் என தெரிவித்துள்ளது. புதிய அறிவிப்பை நோக்கியா மொபைல் இந்தியா ட்விட்டர் பக்கத்தில் அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
நோக்கியா 9 பியூர்வியூ ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டிருக்கும் ஐந்து கேமரா யூனிட்டில் இரண்டு RGB மற்றும் மூன்று மோனோக்ரோம் லென்ஸ் இடம்பெற்றுள்ளது. இது ஒற்றை நிற சென்சார் சேகரிப்பதை விட பத்து மடங்கு அதிக வெளிச்சத்தை சேகரிக்கும் திறன் கொண்டிருக்கிறது.
சிறப்பம்சங்களை பொருத்தவரை நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனில் 5.99 இன்ச் குவாட் ஹெச்.டி. pOLED டிஸ்ப்ளே, ஹெச்.டி.ஆர். 10 வசதி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர், 6 ஜி.பி. ரேம், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கிறது.

நோக்கியா 9 பியூர் வியூ சிறப்பம்சங்கள்:
– 5.99 இன்ச் 2560×1440 பிக்சல் குவாட் ஹெச்.டி. pOLED டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
– 2.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 845 64-பிட் 10 என்.எம். பிராசஸர்
– அட்ரினோ 630 GPU
– 6 ஜி.பி. ரேம்
– 128 ஜி.பி. மெமரி
– ஆண்ட்ராய்டு 9.0 பை
– 12 எம்.பி. (2 x RBG, 3 x மோனோ) ஐந்து பிரைமரி கேமராக்கள், f/1.82, எல்.இ.டி. ஃபிளாஷ்
– 20 எம்.பி. செல்ஃபி கேமரா
– இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
– வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி (IP67)
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
– 3320 எம்.ஏ.ஹெச். பேட்டரி
– ஃபாஸ்ட் சார்ஜிங்
– வயர்லெஸ் சார்ஜிங்
புதிய நோக்கியா 9 பியூர்வியூ ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதி மற்றும் விலை விவரங்கள் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
ரியல்மி பிராண்டு வெளியீட்டுக்கு முன் இந்தியாவில் தனது ரியல்மி எக்ஸ் ஸ்பைடர் மேன் எடிஷன் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது.
ரியல்மி பிராண்டு இந்தியாவில் தனது ரியல்மி எக்ஸ் ஸ்பைடர் மேன் எடிஷன் ஸ்மார்ட்போனை அதிகாரப்பூர்வ வெளியீட்டுக்கு முன்னதாகவே அறிமுகம் செய்துள்ளது. ஏற்கனவே இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டது குறிப்பிடத்தக்கது.
ஸ்பைடர் மேன் ஸ்பெஷல் எடிஷனுடன் பிரத்யேக பாதுகாப்பு கேஸ் மற்றும் கலர் ஒ.எஸ். 6 ஸ்பைடர் மேன் தீம் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் கஸ்டமைஸ்டு வால்பேப்பர், போன் கேஸ் மற்றும் சார்ஜர் உள்ளிட்டவையும் வழங்கப்படுகிறது. இதன் விலை வரும் வாரங்களில் அறிவிக்கப்பட இருக்கிறது.

ஸ்மார்ட்போனின் இதர சிறப்பம்சங்களில் எவ்வித மாற்றமும் இருக்காது என தெரிகிறது. அந்த வகையில் ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு பை மற்றும் கலர் ஒ.எஸ். 6 வழங்கப்படுகிறது.
இத்துடன் புதிய ஸ்மார்ட்போனில் ஆறாம் தலைமுறை இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 48 எம்.பி. சோனி IMX586 சென்சார், 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, ஏ.ஐ. அம்சங்கள், முன்புறம் 16 எம்.பி. பாப்-அப் ரக செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.
பின்புறும் கிரேடியண்ட் பேக், எஸ் வடிவ வளைவு மற்றும் 3765 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படுகிறது. இத்துடன் VOOC 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்படுகிறது.
ரியல்மி பிராண்டு தனது புதிய ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜூலை 15 ஆம் தேதி அறிமுகமாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ரியல்மி எக்ஸ் ஸ்பைடர் மேன்: ஃபார் ஃபிரம் ஹோம் ஸ்பெஷல் எடிஷனும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
சீனாவில் கடந்த வாகம் அறிமுகமான ஸ்பைடர் மேன் எடிஷனில் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ரெட் நிற கஸ்டம் கேஸ் வழங்கப்படுகிறது. இந்தியாவில் ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ. 20,000 பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரியல்மி எக்ஸ் சிறப்பம்சங்கள்
- 6.53 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் AMOLED டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 710 10 என்.எம். பிராசஸர்
- அட்ரினோ 616 GPU
- 4 ஜி.பி. / 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
- 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி
- டூயல் சிம் ஸ்லாட்
- கலர் ஒ.எஸ். 6.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 9.0 பை
- 48 எம்.பி. பிரைமரி கேமரா, 1/2.0″ சோனி IMX586 சென்சார், f/1.7, 6P லென்ஸ், எல்.இ.டி. ஃபிளாஷ்
- 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
- 16 எம்.பி. செல்ஃபி கேமரா, சோனி IMX471 சென்சார், f/2.0
- இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- டூல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
- 3765 எம்.ஏ.ஹெச். பேட்டரி, VOOC 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங்
எல்.ஜி. நிறுவனம் தனது ஜி8எஸ் தின்க் ஸ்மார்ட்போனின் சர்வதேச விற்பனை பற்றிய விவரங்களை வெளியிட்டுள்ளது.
எல்.ஜி. நிறுவனம் தனது ஜி8எஸ் தின்க் ஸ்மார்ட்போனினை ஜி8 தின்க் ஸ்மார்ட்போனுடன் இந்த ஆண்டு துவக்கத்தில் நடைபெற்ற சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்தது.
இந்நிலையில், எல்,ஜி. ஜி8எஸ் தின்க் ஸ்மார்ட்போன் இம்மாதமே சர்வதேச சந்தையில் விற்பனைக்கு வரும் என அறிவித்துள்ளது. சிறப்பம்சங்களை பொருத்தவரை எல்.ஜி. ஜி8எஸ் தின்க் ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் ஃபுல் விஷன் FHD+OLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், 6 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க மூன்று பிரைமரி கேமரா யூனிட்: 12 எம்.பி. பிரைமரி கேமரா, 13 எம்.பி. 137˚ சூப்பர் வைடு ஆங்கில் கேமரா, 12 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் செல்ஃபி எடுக்க 8 எம்.பி. சென்சார் மற்றும் 3D ToF கேமரா வழங்கப்பட்டுள்ளது.

எல்.ஜி. ஜி8எஸ் தின்க் சிறப்பம்சங்கள்:
- 6.2 இன்ச் 2248x1080 பிக்சல் 19.5:9 FHD பிளஸ் ஃபுல் விஷன் OLED டிஸ்ப்ளே
- ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 7என்.எம். பிராசஸர்
- அட்ரினோ 640 GPU
- 6 ஜி.பி. ரேம்
- 64 ஜி.பி. / 128 ஜி.பி. (UFS 2.1) மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 9.0 பை
- 12 எம்.பி. பிரமரி கேமரா, f/1.5, 1.4µm, 78° லென்ஸ், எல்.இ.டி. ஃபிளாஷ்
- 13 எம்.பி. 137˚ சூப்பர் வைடு ஆங்கிள் கேமரா, f/2.4, 1.0 µm பிக்சல்
- 12 எம்.பி. டெலிபோட்டோ கேமரா, f/2.4, 1.0µm, 45° லென்ஸ், எல்.இ.டி. ஃபிளாஷ்
- 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/1.9, 1.22μm, 80° லென்ஸ், 3D ToF சென்சார்
- கைரேகை சென்சார்
- 3D ஃபேஸ் அன்லாக்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யு.எஸ்.பி. டைப்-சி (2.0)
- 3550 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- குவால்காம் க்விக் சார்ஜ் 3.0
எல்.ஜி. ஜி8எஸ் தின்க் ஸ்மார்ட்போன் மிரர் பிளாக், மிரர் டீல் மற்றும் மிரர் வைட் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 769 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.59,865) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இதன் விற்பனை ஐரோப்பா, லத்தின் அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் துவங்குகிறது.
10.ஆர் பிராண்டு இந்தியாவில் தனது புதிய ஸ்மார்ட்போனினை அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம் மற்றும் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன் அறிமுகம் செய்துள்ளது.
10.ஆர் (டெனார்) பிராண்டின் புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போன் 10.ஆர் ஜி2 என அழைக்கப்படுகிறது. இது அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த 10.ஆர் ஜி ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடல் ஆகும்.
புதிய 10.ஆர் ஜி2 ஸ்மார்ட்போனில் 6.18 இன்ச் FHD பிளஸ் 2246×1080 பிக்சல் 19:9 2.5D டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு, குவால்காம் ஸ்னாப்டிராகன் 636 ஆக்டா-கோர் பிராசஸர், 4 ஜி.பி. / 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டுள்ளது. இதன் பின்புறம் கைரேகை சென்சார் இடம்பெற்றுள்ளது.
புகைப்படங்களை எடுக்க 16 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ் வழங்கப்பட்டுள்ளது. இது அதிக வெளிச்சமுள்ள பகுதிகளிலும், குறைவான வெளிச்சமுள்ள பகுதிகளிலும் சீராக இயங்கும். செல்ஃபி எடுக்க 12 எம்.பி. கேமரா மற்றும் ஃபிளாஷ் யூனிட் வழங்கப்பட்டுள்ளது.
புதிய 10.ஆர் ஜி2 ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இதனுடன் பேட்டரியை வேகமாக சார்ஜ் செய்ய 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

10.ஆர் ஜி2 சிறப்பம்சங்கள்:
– 6.18 இன்ச் 2246×1080 பிக்சல் 2.5D டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ்
– ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 636 பிராசஸர்
– அட்ரினோ 509 GPU
– 4 ஜி.பி. / 6 ஜி.பி. ரேம்
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 9.0 பை
– டூயல் சிம் + மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட்
– 16 எம்.பி. பிரைமரி கேமரா
– 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
– 12 எம்.பி. செல்ஃபி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
– கைரேகை சென்சார்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
– 4ஜி வோல்ட்இ, வைபை
– 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
– 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
10.ஆர் ஜி2 ஸ்மார்ட்போன் சார்கோல் பிளாக் மற்றும் டுவிலைட் புளு என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விற்பனை ஜூலை 15 ஆம் தேதி அமேசான் பிரைம் டே 2019 போது துவங்குகிறது. இந்தியாவில் இதன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.
ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போனின் ஸ்பைடர் மேன் ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ரியல்மி பிராண்டு சமீபத்தில் அறிமுகம் செய்த தனது ரியல்மி எக்ஸ் மாடலின் ஸ்பைடர்-மேன் ஃபார் ஃபிரம் ஹோம் லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போனினை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. மார்வெல் நிறுவனத்துடனான கூட்டணியில் வெளியாகி இருக்கும் புதிய ஸ்மார்ட்போன் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி வேரியண்ட்டில் மட்டும் கிடைக்கிறது.
ஸ்மார்ட்போனுடன் கஸ்டம் ஸ்பைடர்-மேன் தீம் மற்றும் ஐகான்களும் வழங்கப்படுகிறது. இதுதவிர ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.
சிறப்பம்சங்களை பொருத்தவரை ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு பை மற்றும் கலர் ஒ.எஸ். 6 வழங்கப்பட்டுள்ளது. இதில் 6 ஆம் தலைமுறை இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா. சோனி IMX586 சென்சார், ஏ.ஐ. அம்சங்கள், 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 16 எம்.பி. செல்ஃபி கேமரா, கிரேடியண்ட் பேக் மற்றும் 3765 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் சூப்பர் VOOC 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

ரியல்மி எக்ஸ் சிறப்பம்சங்கள்:
- 6.53 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் AMOLED டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 710 10 என்.எம். பிராசஸர்
- அட்ரினோ 616 GPU
- 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி
- டூயல் சிம் ஸ்லாட்
- கலர் ஓ.எஸ். 6.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 9.0 பை
- 48 எம்.பி. பிரைமரி கேமரா, 1/2.0″ சோனி IMX586 சென்சார், f/1.7, 6P லென்ஸ், எல்.இ.டி. ஃபிளாஷ்
- 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
- 16 எம்.பி. செல்ஃபி கேமரா, சோனி IMX471 சென்சார், f/2.0
- இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
- 3765 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- VOOC 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங்
புதிய ஸ்பெஷல் எடிஷன் பெட்டியில் சிவப்பு நிறத்தாலான கஸ்டம் கேஸ் வித்தியாசமாக வழங்கப்படுகிறது. இதுதவிர ஸ்டான்டர்டு எடிஷனில் வழங்கப்படுவதை போன்ற சார்ஜர், கேபிள் போன்றவை இடம்பெற்றிருக்கிறது. இதன் விலை 1799 யுவான் (இந்திய மதிப்பில் ரூ. 18,050) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டை உறுதிப்படுத்தும் டீசர்கள் வெளியாகியுள்ளன. அந்த வகையில் ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம்.
சியோமி நிறுவனத்தின் ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
சியோமி நிறுவனத்தின் ரெட்மி தனி பிராண்டாக இந்த ஆண்டு துவக்கத்தில் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ரெட்மி பிராண்டிங் கொண்ட மூன்று ஸ்மார்ட்போன்களை சியோமி அறிமுகம் செய்தது. இதில் இரு ஸ்மார்ட்போன்கள் ஏற்கனவே இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது. தற்சமயம் ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீடு பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளது.
சியோமி நிறுவனத்தின் புதிய ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் என சியோமி இந்தியா விளம்பர பிரிவு தலைவர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் புதிய ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போன் ரெட்மி கே20 மற்றும் ரெட்மி கே20 ப்ரோ மாடல்களுடன் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.
ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போனினை சியோமி நிறுவனம் சீனாவில் ஏற்கனவே அறிமுகம் செய்து விட்டது. சிறப்பம்சங்களை பொருத்தவரை ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போனில் 5.45 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 720×1440 பிக்சல் ஐ.பி.எஸ். எல்.சி.டி. டிஸ்ப்ளே, 1.95 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 439 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.

மெமரியை பொருத்தவரை ரெட்மி 7ஏ மாடலில் 2 ஜி.பி. ரேம் + 16 ஜி.பி. மெமரி, 2 ஜி.பி. ரேம் + 32 ஜி.பி. மெமரி மற்றும் 3 ஜி.பி. ரேம் + 32 ஜி.பி. மெமரி என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. புகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ் வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன் புகைப்படங்களை அழகாக்க ஏ.ஐ. அம்சங்கள் மற்றும் பல்வேறு கேமரா மோட்கள் கிடைக்கிறது. முன்புறம் 5 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போனில் 10 வாட் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
கனெக்டிவிட்டியை பொருத்தவரை டூயல் சிம் ஸ்லாட், 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 4.2,. ஜி.பி.எஸ்., மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட் மற்றும் 3.5 எம்.எம். ஹெட்போன் ஜாக் கொண்டிருக்கிறது.
கூல்பேட் நிறுவனம் இந்தியாவில் தனது பட்ஜெட் ரக ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது.
கூல்பேட் நிறுவனம் இந்தியாவில் புதிய கூல் 3 பிளஸ் ஸ்மார்ட்போனை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் 5.71-இன்ச் ஹெச்.டி. பிளஸ் டியூ-டிராப் நாட்ச் டிஸ்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.
கூல்பேட் கூல் 3 ஸ்மார்ட்போனில் குவாட்-கோர் மீடியா டெக் ஹீலியோ ஏ22 பிராசஸர், 13 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. செல்ஃபி கேமரா மற்றும் பியூட்டிஃபை அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஃபேஸ் அன்லாக் வசகியும், ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் டூயல் கலர் 3டி கிளாசி பேக் கவர், டூயல் 4ஜி வோல்ட்-இ வசதி மற்றும் 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

கூல்பேட் கூல் 3 பிளஸ் சிறப்பம்சங்கள்:
- 5.71 இன்ச் 1520x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே
- 2.0 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ22 பிராசஸர்
- IMG பவர் வி.ஆர். GE-கிளாஸ் GPU
- 2 ஜி.பி. ரேம், 16 ஜிபி. மெமரி
- 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம் ஸ்லாட்
- ஆண்ட்ராய்டு 9.0 பை
- 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
- 8 எம்.பி. செல்ஃபி கேமரா
- கைரேகை சென்சார்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வை-பை, ப்ளூடூத் 4.2
- 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
கூல்பேட் கூல் 3 பிளஸ் ஸ்மார்ட்போன் செர்ரி பிளாக் மற்றும் ஓசன் புளு என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் 2 ஜி.பி. ரேம் மாடல் விலை ரூ. 5,999 என்றும் 3 ஜி.பி. ரேம் மெமரி மாடல் விலை ரூ. 6,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ஜூலை 2 ஆம் தேதி மதியம் 12.00 மணி முதல் அமேசான் தளத்தில் நடைபெறுகிறது.






