என் மலர்
மொபைல்ஸ்
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் டீசர் ப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 7 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. கேலக்ஸி அன்பேக்டு விழாவிற்கான தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது.
இந்நிலையில், புதிய ஸ்மார்ட்போனிற்கான டீசர் ப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் வலைத்தளங்களில் வெளியானது. புதிய டீசர்களில் சாம்சங் கேலக்ஸி அன்பேக்டு | ஆகஸ்ட் 8 என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஆகஸ்ட் 8 ஆம் தேதி அறிவிக்கப்பட இருப்பது உறுதியாகியுள்ளது.
சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்த மறுநாளே இந்திய விலை மற்றும் விற்பனை விவரங்களை சாம்சங் அறிவிக்க இருக்கிறது. கேலக்ஸி பிராண்டை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்லும் சாதனங்களை அறிமுகம் செய்ய இருப்பதாக சாம்சங் அறிவித்துள்ளது. அந்த வகையில் கேலக்ஸி நோட் 10 பல்வேறு வெர்ஷன்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கலாம்.

கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன்: மெல்லிய பெசல்கள் கொண்ட குவாட் ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன் மாடல், 6.25 இன்ச் ஸ்கிரீன் கொண்ட மாடல், கேலக்ஸி நோட் 10 பிளஸ் 6.75 இன்ச் ஸ்கிரீன் மாடல், பெரிய பேட்டரி கொண்ட கேலக்ஸி நோட் 10 5ஜி மாடல் போன்ற வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.
புதிய ஸ்மார்ட்போன் சாம்சங் எக்சைனோஸ் 9 சீரிஸ் 9820 8 என்.எம். பிராசஸர் அல்லது ஸ்னாப்டிராகன் 855 பிராசஸரை சந்தை நிலவரத்திற்கு ஏற்ப அறிமுகம் செய்யலாம். இத்துடன் கேலக்ஸி நோட் 10 மாடலில் மூன்று கேமராக்களும், கேலக்ஸி நோட் 10 பிளஸ் மாடலில் நான்கு கேமரா சென்சார்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
கேலக்ஸி நோட் 10 பிளஸ் மாடலில் 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும், கேலக்ஸி நோட் 10 மாடலில் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படலாம்.
இந்தியாவில் புதிய கேலக்ஸி நோட் 10 சீரிஸ் ப்ளிப்கார்ட், அமேசான், சாம்சங் ஆன்லைன் ஸ்டோர், ஆஃப்லைன் சந்தைகளில் விற்பனை செய்யப்படலாம்.
விவோ நிறுவனத்தின் புதிய எஸ் சீரிஸ் ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான விவோ இந்தியாவில் புதிய எஸ் சீரிஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது. விவோவின் எஸ் சீரிசில் அறிமுகமாக இருக்கும் முதல் ஸ்மார்ட்போன் விவோ எஸ்1 என அழைக்கப்படுகிறது.
புதிய விவோ எஸ்1 ஸ்மார்ட்போன் ஆகஸ்டு 15 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் டீசரை விவோ வெளியிட்டுள்ளது. டீசரில் ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி மற்றும் விற்பனை பற்றி எவ்வித தகவலும் இல்லை.
முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் இந்தோனேசியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தோனேசியாவில் இதன் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை IDR 3,599,000 (இந்திய மதிப்பில் ரூ. 17,700) என நிர்ணயம் செய்யப்பட்டது. இந்தியாவில் இதன் டாப் எண்ட் மாடலான 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி வேரியண்ட் விலை ரூ. 20,000 வரை நிர்ணயம் செய்யப்படலாம்.

இந்திய சந்தையில் விவோ எஸ்1 ஸ்மார்ட்போன் ரியல்மி எக்ஸ் மற்றும் ரெட்மி கே20 ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது. சமீபத்தில் அறிமுகமான மீடியாடெக் ஹீலியோ பி65 ஆக்டா-கோர் பிராசஸர், 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. / 128 ஜி.பி. மெமரி கொண்ட முதல் ஸ்மார்ட்போனாக இது இருக்கும் என தெரிகிறது.
புதிய ஸ்மார்ட்போன் 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் என தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 6.38 இன்ச் FHD+ 2340x1080 பிக்சல் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, வாட்டர் டிராப் நாட்ச் வழங்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க மூன்று பிரைமரி கேமரா சென்சார்: 16 எம்.பி. f/1.7 பிரைமரி சென்சார், 8 எம்.பி. f/2.2 வைடு-ஆங்கில் இரண்டாவது கேமரா, 2 எம்.பி. f/2.4 டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 32 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் அசுஸ் நிறுவன ஸ்மார்ட்போனின் விலை மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலையை பார்ப்போம்.
அசுஸ் நிறுவனம் தனது சென்ஃபோன் ப்ரோ எம்1 மாடலை இந்தியாவில் கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. இந்த ஆண்டு துவக்கத்தில் இதன் விலை குறைக்கப்பட்டு ரூ. 8,499 முதல் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், சென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம்1 மாடலின் விலையை மீண்டும் குறைப்பதாக அசுஸ் அறிவித்துள்ளது.
அந்த வகையில், சென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம்1 ஸ்மார்ட்போனின் 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 7,999 என்றும், 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 8,999 என்றும் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 11,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம்1 சிறப்பம்சங்கள்:
- 5.99 இன்ச் 2160x1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி + 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 636 சிபர்செட்
- அட்ரினோ 509 GPU
- 3 ஜி.பி. / 4 ஜி.பி. / 6 ஜி.பி. ரேம்
- 32 ஜி.பி. / 6.4. ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
- டூயல் சிம் ஸ்லாட்
- 13 எம்பி / 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.2
- 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா
- 8 எம்பி / 16 எம்பி செல்ஃபி கேமரா, சாஃப்ட் எல்இடி ஃபிளாஷ், f/2.2
- கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 5000 எம்ஏஹெச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்
இந்தியாவில் அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 டீப்சீ பிளாக் மற்றும் கிரே என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.
சாம்சங் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி சுழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்தது.
சாம்சங் நிறுவன கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் டாப்-எண்ட் மாடலை அந்நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. கேலக்ஸி ஏ80 என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் நியூ இன்ஃபினிட்டி சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர், 8 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு பை மற்றும் சாம்சங் ஒன் யு.ஐ. வழங்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க சுழலும் கேமரா மாட்யூல் வழங்கப்பட்டுள்ளது. இதில் 48 எம்.பி. பிரைமரி கேமரா, f/2.0, 8 எம்.பி. 123° அல்ட்ரா வைடு-ஆங்கிள் லென்ஸ், 3D டெப்த் கேமரா வழங்கப்பட்டுள்ளது. பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனில் செல்ஃபி மோட் தேர்வு செய்தால், மூன்று கேமராக்களும் பாப்-அப் முறையில் மேல் எழுந்து பின் முன்புறமாக சுழலும்.
3D கிளாஸ் பாடி மற்றும் மெட்டல் ஃபிரேம் கொண்டிருக்கும் கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் மற்றும் 3700 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடனஅ 25 வாட் சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ80 சிறப்பம்சங்கள்:
- 6.7 இன்ச் 2400x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 20: 9 நியூ இன்ஃபினிட்டி சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
- ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர்
- அட்ரினோ 618 GPU
- 8 ஜி.பி. ரேம்
- 128 ஜி.பி. மெமரி
- ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் சாம்சங் ஒன் யு.ஐ.
- டூயல் சிம்
- 48 எம்.பி. கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.0
- 8 எம்.பி. 123° அல்ட்ரா வைடு-ஆங்கிள் லென்ஸ், f/2.2, 3D டெப்த் கேமரா
- இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- டால்பி அட்மோஸ்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
- 3700 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 25 வாட் சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங்
சாம்சங் கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் ஏஞ்செல் கோல்டு, கோஸ்ட் வைட் மற்றும் ஃபாண்டம் பிளாக் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 47,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் முன்பதிவு ஜூலை 22 ஆம் தேதி துவங்கி ஜூலை 31 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விற்பனை இ-ஷாப், சாம்சங் ஒபேரா ஹவுஸ் மற்றும் முன்னணி ஆன்லைன் தளங்களில் நடைபெறுகிறது.
சியோமியின் Mi ஏ3 ஸ்மார்ட்போன் மூன்று பிரைமரி கேமரா, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாருடன் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
சியோமி நிறுவனத்தின் Mi ஏ3 ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதே ஸ்மார்ட்போன் சிசி9இ என்ற பெயரில் சீனாவில் இம்மாத துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
புதிய ஸ்மார்ட்போனில் 6.088 இன்ச் ஹெச்.டி. பிளஸ் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 665 11 என்.எம். பிராசஸர், 4 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம், ஏழாம் தலைமுறை இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. சோனி IMX586 சென்சார், f/1.79, 8 எம்.பி. 118° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்.பி. டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் செல்ஃபிக்களை எடுக்க 32 எம்.பி. கேமரா வழங்கப்பட்டுள்ளது. இது நான்கு பிக்சல்களை ஒன்றிணைத்து 1.6μm பிக்சல்களில் குறைந்த வெளிச்சமுள்ள பகுதிகளிலும் தரமான புகைப்படங்களை வழங்கும் திறன் கொண்டிருக்கிறது.
புதிய ஸ்மார்ட்போனில் 3D வளைந்த பின்புறம், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு, 4030 எம்.ஏ.ஹெச். பேட்டரி, குவால்காம் க்விக் சார்ஜ் 3.0 18வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனுடன் 10வாட் சார்ஜர் வழங்கப்பட்டுள்ளது.

சியோமி Mi ஏ3 சிறப்பம்சங்கள்:
- 6.08 இன்ச் 1560x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் AMOLED டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 665 11 என்.எம். பிராசஸர்
- அட்ரினோ 610 GPU
- 4 ஜி.பி. LPDDR4 ரேம்
- 64 ஜி.பி. / 128 ஜி.பி. (UFS 2.1) மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
- ஆண்ட்ராய்டு 9.0 பை
- 48 எம்.பி. சோனி IMX586 சென்சார், f/1.79, 0.8μm பிக்சல், எல்.இ.டி. ஃபிளாஷ், EIS
- 8 எம்.பி. 118° அல்ட்ரா-வைடு ஆங்கில் லென்ஸ், 1.12μm பிக்சல், f/2.2
- 2 எம்.பி. டெப்த் கேமரா, 1.75μm பிக்சல், f/2.4
- 32 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
- இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், இன்ஃப்ராரெட் சென்சார்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யு.எஸ்.பி. டைப்-சி
- 4030 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 18 வாட் க்விக் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங்
சியோமி Mi ஏ3 ஸ்மார்ட்போன் கைன்ட் ஆஃப் கிரே, நாட் ஜஸ்ட் புளு மற்றும் மோர் தான் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை 249 யூரோ (இந்திய மதிப்பில் ரூ. 19,225) என்றும் 128 ஜி.பி. மாடல் 279 யூரோ (இந்திய மதிப்பில் ரூ. 21,540) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் ரெட்மி பிராண்டு ஏற்கனவே அறிவித்தப்படி ரெட்மி கே20 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இதில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.
ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போனுடன் ரெட்மி பிராண்டு தனது ரெட்மி கே20 ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ரெட்மி கே20 ஸ்மார்ட்போனிலும் கே20 ப்ரோ ஸ்மார்ட்போனில் உள்ள 6.39 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 730 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது.
ரெட்மி கே20 ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் சார்ந்த MIUI 10, 48 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், 13 எம்.பி. 124.8° அல்ட்ரா வைடு சென்சார், 20 எம்.பி. பாப்-அப் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஏழாம் தலைமுறை இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், ஔரா பிரைம் டிசைன், 3D கிளாஸ் பேக், புளு மற்றும் ரெட் சார்ந்த ஃபிளேம் பேட்டன் வழங்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட்போனின் பின்புறம் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு, 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

ரெட்மி கே20 சிறப்பம்சங்கள்:
- 6.39 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19.5:9 AMOLED HDR டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 730 பிராசஸர்
- அட்ரினோ 618 GPU
- 6 ஜி.பி. LPDDR4X ரேம், 64 ஜி.பி. (UFS 2.1) மெமரி
- 6 ஜி.பி. LPDDR4X ரேம், 128 ஜி.பி. (UFS 2.1) மெமரி
- ஆண்ட்ராய்டு 9.0 (பை) மற்றும் MIUI 10
- டூயல் சிம் ஸ்லாட்
- 48 எம்.பி. சோனி IMX582 சென்சார் பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.75, 0.8μm பிக்சல், 6P லென்ஸ்
- 8 எம்.பி. 1/4″ டெலிபோட்டோ லென்ஸ், 1.12μm பிக்சல், f/2.4
- 13 எம்.பி. 1/3″ 124.8° அல்ட்ரா-வைடு சென்சார், 1.12μm பிக்சல், f/2.4
- 20 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2, 0.8μm பிக்சல்
- இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
- ஸ்பிலாஷ் ப்ரூஃப் (P2i கோட்டிங்)
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- யு.எஸ்.பி. டைப்-சி
- 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 18 வாட் சோனிக் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங்
ரெட்மி கே20 ஸ்மார்ட்போன் கார்பன் பிளாக், ஃபிளேம் ரெட் மற்றும் கிளேசியர் புளு நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 21,999 என்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 23,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதன் விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் Mi அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் ஜூலை 22 ஆம் தேதி முதல் துவங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனுடன் ஹார்டு கேஸ் ஒன்றும் வழங்கப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்த ஐபோன் மாடல்களில் சிலவற்றின் விற்பனையை நிறுத்திக் கொள்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 6, ஐபோன் 6 பிளஸ், ஐபோன் 6எஸ் பிளஸ் மற்றும் ஐபோன் எஸ்.இ. போன்ற மாடல்களை அறிமுகம் செய்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இதனால் இந்தியாவில் இவற்றின் விற்பனையை நிறுத்திக் கொள்வதாக ஆப்பிள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பழைய ஐபோன் மாடல்களின் விற்பனையை நிறுத்திவிட்டு பிரீமியம் ஐபோன் மாடல்களின் மீது அதிக கவனம் செலுத்த இருப்பதாக தெரிகிறது. மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் நான்கு ஐபோன் மாடல்களும் திரும்ப பெறப்பட்டன. இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் துவக்க மாடல் ஐபோனாக ஐபோன் 6எஸ் இருக்கிறது.

விற்பனை நிறுத்தம் பற்றி விநியோகஸ்தர்கள் மற்றும் விற்பனை குழுவினருக்கு ஏற்கனவே தகவல் வழங்கப்பட்டு விட்டது. இந்தியாவில் ஐபோன் XR விலை குறைக்கப்பட்டது முதல் ஐபோன் மூலம் கிடைக்கும் வருவாய் அதிகரித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதிய நடவடிக்கை மூலம் ஆப்பிள் நிறுவனம் பிரீமியம் ஐபோன் மாடல்களில் கூடுதல் கவனம் செலுத்த இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ஐபோன் வாங்குவோருக்கு பை-பேக் மற்றும் கேஷ்பேக் சலுகைகள் வழங்கப்படுகின்றன. இச்சலுகைகள் ஐபோன் XS, ஐபோன் XS மேக்ஸ் மாடல்களுக்கு முதற்கட்டமாக வழங்கப்படும் என தெரிகிறது.
ஆப்பிள் நிறுவனம் முதல் முறையாக தனது ஐ.ஒ.எஸ். 13 தளத்தை இந்திய வாடிக்கையாளர்களுக்கென கஸ்டமைஸ் செய்ய இருக்கிறது. இது புதிய தளத்தை 22 இந்திய மொழிகளில் பயன்படுத்தும் வசதியை வழங்கும். இதுதவிர இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட ஐபோன் XR, ஐபோன் XS மாடல்கள் அடுத்த மாதம் முதல் விற்பனைக்கு வருகிறது.
ரியல்மி பிராண்டு ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் டூயல் கேமரா கொண்ட ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்தது.
ரியல்மி பிராண்டு ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் ரியல்மி 3i ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 19:9 ரக டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ பி60 12 என்.எம். பிராசஸர், அதிகபட்சம் 4 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 பை சார்ந்த கலர் ஒ.எஸ். 6.0 வழங்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8, 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை அழகாக்க ஏ.ஐ. தொழில்நுட்பம் சார்ந்து இயங்கும் க்ரோமா பூஸ்ட் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 13 எம்.பி. செல்ஃபி கேமரா, ஏ.ஐ. பியூட்டிஃபை அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.
டைமண்ட் கட் ஸ்மட்ஜ்-ப்ரூஃப் கிரேடியன்ட் டிசைன் கொண்டிருக்கும் ரியல்மி 3i ஸ்மார்ட்போனில் பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட், பின்புறம் கைரேகை சென்சார் மற்றும் 4230 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

ரியல்மி 3i சிறப்பம்சங்கள்:
- 6.22 இன்ச் 1520x720 பிக்சல் 19:9 HD+ IPS டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
- ஆக்டா-கோர் மீடியாடெக் பீலியோ பி60 பிராசஸர்
- 800MHz ARM மாலி-G72 MP3 GPU
- 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி
- 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம் ஸ்லாட்
- ஆண்ட்ராய்டு 9.0 பை சார்ந்த கலர் ஒ.எஸ். 6.0
- 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8, PDAF
- 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
- 13 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 4230 எம்.ஏ.ஹெச். பேட்டரி
ரியல்மி 3i ஸ்மார்ட்போன் டைமண்ட் புளு, டைமண்ட் பிளாக் மற்றும் டைமண்ட் ரெட் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இதன் 3 ஜி.பி. ரேம் மாடல் விலை ரூ. 7,999 என்றும், 4 ஜி.பி. ரேம் மாடல் விலை ரூ. 9,999 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ஜூலை 23 ஆம் தேதி முதல் துவங்குகிறது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் விவரங்கள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில், அதன் விலை விவரங்கள் இணையத்தில் கசிந்துள்ளது.
சாம்சங் கோலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் அடிக்கடி இணையத்தில் கசிந்து வருகிறது. ஸ்மார்ட்போனின் பெரும்பாலான அம்சங்கள் அதன் வடிவமைப்பு உள்ளிட்ட விவரங்கள் ஏற்கனவே இணையத்தில் பலமுறை வெளியாகியுள்ளன.
இதுதவிர சாம்சங் தனது நோட் 10 ஸ்மார்ட்போன் ஆகஸ்டு 7 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. இந்நிலையில், கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனின் 256 ஜி.பி. வேரியண்ட் 999 யூரோ (இந்திய மதிப்பில் ரூ. 77,000) வரை நிர்ணயம் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த விலை ஒவ்வொரு நாட்டின் உள்ளூர் வரி மற்றும் இதர கட்டணங்களுக்கு ஏற்ப சிறிதளவு மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. 256 ஜி.பி. தவிர கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் 512 ஜி.பி. மற்றும் 1000 ஜி.பி. மாடல்களும் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

கேலக்ஸி நோட் 10 பிளஸ் 6.75 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட மாடல் விலை அதிகமாக நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது. நோட் 10 பிளஸ் விலை 1149 யூரோ (இந்திய மதிப்பில் ரூ. 89,000) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் 5ஜி வேரியண்ட் விலை மேலும் அதிகமாகும் என தெரிகிறது.
கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் ஹோல் பன்ச் டிஸ்ப்ளே வடிவமைப்பை கொண்டிருக்கும் என தெரிகிறது. இம்முறை ஹோல் பன்ச் ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளேவின் மத்தியில் இருக்கும் என கூறப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனில் மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. கேலக்ஸி நோட் 10 பிளஸ் மாடலில் கூடுதலாக ToF ரக சென்சார் ஒன்று கூடுதலாக வழங்கப்படும் என தெரிகிறது.
கேலக்ஸி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போனில் 4150 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என தெரிகிறது. இதுதவிர இரு ஸ்மார்ட்போன்களிலும் 7 என்.எம். குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 / எக்சைனோஸ் 9825 சிப்செட் வழங்கப்படலாம்.
10.ஆர். பிராண்டு ஏற்கனவே அறிமுகம் செய்த புதிய ஸ்மார்ட்போனின் விலையை அறிவித்துள்ளது. இதன் விற்பனை விவரங்களை பார்ப்போம்.
10.ஆர் (டெனார்) பிராண்டின் புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜூன் மாத இறுதியில் அறிமுகம் செய்யப்பட்டது. 10.ஆர் ஜி2 என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போனின் விலை அறிவிக்கப்பாடமல் இருந்தது. இந்நிலையில், இதன் விலையை அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
புதிய 10.ஆர் ஜி2 ஸ்மார்ட்போனில் 6.18 இன்ச் FHD பிளஸ் 2246×1080 பிக்சல் 19:9 2.5D டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு, குவால்காம் ஸ்னாப்டிராகன் 636 ஆக்டா-கோர் பிராசஸர், 4 ஜி.பி. / 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டுள்ளது. இதன் பின்புறம் கைரேகை சென்சார் இடம்பெற்றுள்ளது.
புகைப்படங்களை எடுக்க 16 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ் வழங்கப்பட்டுள்ளது. இது அதிக வெளிச்சமுள்ள பகுதிகளிலும், குறைவான வெளிச்சமுள்ள பகுதிகளிலும் சீராக இயங்கும். செல்ஃபி எடுக்க 12 எம்.பி. கேமரா மற்றும் ஃபிளாஷ் யூனிட் வழங்கப்பட்டுள்ளது.
புதிய 10.ஆர் ஜி2 ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இதனுடன் பேட்டரியை வேகமாக சார்ஜ் செய்ய 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

10.ஆர் ஜி2 சிறப்பம்சங்கள்:
– 6.18 இன்ச் 2246×1080 பிக்சல் 2.5D டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ்
– ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 636 பிராசஸர்
– அட்ரினோ 509 GPU
– 4 ஜி.பி. / 6 ஜி.பி. ரேம்
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 9.0 பை
– டூயல் சிம் + மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட்
– 16 எம்.பி. பிரைமரி கேமரா
– 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
– 12 எம்.பி. செல்ஃபி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
– கைரேகை சென்சார்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
– 4ஜி வோல்ட்இ, வைபை
– 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
– 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
10.ஆர் ஜி2 ஸ்மார்ட்போன் சார்கோல் பிளாக் மற்றும் டுவிலைட் புளு என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 11,999 என்றும் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 14,599 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் 10.ஆர். ஜி2 ஸ்மார்ட்போனின் விற்பனை ஜூலை 15 ஆம் தேதி அமேசான் பிரைம் டே 2019 போது துவங்குகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் உயர் ரக ஐபோன்கள் விலை இந்தியாவில் விரைவில் குறைக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் உயர் ரக ஐபோன் மாடல்கள் இந்தியாவில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் உற்பத்தி மையத்தில் உருவாக்கப்படுகின்றன. இங்கு உற்பத்தியாகும் ஐபோன்கள் அடுத்த மாதம் இந்திய சந்தையில் விற்பனைக்கு வரயிருப்பதாக தற்சமயம் தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஐபோன் விற்பனைக்கு சில அனுமதி பெற வேண்டியிருந்தாலும் ஐபோன் XR மற்றும் ஐபோன் XS மாடல்கள் ஆகஸ்டு மாதத்தில் விற்பனைக்கு வரலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து ஆப்பிள் சார்பில் இதுவரை எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.
ஐபோன் மாடல்களை இந்தியாவில் உற்பத்தி செய்வதன் மூலம் ஆப்பிள் நிறுவனம் அதிகளவு வரி செலுத்துவதில் இருந்து தப்பிக்க முடியும் என்பதோடு, இங்கு சொந்தமாக விற்பனை மையங்களை கட்டமைக்க முடியும்.

இந்தியாவில் ஆப்பிள் நிறுவன சாதனங்களுக்கு அதிகளவு வரவேற்பு இருக்கிறது என்றபோதும், அதிக விலை காரணமாக இதன் விற்பனை குறைவாகவே இருக்கிறது.
தமிழ் நாட்டில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் ஐபோன் X மாடல்களை உற்பத்தி செய்து வரும் நிலையில், பெங்களூருவில் விஸ்ட்ரன் கார்ப் நிறுவனம் ஐபோன் எஸ்.இ., ஐபோன் 6எஸ் மற்றும் ஐபோன் 7 மாடல்களை உற்பத்தி செய்கின்றன.
முன்னதாக கனாலிஸ் எனும் ஆய்வு நிறுவன தலைவர் ருஷப் தோஷி வெளியிட்ட தகவல்களில், இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுவதால் ஐபோன்களின் விலை குறைக்கப்படலாம் என தெரிவித்தார்.
ரெட்மி பிராண்டு இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்த ரெட்மி நோட் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் உலகம் முழுக்க 1.5 கோடி யூனிட்கள் விற்பனையாகி இருக்கின்றன.
சியோமியின் ரெட்மி பிராண்டு தனது ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. பின் பிப்ரவரி மாதத்தில் ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
அந்த வகையில் சந்தையில் வெளியாகி ஆறு மாதங்களில் ரெட்மி நோட் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் 1.5 கோடி யூனிட்கள் விற்பனையாகி இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. முன்னதாக நான்கு மாதங்களில் ஒரு கோடி யூனிட்கள் விற்பனையானதாக சியோமி அறிவித்தது.
WOW! Another amazing milestone reached.
— Xiaomi #SummerBonanza2019 (@Xiaomi) July 10, 2019
In just 6 months, the #RedmiNote7 series has sold over 15 million units globally. We couldn’t have done it without our amazing Mi Fans. #NoMiWithoutYou#48MPforEveryonepic.twitter.com/lJLzSKV1Dy
புதிய விற்பனை மைல்கல்லை கொண்டாடும் வகையில் சியோமி இந்தியா ரெட்மி நோட் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஓபன் சேல் முறையில் விற்பனை செய்யப்படும் என அறிவித்துள்ளது. இந்த விற்பனை சியோமியின் அதிகாரப்பூர்வ Mi வலைத்தளம் மற்றும் ப்ளிப்கார்ட்டில் நடைபெறுகிறது.
இதுதவிர சியோமி நிறுவனம் தனது ரெட்மி கே20 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் ஜூலை 17 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய கே20 சீரிஸ் விலை அதிகமாக இருக்கும் என்பதால் இது ரெட்மி நோட் 7 சீரிஸ் விற்பனையை பாதிக்காது என்றே கூறப்படுகிறது.






