search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    கேலக்ஸி நோட் 10 ரென்டர்
    X
    கேலக்ஸி நோட் 10 ரென்டர்

    வெளியீட்டுக்கு முன் இணையத்தில் கசிந்த கேலக்ஸி நோட் 10 விலை

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் விவரங்கள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில், அதன் விலை விவரங்கள் இணையத்தில் கசிந்துள்ளது.



    சாம்சங் கோலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் அடிக்கடி இணையத்தில் கசிந்து வருகிறது. ஸ்மார்ட்போனின் பெரும்பாலான அம்சங்கள் அதன் வடிவமைப்பு உள்ளிட்ட விவரங்கள் ஏற்கனவே இணையத்தில் பலமுறை வெளியாகியுள்ளன.

    இதுதவிர சாம்சங் தனது நோட் 10 ஸ்மார்ட்போன் ஆகஸ்டு 7 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. இந்நிலையில், கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனின் 256 ஜி.பி. வேரியண்ட் 999 யூரோ (இந்திய மதிப்பில் ரூ. 77,000) வரை நிர்ணயம் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

    மேலும் இந்த விலை ஒவ்வொரு நாட்டின் உள்ளூர் வரி மற்றும் இதர கட்டணங்களுக்கு ஏற்ப சிறிதளவு மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. 256 ஜி.பி. தவிர கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் 512 ஜி.பி. மற்றும் 1000 ஜி.பி. மாடல்களும் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

    கேலக்ஸி நோட் 10 ரென்டர்

    கேலக்ஸி நோட் 10 பிளஸ் 6.75 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட மாடல் விலை அதிகமாக நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது. நோட் 10 பிளஸ் விலை 1149 யூரோ (இந்திய மதிப்பில் ரூ. 89,000) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் 5ஜி வேரியண்ட் விலை மேலும் அதிகமாகும் என தெரிகிறது.

    கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் ஹோல் பன்ச் டிஸ்ப்ளே வடிவமைப்பை கொண்டிருக்கும் என தெரிகிறது. இம்முறை ஹோல் பன்ச் ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளேவின் மத்தியில் இருக்கும் என கூறப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனில் மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. கேலக்ஸி நோட் 10 பிளஸ் மாடலில் கூடுதலாக ToF ரக சென்சார் ஒன்று கூடுதலாக வழங்கப்படும் என தெரிகிறது.

    கேலக்ஸி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போனில் 4150 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என தெரிகிறது. இதுதவிர இரு ஸ்மார்ட்போன்களிலும் 7 என்.எம். குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 / எக்சைனோஸ் 9825 சிப்செட் வழங்கப்படலாம்.
    Next Story
    ×