search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    கேலக்ஸி நோட் 10 டீசர்
    X
    கேலக்ஸி நோட் 10 டீசர்

    ப்ளிப்கார்ட், அமேசானில் கேலக்ஸி நோட் 10 டீசர் வெளியீடு

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் டீசர் ப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.



    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 7 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. கேலக்ஸி அன்பேக்டு விழாவிற்கான தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. 

    இந்நிலையில், புதிய ஸ்மார்ட்போனிற்கான டீசர் ப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் வலைத்தளங்களில் வெளியானது. புதிய டீசர்களில் சாம்சங் கேலக்ஸி அன்பேக்டு | ஆகஸ்ட் 8 என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஆகஸ்ட் 8 ஆம் தேதி அறிவிக்கப்பட இருப்பது உறுதியாகியுள்ளது.

    சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்த மறுநாளே இந்திய விலை மற்றும் விற்பனை விவரங்களை சாம்சங் அறிவிக்க இருக்கிறது. கேலக்ஸி பிராண்டை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்லும் சாதனங்களை அறிமுகம் செய்ய இருப்பதாக சாம்சங் அறிவித்துள்ளது. அந்த வகையில் கேலக்ஸி நோட் 10 பல்வேறு வெர்ஷன்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கலாம்.

    கேலக்ஸி நோட் 10 டீசர்

    கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன்: மெல்லிய பெசல்கள் கொண்ட குவாட் ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன் மாடல், 6.25 இன்ச் ஸ்கிரீன் கொண்ட மாடல், கேலக்ஸி நோட் 10 பிளஸ் 6.75 இன்ச் ஸ்கிரீன் மாடல், பெரிய பேட்டரி கொண்ட கேலக்ஸி நோட் 10 5ஜி மாடல் போன்ற வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.

    புதிய ஸ்மார்ட்போன் சாம்சங் எக்சைனோஸ் 9 சீரிஸ் 9820 8 என்.எம். பிராசஸர் அல்லது ஸ்னாப்டிராகன் 855 பிராசஸரை சந்தை நிலவரத்திற்கு ஏற்ப அறிமுகம் செய்யலாம். இத்துடன் கேலக்ஸி நோட் 10 மாடலில் மூன்று கேமராக்களும், கேலக்ஸி நோட் 10 பிளஸ் மாடலில் நான்கு கேமரா சென்சார்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

    கேலக்ஸி நோட் 10 பிளஸ் மாடலில் 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும், கேலக்ஸி நோட் 10 மாடலில் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படலாம். 

    இந்தியாவில் புதிய கேலக்ஸி நோட் 10 சீரிஸ் ப்ளிப்கார்ட், அமேசான், சாம்சங் ஆன்லைன் ஸ்டோர், ஆஃப்லைன் சந்தைகளில் விற்பனை செய்யப்படலாம்.
    Next Story
    ×