என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    விவோ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் மூன்று பிரைமரி கேமரா, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாருடன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.



    விவோ நிறுவனம் இந்தியாவில் தனது எஸ்1 ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போனில்  6.39 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ பி65 12 என்.எம். பிராசஸர், 6 ஜி.பி. ரேம், 16 எம்.பி. பிரைமரி  கேமரா, f/1.78, 8 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்.பி. டெப்த் சென்சார் மற்றும் 32 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

    இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டிருக்கும் விவோ எஸ்1 ஸ்மார்ட்போனில் 2.5d வளைந்த பேக் பேனல், நானோ-ஐயன் கோட்டிங் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் பிரத்யேக ஸ்மார்ட் பட்டன், டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்.டி. கார்டு ஸ்லாட் மற்றும் 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் விவோவின் டூயல் என்ஜின் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

    விவோ எஸ்1

    விவோ எஸ்1 சிறப்பம்சங்கள்:

    - 6.38 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
    - ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ பி65 பிராசஸர்
    - ARM மாலி-G52 GPU
    - 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி
    - 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. / 128 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் ஃபன்டச் ஒ.எஸ். 9
    - டூயல் சிம்
    - 16 எம்.பி. பிரைமரி கேமரா, சோனி IMX 499 சென்சார், f/1.78
    - 8 எம்.பி. 120° அல்ட்ரா வைடு கேமரா, f/2.2
    - 2 எம்.பி. டெப்த் சென்சார், f/2.4
    - 32 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
    - இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
    - எஃப்.எம். ரேடியோ
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட்
    - 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - ஃபாஸ்ட் சார்ஜிங்

    விவோ எஸ்1 ஸ்மார்ட்போன் ஸ்கைலைன் புளு மற்றும் டைமண்ட் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 17,990 என்றும் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 18,990 என்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 19,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    சியோமி நிறுவனத்தின் 64 எம்.பி. கேமரா கொண்ட ரெட்மி ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.



    தொழில்நுட்ப சந்தையில் 64 எம்.பி. பிரைமரி கேமரா கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்வதாக அறிவித்த நிறுவனங்களில் சியோமியும் ஒன்று. இதன் புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் சாம்சங்கின் 1/7″ 0.8-மைக்ரோமீட்டர் (μm) 64 எம்.பி. ISOCELL பிரைட் GW1 சென்சாருடன் அறிமுகமாக இருக்கிறது. 

    இது 48 எம்.பி. சென்சாரை விட 38 சதவிகிதம் பெரிது என்பதால், இது புதிய ஸ்மார்ட்போனில் 9248x6936 பிக்சல் ரெசல்யூஷனில் புகைப்படங்களை வழங்கும். இதை கொண்டு 3.26 மீட்டர் (244 செ.மீ.x326 செ.மீ) அளவு போஸ்டரை மிகத் தெளிவாக அச்சிட முடியும். இத்துடன் 64 எம்.பி. கேமரவில் எடுக்கப்பட்ட புகைப்படமும் பதிவிடப்பட்டிருக்கிறது.

    சியோமி டீசர்

    இந்த சென்சார் 1.6μm பிக்சல்களை 4-இன்-1 பிக்சல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. இது குறைவான வெளிச்சமுள்ள பகுதிகளிலும் அதிக தரமுள்ள புகைப்படங்களை எடுக்க வழி செய்யும். இதன் ஸ்மார்ட் ஐ.எஸ்.ஒ. டூயல் கன்வெர்ஷன் கெயின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஐ.எஸ்.ஒ. தரத்தை மேம்படுத்துகிறது.

    சியோமி நிறுவனம் எதிர்காலத்தில் 100 எம்.பி. அல்ட்ரா க்ளியர் கேமரா கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் முன்னணி நிறுவனங்ளில் ஒன்றாக சியோமி இருக்கும் என தெரிவித்துள்ளது. இது சாம்சங் நிறுவனத்தின் 108 எம்.பி. ISOCELL சென்சார் கொண்டிருக்கும். இது 12032x9024 பிக்சல் தரத்தில் புகைப்படங்களை வழங்கும்.

    ரெட்மியின் 64 எம்.பி. கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் இந்தியாவில் 2019 நான்காவது காலாண்டில் அறிமுகம் செய்யப்படுகிறது. இது அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் அறிமுகமாகும் என தெரிகிறது. 
    ரெட்மி இந்தியா ரெட்மி நோட் 7எஸ், ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போனின் ஸ்பெஷல் எடிஷனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.



    ரெட்மி நோட் 7 சீரிஸ் வைட் எடிஷன் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. முன்னதாக சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஆஸ்ட்ரோ வைட் எடிஷன் நோட் 7எஸ், நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் தற்சமயம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    அறிமுகமான ஆறு மாதங்களுக்குள் ரெட்மி நோட் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் 1.5 கோடி யூனிட்கள் விற்பனையாகின. சியோமி இந்தியா தலைவரும், துணை தலைவருமான மனு ஜெயின் ரெட்மி நோட் 7 சீரிஸ் அறிமுகமானது முதல் ஒவ்வொரு மாதமும் சுமார் பத்து லட்சம் யூனிட்கள் விற்பனையாகி இருப்பதாக தெரிவித்தார்.

    விற்பனை துவங்கி ஐந்து மாதங்களுக்கு பின் ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் ஒபன் சேல் முறையில் விற்பனை செய்யப்படுகிறது. புதிய ஆஸ்ட்ரோ வைட் தவிர ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்பேஸ் பிளாக், நெப்டியூன் புளு மற்றும் நெபுளா ரெட் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது.

    புதிய நிறத்திற்கான முன்பதிவு நாளை நள்ளிரவு ப்ளிப்கார்ட் மற்றும் Mi அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் நடைபெற இருக்கிறது. இதன் துவக்க விலை ரூ. 13,999 முதல் துவங்குகிறது. ரெட்மி நோட் 7எஸ் ஆஸ்ட்ரோ வைட் எடிஷனுடன் ஆனிக்ஸ் பிளாக், சஃபையர் புளு மற்றும் ரூபி ரெட் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.

    ரெட்மி நோட் 7 சீரிஸ் ஆஸ்ட்ரோ வைட் எடிஷன்

    ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளே வழங்கப்ப்டடுள்ளது. இத்துடன் ஸ்னாப்டிராகன் 675 சிப்செட், 6 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு பை, MIUI 10 யூசர் இன்டர்ஃபேஸ் கொண்டு இயங்குகிறது. 

    புகைப்படங்களை எடுக்க ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனில் 48 எம்.பி. சோனி IMX586 சென்சார், f/1.79, 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, ஏ.ஐ. அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. 13 எம்.பி. செல்ஃபி கேமரா, ஏ.ஐ. பியூட்டிஃபை மற்றும் ஏ.ஐ. போர்டிரெயிட் அம்சம் மற்றும் ஏ.ஐ. ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்பட்டுள்ளது.

    ரெட்மி நோட் 7எஸ் ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் டாட் நாட்ச் டிஸ்ப்ளே, ஔரா வடிவமைப்பு, கிளாஸ் பேக் மற்றும் 2.5D கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருப்பதோடு P2i ஸ்பிலாஷ்ப்ரூஃப் நானோ கோட்டிங், 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, குவால்காம் க்விக் சார்ஜ் 4.0, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 10 வாட் சார்ஜர் வழங்கப்படுகிறது.

    புகைப்படங்களுக்கென 48 எம்.பி. 1/2″ சாம்சங் ISOCELL பிரைட் GM1 சென்சார், 4-இன்-1 பிக்சல் பின்னிங் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இது புகைப்படங்களை 12 எம்.பி. தரத்தில் வழங்கும். இத்துடன் 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா மற்றும் ஏ.ஐ. அம்சங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
    ஹூவாய் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் இரண்டு 40 எம்.பி. பிரைமரி கேமரா கொண்டிருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.



    ஹூவாய் நிறுவனத்தின் புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் அறிமுகமாக இருக்கிறது. மேட் 30 ப்ரோ என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த மேட் 20 சீரிசின் மேம்பட்ட மாடல் ஆகும். ஏற்கனவே இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.

    அந்தவகையில் இதுவரை வெளியாகியான தகவல்களில் மேட் 30 சீரிஸ் ஸ்மார்ட்போனில் குவாட்-கேமரா செட்டப் சதுரங்க வடிவில் பொருத்தப்படும் என கூறப்பட்டது. இது பார்க்க மேட் 20 சீரிஸ் போன்று காட்சியளிக்கும் என்றும் கூறப்படுகிறது. தற்சமயம் இந்த ஸ்மார்ட்போனின் கேமரா சிறப்பம்சங்கள் வெளியாகியுள்ளன.

    அதன்படி புதிய மேட் 30 ப்ரோ ஸ்மார்ட்போனில் மூன்று பிரைமரி கேமரா வழங்கப்படும் என்றும் இதில் இரண்டு 40 எம்.பி. சென்சார்கள், ஒரு 8 எம்.பி. சென்சார் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதன் 40 எம்.பி. கேமராவில் 1/1.5” சென்சார், f/1.4 கொண்டிருக்கும். இத்துடன் RYYB பிக்சல் லே-அவுட் வழங்கப்படும் என தெரிகிறது.

    ஹூவாய் மேட் 30 ப்ரோ லீக்

    இரண்டாவது 40 எம்.பி. கேமரா அல்ட்ரா-வைடு லென்ஸ் 120 டிகிரி ஃபீல்டு-ஆஃப்-வியூ மற்றும் 1/1.7” சென்சார் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. மூன்றாவது 8 எம்.பி. கேமராவில் டெலிபோட்டோ லென்ஸ் 5X சூம் வசதி கொண்டிருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

    சமீபத்தில் ஹூவாய் மேட் 30 ப்ரோ ஸ்மார்ட்போனின் புகைப்படம் இணையத்தில் லீக் ஆனது. இதில் புதிய ஸ்மார்ட்போன் அகலமான நாட்ச் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில் புதிய ஸ்மார்ட்போன் முந்தைய மேட் 20 சீரிசை விட அதிகளவு மாற்றங்களை கொண்டிருக்கிறது.

    இத்துடன் ஒன்பிளஸ் 7 ப்ரோ போன்று புதிய மாடலில் 90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. இதில் கிரின் 985 சிப்செட், 4200 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 55 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. புது ஸ்மார்ட்போன் பற்றி இதுவரை அதிகாரப்பூர்வ விவரங்கள் வெளியாகவில்லை.

    எனினும், ஹூவாயின் புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் அக்டோபர் மாதத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேட் 30 ப்ரோ தவிர மேட் 30 ஸ்மார்ட்போன் மற்றும் 5ஜி வேரியண்ட் ஒன்றும் அறிமுகமாகும் என தெரிகிறது.
    ரெட்மி நோட் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன் விற்பனையில் புதிய மைல்கல் கடந்திருக்கிறது. இதனையொட்டி ரெட்மி நோட் 7 ப்ரோ ஒபன் சேல் விற்பனை செய்யப்படுகிறது.



    ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஒபன் சேல் விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக இதேபோன்று ஒபன் சேல் குறுகிய காலக்கட்டத்திற்கு நடத்தப்பட்டது. புதிய ஒபன் சேல் அறிவிப்புடன் இந்தியாவில் ரெட்மி நோட் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் 50 லட்சம் யூனிட்களை கடந்து இருப்பதாக சியோமி அறிவித்துள்ளது.

    பிப்ரவரி மாதம் இந்தியாவில் அறிமுகமான ரெட்மி நோட் 7 சீரிஸ் ஐந்து மாதத்தில் 50 லட்சம் யூனிட்கள் விற்பனையை கடந்திருக்கிறது. ரெட்மி நோட் 7 சீரிசில் ரெட்மி நோட் 7 ப்ரோ, ரெட்மி நோட் 7 மற்றும் ரெட்மி நோட் 7எஸ் ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

    ஒபன் சேல் என்பதால் வாடிக்கையாளர்கள் ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனினை ப்ளிப்கார்ட், Mi அதிகாரப்பூர்வ வலைத்தளம், Mi ஹோம் ஸ்டோர், Mi ஸ்டூடியோ மற்றும் அதிகாரப்பூர்வ விற்பனை மையங்களில் எப்போது வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம்.



    இந்தியாவில் ரெட்மி நோட் 7 ப்ரோ 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 13,999 என்றும் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 15,999 என்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 16,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மூன்று வேரியண்ட்களும் நெபுளா ரெட், நெப்டியூன் புளு மற்றும் ஸ்பேஸ் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.

    ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் வாங்கும் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இருமடங்கு டேட்டா பலன்கள் வழங்கப்படுகிறது. இதனை பெற வாடிக்கையாளர்கள் ரூ. 249 அல்லது ரூ. 349 சலுகையை ரீசார்ஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது முதல் பத்து மாதங்களுக்கு அதிகபட்சம் 1120 ஜி.பி. டேட்டா பெற முடியும்.

    இத்துடன் வட்டியில்லா மாத தவணை முறை வசதி, தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ஐந்து சதவிகித கேஷ்பேக் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    ரெட்மி நோட் 7 ப்ரோ

    ரெட்மி நோட் 7 ப்ரோ சிறப்பம்சங்கள்:


    - 6.3 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
    - 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர்
    - அட்ரினோ 612 GPU
    - 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
    - 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் MIUI 10
    - ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
    - 48 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.79, சோனி IMX586, 6P லென்ஸ், PDAF, EIS
    - 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
    - 13 எம்.பி. செல்ஃபி கேமரா
    - கைரேகை சென்சார், ஐ.ஆர். சென்சார்
    - ஸ்பிளாஷ் ப்ரூஃப்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், ஸ்மார்ட் பி.ஏ. TAS2563
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - யு.எஸ்.பி. டைப்-சி
    - 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - க்விக் சார்ஜ் 4
    ஹூவாய் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் பாப்-அப் செல்ஃபி கேமராவுடன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.



    ஹூவாய் நிறுவனம் வை9 பிரைம் 2019 ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போனில் 6.59 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் கிரின் 710 12 என்.எம். பிராசஸர், 4 ஜி.பி. ரேம், ஜி.பி.யு. டர்போ 3.0, 16 எம்.பி. பிரைமரி கேமரா, ஏ.ஐ. அம்சங்கள், 8 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. கேமரா வழங்கப்பட்டுள்ளது.

    முன்புறம் 16 எம்.பி. பாப்-அப் செல்ஃபி கேமரா, 3டி போர்டிரெயிட் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனின் இரு கேமரக்களிலும் ஸ்டூடியோ தர லைட்டிங் எஃபெக்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதறம் சார்ந்த EMUI 9 கொண்டிருக்கும் ஹூவைய் வை9 பிரைம் 2019 ஸ்மார்ட்போனின் புன்புறம் கைரேகை சென்சார் மற்றும் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கபப்ட்டுள்ளது.

    ஹூவாய் வை9 பிரைம் 2019

    ஹூவாய் வை9 பிரைம் 2019 சிறப்பம்சங்கள்:

    - 6.59 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - ஆக்டா-கோர் கிரின் 710 12 என்.எம். பிராசஸர்
    - ARM மாலி-G51 MP4 GPU
    - 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 9 பை மற்றும் EMUI 9.0
    - ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
    - 16 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8
    - 8 எம்.பி. அல்ட்ரா-வைடு சென்சார், f/2.4
    - 2 எம்.பி. டெப்த் கேமரா, f/2.4
    - 16 எம்.பி. பாப்-அப் செல்ஃபி கேமரா, f/2.2
    - கைரேகை சென்சார்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    ஹூவாய் வை9 பிரைம் 2019 ஸ்மார்ட்போன் எமரால்டு கிரீன் மற்றும் சஃபையர் புளு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 15,990 என நிர்ணம் செய்யப்பட்டுள்ளது. விற்னை அமேசான் தளத்தில் ஆகஸ்ட் 7 ஆம் தேதி முதல் துவங்குகிறது. எனினும், புதிய ஹூவாய் ஸ்மார்ட்போனினை ஆஃப்லைன் விற்பனை மையங்களில் வாங்கும் போது ஹூவாய் ஸ்போர்ட் ப்ளூடூத் ஹெட்போன், 15600 எம்.ஏ.ஹெச். பவர் பேங் உள்ளிட்டவற்றை இலவசமாக பெற முடியும்.
    சாம்சங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் 5830 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.



    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்20எஸ் ஸ்மார்ட்போன் உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் 5830 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    தற்சமயம் விற்பனையாகும் கேலக்ஸி எம்20 ஸ்மார்ட்போனில் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கேலக்ஸி எம்10 ஸ்மார்ட்போனுடன் கேலக்ஸி எம்20 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. பின் கேலக்ஸி எம் சீரிஸ் மாடலில் எம்40 ஸ்மார்ட்போன் பன்ச் ஹோல் டிஸ்ப்ளேவுடன் அறிமுகம் செய்யப்பட்டது.

    தட்சு நாட்டு வலைத்தளம் ஒன்றில் கேலக்ஸி எம்20எஸ் ஸ்மார்ட்போன் SM-M207 மாடல் நம்பரில் உருவாகி வருவதாக கூறப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் 5830 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படும் என தெரிகிறது. இந்த பேட்டரி பேக் EB-BM207ABY எனும் குறியீடு கொண்டிருக்கிறது.

    கேலக்ஸி எம்20 - கோப்புப்படம்

    மேலும் 5830 எம்.ஏ.ஹெச். ரேட்டெட் அளவு தான என கூறப்படுகிறது. இதனால் கேலக்ஸி எம்20எஸ் ஸ்மார்ட்போனில் 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கும் என தெரிகிறது. கேலக்ஸி எம்20எஸ் வெளியீடு பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. எனினும், இந்த ஸ்மார்ட்போன் இந்தியா மற்றும் சீன சந்தைகளுக்கென உருவாக்கப்படலாம் என தெரிகிறது.

    இந்தியா மற்றும் சீனாவில் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன்களுக்கு அதிக வரவேற்பு கிடைப்பதால் கேலக்ஸி எம்20எஸ் மாடல் வரும் மாதங்களில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம்.

    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எம்20 மற்றும் கேலக்ஸி எம்10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் ஜனவரி மாதத்தில் அறிமுகம் செய்தது. பின் மார்ச் மற்றும் ஜூன் மாத துவக்கத்தில் கேலக்ஸி எம்30 மற்றும் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போன்களை சாம்சங் அறிமுகம் செய்தது.
    பிளாக் ஷார்க் நிறுவனம் அதிநவீன சிறப்பம்சங்கள் நிறைந்த பிளாக் ஷார்க் 2 ப்ரோ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது.



    பிளாக் ஷார்க் நிறுவனம் பிளாக் ஷார்க் 2 ப்ரோ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இது ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட பிளாக் ஷார்க் 2 மாடலின் மேம்பட்ட ஸ்மார்ட்போன் ஆகும். இதில் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர், அதிகபட்சம் 256 ஜி.பி. UFS3.0 மெமரி வழங்கப்பட்டுள்ளது.

    இத்துடன் 6.39 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே, ஹெச்.டி.ஆர். வசதசி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் கேமிங் செய்வதற்கென பிரத்யேக டச் அல்காரிதம் மற்றும் பிரத்யேக டி.சி. டிம்மிங் 2.0 வழங்கப்பட்டுள்ளது. இதன் லிக்விட் கூலிங் 3.0 சி.பி.யு.வின் கோர் வெப்பத்தை குறைக்கும் திறன் கொண்டிருக்கிறது.

    புதிய ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு எஃப்1 காரை தழுவி புதிய லைட்டிங் எஃபெக்ட் கொண்டிருக்கிறது.

    பிளாக் ஷார்க் 2 ப்ரோ

    பிளாக் ஷார்க் 2 ப்ரோ சிறப்பம்சங்கள்:

    - 6.39 இன்ச் 2340x1080 பிக்சல் FHD+ 19.5:9 டிஸ்ப்ளே
    - ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் 7 என்.எம். பிராசஸர்- 675MHz அட்ரினோ 640 GPU
    - 12 ஜி.பி. LPDDR4x ரேம் 
    - 128 ஜி.பி. / 256 ஜி.பி. (UFS 3.0) மெமரி
    - ஆண்ட்ராய்டு 9.0 பை
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 48 எம்.பி. பிரைமரி கேமரா, 1/2.0″ சோனி IMX586 சென்சார், 0.8μm பிக்சல், f/1.75, எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 12 எம்.பி. 1/3.6″ சாம்சங் S5K3M5 டெலிபோட்டோ லென்ஸ் f/2.2, 1.0μm பிக்சல், 6P லென்ஸ்
    - 20 எம்.பி. செல்ஃபி கேமரா, 0.9μm பிக்சல், f/2.0
    - இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, டூயல்-பேண்ட் வைபை, ப்ளூடூத் 5
    - யு.எஸ்.பி. டைப்-சி
    - 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - 27 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    பிளாக் ஷார்க் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் எலெக்ட்ரிக் பிளாக், ஐஸ் ஆஷ், புளு, ஆரஞ்சு மற்றும் பர்ப்பிள் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 12 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை 2999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ. 29,950) என்றும் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை 3499 யுவான் (இந்திய மதிப்பில் ரூ. 34,945) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
    இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ரியல்மி பிராண்டின் 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.
    ரியல்மி பிராண்டு இந்தியாவில் ஒப்போவின் துணை பிராண்டாக மே 2018-இல் அறிவிக்கப்பட்டது. இந்திய சந்தையில் அறிமுகமானது முதல் ரியல்மி பிராண்டு தொடர் வெற்றி பெற்று வருகிறது. இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரியல்மி தனக்கென குறிப்பிடத்தக்க பிராண்டு அந்தஸ்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

    இந்தியாவில் ரியல்மி பிராண்டு மிட்-ரேன்ஜ் சந்தையில் கவனம் செலுத்தி வருகிறது. சமீபத்தில் ரியல்மி பிராண்டு ரியல்மி எக்ஸ் எனும் புதிய ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இது பாப்-அப் கேமரா, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட முதல் ரியல்மி ஸ்மார்ட்போனாக இருக்கிறது.

    இதைத் தொடர்ந்து ரியல்மி பிராண்டு 64 எம்.பி. கேமரா கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதுமட்டுமின்றி ரியல்மி 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவும் தயாராகிவிட்டது.

    மாதவ் சேத் மற்றும் ஸ்கை லி

    முன்னதாக ரியல்மி தனது 5ஜி ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு இறுதியில் அறிமுகமாகும் என அறிவித்திருந்தது. இந்நிலையில், ரியல்மி தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் 5ஜி ஸ்மார்ட்போன் உருவாக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து வெளியாகியிருக்கும் தகவல்களில் இந்திய டெலிகாம் நிறுவனங்கள் 5ஜி சேவையை வழங்கும் பட்சத்தில் 2020 ஆம் ஆண்டில் ரியல்மி 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. 5ஜி ஸ்மார்ட்போன் மூலம் ரியல்மி பிராண்டு பிரீமியம் சந்தையில் களமிறங்க இருக்கிறது.

    புதிய அறிவிப்பின் மூலம் ரியல்மி பிராண்டு ஹூவாய், ஒன்பிளஸ், ஒப்போ மற்றும் சாம்சங் நிறுவனங்களுடன் இணைந்து 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது. ரியல்மி தவிர மோட்டோரோலா, எல்.ஜி. மற்றும் சியோமி போன்ற பிராண்டுகளும் 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளன.
    விவோ நிறுவனத்தின் வை90 ஸ்மார்ட்போன் இந்தியாவில் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.



    விவோ நிறுவனம் இந்தியாவில் வை90 ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது. புதிய விவோ வை90 ஸ்மார்ட்போனில் 6.22 இன்ச் ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன், ஹீலியோ ஏ22 குவாட்கோர் 12 என்.எம். பிராசஸர், 2 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 8.1 சார்ந்த ஃபன்டச் ஒ.எஸ். வழங்கப்பட்டுள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 8 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 5 எம்.பி. செல்ஃபி கேமரா, ஏ.ஐ. பியூட்டி அம்சம் மற்றும் ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்பட்டுள்ளது. பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்.டி. கார்டு ஸ்லாட் கொண்டிருக்கும் விவோ வை90 ஸ்மார்ட்போன் 4030 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

    விவோ வி90

    விவோ வை90 சிறப்பம்சங்கள்:

    - 6.22 இன்ச் 1520x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் ஐ.பி.எஸ். டிஸ்ப்ளே
    - 2.0 ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் ஹீலியோ ஏ22 பிராசஸர்
    - 650 மெகாஹெர்ட்ஸ் IMG பவர்வி.ஆர். GE83200 GPU
    - 2 ஜி.பி. ரேம்
    - 16 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம் ஸ்லாட்
    - ஃபன்டச் ஒ.எஸ். 5.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
    - 8 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.0
    - 5 எம்.பி. செல்ஃபி கேமரா, f/1.8
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - 4030 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    விவோ வை90 ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் விவோ வை90 ஸ்மார்ட்போன் விலை ரூ. 6,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் ஆஃப்லைன் சந்தையில் நடைபெறுகிறது.

    ஒப்போ நிறுவனத்தின் ஏ5எஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ. 1000 குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை மற்றும் முழு விவரங்களை பார்ப்போம்.



    ஒப்போ நிறுவனத்தின் ஏ5எஸ் ஸ்மார்ட்போன் சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. முதற்கட்டமாக 2 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி மாடலும், அதன் பின் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விற்பனைக்கு வந்தது.

    ஒரு மாதம் விற்பனைக்கு பின் ஒப்போ ஏ5எஸ் 4 ஜி.பி. ரேம் மாடல் விலை ரூ. 1000 குறைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஒப்போ ஏ5எஸ் 4 ஜி.பி. ரேம் மாடல் ரூ. 11,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக இதன் விலை ரூ. 12,990 என நிர்ணயம் செய்யப்பட்டது.

    ஒப்போ ஏ5எஸ் 2 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 8,990 விலையிலும் 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 9,990 விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது. புதிய விலை ப்ளிப்கார்ட், அமேசான், பேடிஎம் மால் மற்றும் ஆஃப்லைன் விற்பனை மையங்களில் ஏற்கனவே அமலாகிவிட்டது.

    சிறப்பம்சங்களை பொருத்தவரை ஒப்போ ஏ5எஸ் ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் ஹெச்.டி. பிளஸ் வாட்டர் டிராப் நாட்ச் ஸ்கிரீன், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு, ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 பிராசஸர், 4 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது.

    ஆண்ட்ராய்டு ஓரியோ மற்றும் கலர் ஓ.எஸ். கொண்டிருக்கும் ஒப்போ ஏ5எஸ் ஸ்மார்ட்போனில் 13 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 8 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் ஒப்போ ஏ5எஸ் ஸ்மார்ட்போனில் பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்.டி. கார்டு ஸ்லாட் மற்றும் 4230 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கிறது.

    ஒப்போ ஏ5எஸ்

    ஒப்போ ஏ5எஸ் சிறப்பம்சங்கள்:

    - 6.22 இன்ச் 1520x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
    - ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ பி35 12 என்.எம். பிராசஸர்
    - IMG பவர் வி.ஆர். GE8320 GPU
    - 2 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி 
    - 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 8.1 (ஓரியோ) மற்றும் கலர் ஓ.எஸ். 5.2
    - 13 எம்.பி. பிரைமரி கேமரா, f/2.2
    - 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
    - 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
    - டூயல் சிம் ஸ்லாட்
    - கைரேகை சென்சார்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 4230 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஃபோல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தகவல்களை அறிவித்துள்ளது.



    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஃபோல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பிப்ரவரி மாதம் நடைபெற்ற கேலக்ஸி அன்பேக்டு விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுக நிகழ்வில் கேலக்ஸி ஃபோல்டு விற்பனை ஏப்ரல் மாதம் துவங்கும் என சாம்சங் தெரிவித்தது. எனினும், டிஸ்ப்ளே கோளாறு காரணமாக திட்டமிட்டப்படி இதன் விற்பனை துவங்கவில்லை.

    பின் பலமுறை இதன் வெளியீடு பற்றிய விவரங்கள் வெளியாகின. அந்த வகையில், சாம்சங் தனது கேலக்ஸி ஃபோல்டு வெளியீடு செப்டம்பர் மாதம் துவங்கும் என தெரிவித்துள்ளது. முன்னதாக ஸ்மார்ட்போனில் கண்டறியப்பட்ட பிழை சரி செய்யப்பட்டு வடிவமைப்பு மற்றும் கட்டமைப்பு முறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சாம்சங் அறிவித்துள்ளது.

    புதிய மாற்றங்களோடு கேலக்ஸி ஃபோல்டு கடும் சோதனைக்கு உட்படுத்தப்படுவதாகவும் சாம்சங் தெரிவித்துள்ளது.

    கேலக்ஸி ஃபோல்டு

    கேலக்ஸி ஃபோல்டு மாடலில் செய்யப்பட்டிருக்கும் புதிய மாற்றங்கள்:

    இன்ஃபினிட்டி ஃபிளெக்ஸ் டிஸ்ப்ளேவின் மீது இருந்த பாதுகாக்கும் லேயர், இம்முறை பெசல்களை கடந்து நீட்டிக்கப்பட்டுள்ளது. இது டிஸ்ப்ளேவின் ஒரு அங்கம் என்பதால், இதனை கழற்றக்கூடாது.

    முந்தைய மடிக்கக்கூடிய அனுபவத்தில் எந்த சமரசமும் செய்யாமல், கேலக்ஸி ஃபோல்டு மாடலில் கூடுதல் பாதுகாப்பு முறைகள் பொருத்தப்பட்டுள்ளன. ஹின்ஜ் பகுதியின் மேல் மற்றும் கீழ்புறங்கள் பலப்படுத்தப்பட்டு, புதிதாக பாதுகாப்பு கேப்கள் பொருத்தப்பட்டுள்ளன.

    டிஸ்ப்ளேவின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இன்ஃபினிட்டி ஃபிளெக்ஸ் டிஸ்ப்ளேவின் கீழ் மெட்டல் லேயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. கேலக்ஸி ஃபோல்டு மாடலின் ஹின்ஜ் மற்றும் பாடிக்கான இடைவெளி இம்முறை குறைக்கப்பட்டுள்ளது.

    ஹார்டுவேர் மாற்றங்கள் தவிர கேலக்ஸி ஃபோல்டு ஒட்டுமொத்த அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் சாம்சங் தொடர்ந்து பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதிக்கட்ட சோதனைகள் வெற்றி பெற்றதும், தேர்வு செய்யப்பட்ட சந்தைகளில் கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என தெரிகிறது.

    ×