என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    சியோமி நிறுவனம் இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் விற்பனை செய்திருக்கும் மொத்த ஸ்மார்ட்போன் விவரங்களை வெளியிட்டுள்ளது.
    சீன ஸ்மார்ட்போன் நிறுவமான சியோமி சந்தை ஆய்வு நிறுவனங்களுக்கு எதிராக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. 2019 ஆம் ஆண்டில் விற்பனை செய்யப்பட்ட மொத்த ஸ்மார்ட்போன் யூனிட்கள் பற்றி ஆய்வு நிறுவனங்கள் தவறான விவரம் வழங்கியதாக சியோமி தெரிவித்திருக்கிறது.

    சியோமி நிறுவன தலைவர் லெய் ஜூன், 2019 ஆண்டிற்கான முதல் காலாண்டு காலத்தில் விற்பனையான மொத்த ஸ்மார்ட்போன் பற்றி சில சந்தை ஆய்வு மையங்கள் வெளியிட்ட தகவல்களை பல்வேறு ஊடக நிறுவனங்கள் வெளியிட்டன.

    இதில் 2019 முதல் காலாண்டில், சியோமி ஸ்மார்ட்போன் விற்பனை 2.75 கோடிகளை கடந்திருக்கிறது என லெய் ஜூன் அறிக்கையில் தெரிவித்திருந்தார். முன்னதாக வெளியான தகவல்களில் 2019 முதல் காலாண்டில் சியோமி நிறுவனம் மொத்தம் 2.5 கோடி ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்திருந்ததாக சர்வதேச டேட்டா கார்ப்பரேஷன் (ஐ.டி.சி.) தெரிவித்தது.

    இந்நிலையில் தற்போது இரண்டாம் காலாண்டில் விற்பனை ஆன சியோமி ஸ்மார்ட்போன்களின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான முதல் காலாண்டில் ரூ.730 கோடி வருவாயை ஈட்டியதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

    இதையடுத்து கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சியோமி ஸ்மார்ட்போன்கள் விற்பனை 14.8% அதிகரித்துள்ளது. சர்வதேச அளவில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு, 33.1%  வருவாய் அதிகரித்துள்ளது. மேலும் இந்த இரண்டாம் காலாண்டில் 3.21 கோடி ஸ்மார்ட்போன்களை சியோமி விற்பனை செய்து அசத்தியுள்ளது.
    சியோமியின் ரெட்மி பிராண்டு நோட் 8 சீரிஸ் அறிமுக தேதி மற்றும் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    சியோமியின் ரெட்மி பிராண்டு ரெட்மி நோட் 8 மற்றும் ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன்களை சீனாவில் ஆகஸ்ட் 29 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன்களுடன் ரெட்மி டி.வி. ஒன்றும் அறிமுகம் செய்யப்படுகிறது. 

    ரெட்மி நோட் 8 ப்ரோ டீசர்

    புதிய ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போனில் 64 எம்.பி. பிரைமரி கேமரா வழங்கப்படுகிறது. இதன் பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது. ஸ்மார்ட்போனின் பின்புறம் கிளாக் மற்றும் பிளாஸ்டிக் பேக் கொண்டிருக்கிறது. புதிய ஸ்மார்ட்போனில் சாம்சங்கின் 1/7″ 0.8 μm பிக்சல் 64 எம்.பி. ISOCELL பிரைட் GW1 சென்சார் வழங்கப்படும் என ரெட்மி ஏற்கனவே அறிவித்துவிட்டது.

    இந்த சென்சார் 1.6μm பிக்சல்களில் 4-இன்-1 பிக்சல் தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது. இது குறைவான வெளிச்சமுள்ள பகுதிகளிலும் தெளிவான புகைப்படங்களை வழங்கும். இத்துடன் ஸ்மார்ட் ஐ.எஸ்.ஒ. டூயல் கன்வெர்ஷன் கெயின் தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது. ஹைப்ரிட் 3டி ஹெச்.டி.ஆர். அம்சம் 100 டெசிபல்களில் தலைசிறந்த புகைப்படங்களை வழங்கும்.

    ரெட்மி நோட் 7 ப்ரோ, ரெட்மி நோட் 7எஸ், ரெட்மி 7, ரெட்மி வை3, ஸ்மார்ட்போன் மாடல்களின் விலை இந்தியாவில் குறைக்கப்பட்டுள்ளது.



    ரெட்மி பிராண்டு சமீபத்தில் அறிமுகம் செய்த ரெட்மி நோட் 7 ப்ரோ, ரெட்மி நோட் 7எஸ், ரெட்மி 7, ரெட்மி வை3, ஸ்மார்ட்போன்களின் விலை இந்தியாவில் குறைக்கப்பட்டுள்ளது. 

    ஸ்மார்ட்போன்கள் தவிர Mi ஹோம் செக்யூரிட்டி கேமரா பேசிக் மாடலின் விலையும் குறைப்பதாக சியோமி தெரிவித்துள்ளது. அந்த வகையில் Mi ஹோம் செக்யூரிட்டி கேமரா பேசிக் மாடல் ரூ. 1,799 விலையில் கிடைக்கிறது. புதிய விலை குறைப்பு இன்று (ஆகஸ்ட் 20ஆம் தேதி) முதல் அமலாகிறது. 

    விலை குறைப்பின் படி ரெட்மி நோட் 7எஸ் 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 10,999 இல் இருந்து ரூ. 9,999 விலைக்கும், 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 12,999 இல் இருந்து ரூ. 11,999-க்கும் குறைக்கப்பட்டுள்ளது.

    ரெட்மி நோட் 7எஸ்

    ரெட்மி நோட் 7 ப்ரோ 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 1000 குறைக்கப்பட்டு ரூ. 14,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ரெட்மி 7 (3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி.) மாடல் ரூ. 500 விலை குறைக்கப்பட்டு ரூ. 8,499-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் 2 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 7,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    ரெட்மி வை3 (3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி.) மெமரி மாடல் ரூ. 1000 விலை குறைக்கப்பட்டு ரூ. 8,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. Mi ஹோம் செக்யூரிட்டி கேமரா பேசிக் மாடல் ரூ. 1,799 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. விலை குறைப்பு Mi அதிகாரப்பூர்வ வலைத்தளம், ப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் போன்றவற்றில் அமலாகிறது.
    மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது.



    மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 21:9 சினிமா விஷன் எல்.சி.டி. டிஸ்ப்ளே, எக்சைனோஸ் 9609 பிராசஸர், ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.

    புதிய ஸ்மார்ட்போனில் புகைப்படங்களை எடுக்க 12 எம்.பி. பிரைமரி கேமரா, PDAF, 5 எம்.பி. டெப்த் கேமரா, 117 டிகிரி அல்ட்ரா-வைடு ஆக்‌ஷன் வீடியோ கேமரா, மேம்பட்ட வீடியோ ஸ்டேபிலைசேஷன், 2.0µm குவாட் பிக்சல் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இதன் பிரத்யேக ஹார்டுவேர் மற்றும் மென்பொருள் தொழில்நுட்பம் கொண்டு அல்ட்ரா-வைடு வீடியோக்களை படமாக்க முடியும்.

    மோட்டோரோலா ஒன் ஆக்‌ஷன்

    மோட்டோரோலா ஒன் ஆக்‌ஷன் சிறப்பம்சங்கள்:

    - 6.3 இன்ச் 1080x2520 பிக்சல் FHD+ LCD டிஸ்ப்ளே
    - 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் எக்சைனோஸ் 9609 பிராசஸர்
    - 4 ஜி.பி. ரேம்
    - 128 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஹைப்ரிட் டூயல் சிம்
    - ஆண்ட்ராய்டு 9.0 பை
    - 12 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8,1.25um பிக்சல், PDAF
    - 117 டிகிரி அல்ட்ரா-வைடு ஆக்‌ஷன் வீடியோ கேமரா, 2.0um குவாட் பிக்சல் தொழில்நுட்பம், f/2.2 
    - 5 எம்.பி. டெப்த் கேமரா, f/2.2
    - 12 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, 1.25um பிக்சல்
    - கைரேகை சென்சார்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், டால்பி ஆடியோ
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 
    - யு.எஸ்.பி. டைப்-சி
    - 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - 10 வாட் சார்ஜிங்

    மோட்டோரோலா ஒன் ஆக்‌ஷன் ஸ்மார்ட்போன் டெனிம் புளு, பியல் வைட் மற்றும் அக்வா டீல் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 259 யூரோ (இந்திய மதிப்பில் ரூ. 20,415) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக பிரேசில், மெக்சிகோ மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் விற்பனை செய்யப்படும் மோட்டோரோலா ஒன் ஆக்‌ஷன் ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஆகஸ்ட் 23 ஆம் தேதி அறிமுகமாகிறது.
    ஒப்போ நிறுவனத்தின் பிரபல எஃப்11 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் விலை மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது. விலை குறைப்பு விவரங்களை பார்ப்போம்.



    ஒப்போ நிறுவனம் இந்தியாவில் ஒப்போ எஃப்11 மற்றும் எஃப்11 ப்ரோ ஸ்மார்ட்போன்களை இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்தது. இவை முறையே ரூ. 19,990 மற்றும் ரூ. 24,990 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. சமீபத்தில் எஃப்11 ப்ரோ விலை குறைக்கப்பட்ட நிலையில், தற்சமயம் இரு மாடல்களின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது.

    ஒப்போ எஃப்11 (4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி.) தற்சமயம் ரூ. 16,990 விலையிலும், 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மாடல் விலை ரூ. 17,990 விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக இவை ரூ. 17,990 மற்றும் ரூ. 19,990 விலையில் விற்பனை செய்யப்பட்டது. 

    இதேபோன்று ஒப்போ எஃப்11 ப்ரோ 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. தற்சமயம் ரூ. 21,990 விலையிலும், 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 20,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை முன்னதாக ரூ. 23,990 மற்றும் ரூ. 20,990 விலையில் விற்பனை செய்யப்பட்டது. 

    குறைக்கப்பட்ட விலை ப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் தளத்தில் மாற்றப்பட்டு விட்டது. விலை குறைப்பு தற்காலிகமானதா அல்லது நிரந்தரமானதா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. 

    ஒப்போ எஃப்11

    ஒப்போ எஃப்11 சிறப்பம்சங்கள்:

    - 6.5 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
    - ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ P70 12 என்.எம். பிராசஸர்
    - 900 மெகாஹெர்ட்ஸ் ARM மாலி-G72 MP3 GPU
    - 4 ஜி.பி. ரேம்
    - 128 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் கலர் ஓ.எஸ். 6.0
    - ஹைப்ரிட் டூயல் சிம்
    - 48 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.79, 1/2.25″, 0.8um பிக்சல், 6P லென்ஸ்
    - 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 1.12um பிக்சல்
    - 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
    - கைரேகை சென்சார்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 4020 எம்.ஏ.ஹெச். பேட்டரி, VOOC ஃபிளாஷ் சார்ஜ் 3.0

    ஒப்போ எஃப்11 ஸ்மார்ட்போன் ஃபேவரட் பர்ப்பிள் மற்றும் மார்பில் கிரீன உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. 

     ஒப்போ எஃப்11 ப்ரோ

    ஒப்போ எஃப்11 ப்ரோ சிறப்பம்சங்கள்:

    - 6.5 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.சடி. பிளஸ் 19:5:9 டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
    - ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ P70 12என்.எம். பிராசஸர்
    - 900 மெகாஹெர்ட்ஸ் ARM மாலி-G72 MP3 GPU
    - 6 ஜி.பி. ரேம்
    - 64 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் கலர் ஓ.எஸ். 6.0
    - ஹைப்ரிட் டூயல் சிம்
    - 48 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.79,  1/2.25″, 0.8um பிக்சல், 6P லென்ஸ்
    - 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 1.12um பிக்சல்
    - 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
    - கைரேகை சென்சார்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, VOOC ஃபிளாஷ் சார்ஜ் 3.0

    ரியல்மி பிராண்டின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ரியல்மி 5 ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, நான்கு பிரைமரி கேமரா கொண்டிருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.



    ரியல்மி பிராண்டு இந்தியாவில் ரியல்மி 5 மற்றும் ரியல்மி 5 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. ஆகஸ்ட் 20 ஆம் தேதி அறிமுகமாக இருக்கும் நிலையில், ரியல்மி 5 ஸ்மார்ட்போனின் புதிய டீசர் ப்ளிப்கார்ட் தளத்தில் வெளியானது.

    அதில் ரியல்மி 5 ஸ்மார்ட்போன் நான்கு கேமராவும், பிரைமரி கேமராவுடன் f/1.8 அப்ரேச்சர் மற்றும் 1.25μm பிக்சல், 119-டிகிரி அல்ட்ரா-வைடு லென்ஸ், சூப்பர் மேக்ரோ மற்றும் டெப்த் சென்சிங் போர்டிரெயிட் லென்ஸ் வழங்கப்படுகிறது. இத்துடன் ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது.

    ரியல்மி 5 டீசர்

    இதுவரை வெளியான ரியல்மி ஸ்மார்ட்போன்களிலேயே ரியல்மி 5 ஸ்மார்ட்போனிற்கு அதிக திறன் கொண்ட பேட்டரி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரியல்மி 3 ஸ்மார்ட்போனில் 4230 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ள நிலையில், ரியல்மி 5 ஸ்மார்ட்போனில் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படும் என தெரிகிறது.

    மேலும் ரூ. 10,000 விலைக்குள் கிடைக்கும் நான்கு கேமரா கொண்ட முதல் ஸ்மார்ட்போன் மாடலாக ரியல்மி 5 இருக்கும் என ரியல்மி தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் தெரிவித்தார்.



    இதுதவிர இந்தியாவில் வெளியாகும் ஸ்மார்ட்போன்களிலேயே புதிய ரியல்மி 5 சக்திவாய்ந்த குவால்காம் சிப்செட் கொண்டிருக்கும் என தெரிகிறது. அந்த வகையில் புதிய ரியல்மி ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 655 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கலாம்.

    ரியல்மி 5 ஸ்மார்ட்போனுடன் அறிமுகமாகும் ரியல்மி 5 ப்ரோ மாடலில் ஸ்னாப்டிராகன் 712 பிராசஸர், VOOC ஃபிளாஷ் சார்ஜ் 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
    ரியல்மி பிராண்டு விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கும் ரியல்மி 5 ஸ்மார்ட்போனின் விலை விவரங்களை பார்ப்போம்.



    சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ரியல்மி ஆகஸ்ட் 20 ஆம் தேதி இந்தியாவில் ரியல்மி 5 சீரிஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது. ரியல்மி 5 மற்றும் ரியல்மி 5 ப்ரோ என இரு ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ரியல்மி 5 ப்ரோ ஸ்மார்ட்போன் நான்கு பிரைமரி கேமரா கொண்டிருக்கிறது.

    ரியல்மி 5 ஸ்மார்ட்போன் விலை இந்தியாவில் ரூ. 10,000-க்குள் நிர்ணயிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இதன் பேஸ் மாடல் விலை ரூ. 8,999 முதல் துவங்கலாம் என தெரிகிறது. புதிய ரியல்மி ஸ்மார்ட்போனில் ஹெச்.டி. பிளஸ் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 600 சீரிஸ் சிப்செட் வழங்கப்படலாம்.

    முன்னதாக ரியல்மி 5 ப்ரோ ஸ்மார்ட்போன் 48 எம்.பி. குவாட் கேமரா செட்டப் கொண்டிருக்கும் என ரியல்மி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதில் 48 எம்.பி. பிரைமரி கேமராவுடன் செங்குத்தாக பொருத்தப்பட்ட நிலையில், மூன்று கேமரா சென்சார்கள் வழங்கப்படுகிறது.

    ரியல்மி 5 சீரிஸ் டீசர்

    இவற்றில் பிரைமரி சென்சாருடன், அல்ட்ரா-வைடு சென்சார், சூப்பர் மேக்ரோ சென்சார், டெப்த் சென்சார் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. 48 எம்.பி. கேமராவுடன் நான்கு சென்சார்கள் கொண்ட இந்தியாவின் முதல் ஸ்மார்ட்போனாக இது இருக்கும் என ரியல்மி தெரிவித்திருக்கிறது.

    ரியல்மி 5 ப்ரோ ஸ்மார்ட்போனில் AMOLED டிஸ்ப்ளே, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், குவால்காம் ஸ்னாப்டிராகன் 712 சிப்செட், ஆக்டா-கோர் க்ரியோ 360 கோர் பிராசஸர் வழங்கப்படலாம் என தெரிகிறது. இதன் பிரைமரி கேமராவில் சோனியின் IMX586 சென்சார் வழங்கப்படலாம்.

    இத்துடன் புதிய ரியல்மி ஸ்மார்ட்போனில் கிளாஸி பேக் பேனல், பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது. ரியல்மி 5 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கின்றன.
    சாம்சங் நிறுவனம் புதிய கேலக்ஸி ஏ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதில் டூயல் கேமரா, 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.



    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ10எஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி வி டிஸ்ப்ளே, எக்சைனோஸ் ஆக்டா-கோர் பிராசஸர், ஆண்ட்ராய்டு 9.0 பை இ.ங்குதளம் மற்றும் சாம்சங் ஒன் யு.ஐ. வழங்கப்பட்டுள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 8 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் கேலக்ஸி ஏ10எஸ் ஃபேஸ் அன்லாக் வசதியும் கொண்டிருக்கிறது. இத்துடன் பிரத்யேக டூயல் சிம் மற்றும் மைக்ரோ எஸ்.டி. கார்டு ஸ்லாட்கள் வழங்கப்பட்டுள்ளன.

    சாம்சங் கேலக்ஸி ஏ10எஸ்

    சாம்சங் கேலக்ஸி ஏ10எஸ் சிறப்பம்சங்கள்:

    - 6.2 இன்ச் 1520x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி வி டிஸ்ப்ளே
    - ஆக்டா-கோர் எக்சைனோஸ் பிராசஸர்
    - 2 ஜி.பி. ரேம்
    - 32 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் சாம்சங் ஒன் யு.ஐ.
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8
    - 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
    - 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
    - கைரேகை சென்சார்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - 4,000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    சாம்சங் கேலக்ஸி ஏ10எஸ் ஸ்மார்ட்போன் புளு, கிரீன், ரெட் மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் அடுத்த மாதம் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
    சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி எம்10எஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இதில் எக்சைனோஸ் பிராசஸர், 3 ஜி.பி. ரேம் வழங்கப்படுகிறது.
    சாம்சங் ஸ்மார்ட்போன் விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் லீக் ஆகியுள்ளது. இது கேலக்ஸி எம்10எஸ் மாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புதிய ஸ்மார்ட்போன் SM-M107F எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. இதில் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி புதிய சாம்சங் ஸ்மார்ட்போனில் எக்சைனோஸ் 7885 பிராசஸர், 3 ஜி.பி. ரேம் வழங்கப்படுகிறது. புதிய கேலக்ஸி எம்10எஸ் ஸ்மார்ட்போன் முந்தைய கேலக்ஸி எம்10 மாடலை விட மேம்பட்ட அம்சங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது.

    ஏற்கனவே விற்பனை செய்யப்படும் கேலக்ஸி எம்10 ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் இன்ஃபினிட்டி வி டிஸ்ப்ளே, எக்சைனோஸ் 7870 சிப்செட், 3400 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கிறது. கேலக்ஸி எம்10எஸ் ஸ்மார்ட்போனின் அம்சங்கள் வெளியாகியிருக்கும் நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் வெளியீடு பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.

    கேலக்ஸி எம்10 - கோப்புப்படம்

    கீக்பென்ச் தளத்தின்படி SM-M107F ஸ்மார்ட்போன் எக்சைனோஸ் 7885 பிராசஸர், 3 ஜி.பி. ரேம் வழங்கப்படுகிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் மற்றும் புதிய ஒன் யு.ஐ. இன்டர்ஃபேஸ் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் கீக்பென்ச் தள சோதனையின் சிங்கில் கோரில் 1217 புள்ளிகளையும், மல்டி-கோரில் 3324 புள்ளிகளை பெற்றிருக்கிறது.

    இந்தியாவில் கேலக்ஸி எம்10 ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. சிறப்பம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி எம்10 ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி வி டிஸ்ப்ளே, எக்சைனோஸ் 7870 14 என்.எம். பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.

    புகைப்படங்களை எடுக்க கேலக்ஸி எம்10 ஸ்மார்ட்போனில் 13 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.9, 5 எம்.பி. 120 டிகிரி அல்ட்ரா வைடு லென்ஸ் கொண்ட இரண்டாவது பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது. டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்.டி. கார்டு ஸ்லாட்கள் மற்றும் டூயல் 4ஜி வோல்ட்இ வசதி வழங்கப்பட்டுள்ளது.

    இதன் 2 ஜி.பி. ரேம், 16 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 7,990 என்றும் 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 8,990 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இதன் விலை குறைக்கப்பட்டு இரு வேரியண்ட்களும் முறையே ரூ. 6,990 மற்றும் ரூ. 7,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 
    ஹெச்.எம்.டி. குளோபல் விரைவில் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருக்கும் நிலையில், நோக்கியா ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.



    நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன் விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் வெளியாகியுள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் 6 ஜி.பி. ரேம், ஆக்டா-கோர் பிராசஸர் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் அடுத்த மாதம் பெர்லினில் நடைபெற இருக்கும் ஐ.எஃப்.ஏ. 2019 விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    முன்னதாக ஹெச்.எம்.டி. குளோபல் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்கள் செப்டம்பர் 5 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்தது. ஐ.எஃப்.ஏ. விழாவில் நோக்கியா முதல் முறையாக தனது சாதனங்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இவ்விழாவில் ஹெச்.எம்.டி. குளோபல் நோக்கியா 6.2 மற்றும் நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கீக்பென்ச் தகவல்களின் படி நோக்கியா 7.2 ஸ்மார்ட்போனில் 1.84 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் பிராசஸர், 6 ஜி.பி. ரேம் கொண்டிருக்கும் என தெரிகிறது. இத்துடன் ஸ்னாப்டிராகன் 660 அல்லது ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    நோக்கியா 7.2 லீக்

    புதிய ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் கொண்டிருக்கிறது. இது கீக்பென்ச் சோதனையில் சிங்கில் கோரில் 1604 புள்ளிகளையும், மல்டி கோரில் 5821 புள்ளிகளை பெற்றிருக்கிறது. நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன் ஸ்டார் லார்டு எனும் குறியீட்டு பெயரில் உருவாகிறது.

    இதில் 6.18 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 1080x2340 பிக்சல் ஹெச்.டி.ஆர். 10 டிஸ்ப்ளே, யு-வடிவம் கொண்ட வாட்டர் டிராப் நாட்ச் கொண்டிருக்கும் என தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போன் 4 ஜி.பி. ரேம் + 64 ஜி.பி. மெமரி மற்றும் 6 ஜி.பி. ரேம் + 128 ஜி.பி. மெமரி வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    இத்துடன் புகைப்படங்களை எடுக்க மூன்று பிரைமரி கேமரா, 48 எம்.பி. மெயின் சென்சார் வழங்கப்படுகிறது. மற்ற கேமரா சென்சார்கள் பற்றி எவ்வித தகவலும் இல்லை. நோக்கியா 7.2 ஸ்மார்ட்போனில் 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் குவால்காம் குவிக் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.

    புகைப்படம் நன்றி: nokiapoweruser
    மோட்டோரோலா நிறுவனத்தின் ஒன் ஆக்‌ஷன் ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    மோட்டோரோலா ஒன் சூம் மற்றும் மோட்டோரோலா ஒன் ஆக்‌ஷன் ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி வந்தன. இந்நிலையில், ஆகஸ்ட் 23 ஆம் தேதி மோட்டோரோலா இந்தியாவில் சிறப்பு விழா ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்விழாவில் மோட்டோரோலா ஒன் ஆக்‌ஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஏற்கனவே இந்த ஸ்மார்ட்போனின் விவரங்கள் அமேசான் வலைத்தளத்தில் லீக் ஆனது. மோட்டோரோலாவின் அதிகாரப்பூர்வ டீசரில் ஸ்மார்ட்போனின் மாடல் பற்றி எந்த தகவலும் இடம்பெறவில்லை. புதுவிதமான சாதனம் ஒன்றை ஆகஸ்ட் 23 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறோம் என மோட்டோரோலா அழைப்பிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    மோட்டோரோலா ஒன் ஆக்‌ஷன்

    இதனுடன்  #CaptureTheAction எனும் ஹேஷ்டேக் இடம்பெற்றிருக்கிறது. இதனால் மோட்டோரோலா தனது ஒன் ஆக்‌ஷன் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    சிறப்பம்சங்களை பொருத்தவரை மோட்டோரோலா ஒன் ஆக்‌ஷன் ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் 2520x1080 பிக்சல் 21:9 டிஸ்ப்ளே, எக்சைனோஸ் 9609 சிப்செட், 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி வழங்கப்படுகிறது. இத்துடன் புகைப்படங்களை எடுக்க 12.6 எம்.பி. பிரைமரி கேமரா மற்றும் இன்-ஸ்கிரீன் கேமரா, 117-டிகிரி அல்ட்ரா-வைடு சென்சார், டெப்த் சென்சார் வழங்கப்படுகிறது.

    இத்துடன் 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் புளு, கோல்டு மற்றும் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை 299 யூரோ (இந்திய மதிப்பில் ரூ. 23,650) வரை நிர்ணயம் செய்யப்படலாம்.
    சாம்சங் நிறுவனத்தின் 64 எம்.பி. கேமரா கொண்ட கேலக்ஸி ஸ்மார்ட்போனின் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அதிக பிரபலமாகி வருகிறது. இதுவரை கேலக்ஸி ஏ20, கேலக்ஸி ஏ30 மற்றும் கேலக்ஸி ஏ70 ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கும் நிலையில், சாம்சங் புதிதாக மூன்று கேலக்ஸி ஏ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.

    அந்த வகையில் கேலக்ஸி ஏ20எஸ், கேலக்ஸி ஏ30எஸ் மற்றும் கேலக்ஸி ஏ70எஸ் ஸ்மார்ட்போன்கள் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம். இதில் கேலக்ஸி ஏ70எஸ் ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. புதிய கேலக்ஸி ஏ70எஸ் ஸ்மார்ட்போனில் 64 எம்.பி. பிரைமரி கேமரா  வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

    கேலக்ஸி ஏ70 கோப்புப்படம்

    புதிய ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்சமாக 64 எம்.பி. கேமரா இருக்கிறது. இதில் சாம்சங்கின் சொந்த ISOCELL பிரைட் GW1 சென்சார் வழங்கப்படுகிறது. ஏற்கனவே ரியல்மி மற்றும் சியோமி நிறுவனங்கள் தங்களின் 64 எம்.பி. கேமரா ஸ்மார்ட்போன் பற்றிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. இவை இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களின் படி கேலக்ஸி ஏ70எஸ் ஸ்மார்ட்போன் SM-A707F எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கும் என்றும் இதில் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர் மற்றும் 6 ஜி.பி. ரேம் வழங்கப்படும் என கூறப்படுகிறது. மென்பொருளை பொருத்தவரை புதிய ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு பை சார்ந்த ஒன் யு.ஐ. கொண்டிருக்கும் என தெரிகிறது.
    ×