search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    சாம்சங் லோகோ
    X
    சாம்சங் லோகோ

    எக்சைனோஸ் பிராசஸர், 3 ஜி.பி. ரேமுடன் இணையத்தில் லீக் ஆன சாம்சங் ஸ்மார்ட்போன்

    சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி எம்10எஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இதில் எக்சைனோஸ் பிராசஸர், 3 ஜி.பி. ரேம் வழங்கப்படுகிறது.
    சாம்சங் ஸ்மார்ட்போன் விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் லீக் ஆகியுள்ளது. இது கேலக்ஸி எம்10எஸ் மாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புதிய ஸ்மார்ட்போன் SM-M107F எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. இதில் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி புதிய சாம்சங் ஸ்மார்ட்போனில் எக்சைனோஸ் 7885 பிராசஸர், 3 ஜி.பி. ரேம் வழங்கப்படுகிறது. புதிய கேலக்ஸி எம்10எஸ் ஸ்மார்ட்போன் முந்தைய கேலக்ஸி எம்10 மாடலை விட மேம்பட்ட அம்சங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது.

    ஏற்கனவே விற்பனை செய்யப்படும் கேலக்ஸி எம்10 ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் இன்ஃபினிட்டி வி டிஸ்ப்ளே, எக்சைனோஸ் 7870 சிப்செட், 3400 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கிறது. கேலக்ஸி எம்10எஸ் ஸ்மார்ட்போனின் அம்சங்கள் வெளியாகியிருக்கும் நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் வெளியீடு பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.

    கேலக்ஸி எம்10 - கோப்புப்படம்

    கீக்பென்ச் தளத்தின்படி SM-M107F ஸ்மார்ட்போன் எக்சைனோஸ் 7885 பிராசஸர், 3 ஜி.பி. ரேம் வழங்கப்படுகிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் மற்றும் புதிய ஒன் யு.ஐ. இன்டர்ஃபேஸ் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் கீக்பென்ச் தள சோதனையின் சிங்கில் கோரில் 1217 புள்ளிகளையும், மல்டி-கோரில் 3324 புள்ளிகளை பெற்றிருக்கிறது.

    இந்தியாவில் கேலக்ஸி எம்10 ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. சிறப்பம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி எம்10 ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி வி டிஸ்ப்ளே, எக்சைனோஸ் 7870 14 என்.எம். பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.

    புகைப்படங்களை எடுக்க கேலக்ஸி எம்10 ஸ்மார்ட்போனில் 13 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.9, 5 எம்.பி. 120 டிகிரி அல்ட்ரா வைடு லென்ஸ் கொண்ட இரண்டாவது பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது. டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்.டி. கார்டு ஸ்லாட்கள் மற்றும் டூயல் 4ஜி வோல்ட்இ வசதி வழங்கப்பட்டுள்ளது.

    இதன் 2 ஜி.பி. ரேம், 16 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 7,990 என்றும் 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 8,990 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இதன் விலை குறைக்கப்பட்டு இரு வேரியண்ட்களும் முறையே ரூ. 6,990 மற்றும் ரூ. 7,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 
    Next Story
    ×