
இந்தியாவில் ரியல்மி பிராண்டு மிட்-ரேன்ஜ் சந்தையில் கவனம் செலுத்தி வருகிறது. சமீபத்தில் ரியல்மி பிராண்டு ரியல்மி எக்ஸ் எனும் புதிய ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இது பாப்-அப் கேமரா, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட முதல் ரியல்மி ஸ்மார்ட்போனாக இருக்கிறது.

இதுகுறித்து வெளியாகியிருக்கும் தகவல்களில் இந்திய டெலிகாம் நிறுவனங்கள் 5ஜி சேவையை வழங்கும் பட்சத்தில் 2020 ஆம் ஆண்டில் ரியல்மி 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. 5ஜி ஸ்மார்ட்போன் மூலம் ரியல்மி பிராண்டு பிரீமியம் சந்தையில் களமிறங்க இருக்கிறது.
புதிய அறிவிப்பின் மூலம் ரியல்மி பிராண்டு ஹூவாய், ஒன்பிளஸ், ஒப்போ மற்றும் சாம்சங் நிறுவனங்களுடன் இணைந்து 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது. ரியல்மி தவிர மோட்டோரோலா, எல்.ஜி. மற்றும் சியோமி போன்ற பிராண்டுகளும் 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளன.