search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    கேலக்ஸி ஃபோல்டு
    X
    கேலக்ஸி ஃபோல்டு

    கேலக்ஸி ஃபோல்டு புதிய வெளியீட்டு விவரம்

    சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஃபோல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தகவல்களை அறிவித்துள்ளது.



    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஃபோல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பிப்ரவரி மாதம் நடைபெற்ற கேலக்ஸி அன்பேக்டு விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுக நிகழ்வில் கேலக்ஸி ஃபோல்டு விற்பனை ஏப்ரல் மாதம் துவங்கும் என சாம்சங் தெரிவித்தது. எனினும், டிஸ்ப்ளே கோளாறு காரணமாக திட்டமிட்டப்படி இதன் விற்பனை துவங்கவில்லை.

    பின் பலமுறை இதன் வெளியீடு பற்றிய விவரங்கள் வெளியாகின. அந்த வகையில், சாம்சங் தனது கேலக்ஸி ஃபோல்டு வெளியீடு செப்டம்பர் மாதம் துவங்கும் என தெரிவித்துள்ளது. முன்னதாக ஸ்மார்ட்போனில் கண்டறியப்பட்ட பிழை சரி செய்யப்பட்டு வடிவமைப்பு மற்றும் கட்டமைப்பு முறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சாம்சங் அறிவித்துள்ளது.

    புதிய மாற்றங்களோடு கேலக்ஸி ஃபோல்டு கடும் சோதனைக்கு உட்படுத்தப்படுவதாகவும் சாம்சங் தெரிவித்துள்ளது.

    கேலக்ஸி ஃபோல்டு

    கேலக்ஸி ஃபோல்டு மாடலில் செய்யப்பட்டிருக்கும் புதிய மாற்றங்கள்:

    இன்ஃபினிட்டி ஃபிளெக்ஸ் டிஸ்ப்ளேவின் மீது இருந்த பாதுகாக்கும் லேயர், இம்முறை பெசல்களை கடந்து நீட்டிக்கப்பட்டுள்ளது. இது டிஸ்ப்ளேவின் ஒரு அங்கம் என்பதால், இதனை கழற்றக்கூடாது.

    முந்தைய மடிக்கக்கூடிய அனுபவத்தில் எந்த சமரசமும் செய்யாமல், கேலக்ஸி ஃபோல்டு மாடலில் கூடுதல் பாதுகாப்பு முறைகள் பொருத்தப்பட்டுள்ளன. ஹின்ஜ் பகுதியின் மேல் மற்றும் கீழ்புறங்கள் பலப்படுத்தப்பட்டு, புதிதாக பாதுகாப்பு கேப்கள் பொருத்தப்பட்டுள்ளன.

    டிஸ்ப்ளேவின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இன்ஃபினிட்டி ஃபிளெக்ஸ் டிஸ்ப்ளேவின் கீழ் மெட்டல் லேயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. கேலக்ஸி ஃபோல்டு மாடலின் ஹின்ஜ் மற்றும் பாடிக்கான இடைவெளி இம்முறை குறைக்கப்பட்டுள்ளது.

    ஹார்டுவேர் மாற்றங்கள் தவிர கேலக்ஸி ஃபோல்டு ஒட்டுமொத்த அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் சாம்சங் தொடர்ந்து பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதிக்கட்ட சோதனைகள் வெற்றி பெற்றதும், தேர்வு செய்யப்பட்ட சந்தைகளில் கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என தெரிகிறது.

    Next Story
    ×