search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ரெட்மி நோட் 7 சீரிஸ் ஆஸ்ட்ரோ வைட் எடிஷன்
    X
    ரெட்மி நோட் 7 சீரிஸ் ஆஸ்ட்ரோ வைட் எடிஷன்

    ரெட்மி நோட் 7எஸ், ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம்

    ரெட்மி இந்தியா ரெட்மி நோட் 7எஸ், ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போனின் ஸ்பெஷல் எடிஷனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.



    ரெட்மி நோட் 7 சீரிஸ் வைட் எடிஷன் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. முன்னதாக சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஆஸ்ட்ரோ வைட் எடிஷன் நோட் 7எஸ், நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் தற்சமயம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    அறிமுகமான ஆறு மாதங்களுக்குள் ரெட்மி நோட் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் 1.5 கோடி யூனிட்கள் விற்பனையாகின. சியோமி இந்தியா தலைவரும், துணை தலைவருமான மனு ஜெயின் ரெட்மி நோட் 7 சீரிஸ் அறிமுகமானது முதல் ஒவ்வொரு மாதமும் சுமார் பத்து லட்சம் யூனிட்கள் விற்பனையாகி இருப்பதாக தெரிவித்தார்.

    விற்பனை துவங்கி ஐந்து மாதங்களுக்கு பின் ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் ஒபன் சேல் முறையில் விற்பனை செய்யப்படுகிறது. புதிய ஆஸ்ட்ரோ வைட் தவிர ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்பேஸ் பிளாக், நெப்டியூன் புளு மற்றும் நெபுளா ரெட் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது.

    புதிய நிறத்திற்கான முன்பதிவு நாளை நள்ளிரவு ப்ளிப்கார்ட் மற்றும் Mi அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் நடைபெற இருக்கிறது. இதன் துவக்க விலை ரூ. 13,999 முதல் துவங்குகிறது. ரெட்மி நோட் 7எஸ் ஆஸ்ட்ரோ வைட் எடிஷனுடன் ஆனிக்ஸ் பிளாக், சஃபையர் புளு மற்றும் ரூபி ரெட் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.

    ரெட்மி நோட் 7 சீரிஸ் ஆஸ்ட்ரோ வைட் எடிஷன்

    ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளே வழங்கப்ப்டடுள்ளது. இத்துடன் ஸ்னாப்டிராகன் 675 சிப்செட், 6 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு பை, MIUI 10 யூசர் இன்டர்ஃபேஸ் கொண்டு இயங்குகிறது. 

    புகைப்படங்களை எடுக்க ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனில் 48 எம்.பி. சோனி IMX586 சென்சார், f/1.79, 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, ஏ.ஐ. அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. 13 எம்.பி. செல்ஃபி கேமரா, ஏ.ஐ. பியூட்டிஃபை மற்றும் ஏ.ஐ. போர்டிரெயிட் அம்சம் மற்றும் ஏ.ஐ. ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்பட்டுள்ளது.

    ரெட்மி நோட் 7எஸ் ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் டாட் நாட்ச் டிஸ்ப்ளே, ஔரா வடிவமைப்பு, கிளாஸ் பேக் மற்றும் 2.5D கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருப்பதோடு P2i ஸ்பிலாஷ்ப்ரூஃப் நானோ கோட்டிங், 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, குவால்காம் க்விக் சார்ஜ் 4.0, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 10 வாட் சார்ஜர் வழங்கப்படுகிறது.

    புகைப்படங்களுக்கென 48 எம்.பி. 1/2″ சாம்சங் ISOCELL பிரைட் GM1 சென்சார், 4-இன்-1 பிக்சல் பின்னிங் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இது புகைப்படங்களை 12 எம்.பி. தரத்தில் வழங்கும். இத்துடன் 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா மற்றும் ஏ.ஐ. அம்சங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×