என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பம்
X
எல்.ஜி. ஜி8எஸ் தின்க் சர்வதேச வெளியீடு துவங்கியது
Byமாலை மலர்2 July 2019 1:07 PM IST (Updated: 2 July 2019 1:07 PM IST)
எல்.ஜி. நிறுவனம் தனது ஜி8எஸ் தின்க் ஸ்மார்ட்போனின் சர்வதேச விற்பனை பற்றிய விவரங்களை வெளியிட்டுள்ளது.
எல்.ஜி. நிறுவனம் தனது ஜி8எஸ் தின்க் ஸ்மார்ட்போனினை ஜி8 தின்க் ஸ்மார்ட்போனுடன் இந்த ஆண்டு துவக்கத்தில் நடைபெற்ற சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்தது.
இந்நிலையில், எல்,ஜி. ஜி8எஸ் தின்க் ஸ்மார்ட்போன் இம்மாதமே சர்வதேச சந்தையில் விற்பனைக்கு வரும் என அறிவித்துள்ளது. சிறப்பம்சங்களை பொருத்தவரை எல்.ஜி. ஜி8எஸ் தின்க் ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் ஃபுல் விஷன் FHD+OLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், 6 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க மூன்று பிரைமரி கேமரா யூனிட்: 12 எம்.பி. பிரைமரி கேமரா, 13 எம்.பி. 137˚ சூப்பர் வைடு ஆங்கில் கேமரா, 12 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் செல்ஃபி எடுக்க 8 எம்.பி. சென்சார் மற்றும் 3D ToF கேமரா வழங்கப்பட்டுள்ளது.
எல்.ஜி. ஜி8எஸ் தின்க் சிறப்பம்சங்கள்:
- 6.2 இன்ச் 2248x1080 பிக்சல் 19.5:9 FHD பிளஸ் ஃபுல் விஷன் OLED டிஸ்ப்ளே
- ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 7என்.எம். பிராசஸர்
- அட்ரினோ 640 GPU
- 6 ஜி.பி. ரேம்
- 64 ஜி.பி. / 128 ஜி.பி. (UFS 2.1) மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 9.0 பை
- 12 எம்.பி. பிரமரி கேமரா, f/1.5, 1.4µm, 78° லென்ஸ், எல்.இ.டி. ஃபிளாஷ்
- 13 எம்.பி. 137˚ சூப்பர் வைடு ஆங்கிள் கேமரா, f/2.4, 1.0 µm பிக்சல்
- 12 எம்.பி. டெலிபோட்டோ கேமரா, f/2.4, 1.0µm, 45° லென்ஸ், எல்.இ.டி. ஃபிளாஷ்
- 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/1.9, 1.22μm, 80° லென்ஸ், 3D ToF சென்சார்
- கைரேகை சென்சார்
- 3D ஃபேஸ் அன்லாக்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யு.எஸ்.பி. டைப்-சி (2.0)
- 3550 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- குவால்காம் க்விக் சார்ஜ் 3.0
எல்.ஜி. ஜி8எஸ் தின்க் ஸ்மார்ட்போன் மிரர் பிளாக், மிரர் டீல் மற்றும் மிரர் வைட் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 769 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.59,865) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இதன் விற்பனை ஐரோப்பா, லத்தின் அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் துவங்குகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X