என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பம்
X
வெளியீட்டுக்கு முன் இந்தியாவில் அறிமுகமான ரியல்மி எக்ஸ் ஸ்பைடர் மேன் எடிஷன்
Byமாலை மலர்4 July 2019 5:05 AM GMT (Updated: 4 July 2019 5:05 AM GMT)
ரியல்மி பிராண்டு வெளியீட்டுக்கு முன் இந்தியாவில் தனது ரியல்மி எக்ஸ் ஸ்பைடர் மேன் எடிஷன் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது.
ரியல்மி பிராண்டு இந்தியாவில் தனது ரியல்மி எக்ஸ் ஸ்பைடர் மேன் எடிஷன் ஸ்மார்ட்போனை அதிகாரப்பூர்வ வெளியீட்டுக்கு முன்னதாகவே அறிமுகம் செய்துள்ளது. ஏற்கனவே இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டது குறிப்பிடத்தக்கது.
ஸ்பைடர் மேன் ஸ்பெஷல் எடிஷனுடன் பிரத்யேக பாதுகாப்பு கேஸ் மற்றும் கலர் ஒ.எஸ். 6 ஸ்பைடர் மேன் தீம் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் கஸ்டமைஸ்டு வால்பேப்பர், போன் கேஸ் மற்றும் சார்ஜர் உள்ளிட்டவையும் வழங்கப்படுகிறது. இதன் விலை வரும் வாரங்களில் அறிவிக்கப்பட இருக்கிறது.
ஸ்மார்ட்போனின் இதர சிறப்பம்சங்களில் எவ்வித மாற்றமும் இருக்காது என தெரிகிறது. அந்த வகையில் ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு பை மற்றும் கலர் ஒ.எஸ். 6 வழங்கப்படுகிறது.
இத்துடன் புதிய ஸ்மார்ட்போனில் ஆறாம் தலைமுறை இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 48 எம்.பி. சோனி IMX586 சென்சார், 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, ஏ.ஐ. அம்சங்கள், முன்புறம் 16 எம்.பி. பாப்-அப் ரக செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.
பின்புறும் கிரேடியண்ட் பேக், எஸ் வடிவ வளைவு மற்றும் 3765 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படுகிறது. இத்துடன் VOOC 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்படுகிறது.
Next Story
×