search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    கேலக்ஸி நோட் 10 கான்செப்ட்
    X
    கேலக்ஸி நோட் 10 கான்செப்ட்

    மேம்பட்ட அம்சங்களுடன் உருவாகும் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன்

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனின் புதிய டீசரில் வெளியாகியுள்ள தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.



    சாம்சங் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் ஆகஸ்டு 7 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில், சாம்சங் இந்தோனேசியா வெளியிட்டிருக்கும் டீசரில் கேலக்ஸி நோட் 10 எவ்வாறு சந்தைப்படுத்தப்படும் என்பது குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது. 

    டீசர் வீடியோவில் தரவுகள் கம்ப்யூட்டரில் இருந்து யு.எஸ்.பி. டிரைவிற்கு பரிமாற்றம் செய்யப்பட்டு அவை லேப்டாப்பில் இணைத்து மி்ன்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டு ஸ்மார்ட்போனில் பெறப்படும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. கேலக்ஸி நோட் 10 கொண்டு இவை அனைத்தையும் மிக எளிமையாக செய்ய முடியும் என சாம்சங் தெரிவிக்கிறது.

    கேலக்ஸி நோட் 10 கான்செப்ட்

    சாம்சங் ஸ்மார்ட்போனில் உள்ள டெக்ஸ் மோட் ஸ்மார்ட்போனினை டெஸ்க்டாப்பாக மாற்றுகிறது. பின் லேப்டாப்பிற்கு மாற்றாக இது மாறுகிறது. முந்தைய கேலக்ஸி நோட் 9 மற்றும் ப்ளூடூத் வசதி செயல்படுத்தப்பட்ட எஸ் பென் கொண்டு பயனர்கள் பிரெசன்டேஷன் செய்யும் முறை விளக்கியது. புதிய டீசரில் கேலக்ஸி நோட் 10 மாடலில் இந்த அம்சம் மேலும் மேம்படுத்தப்படும் என தெரிகிறது.

    முன்னதாக வெளியான தகவல்களில் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனில் 20 வாட் ஃபாஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங் வழங்கப்படும் என கூறப்பட்டது. சிறப்பம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் 6.4 இன்ச் மற்றும் 6.7 இன்ச் என இருவித அளவுகளில் கிடைக்கும் என கூறப்படுகிறது.

    இவை 4ஜி எல்.டி.இ. மற்றும் 5ஜி வேரியண்ட்களில் கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போன் எக்சைனோஸ் 9820 / ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம் மற்றும் 512 ஜி.பி. மெமரி வழங்கப்படும் என கூறப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க மூன்று பிரைமரி கேமரா வழங்கப்படலாம்.
    Next Story
    ×