search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    நோக்கியா 6.1
    X
    நோக்கியா 6.1

    இந்தியாவில் நோக்கியா 6.1 விலை குறைப்பு

    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் இந்தியாவில் நோக்கியா 6.1 ஸ்மார்ட்போனின் விலையை குறைத்திருக்கிறது.



    இந்தியாவில் நோக்கியா 6.1 ஸ்மார்ட்போனின் விலை குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை குறைப்பு நோக்கியா இந்தியா வலைதளத்தில் மாற்றப்பட்டுள்ளது. இந்தியாவில் நோக்கியா 6.1 அல்லது நோக்கியா 6 (2018) ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

    நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன் 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி மற்றும் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் கூகுளின் ஆண்ட்ராய்டு ஒன் திட்டத்தில் அறிமுகமானது. 

    விலை குறைப்பின் படி நோக்கியா 6.1 ஸ்மார்ட்போனின் 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 6999 என்றும் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 9,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் தளத்தில் விலை குறைப்பு இதுவரை மாற்றப்படவில்லை.

    நோக்கியா 6.1

    இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் ரூ. 16,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. பின் இதன் 3 ஜி.பி. மாடல் விலை ரூ. 8,999 என்றும் 4 ஜி.பி. மாடல் விலை ரூ. 10,999 என மாற்றப்பட்டது. 

    சிறப்பம்சங்களை பொருத்தவரை நோக்கியா 6.1 ஸ்மார்ட்போனில் 5.5 இன்ச் 1080 பிக்சல் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 கொண்டு பாதுகாக்கப்படுகிறது. இத்துடன் ஸ்னாப்டிராகன் 630 சிப்செட், ஆன்ட்ரய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 16 எம்.பி. பிரைமரி கேமரா, f/2.0 அப்ரேச்சர், டூயல் டோன் எல்இடி ஃபிளாஷ், செய்ஸ் ஆப்டிக்ஸ் மற்றும் 8 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. மெட்டல் யுனிபாடி வடிவைப்பு கொண்டிருக்கும் நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன் 6000 சீரிஸ் அலுமினியம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×