என் மலர்
கணினி
- சோனி நிறுவனம் தனது PS5 மாடலின் புது வேரியண்ட் விற்பனைக்கு தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
- மேலும் புதிய சோனி PS5 வேரியண்ட் அடுத்த ஆண்டு வாக்கில் விற்பனைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.
சோனி நிறுவனம் PS5 கேமிங் கன்சோலை அறிமுகம் செய்து சில ஆண்டுகள் கடந்துவிட்டது. இந்த நிலையில், சோனி தனது PS5 மாடலின் புது வெர்ஷனை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. புது வெர்ஷன் சோனி PS5 ஸ்லிம் எனும் பெயரில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் சோனி PS5 ஸ்லிம் மாடல் அடுத்த ஆண்டின் மூன்றாவது காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம். மேலும் புதிய PS5 வெர்ஷனின் பெயர் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், இந்த மாடல் மிக மெல்லியதாகவும், குறைந்த எடை கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.

2023 வாக்கில் சோனி PS5 ஸ்லிம் அறிமுகமாகும் என்ற தகவல் ஏற்கனவே பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கிறது. PS5 புது வெர்ஷனில் டிஸ்க் டிரைவ் வழங்கப்படும் என தெரிகிறது. சோனி PS5 அறிமுகமாகி சில ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும், இதற்கான தட்டுப்பாடு தொடர்ந்து நிலவி வருகிறது. பயனர்கள் இன்றும் சோனி PS5 மாடலை வாங்க முற்பட்டு வருகின்றனர்.
சமீபத்தில் தான் சோனி PS5 மாடலின் விலை ஐரோப்பா, லண்டன், ஜப்பான் என உலகின் பல்வேறு நாடுகளில் உயர்த்தப்பட்டது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள விலைவாசி மாற்றம் என பல்வேறு காரணங்களே விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது.
- எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றியதில் இருந்து ஏராளமான மாற்றங்கள் மற்றும் புது விதிகளை அறிவித்து வருகிறார்.
- ட்விட்டரில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புது அம்சங்கள் பற்றிய அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றி இருக்கும் எலான் மஸ்க், அதில் பணியாற்றி வந்த ஏராளமான ஊழியர்களை பணிநீக்கம் செய்து இருக்கிறார். உலகம் முழுக்க ட்விட்டரில் பணியாற்றி வரும் ஊழியர்கள் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்படும் என தகவல்கள் வெளியாகி இருந்தது. அந்த வகையில், இந்தியாவில் உள்ள ட்விட்டர் நிறுவனத்தில் பணியாற்றி வந்த சுமார் 50 சதவீத ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ட்விட்டர் இந்தியாவில் பணியாற்றி வந்த ஒட்டுமொத்த விளம்பர குழுவும் நீக்கப்பட்டு இருக்கிறது. இதே போன்று பொறியியல், பிராடக்ட் மற்றும் தகவல் தொடர்பு துறைகளில் பணியாற்றி வந்த ஏராளமான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். உலகளவில் நிறுவனம் மாற்றியமைக்கப்பட்டு வருவதால், ஊழியர்கள் பணியில் இருந்து நீக்கப்படுகிறார்கள் என்றும், இதன் காரணமாக திங்கள் கிழமை முதல் பணிக்கு வர வேண்டாம் என்றும் ட்விட்டர் தனது ஊழியர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவித்து இருக்கிறது.

மேலும் ஊழியர்களின் பணி நீக்க நடவடிக்கைகள் முழுமை பெறும் வரையில் அடுத்த வாரம் வியாழன் கிழமை வரை உலகளவில் செயல்பட்டு வரும் ட்விட்டர் அலுவலகங்களை மூடவும், ஊழியர்கள் அலுவலகத்திற்குள் நுழையவும் எலான் மஸ்க் உத்தரவிட்டுள்ளார்.
ட்விட்டர் இந்தியா நிறுவனத்தில் சுமார் 300 ஊழியர்கள் பணியாற்றி வந்தனர். இவர்களில் சுமார் 50 சதவீதம் பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். எனினும், எத்தனை பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர் என்ற விவரங்களை ட்விட்டர் இதுவரை வெளியிடவில்லை.
- வாட்ஸ்அப் செயலியில் புது அம்சங்களை வழங்கும் அப்டேட் வெளியிடப்பட்டு வருகிறது.
- இந்த அப்டேட்டில் கம்யுனிடிஸ், இன்-சாட் போல்ஸ் என புதிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
வாட்ஸ்அப் செயலியில் கம்யுனிடிஸ் எனும் புதிய அம்சம் வரும் மாதங்களில் சர்வதேச அளவில் வெளியிடப்படும் என மார்க் ஜூக்கர்பர்க் அறிவித்தஉ இருந்தார். ஏற்கனவே வெளியான தகவல்களின் படி வாட்ஸ்அப் செயலியில் கம்யுனிடிஸ் எனும் அம்சம் உருவாக்கப்பட்டு வந்தது. இந்த அம்சம் வாட்ஸ்அப் க்ரூப்களை ஒருங்கிணைக்கும் புது வசதியை செயல்படுத்துகிறது.
கம்யுனிடிஸ் அம்சத்தின் கீழ் பயனர்கள் பல்வேறு வாட்ஸ்அப் க்ரூப்களை ஒற்றை குடையின் கீழ் கொண்டுவர முடியும். கம்யுனிடிஸ் அம்சம் மூலம் வியாபாரங்கள் உரையாடும் போது மற்ற தளங்கள் வழங்குவதை விட அதிகளவு பாதுகாப்பு மற்றும் தனியுரிமையை வழங்க முடிவு செய்துள்ளது. எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் மூலம் வாட்ஸ்அப்-இல் அதிகளவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.

புதிய கம்யுனிடிஸ் அம்சத்தை ஆண்ட்ராய்டு பயனர்கள் தங்களது சாட்-இன் மேல்புறத்திலும், ஐஒஎஸ் பயனர்கள் சாட்-இன் கீழ்புறத்திலும் காண முடியும்.
இங்கிருந்து ஏற்கனவே உள்ள க்ரூப்களை ஒரு கம்யுனிடியின் கீழ் ஒருங்கிணைக்க முடியும். இதுதவிர புது கம்யுனிடியையும் உருவாக்க முடியும்.
கம்யுனிடியில் சேர்ந்த பின் பயனர்கள் க்ரூப்களின் இடையே தங்களுக்கு தேவையான விவரங்களை மிக எளிதில் பெற்றுக் கொள்ள முடியும். அட்மின்களும் மிக முக்கிய அப்டேட்களை கம்யுனிடியில் உள்ள அனைவருக்கும் அனுப்ப முடியும்.

புதிய கம்யுனிடிஸ் அம்சம் தவிர இன்-சாட் போலிங் மற்றும் 32 நபர்களுடன் வீடியோ காலிங் வசதி, க்ரூப் பயனர்கள் எண்ணிக்கை 1024 உள்ளிட்ட வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. எமோஜி ரியாக்ஷன், அதிக ஃபைல் ஷேரிங் மற்றும் அட்மின் ரிமுவல் போன்ற அம்சங்களை க்ரூப்களிலும் பயன்படுகத்த முடியும். இந்த வசதி கம்யுனிடி அம்சத்திற்கு பெருமளவு உதவியாக இருக்கும்.
வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட்டு இருக்கும் புது அம்சங்கள் சர்வதேச அளவில் வெளியிடப்பட்டு வருகின்றன. வரும் மாதங்களில் உலகம் முழுக்க இந்த அம்சம் அனைவருக்கும் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.
- ஸ்வாட் நிறுவனத்தின் புதிய நெக்பேண்ட் இயர்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
- புதிய ஸ்வாட் நெக்பேண்ட் இயர்போன் முழு சார்ஜ் செய்தால் 30 மணி நேரத்திற்கான பிளேபேக் வழங்கும் திறன் கொண்டிருக்கிறது.
ஸ்வாட் ஏர்லிட் 004 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் வெளியீட்டை தொடர்ந்து புதிதாக நெக்பேண்ட் ரக இயர்போனினை ஸ்வாட் நிறுவனம் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய நெக்பேண்ட் இயர்போன் ஸ்வாட் நெக்கான் 101 என அழைக்கப்படுகிறது. இந்த நெக்பேண்ட் இயர்போன் டார்க் புளூ மற்றும் பிளாக் என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது.
இந்த இயர்போன் ஹெச்டி ஸ்டீரியோ சவுண்ட் வழங்குகிறது. இதில் உள்ள மென்மையான சிலிகான் காதுகளில் எவ்வித எரிச்சலையும் ஏற்படுத்தாது. நீண்ட நேர பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் இந்த இயர்போன் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் IPX67 தர வாட்டர் ப்ரூப் வசதி, 55 மில்லிசெகண்ட் லேடன்சி வழங்குகிறது. இது கேமிங்கின் போதும் தலைசிறந்த அனுபவத்தை வழங்கும்.

ஸ்வாட் நெக்கான் 101 நெக்பேண்ட் இயர்போனை 40 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 30 மணி நேரத்திற்கு பிளேபேக் வழங்குகிறது. இதில் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதை கொண்டு மியூசிக், அழைப்புகள் உள்ளிட்டவைகளை போனை பார்க்காமலேயே இயக்க முடியும். தலைசிறந்த டிசைன் மற்றும் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் போன்ற வசதிகள் சௌகரியமான அனுபவத்தை வழங்குகின்றன.
இதன் இயர்போன்கள் காந்தம் மூலம் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்கிறது. மேலும் இதில் ப்ளூடூத் 5.0 வசதி மற்றும் டூயல் பேரிங் அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த இயர்போன்களில் 10mm டிரைவர்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
- சோனி நிறுவனத்தின் பிளே ஸ்டேஷன் 5 கேமிங் கன்சோல் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து அதிக யூனிட்கள் விற்பனையாகி வருகிறது.
- பிளே ஸ்டேஷன் 5 ஒட்டுமொத்த விற்பனையில் புது மைல்கல் எட்டியதாக சோனி நிறுவனம் அறிவித்து இருக்கிறது.
சோனி நிறுவனம் பிளே ஸ்டேஷன் 5 (PS5) விற்பனை தொடர்ந்து அமோகாமாக நடைபெற்று வருவதாக அறிவித்து இருக்கிறது. இதுவரை சோனியின் PS5 மாடல் 25 மில்லியனுக்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருப்பதாக சோனி தெரிவித்துள்ளது.
கடந்த காலாண்டில் மட்டும் 3.3 மில்லியன் PS5 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. 2022 நிதியாண்டில் மட்டும் 18 மில்லியன் PS5 யூனிட்கள் விற்பனையாகும் என சோனி நிறுவனம் கணித்துள்ளது. இந்த நிதியாண்டின் அரையாண்டு வரையில் சோனி நிறுவனம் 5.7 மில்லியன் PS5 யூனிட்களையே விற்பனை செய்து இருக்கிறது. அந்த வகையில் மீதமுள்ள காலக்கட்டத்தில் விற்பனை இலக்கை சோனி எட்டுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

கடந்த ஆண்டில் இருந்தே சோனி நிறுவனம் PS5 விற்பனையில் அதிக வளர்ச்சியை பதிவு செய்யவில்லை. அந்த வகையில் வருவாய் மட்டும் 12 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. இந்த ஆண்டு துவக்கத்தில் PS5 விலை உயர்வு காரணமாகவே வருவாய் அதிகரித்து இருக்கிறது. வருவாய் அதிகரித்த போதிலும் லாபம் 49 சதவீதம் சரிவடைந்து இருக்கிறது.
கேம் தயாரிப்பு நிறுவனமான பன்ஜியை சோனி கைப்பற்றியதே லாபம் சரிய காரணமாக கூறப்படுகிறது. பன்ஜி நிறுவனம் தான் ஹாலோ டிரையலஜியை உருவாக்கியது. கடந்த ஆண்டு மட்டும் சோனி நிறுவனம் 11.5 மில்லியன் PS5 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான விற்பனை முந்தைய ஆண்டை விட அதிகமாகவே இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
- வாட்ஸ்அப் பீட்டா செயலியில் பல்வேறு புது அம்சங்கள் தொடர்ந்து சோதனை செய்யப்பட்டு வருகின்றன.
- வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் பீட்டா வெர்ஷனில் இரண்டு புது அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.22.24.2 அப்டேட்டில் புது அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி பயனர்கள் தங்களுக்கு தாங்காளாகவே குறுந்தகவல் அனுப்பிக் கொள்ள முடியும். இதுதவிர ப்ரோபைல் போட்டோ க்ரூப் சாட் எனும் புது வசதியும் வழங்கப்பட்டு இருக்கிறது. முதற்கட்டமாக இந்த இரு அம்சங்களும் சோதனை முறையில் மிக சிறிய பீட்டா டெஸ்டர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

மெசேஜ் யுவர்செல்ஃப் (Message Yourself) - அம்சம் கொண்டு பயனர்கள் அவர்களின் சொந்த மொபைல் எண்ணிற்கு குறுந்தகவல் அனுப்பிக் கொள்ள முடியும். இதற்கான வசதியை வாட்ஸ்அப் தனித்து காண்பிக்கிறது. சில பீட்டா டெஸ்டர்களுக்கு இந்த அம்சம் வேறு விதமான சின்க் வசதியை வழங்கி இருக்கிறது. அதாவது அவர்களின் சொந்த நம்பருக்கு குறுந்தகவல் அனுப்பும் போது, இவை ஏற்கனவே லின்க் செய்யப்பட்ட சாதனங்களுடன் சின்க் செய்யப்பட்டு விடும்.

ப்ரோபைல் போட்டோ க்ரூப் சாட் - க்ரூப் சாட்களுக்குள் க்ரூப் பயனர்களுக்காக வாட்ஸ்அப் ப்ரோபைல் படத்தை வெளியிடுகிறது. இந்த வசதியை செயல்படுத்த முதலில் க்ரூப் ஒன்றை உருவாக்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது ஒரே பெயரில் க்ரூப்-இல் உள்ளவர்கள் மற்றவர்களை ப்ரோபைல் போட்டோவை வைத்து எளிதில் கண்டறிந்து விட முடியும்.
ஒருவேளை யாரேனும் ப்ரோபைல் போட்டோ வைக்காமல் இருந்தாலோ அல்லது பிரைவசி செட்டிங்கில் அதனை மறைத்து வைத்தாலோ, போட்டோ இல்லாமல் காலியாக உள்ள படம் செட் செய்யப்படும். இதில் குறிப்பிட்ட காண்டாக்டின் முதல் எழுத்து ப்ரோபைல் போட்டோவாக வைக்கப்படும்.
தற்போது மெசேஜ் யுவர்செல்ஃப் மற்றும் ப்ரோபைல் போட்டோ க்ரூப் சாட் அம்சங்கள் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.22.24.2 வெர்ஷனிலும் வாட்ஸ்அப் ஐஒஎஸ் பீட்டா 22.23.0.70 வெர்ஷனிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. தொடர் சோதனைக்கு பின் இரு அம்சங்களும் அனைவரும் பயன்படுத்தி வரும் வாட்ஸ்அப் ஸ்டேபில் வெர்ஷனில் வழங்கப்படும்.
Photo Courtesy: WABetaInfo
- ஆப்பிள் நிறுவனம் விரைவில் புது மேக் மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
- ஆண்டு துவக்கத்தில் புது சாதனங்களை அறிமுகம் செய்வதை ஆப்பிள் அரிதாக மேற்கொள்ளும் நடவடிக்கை ஆகும்.
ஆப்பிள் நிறுவனம் புதிதாக மேக் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. புது மேக் மாடல்கள் அடுத்த ஆண்டு துவக்கத்திலேயே அறிமுகம் செய்யப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. மார்க் குர்மேன் வெளியிட்டு இருக்கும் சமீபத்திய செய்தி குறிப்பில், அடுத்த தலைமுறை ஆப்பிள் மேக் மாடல்கள் அடுத்த ஆண்டு துவக்கம் வரை அறிமுகம் செய்யப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக விடுமுறை காலக்கட்டத்திற்காக ஆப்பிள் மேலும் சில சாதனங்களை அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. ஜனவரி மற்றும் பிப்ரவரி மாத வாக்கில் புது சாதனங்களை ஆப்பிள் மிகவும் அரிதாகவே அறிமுகம் செய்கிறது. அந்த வகையில் புது மேக் மாடல்கள் அடுத்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம். ஒவ்வொரு முறையும் மார்ச் மாதத்தில் மேக் மாடல்களை ஆப்பிள் அறிமுகம் செய்து இருக்கிறது.

இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ஆப்பிள் நிறுவனம் மேக் ஸ்டூடியோ மாடலை அறிமுகம் செய்தது. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் M2 சார்ந்த 14 இன்ச் மற்றும் 16 இன்ச் மேக்புக் ப்ரோ மாடல்கள், மேக்ஒஎஸ் 13.3 மற்றும் ஐஒஎஸ் 16.3 அப்டேட்டுடன் அறிமுகம் செய்யப்படலாம். இந்த மென்பொருள் அப்டேட்கள் அடுத்த ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாத துவக்கத்திலோ வெளியிடப்படலாம்.
முன்னதாக ஆப்பிள் வருவாய் விளக்க கூட்டத்தில் விடுமுறை காலத்தை ஒட்டி சில சானங்கள் அறிமுகம் செய்யப்பட இருப்பதை உணர்த்தும் தகவல்களை ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் தெரிவித்து இருந்தார். மேலும் புது மேக் மாடல்கள் அடுத்த ஆண்டு துவக்கம் வரை அறிமுகம் செய்யப்படாது என்றே தகவல் வெளியாகி உள்ளது.
- யூடியூப் செயலியில் தொடர்ச்சியாக புது அப்டேட்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
- சமீபத்தில் தான் யூடியூப் செயலியில் புது அம்சங்கள் வழங்கப்பட்டன.
யூடியூப் செயலியின் அனைத்து தளங்களிலும் பெரிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தற்போது ஷாட்ஸ் மற்றும் லைவ் வீடியோ பிரிவுகளுக்கு தனியே புது டேப்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் சேனல் பேஜசில் செய்யப்படுகின்றன. இதன் மூலம் பயனர்கள் இடையூறில்லா வியூவிங் அனுபவத்தை பெறலாம்.
இதுதவிர கிரியேட்டர்கள் மற்றும் யூடியூபர்கள் தங்களின் தரவுகளை ஒவ்வொரு பிரிவுக்கும் ஏற்ப சிறப்பாக பிரித்து காட்சிப்படுத்த முடியும். டிக்டாக் வெளியானதில் இருந்து இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் யூடியூப் குறிகிய நேரத்தில் ஓடும் வீடியோ ஃபார்மேட்டை வழங்க துவங்கி விட்டன. அந்த வகையில் யூடியூப் ஷாட்ஸ் டிக்டாக் போட்டியாளராக கூகுள் அறிமுகம் செய்த சேவை ஆகும்.

வீடியோ மற்றும் ஷாட்ஸ் பிரிவுகளில் ஒவ்வொரு வீடியோவும் பக்கவாட்டுகளில் மாறும் வகையில் வைக்கப்பட்டுள்ளன. ஷாட்ஸ் வீடியோக்களின் தம்ப்நெயில் செங்குத்தாக செவ்வக வடிவில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த வீடியோக்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தானாக மாறிக் கொண்டே இருக்கும். தற்போது யூடியூபில் ஷாட்ஸ் மற்றும் வீடியோக்களுக்கு தனி டேப்கள் வழங்கப்பட்டு உள்ளன.
இவ்வாறு செய்வதில் பயனர்கள் அவர்கள் விரும்பும் ஷாட்ஸ், வீடியோ அல்லது லைவ் ஸ்டிரீம் உள்ளிட்டவைகளை அதன் டேப்களில் இருந்தபடி பார்க்க முடியும். இதனால் அனைத்து தரவுகளுக்கும் முக்கியத்துவம் கிடைக்கும். மேலும் பயனர் அதிகம் விரும்பும் பிரிவில் அந்த டேபிற்கு நேரடியாக சென்று தரவுகளை பார்த்து ரசிக்கலாம்.
- சியோமி நிறுவனம் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரெட்மி நோட் 12 ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து இருக்கிறது.
- மூன்று ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி ரெட்மி பிராண்டிங்கில் மேலும் சில சாதனங்களை அறிமுகம் செய்து இருக்கிறது.
ரெட்மி நோட் 12 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் சியோமி நிறுவனம் சியோமி புக் ஏர் 13 மாடலையும் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய சியோமி லேப்டாப், ரெட்மி நோட் 12 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி புதிய ரெட்மி டிவி, ரெட்மி ப்ரோஜெக்டர், எலெக்ட்ரிக் ஹீட்டர் போன்ற சாதனங்களையும் சியோமி அறிமுகம் செய்தது.
புதிய சியோமி புக் ஏர் 13 மாடல் சியோமி இதுவரை அறிமுகம் செய்ததில் மிகவும் மெல்லியதாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. சியோமி புக் ஏர் 13 மாடலில் 13.3 இன்ச் 2880x1800 பிக்சல் E4 OLED டிஸ்ப்ளே, 60Hz ரிப்ரெஷ் ரேட், டால்பி விஷன், VESA டிஸ்ப்ளே HDR500 சப்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இந்த லேப்டாப் 2-இன்-1 டிசைன் மற்றும் 360 டிகிரி ஹின்ஜ், டச் சப்போர்ட் உள்ளது.

இதனால் புதிய சியோமி புக் ஏர் 13 மாடலை பல்வேறு விதங்களில் பயன்படுத்த முடியும். இந்த லேப்டாப்பில் 6-சீரிஸ் அலுமினியம் அலாய், CNC கார்விங் வழிமுறை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மொத்த எடை மற்றும் அளவு முறையே 1.2 கிலோ மற்றும் 12mm ஆகும்.
இந்த லேப்டாப்பில் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ் வசதி, டூயல் யூனிட் மைக்ரோபோன்கள், பேக்லிட் கீபோர்டு, கிளாஸ் டச்பேட், பவர் பட்டனில் கைரேகை சென்சார், 8MP கேமரா, 12th Gen இண்டெல் கோர் ஐ7 பிராசஸர், இண்டெல் ஐரிஸ் Xe GPU, அதிகபட்சம் 16 ஜிபி LPDDR5 ரேம், 512 ஜிபி SSD ஸ்டோரேஜ் வழங்கப்பட்டு இருக்கிறது.
மேலும் இதில் 58.3 வாட் ஹவர் பேட்டரி மற்றும் 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. புதிய சியோமி புக் ஏர் 13 மாடல் விண்டோஸ் 11 ஒஎஸ், வைபை 6E, ப்ளூடூத் 5.2, இரண்டு தண்டர்போல்ட் 4 போர்ட்கள், ஆடியோ ஜாக் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.
சீன சந்தையில் சியோமி புக் ஏர் 13 மாடலின் விலை RMB 4999, இந்திய மதிப்பில் ரூ. 56 ஆயிரத்து 925 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த லேப்டாப் வைட் நிறத்தில் கிடைக்கிறது.
- நத்திங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட புது இயர்போன் உருளை வடிவம் கொண்டு இருக்கிறது.
- புதிய நத்திங் இயர்போன் உதட்டு சாயத்தை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.
நத்திங் நிறுவனத்தின் புதிய இயர்போன் அறிமுகம் செய்யப்பட்டது. நத்திங் இயர் (ஸ்டிக்) என அழைக்கப்படும் புது இயர்போன் ஹால்-இன்-இயர் டிசைன் கொண்டிருக்கிறது. இதில் 12.6mm டிரைவர்கள் உள்ளன. சார்ஜிங் கேஸ் சேர்க்கும் போது இந்த இயர்போன் மொத்தத்தில் 29 மணி நேர பேக்கப் வழங்குகிறது.
இந்த இயர்போனின் உருளை வடிவம் உதட்டு சாயம் (லிப்ஸ்டிக்) தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த இயர்போனில் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி வழங்கப்படவில்லை. எனினும், இதில் உள்ள மூன்று மைக்ரோபோன்கள் அதிக தெளிவான ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது. இந்த பிளே, பாஸ், ஸ்கிப், வாய்ஸ் அசிஸ்டன்ஸ் மற்றும் வால்யூம் கண்ட்ரோல் உள்ளிட்ட ஆப்ஷ்ன்களை இயக்க பட்ஸ்-இல் டச் கண்ட்ரோல் வசதி வழங்கப்பட்டு உள்ளது.

புது இயர்பட்ஸ் IP54 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய 29 மணி நேர பிளேபேக் வழங்குகிறது. ஆண்ட்ராய்டு சாதனங்களுடன் எளிதில் இணைந்து கொள்ளும் வசதி கொண்டிருக்கிறது. நத்திங் போன் (1) மாடலுடன் இணைக்கும் போது இந்த இயர்பட்ஸ் பிரத்யேக அம்சங்களை பெறுகிறது.
இவற்றில் கஸ்டமைஸ் செய்யக்கூடிய ஜெஸ்ட்யூர் கண்ட்ரோல், EQ செட்டிங் அட்ஜஸ்ட்மெண்ட், ஃபைண்ட் மை இயர்பட்ஸ் உள்ளிட்டவை அடங்கும். இந்த அம்சங்களை நத்திங் போன் (1) மாடலின் குயிக் செட்டிங்ஸ்-இல் இயக்க முடியும். இந்தியாவில் புதிய நத்திங் இயர் (ஸ்டிக்) விலை ரூ. 8 ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை நவம்பர் 17 ஆம் தேதி ப்ளிப்கார்ட் மற்றும் மிந்த்ரா வலைதளங்களில் துவங்குகிறது.
- ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மாடல்களில் யுஎஸ்பி டைப் சி ரக போர்ட் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
- முன்னதாக ஐரோப்பிய யூனியன் சார்பில் மின்சாதனங்களில் ஒரே மாதிரியான சார்ஜிங் போர்ட் வழங்க வலியுறுத்தப்பட்டது.
ஆப்பிள் நிறுவனம் ஐரோப்பிய யூனியன் விதிகளுக்கு ஏற்ப ஐபோனில் யுஎஸ்பி டைப் சி ரக சார்ஜர் வழங்க வேண்டும் என ஆப்பிள் நிறுவனத்தின் மூத்த அதிகாரி கிரெக் கோஸ்வியக் தெரிவித்து இருக்கிறார். மற்ற விதிகளை பின்பற்றுவதை போன்றே இந்த விதியையும் ஆப்பிள் நிறுவனம் பின்பற்றும் என அவர் மேலும் தெரிவித்தார்.
எனினும், எந்த ஐபோன் மாடலில் இருந்து லைட்னிங் போர்ட் நீக்கப்பட்டு யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்படும் என்ற தகவலை அவர் தெரிவிக்கவில்லை. கலிபோர்னியாவில் நடைபெற்ற வால் ஸ்டிரீட் ஜர்னல் கருத்தரங்கில் இந்த தகவலை கிரெக் கோஸ்வியக் தெரிவித்து இருந்தார்.

பல ஆண்டுகளாகவே ஐரோப்பிய யூனியன் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் இடையே முரணான கருத்துக்கள் நிலவி வருகின்றன. முன்னதாக ஐரோப்பிய யூனியன் அதிகாரிகள் ஆப்பிள் நிறுவனம் மைக்ரோ யுஎஸ்பி போர்ட் வழங்க வலியுறுத்தி வந்தனர். இது சாத்தியமாகி இருப்பின் லைட்னிங் போர்ட் மற்றும் தற்போதைய யுஎஸ்பி டைப் சி போர்ட் எதுவும் கண்டறியப்பட்டு இருக்காது என கோஸ்வியக் தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு முதல் ஐபோனில் யுஎஸ்பி டைப் சி வழங்க ஆப்பிள் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஐரோப்பிய யூனியன் விதிகள் 2024 வாக்கில் அமலுக்கு வருகிறது. ஆப்பிள் நிறுவனம் தனது மேக், பல்வேறு ஐபேட் மற்றும் அக்சஸரீக்களில் யுஎஸ்பி டைப் சி வழங்கி விட்டது.
- யூடியூப் வீடியோ ஸ்டிரீமிங் செயலியில் அவ்வப்போது சிறு சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு புது அம்சங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
- தற்போது யூடியூப் செயலியில் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் புது மாற்றத்தின் படி ஆம்பியண்ட் மோட் மற்றும் புது அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
யூடியூப் செயலியில் புது டிசைன், அம்சங்கள் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. இவை பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. யூடியூப் அதிகாரப்பூர்வ வலைதளத்தின் படி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் செயலியில் புது தோற்றம் வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் பின்ச்-டு-ஜூம், பிரிசைஸ் சீக்கிங், ஆம்பியண்ட் மோட், டார்க் மோட் மற்றும் பல்வேறு புது பட்டன்கள் வழங்கப்பட்டுள்ளன. யூடியூப் பின்ச்-டு-ஜூம் அம்சம் கொண்டு வீடியோவில் ஜூம் செய்து பார்க்க முடியும். முன்னதாக ஆகஸ்ட் மாத வாக்கில் இந்த அம்சம் பிரீமியம் பயனர்களுக்கு மட்டும் சோதனை முறையில் வழங்கப்பட்டு இருந்தது. இந்த வரிசையில் தற்போது அனைவருக்கும் இந்த அம்சம் வழங்கப்பட்டு வருகிறது.

பிரிசைஸ் சீக்கிங் அம்சம் கொண்டு வீடியோவில் குறிப்பிட்ட பகுதியை எளிதில் கண்டறிய முடியும். இந்த அம்சம் ஸ்மார்ட்போன் மற்றும் டெஸ்க்டாப் சாதனங்களில் வழங்கப்பட்டு உள்ளது. இந்த அம்சம் கொண்டு சீக் பார் அல்லது வீடியோ தம்ப்நெயில் மூலம் வீடியோவின் குறிப்பிட்ட பகுதிக்கு நேரடியாக செல்ல முடியும். ஆம்பியண்ட் மோட் அம்சம் குறிப்பிட்ட வீடியோவில் உள்ள நிறத்தை அப்படியே ஆப் பேக்கிரவுண்டில் செயல்படுத்தி விடும்.
டார்க் மோட் அம்சம் முன்பை விட அதிக இருளாக மாறி இருக்கிறது. இந்த அம்சம் மொபைல், வெப் மற்றும் ஸ்மார்ட் டிவிக்களில் செயல்படுத்தப்பட்டு இருக்கிறது. சாதனங்களில் AMOLED டிஸ்ப்ளே வைத்திருப்போருக்கு இந்த அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என தெரிகிறது.






