search icon
என் மலர்tooltip icon

    கணினி

    புது டிசைன், ஆம்பியண்ட் மோட் அப்டேட் பெற்ற யூடியூப்
    X

    புது டிசைன், ஆம்பியண்ட் மோட் அப்டேட் பெற்ற யூடியூப்

    • யூடியூப் வீடியோ ஸ்டிரீமிங் செயலியில் அவ்வப்போது சிறு சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு புது அம்சங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
    • தற்போது யூடியூப் செயலியில் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் புது மாற்றத்தின் படி ஆம்பியண்ட் மோட் மற்றும் புது அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

    யூடியூப் செயலியில் புது டிசைன், அம்சங்கள் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. இவை பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. யூடியூப் அதிகாரப்பூர்வ வலைதளத்தின் படி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் செயலியில் புது தோற்றம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் பின்ச்-டு-ஜூம், பிரிசைஸ் சீக்கிங், ஆம்பியண்ட் மோட், டார்க் மோட் மற்றும் பல்வேறு புது பட்டன்கள் வழங்கப்பட்டுள்ளன. யூடியூப் பின்ச்-டு-ஜூம் அம்சம் கொண்டு வீடியோவில் ஜூம் செய்து பார்க்க முடியும். முன்னதாக ஆகஸ்ட் மாத வாக்கில் இந்த அம்சம் பிரீமியம் பயனர்களுக்கு மட்டும் சோதனை முறையில் வழங்கப்பட்டு இருந்தது. இந்த வரிசையில் தற்போது அனைவருக்கும் இந்த அம்சம் வழங்கப்பட்டு வருகிறது.

    பிரிசைஸ் சீக்கிங் அம்சம் கொண்டு வீடியோவில் குறிப்பிட்ட பகுதியை எளிதில் கண்டறிய முடியும். இந்த அம்சம் ஸ்மார்ட்போன் மற்றும் டெஸ்க்டாப் சாதனங்களில் வழங்கப்பட்டு உள்ளது. இந்த அம்சம் கொண்டு சீக் பார் அல்லது வீடியோ தம்ப்நெயில் மூலம் வீடியோவின் குறிப்பிட்ட பகுதிக்கு நேரடியாக செல்ல முடியும். ஆம்பியண்ட் மோட் அம்சம் குறிப்பிட்ட வீடியோவில் உள்ள நிறத்தை அப்படியே ஆப் பேக்கிரவுண்டில் செயல்படுத்தி விடும்.

    டார்க் மோட் அம்சம் முன்பை விட அதிக இருளாக மாறி இருக்கிறது. இந்த அம்சம் மொபைல், வெப் மற்றும் ஸ்மார்ட் டிவிக்களில் செயல்படுத்தப்பட்டு இருக்கிறது. சாதனங்களில் AMOLED டிஸ்ப்ளே வைத்திருப்போருக்கு இந்த அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என தெரிகிறது.

    Next Story
    ×