என் மலர்
கணினி
- சோனி நிறுவனத்தின் புதிய தலைமுறை கேமிங் கன்சோல் PS5 உலக சந்தையில் பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது.
- புதிய கேமிங் கன்சோல் துவங்கி அதில் பயன்படுத்த ஏராளமான புது சாதனங்களை சோனி தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது.
சோனி நிறுவனத்தின் PS5 டூயல்சென்ஸ் எட்ஜ் வயர்லெஸ் கண்ட்ரோலர் முன்பதிவு இந்தியாவில் துவங்கி நடைபெற்று வருகிறது. அல்ட்ரா கஸ்டமைசேஷன் வசதியுன் பிளேஸ்டேஷன் கேம்பேட்கள் அடுத்த ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இந்தியாவிலும் இதே தேதியில் இதன் அறிமுகம் நடைபெறுகிறது.
இந்த நிலையில், புதிய கண்ட்ரோலருக்கான முன்பதிவு அமேசான் இந்தியா, e2z ஸ்டோர், கேம்ஸ்திஷாப் மற்றும் சோனி செண்டர் உள்ளிட்டவைகளில் நடைபெறுகிறது. புதிய PS5 டூயல்சென்ஸ் எட்ஜ் கண்ட்ரோலர் விலை ரூ. 18 ஆயிரத்து 990 ஆகும். அமெரிக்க சந்தையில் இதன் விலை 199.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 16 ஆயிரத்து 300 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அங்கு அக்டோபர் 25 ஆம் தேதி இதன் முன்பதிவு துவங்கியது.

எக்ஸ்பாக்ஸ் எலைட் சீரிஸ் கண்ட்ரோலர்களுக்கு சோனி தரும் பதிலடியாக புதிய PS5 டூயல்சென்ஸ் எட்ஜ் கண்ட்ரோலர்கள் பார்க்கப்படுகின்றன. சோனி நிறுவனம் கஸ்டமைஸ் செய்யக்கூடிய கண்ட்ரோலர்களை அறிமுகம் செய்வது இதுவே முதல் முறை ஆகும். முன்னதாக இதுபோன்ற வசதியை செயல்படுத்த வாடிக்கையாளர்கள் ஸ்கஃப் கேமிங் போன்ற மூன்றாம் தரப்பு ஸ்டோர்களை நாட வேண்டிய அவசியம் இருந்து வந்தது.
தற்போது புதிய PS5 டூயல்சென்ஸ் எட்ஜ் கண்ட்ரோலர்களின் முன்பதிவை துவங்கி, விற்பனை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 23 ஆம் தேதி துவங்க உள்ளன. இந்த தேதியில் சர்வதேச சந்தையில் விற்பனை நடைபெற இருக்கிறது. இந்தியாவில் எப்போது விற்பனை துவங்கும் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. முன்னதாக அக்டோபர் மாத வாக்கில் மாற்றக்கூடிய ஸ்டிக் மாட்யுலின் முன்பதிவு இந்தியாவில் துவங்க இருப்பதாக சோனி அறிவித்து இருந்தது. எனினும், இதுபற்றி எந்த தகவலும் இல்லை.
- சோனி நிறுவனத்தின் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.
- புதிய சோனி இயர்பட்ஸ் சூப்பர்லேடிவ் நாய்ஸ் கேன்சலிங் எனும் வசதியை கொண்டிருக்கிறது.
சோனி நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய லின்க்பட்ஸ் S WF-lS900N மாடல் சோனி நிறுவனத்தின் சிறிய மற்றும் எடை குறைந்த மாடல் ஆகும். இந்த இயர்பட்ஸ் மறுசுழற்சி செய்யப்பட்ட அலுமினியம் மற்றும் பிளாஸ்டிக் இல்லா பொருட்களால் பேக்கிங் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதிப்பு பெருமளவு குறைக்கப்படுகிறது.
இந்த இயர்பட்ஸ் எடை ஒவ்வொன்றும் 4.8 கிராம் கொண்டுள்ளன. அந்த வகையில், சோனி நிறுவனத்தின் எடை குறைந்த மற்றும் அளவில் சிறிய நாய்ஸ் கேன்சலிங் மாடல் ஆகும். இதில் ஹை-ரெஸ் ஆடியோ வசதியும் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய சோனி S WF-lS900N மாடலில் சூப்பர்லேடிவ் நாய்ஸ் கேன்சலிங் வசதி உள்ளது. இது பேக்கிரவுண்ட் நாய்ஸ் மற்றும் ஆம்பியண்ட் சவுண்ட் மோட் உள்ளிட்வைகளை நீக்குகிறது.

புதிய சோனி இயர்பட்ஸ் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 20 மணி நேரத்திற்கான பேட்டரி லைஃப் வழங்குகிறது. ANC மோட் ஆன் செய்யப்பட்ட நிலையில், இந்த இயர்பட்ஸ் ஆறு மணி நேரத்திற்கு பேட்டரி பேக்கப் வழங்குகிறது. சார்ஜிங் கேஸ் சேர்க்கும் போது இதன் பேக்கப் 14 மணி நேரமாக அதிகரிக்கும். இதில் குயிக் சார்ஜிங் வசதி உள்ளது. இதனால் இயர்பட்ஸ்-ஐ ஐந்து நிமிடங்களுக்கு சார்ஜ் செய்தால் ஒரு மணி நேரத்திற்கான பிளேபேக் வழங்குகிறது.
இதன் சார்ஜிங் கேஸ்-ஐ முழுமையாக சார்ஜ் செய்ய இரண்டு மணி நேரமே ஆகும். இந்த இயர்பட்ஸ்-இல் உள்ள "நாய்ஸ் ஆஃப்" வசதி ANC மற்றும் ஆம்பியண்ட் சவுண்ட் மோட்களிடையே தானாக ஸ்விட்ச் செய்யும் வசதி கொண்டிருக்கிறது. இதுதவிர ப்ளூடூத் 5.2, கூகுளின் ஃபாஸ்ட் பேரிங் அம்சம், இண்டகிரேட் செய்யப்பட்ட வி1 பிராசஸர் உள்ளது. இது மேம்பட்ட நாய்ஸ் கேன்சலிங் மற்றும் ஆடியோ தரத்தை வெளிப்படுத்த செய்கிறது.
இந்திய சந்தையில் புதிய சோனி S WF-lS900N இயர்பட்ஸ் மாடலின் விலை ரூ. 16 ஆயிரத்து 990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 3 ஆயிரம் வரையிலான கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இந்த கேஷ்பேக் சலுகை நவம்பர் 21 ஆம் தேதி துவங்கி நவம்பர் 30 ஆம் தேதி வரை மட்டுமே வழங்கப்படுகிறது. புதிய சோனி லின்க்பட்ஸ் S WF-lS900N மாடல்- பிளாக், வைட் மற்றும் பெய்க் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது.
- வாட்ஸ்அப் செயலியில் வியாபாரங்களை கண்டறிந்து நேரடியாக பொருட்களை வாங்கும் வசதி வழங்கப்படுகிறது.
- முதற்கட்டமாக இந்த வசதி தேர்வு செய்யப்பட்ட சில நாடுகளில் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.
மெட்டா நிறுவனத்தின் குறுந்தகவல் செயலியான வாட்ஸ்அப், தனது பிஸ்னஸ் ப்ரோஃபைல் பயனர்களுக்கு புது அம்சத்தை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த அம்சம் கொண்டு பயனர்கள் தளத்தினுள் பிஸ்னஸ்களை தேடி, அவர்களிடம் சாட் செய்து பொருட்களை வாங்க முடியும். வாட்ஸ்அப் பிஸ்னஸ் பயனர்கள் பிஸ்னஸ்களை - வங்கி, பயணம் என குறிப்பிட்ட பிரிவுகளில் தேட முடியும்.
எனினும், முதற்கட்டமாக இந்த அம்சம் பிரேசில், கொலம்பியா, இந்தோனேசியா, மெக்சிகோ மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகளில் மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த அம்சம் பிஸ்னஸ் ப்ரோஃபைல் பயனர்கள் வியாபாரங்களை குறுந்தகவல் செயலிக்குள் எளிதில் கண்டறிய வழி செய்யும். இவ்வாறு செய்யும் போது காண்டாக்ட்களை சேவ் செய்ய வேண்டிய அவசியமோ, வியாபாரங்களின் விவரங்களை வலைதளங்களில் தேட வேண்டிய அவசியம் இல்லை.
வியாபாரங்களை தேடுவதோடு வாட்ஸ்அப் மூலம் நேரடியாக பொருட்களை வாங்கும் வசதியும் வழங்கப்படுகிறது. இவ்வாறு செய்யும் போது ஷாப்பிங் வலைதளத்திற்கு செல்ல வேண்டிய அவசியமும் இல்லை. பேமண்ட் வசதிக்காக வாட்ஸ்அப் பல்வேறு நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்து இந்த வசதியை வழங்கி இருக்கிறது. இந்த அம்சம் ஜியோமார்ட் சேவையை போன்றே செயல்படுகிறது.
இந்த அம்சம் பாதுகாப்பானது என்பதோடு, பயனர்களின் தனியுரிமையை காக்கும் என வாட்ஸ்அப் அறிவித்து இருக்கிறது. மேலும் பயனர்கள் தங்களின் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் பாதுகாப்பான பண பரிமாற்றத்தை செய்ய முடியும். இந்த அம்சம் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதோடு வியாபாரங்கள் வாட்ஸ்அப் மூலம் பொருட்களை விற்க வழி செய்கிறது.
- உலகின் முன்னணி குறுந்தகவல் செயலிகளில் ஒன்றாக மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் இருக்கிறது.
- பயனர்களுக்கு தொடர்ந்து புதுப்பது அம்சங்களை வழங்கும் பணிகளில் வாட்ஸ்அப் ஈடுபட்டு வருகிறது.
வாட்ஸ்அப் செயலியில் "Polls" உருவாக்கும் புது அம்சம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த அம்சம் தற்போது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் தளங்களில் வழங்கப்பட்டு வருகிறது. எனினும், வாட்ஸ்அப் வெப் வெர்ஷனில் மட்டும் இந்த அம்சம் இதுவரை வழங்கப்படவில்லை. வரும் நாட்களில் வாட்ஸ்அப் வெப் தளத்திலும் இந்த அம்சம் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.
முதற்கட்டமாக வாட்ஸ்அப் செயலியின் க்ரூப் சாட் மற்றும் தனிநபர் உரையாடல்களில் Polls அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. பயனர்கள் வாட்ஸ்அப் Polls-இல் கேட்கும் கேள்வியில் அதிகபட்சம் 12 பதில்களை ஆப்ஷனாக வழங்க முடியும். மேலும் ஒரே பதிலை இரு ஆப்ஷனாக வழங்க முற்பட்டால், வாட்ஸ்அப் அதனை எச்சரிக்கை செய்யும்.

ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் தளங்களில் வாட்ஸ்அப் Polls பயன்படுத்துவது எப்படி?
முதலில் உங்களின் ஆண்ட்ராய்டு அல்லது ஐஒஎஸ் சாதனத்தில் வாட்ஸ்அப் செயலி அப்டேட் செய்யப்பட்டு இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பின் தனிநபர் அல்லது க்ரூப் சாட் என எதை வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளலாம். ஐஒஎஸ்-இல் வழக்கமாக குறுந்தகவல்களை டைப் செய்யும் இடத்தின் அருகில் உள்ள பிளஸ் ஐகானை கிளிக் செய்ய வேண்டும். ஆண்ட்ராய்டில் சாட் பாக்ஸ்-இன் அங்கமாக இருக்கும் "பேப்பர்-கிளிப்" ஐகானை கிளிக் செய்ய வேண்டும்.
ஐஒஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு என இரு தளங்களிலும் மெனு ஆப்ஷன் திறக்கும். அந்த மெனுவின் இறுதியில் Polls ஆப்ஷன் இடம்பெற்று இருக்கும். இனி Poll ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும் மற்றொரு மெனு திறக்கும். அதில் Poll கேள்வி மற்றும் பதில்களை சேர்க்கக் கோரும். இவ்வாறு செய்து முடித்ததும் அதனை அனுப்பலாம்.
நீங்கள் Poll அனுப்பியவர்கள், அதற்கான பதிலை கிளிக் செய்ய முடியும். Poll-இன் இறுதியில் அதற்கு கிடைத்த பதில்களை பார்க்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. அதில் ஒவ்வொரு Poll-க்கும் எத்தனை வாக்குகள் கிடைத்தன. எந்த பதிலை அதிகம் பேர் தேர்வு செய்தனர் என்ற விவரங்களை பார்க்க முடியும்.
- ட்விட்டர் சமூக வலைதளத்தில் கடந்த சில வாரங்களாக ஏராளமான மாற்றங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.
- எலான் மஸ்க் ட்விட்டர் தலைமை பொறுப்பை ஏற்றதில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கியதில் இருந்து அந்நிறுவனம் பற்றிய தகவல்கள் வைரலாகி வருகின்றன. நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர்களில் பல்லாயிரம் பேர் பணிநீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். இதுதவிர ட்விட்டர் புளூ சந்தா, புளூ டிக் விவகாரம் என ஏராளமான புது மாற்றங்கள் ட்விட்டரில் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த நிலையில், ட்விட்டர் டைரக்ட் மெசேஜஸ் அம்சத்தில் புதிதாக பாதுகாப்பு அம்சம் சேர்க்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ட்விட்டர் டைரக்ட் மெசேஜஸ்-இல் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் வசதி விரைவில் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதுபற்றிய தகவல் வெளியானதில் இருந்தே, புதிய பாதுகாப்பு அம்சம் ட்விட்டர் தளத்தை வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராமை விட பாதுகாப்பானதாக மாற்றுமா என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.

ட்விட்டர் மெசேஜஸ்-இல் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் வசதியை செயல்படுத்தும் விவரங்களை ஆப் ஆய்வாளர் ஜான் மன்குன் வொங் கண்டறிந்துள்ளார். மேலும் இந்த தகவல்களை அவர் தனது ட்விட்டரில் வெளியிட்டு இருக்கிறார். அதில், "ட்விட்டர் ஆண்ட்ராய்டு வெர்ஷனில் வழங்குவதற்காக புது அம்சம் உருவாக்கப்படும் அறிகுறிகளை பார்க்கிறேன்." என குறிப்பிட்டுள்ளார்.
இவரது ட்விட்டர் பதிவுடன், குறியீட்டு விவரங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இவை என்க்ரிப்ஷன் வசதி வழங்கப்படுவதை உணர்த்துகிறது. இதனை மேலும் உறுதிப்படுத்தும் வகையில், இவரது பதிவுக்கு எலான் மஸ்க் கண் சிமிட்டும் எமோஜியை பதிலாக அளித்து இருக்கிறார். இவரது பதிலில் இருந்தே ட்விட்டர் மெசேஜஸ்-இல் என்க்ரிப்ஷன் வசதி வழங்கப்படுவது உறுதியாகி இருக்கிறது.
எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் வசதியை வழங்குவதன் மூலம் ட்விட்டர் டைரக்ட் மெசேஜஸ் அம்சம் சிக்னல் மற்றும் வாட்ஸ்அப்-க்கு இணையாக பார்க்கப்படும் என கூறப்படுகிறது. மேலும் இந்த அம்சம் சரியான தருணத்தில் கொண்டுவரப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் வசதி பயனர் அனுப்பும் குறுந்தகவல்களை யாரும் பார்க்க முடியாத வகையில் பாதுகாப்பானதாக மாற்றும்.
- குவால்காம் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட புது பிளாக்ஷிப் பிராசஸர் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
- மேலும் புது பிராசஸர் எந்தெந்த மாடல்களில் வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
குவால்காம் நிறுவனம் முற்றிலும் புதிய ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸரை குவால்காம் டெக் சம்மிட் 2022 நிகழ்வில் அறிமுகம் செய்தது. புதிய பிராசஸர் முந்தைய ஜென் 1-ஐ விட 35 சதவீதம் மேம்பட்ட செயல்திறன், 40 சதவீதம் மேம்பட்ட மின்திறன் பயன்பாடு வழங்குகிறது. இந்த பிராசஸர் புதிய 1-4-1 மைக்ரோ-ஆர்கிடெக்ச்சரில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் 1x பிரைம் கோர், அதிகபட்சம் 3.2 ஜிகாஹெர்ட்ஸ், 4x கோர்கள், அதிகபட்சம் 2.8 ஜிகாஹெர்ட்ஸ் உள்ளது.
ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸருடன் புதிய அட்ரினோ GPU வழங்கப்பட்டு இருக்கிறது. இது முந்தைய GPU-வை விட 25 சதவீதம் வேகமானது. மேலும் 45 சதவீதம் சிறப்பான மின்திறன் மேம்பாடு கொண்டது. இத்துடன் ஸ்னாப்டிரான் எலைட் கேமிங் அம்சங்கள், ரியல்-டைம் ஹார்டுவேர், நிஜ உருவம் போன்ற தோற்றம் வழங்கும் சிறப்பான ரே டிரேசிங் வழங்கப்பட்டு இருக்கிறது.

புதிய குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் பல்வேறு பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்களில் வழங்கப்பட இருக்கிறது. அந்த வகையில் அசுஸ் ரோக், ஹானர், ஐகூ, மோட்டோரோலா, நுபியா, ஒன்பிளஸ், ஒப்போ, ரெட்மேஜிக், ரெட்மி, ஷார்ப், சோனி, விவோ, சியோமி, சின்ஜி/மெய்சூ மற்றும் இசட்டிஇ நிறுவன ஸ்மார்ட்போன்களில் புதிய ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் வழங்கப்பட இருக்கிறது.
சியோமி நிறுவனத்தின் புது பிளாக்ஷிப் (சியோமி 13 சீரிஸ்) ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் என்ற பெருமையை பெறும் என சியோமி தலைமை செயல் அதிகாரி லெய் ஜூன் தெரிவித்து இருக்கிறார். எனினும், அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்பட இருக்கும் விவோ X90 ப்ரோ பிளஸ் மாடலில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் வழங்கப்படும் என தெரிகிறது.
இது உண்மையாகும் பட்சத்தில் விவோ X90 ப்ரோ பிளஸ் தான் புது ஸ்னாப்டிராகன் பிராசஸர் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் என்ற பெருமையை பெறும். இதுதவிர மோட்டோரோலா நிறுவனத்தின் X40 ஸ்மார்ட்போனிலும் இந்த பிராசஸர் வழங்கப்பட இருக்கிறது. ஒன்பிளஸ் 11 சீரிஸ் மற்றும் ஐகூ 11 ஸ்மார்ட்போன்களிலும் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் வழங்கப்படுகிறது. இதே போன்று பல்வேறு நிறுவன ஸ்மார்ட்போன்களிலும் இந்த பிராசஸர் வழங்கப்படுகிறது.
- ஒன்பிளஸ் நிறுவனம் உருவாக்கி வரும் புது டேப்லெட் மாடல் பற்றிய விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.
- புதிய ஒன்பிளஸ் பேட் மூலம் அந்நிறுவனம் டேப்லெட் சந்தையில் களமிறங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஒன்பிளஸ் நிறுவனம் அடுத்த ஆண்டு ஆண்ட்ராய்டு டேப்லெட் மாடல்களுக்கு கடும் போட்டியை ஏற்படுத்த திட்டமிட்டு வருவதாக தெரிகிறது. ஒன்பிளஸ் பேட் மாடல் மீண்டும் உருவாக்கப்பட்டு வருவதாக ஒன்பிளஸ் டிப்ஸ்டரான மேக்ஸ் ஜேம்பர் தெரிவித்து இருக்கிறார். ஒன்பிளஸ் பேட் மூலம் அந்நிறுவனம் டேப்லெட் சந்தையில் களமிறங்க இருப்பதாக கூறப்படுகிறது.
இது ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் டேப்லெட் என்ற போதிலும், கடந்த ஒரு வருடமாக இந்த மாடல் உருவாக்கப்பட்டு வருகிறது. ஒன்பிளஸ் ஹார்டுவேர் வளர்ச்சி பிரிவும் ஒப்போ நிறுவன சாதனங்கள் வளர்ச்சி பிரிவு நெருங்கிய பரஸ்பரம் கொண்டிருக்கும் நிலையில், ஒப்போ பேட் மாடல் மேற்கத்திய பகுதிகளில் ஒன்பிளஸ் பேட் பெயரில் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் கூறப்பட்டது. "ஒன்பிளஸ் பேட்" பெயரை அந்நிறுவனம் டிரேட்மார்க் செய்து இருக்கிறது.

ஒன்பிளஸ் பேட் மாடல் தற்போது உருவாக்கப்பட்டு வருவதாகவும், இந்த மாடல் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என்றும் மேக்ஸ் ஜேம்பர் தெரிவித்து இருக்கிறார். முன்னதாக வெளியான தகவல்களில் ஒன்பிளஸ் நிறுவனம் தனது முதல் டேப்லெட் மாடலை 2022 முதல் அரையாண்டு வாக்கில் அறிமுகம் செய்யலாம் என கூறப்பட்டது. ஒன்பிளஸ் தனது முதல் டேப்லெட் பற்றி இதுவரை எந்த தகவலையும் வழங்கவில்லை.
ஒப்போ நிறுவனம் இரண்டு டேப்லெட் மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. ஒப்போ பேட் 11 இன்ச் 2.5K LCD 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர் கொண்டிருக்கிறது. ஒப்போ பேட் ஏர் மாடல் 10.36 இன்ச் 2K LCD 60HZ ரிப்ரெஷ் ரேட் கொண்ட ஸ்கிரீன் மற்றும் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர் கொண்டிருக்கிறது.
ஒன்பிளஸ் பேட் மாடல் ஒப்போ பேட் போன்று சக்திவாய்ந்த அம்சங்களை கொண்டிருக்கும் என்றும் இதில் ஆண்ட்ராய்டு 12L ஒஎஸ் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. புதிய டேப்லெட் மாடலுக்கு ஒன்பிளஸ் நிறுவனம் கீபோர்டு டாக் மற்றும் ஸ்டைலஸ் வசதி உள்ளிட்டவைகளை வழங்கப்படும் என கூறப்படுகிறது.
- நத்திங் நிறுவனம் சமீபத்தில் தான் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்போனினை அறிமுகம் செய்து இருந்தது.
- புதிய இயர்போன் நத்திங் நிறுவனத்தின் இரண்டாவது ஆடியோ சாதனமாக அறிமுகமானது.
நத்திங் நிறுவனம் முற்றிலும் புதிய நத்திங் இயர் (ஸ்டிக்) மாடலை இந்திய சந்தையில் சமீபத்தில் தான் அறிமுகம் செய்தது. நத்திங் இயர் (ஸ்டிக்) மாடலில் செமி இன்-இயர் டிசைன் மற்றும் ரோலிங் மெக்கானிசம் கொண்ட உருளை வடிவத்தில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. நத்திங் நிறுவனத்தின் முற்றிலும் வித்தியாசமான டிசைன் புதிய நத்திங் இயர் (ஸ்டிக்) மாடலிலும் பிரதிபலித்து இருக்கிறது.
இந்திய சந்தையில் நத்திங் இயர் (ஸ்டிக்) விற்பனை நவம்பர் 17 ஆம் தேதி தான் துவங்க இருக்கிறது. எனினும், இன்று (நவம்பர் 13) மதியம் லிமிடெட் விற்பனை நடைபெறுகிறது. இந்த விற்பனை மதியம் 12 மணிக்கு துவங்குகிறது. விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெறுகிறது. இதில் புதிய நத்திங் இயர் (ஸ்டிக்) வாங்குவோர் ஏற்கனவே நத்திங் போன் (1) அல்லது நத்திங் இயர் (1) பயன்படுத்தும் பட்சத்தில் ரூ. 1000 தள்ளுபடி பெறலாம்.

நத்திங் இயர் (ஸ்டிக்) மாடலின் விலை இந்தியாவில் ரூ. 8 ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அந்த வகையில் ஏற்கனவே நத்திங் வாடிக்கையாளர்களாக இருப்பவர்கள் நத்திங் இயர் (ஸ்டிக்) மாடலை ரூ. 7 ஆயிரத்து 499 விலையில் வாங்கிட முடியும்.
இந்த சலுகையை பெற வாடிக்கையாளர்கள் நத்திங் இயர் (ஸ்டிக்) மாடலை ஏற்கனவே நத்திங் போன் (1) அல்லது நத்திங் இயர் (1) மாடலை வாங்க பயன்படுத்திய ப்ளிப்கார்ட் அக்கவுண்டில் வாங்க வேண்டும். இன்றைய பிளாஷ் விற்பனையில் வாங்க முடியாதவர்கள் நவம்பர் 17 ஆம் தேதி துவங்கும் ஓபன் சேலில் வாங்கிட முடியும். அப்போது நத்திங் இயர் (ஸ்டிக்) வாங்கும் நத்திங் வாடிக்கையாளர்களுக்கு இந்த சலுகை வழங்கப்படும்.

அம்சங்களை பொருத்தவரை நத்திங் இயர் (ஸ்டிக்) மாடல் ஹால்ஃப்-இன்-இயர் டிசைன் கொண்டிருக்கிறது. இதன் இயர் ஒவ்வொன்றிலும் 12.6mm டைனமிக் டிரைவர்கள் உள்ளன. மேலும் இந்த இயர்போன் AAC மற்றும் SBC கோடிங் சப்போர்ட், பேஸ் லாக் ஆப்ஷன் போன்ற வசதிகளை கொண்டிருக்கிறது.
இதனை முழு சார்ஜ் செய்தால் இந்த இயர்போன் 7 மணி நேர பேக்கப் வழங்கும். சார்ஜிங் கேஸ் சேர்க்கும் பட்சத்தில் 29 மணி நேர பேக்கப் வழங்குகிறது. இத்துடன் ப்ளூடூத் 5.2, IP54 சான்று, இன்-இயர் ரெகக்னிஷன், கூகுள் பாஸ்ட் பேர், மைக்ரோசாப்ட் ஸ்விப்ட் பேர், நத்திங் X செயலி, கஸ்டமைஸ் EQ மற்றும் மோஷன்ஸ், லோ லேக் மோட் போன்ற அம்சங்கள் உள்ளன.
- உலகம் முழுக்க முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் சமீபத்தில் தான் பெரும்பாலான ஊழியர்களை பணிநீக்கம் செய்தன.
- பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் அறிவிப்பை இந்திய சிஇஒ ஒருவர் வெளியிட்டு உள்ளார்.
உலகம் முழுக்க பெரும்பாலான நிறுவனங்களில் பணி நீக்கம், ஆட்குறைப்பு போன்ற நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ட்விட்டர் அதன் செலவீனங்களை குறைப்பதற்காக சுமார் 3 ஆயிரத்து 800 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. இதே போன்று பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா 11 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டது.
முன்னணி நிறுவனங்களின் பணிநீக்க நடவடிக்கை காரணமாக பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். பணிநீக்கம் செய்யப்பட்டோர், புதிய வேலையை தேடும் முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர். அமெரிக்காவில் பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் H1B விசா வைத்திருப்பவர்கள் நிலைமை சற்று கடினமாகி இருக்கிறது. ஏனெனில், பணிநீக்கம் செய்யப்பட்டதில் இருந்து சரியாக 60 நாட்களில் வேறு நிறுவனத்தில் அவர்கள் பணியில் சேர வேண்டும்.

இவ்வாறு பணியில் சேராத பட்சத்தில் அவர்கள் இந்தியாவுக்கு திரும்ப அனுப்பப்படுவர். இது போன்ற இக்கட்டான சூழலை கருத்தில் கொண்டு டிரீம்11 நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஹர்ஷ் ஜெயின், இந்தியர்கள் மீண்டும் தங்களின் நாட்டிற்கு திரும்ப வேண்டும் என்றும் அவர்கள் இந்திய நிறுவனங்கள் வளர்ச்சி பெற இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியில் சேர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
இவர் பணிநீக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெளிப்படையாக பணி வாய்ப்பு வழங்கி வருகிறார். மேலும் தனது நிறுவனம் சிறந்த திறமைசாலிகள், டிசைன், பிராடக்ட் மற்றும் தொழில்நுட்ப பிரிவுகளில் தலைமை பிரிவுகளில் நல்ல அனுபவம் மிக்கவர்களை தேடி வருவதாக அவர் தெரிவித்து இருக்கிறார். இதோடு தனது நிறுவனம் பணி உத்தரவாதம் அளிக்கும் வகையில் நல்ல நிதி நிலைமை கொண்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
"2022 ஆண்டில் இதுவரை அமெரிக்காவில் மட்டும் சுமார் 52 ஆயிரம் பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதை அடுத்து, இந்தியர்கள் மீண்டும் அவர்களின் தாயகத்துக்கு திரும்ப நினைவூட்டும் செய்தியை பரப்புங்கள். இவ்வாறு செய்யும் போது இந்திய தொழில்நுட்பங்கள் அடுத்த தசாப்தத்தில் அதிகளவு வளர்ச்சியடையும் என்பதை உணர செய்ய முடியும்," என ஹர்ஷ் ஜெயின் தனது ட்விட்டரில் தெரிவித்து இருக்கிறார்.
- ட்விட்டர் நிறுவனத்தின் புதிய ட்விட்டர் புளூ சந்தா முறை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
- புதிய ட்விட்டர் புளூ சந்தாவுக்கான இந்திய விலை விவரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
ட்விட்டர் நிறுவனம் "புளூ" சேவையின் கீழ் வெரிபிகேஷன் சேவையை இந்தியாவில் வழங்க துவங்கி விட்டது. அமெரிக்காவில் இந்த சேவை ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. அங்கு இதற்கான கட்டணம் எட்டு டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கும் நிலையில், இந்தியாவில் இதன் விலை மாதம் ரூ. 719 ஆகும்.
இந்தியாவில் ட்விட்டர் பயன்படுத்தி வரும் சில பயனர்களுக்கு ட்விட்டர் புளூ சேவையில் இணைய கோரிக்கை விடுக்கப்பட்டதாக பயனர்கள் தங்களின் ட்விட்டர் பதிவில் தெரிவித்து வருகின்றனர். எனினும், இந்த அப்டேட் தற்போது ஐபோன்களில் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. வரும் நாட்களில் அனைவருக்கும் இந்த அம்சம் வழங்கப்படலாம்.

ட்விட்டர் புளூ சேவையில் இணையும் பயனர்களுக்கு எந்த விதமான வெரிபிகேஷன் இன்றி புளூ டிக் வழங்கப்பட்டு விடும். இத்துடன் புளூ சேவையில் இருப்பவர்கள் அதிக பயனர்களை அடைவதில் முன்னுரிமை அளிக்கப்படும் என ட்விட்டர் நிறுவனத்தின் புதிய உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்து இருக்கிறார்.
ட்விட்டரில் மாதாந்திர கட்டண முறை அறிமுகம் செய்யப்பட்டு இருப்பதற்கு உலகம் முழுக்க பயனர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ட்விட்டரை விலைக்கு வாங்கியதும் எலான் மஸ்க் அந்நிறுவனத்தில் பணியாற்றி வந்த முன்னால் உயர் அதிகாரிகளை அதிரடியாக பணி நீக்கம் செய்தார்.
- டிசோ பிராண்டின் புது ஸ்மார்ட்வாட்ச் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
- புது ஸ்மார்ட்வாட்ச் அலுமினியம் ஃபிரேம் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கிறது.
டிசோ பிராண்டின் புதிய டிசோ வாட்ச் D பிளஸ் ஸ்மார்ட்வாட்ச் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதில் 1.85 இன்ச் ஸ்கிரீன், 550 நிட்ஸ் பிரைட்னஸ், 2.5D வளைந்த டெம்பர்டு கிளாஸ், 17 சதவீத பெரிய டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் அலுமினியம் ஃபிரேம், 22mm, கழற்றக்கூடிய சிலிகான் ஸ்டிராப், 3ATM வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு உள்ளது.

இத்துடன் 110-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள், ப்ளூடூத் 5.1, ஹார்ட் ரேட் சென்சார், வைப்ரேஷன் மோட்டார், 3.-ஆக்சிஸ் அக்செல்லோமீட்டர், 150-க்கும் அதிக வாட்ச் ஃபேஸ்கள், வளைந்த டெம்ப்பர்டு கிளாஸ், மியூசிக் கண்ட்ரோல், கேமரா கண்ட்ரோல், வானிலை விவரங்கள், கால் நோட்டிபிகேஷன், மெசேஜ் ரிமைண்டர், அலாரம், வாட்டர் ரெசிஸ்டண்ட், 300 எம்ஏஹெச் பேட்டரி, 14 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்குகிறது.
புதிய டிசோ வாட்ச் D பிளஸ் மாடல் கிளாசிக் பிளாக், சில்வர் கிரே மற்றும் டீப் புளூ என மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை அறிமுக சலுகையாக ரூ. 1,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை நவம்பர் 15 ஆம் தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் துவங்குகிறது.
- போட் நிறுவனத்தின் புது ஸ்மார்ட்வாட்ச் மாடல் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகமாகி இருக்கிறது.
- புது ஸ்மார்ட்வாட்ச் அளவில் பெரிய டிஸ்ப்ளே, ஏராளமான உடல்நல அம்சங்களை கொண்டிருக்கிறது.
இந்திய சந்தையில் அணியக்கூடிய சாதனங்களை விற்பனை செய்வதில் முன்னணி பிராண்டாக விளங்கும் போட், "வேவ் அல்டிமா" பெயரில் புது ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புது போட் வேவ் அல்டிமா ஸ்மார்ட்வாட்ச் அளவில் பெரிய, கிராக் ரெசிஸ்டண்ட் கர்வ் ஆர்க் டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. இதுதவிர ஏராளமான ஆரோக்கிய அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளது.
போட் வேவ் அல்டிமா ஸ்மார்ட்வாட்ச்-இல் 1.8 இன்ச், 500 நிட் சூப்பர் பிரைட், எட்ஜ்-டு-எட்ஜ் ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே, குறைந்த எடை கொண்ட அலுமினியம் அலாய் டயல், சருமத்திற்கு மென்மையான உணர்வை தரும் சிலிகான் ஸ்டிராப்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை ரேஜிங் ரெட், ஆக்டிவ் பிளாக் மற்றும் டியல் கிரீன் போன்ற நிறங்களில் கிடைக்கின்றன.

புதிய வேவ் அல்டிமா மாடலில் ப்ளூடூத் காலிங் வசதி, பில்ட்-இன் HD ஸ்பீக்கர், மைக்ரோபோன், ப்ளூடூத் 5.3 சிப் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள மைக்ரோபோன் அதிக சத்தமுள்ள பகுதிகளில் உங்களுக்கு உதவும். மேலும் இதில் ஏராளமான சென்சார்கள், மாணிட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை உடல் நலனை பாதுகாக்க உதவுகிறது. இத்துடன் 100-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள், இதய துடிப்பு சென்சார், SpO2 மாணிட்டரிங் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்திய சந்தையில் புதிய போட் வேவ் அல்டிமா ஸ்மார்ட்வாட்ச் விலை ரூ. 2 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் போட் லைப்ஸ்டைல் வலைதளங்களில் நடைபெற்று வருகிறது.






