என் மலர்
கணினி
- சோனி நிறுவனம் இந்திய சந்தையில் புது வயர்லெஸ் ஸ்பீக்கர் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.
- புதிய வயர்லெஸ் ஸ்பீக்கர் ஏராளமான அம்சங்களுடன் பிரீமியம் பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
சோனி இந்தியா நிறுவனம் SRS-XV900 ப்ளூடூத் பார்டி ஸ்பீக்கரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இது X சீரிசில் அதிக சக்திவாய்ந்த மற்றும் சத்தமான ஸ்பீக்கர் ஆகும். சோனி நிறுவனத்தின் "Live Life Loud" எனும் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் உலகளாவிய இசை பிரியர்களுக்கு தலைசிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும் நோக்கில் இந்த ஸ்பீக்கர் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
புதிய சோனி SRS-XV900 ஸ்பீக்கர் ஆம்னிடைரக்ஷனல் பார்டி சவுணஅட் வெளிப்படுத்துகிறது. இதில் உள்ள X-பேலன்ஸ்டு ஸ்பீக்கர் யூனிட்டின் வட்ட வடிவமில்லா ஸ்பீக்கர் பகுதி அதிக சவுண்ட் பிரெஷர் மற்றும் குறைந்த டிஸ்டார்ஷன் வழங்குகிறது. மேலும் இதில் உள்ள ஜெட் பாஸ் பூஸ்டர் ஆழமான மற்றும் சக்திவாய்ந்த பேஸ் அனுபவத்தை வழங்குகிறது. மேலும் சவுண்ட் பூஸ்டர் அம்சம் டிவி சவுண்ட்-ஐ மேம்படுத்துகிறது.

SRS-25 மணி நேர SRS-XV900 பேட்டரி நீண்ட நேர பயன்பாட்டிற்கு உகந்ததாக மாற்றி இருக்கிறது. மேலும் இதில் உள்ள ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டு பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் மூன்று மணி நேரத்திற்கு பயன்படுத்தலாம். மேலும் பேட்டரி கேர் மோட் மூலம் ஓவர்சார்ஜிங் தவிர்க்கப்படும். இதன் மூலம் ஸ்பீக்கர் அதிக தரமுள்ளதாக நீடித்து உழைக்கும். மெகா பேஸ் அம்சம் ஸ்பீக்கரின் பேஸ்-ஐ பூஸ்ட் செய்து சக்திவாய்ந்த சவுண்ட் வழங்குகிறது.
புதிய சோனி ஸ்பீக்கரில் மைக் மற்றும் கிட்டார் இன்புட் போன்ற வசதிகள் உள்ளன. இதை கொண்டு ஸ்பீக்கரை ஆம்ப் போன்றும் பயன்படுத்தலாம். ஸ்பீக்கரின் டாப் டச் பேனலில் அனைத்து அம்சங்களையும் இயக்கும் வசதியை வழங்குகிறது. இதில் செட்டிங்ஸ் மற்றும் லைட் என எல்லாவற்றையும் இயக்க முடியும்.
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
சோனி SRS-XV900 ஸ்பீக்கரின் விலை ரூ. 79 ஆயிரத்து 990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை அனைத்து சோனி செண்டர்கள், முன்னணி மின்சாதன விற்பனையகங்கள், முன்னணி ஆன்லைன் வலைதளங்களில் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.
- இந்திய ஸ்மார்ட் டிவி சந்தையில் விற்பனை நிலவரம் பற்றிய புது அறிக்கை வெளியாகி இருக்கிறது.
- இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டு நிலவரப்பிடி இந்தியாவில் ஸ்மார்ட் டிவி விற்பனை குறித்த விவரங்கள் அதில் இடம்பெற்றுள்ளது.
2021 ஆண்டின் மூன்றாவது காலாண்டுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் இந்திய ஸ்மார்ட் டிவி சந்தை கணிசமான வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது. இந்த காலக்கட்டத்தில் சியோமி நிறுவனம் மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது வளர்ச்சியை பெற்றுள்ளது.
கவுண்ட்டர்பாயிண்ட் ரிசர்ச் வெளியிட்டு இருக்கும் சமீபத்திய அறிக்கையின் படி, 2022 மூன்றாவது காலாண்டில் சியோமி நிறுவனம் இந்திய ஸ்மார்ட் டிவி சந்தையில் தொடர்ந்து முன்னணியில் நீடிக்கிறது. இந்திய ஸ்மார்ட் டிவி சந்தையில் சியோமி நிறுவனம் 11 சதவீத பங்குகளை பெற்று இருக்கிறது. சியோமி நிறுவன சாதனங்களில் 4K டிஸ்ப்ளே மற்றும் டால்பி ஆடியோ & விஷன் கொண்ட மாடல்களின் விற்பனை அதிகரித்து இருக்கிறது.

சியோமியின் பேட்ச்வால் மென்பொருள் தற்போது 300-க்கும் அதிக லைவ் சேனல்களை வழங்குகிறது. இதன் மூலம் சியோமி Mi 4A ஹாரிசான் எடிஷன், 5A சீரிஸ் மற்றும் ரெட்மி ஸ்மார்ட் டிவி சீரிஸ் விற்பனையும் கணிசமாக அதிகரித்து இருக்கிறது. இந்த காலாண்டில் ஒட்டுமொத்தமாக இந்திய ஸ்மார்ட் டிவி சந்தை 38 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இதில் வெளிநாட்டு நிறுவனங்கள் ஆதிக்கம் தொடர்ந்து நீடிக்கிறது.
இந்திய ஸ்மார்ட் டிவி சந்தையில் வெளிநாட்டு நிறுவனங்களின் பங்கு 40 சதவீதமாக உள்ளது. இவற்றை தொடர்ந்து சீன நிறுவனங்கள் 38 சதவீத பங்குகளை பெற்றுள்ளன. இறுதியில் இந்திய நிறுவனங்கள் 22 சதவீத விற்பனையை பதிவு செய்துள்ளன. எனினும், இந்த காலாண்டில் பங்குகள் இருமடங்கு அதிகரித்துள்ளன.
- அசுஸ் நிறுவனத்தின் புதிய லேப்டாப் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
- புதிய லேப்டாப்கள் பயனர் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையிலும், சிறந்த அனுபவத்தை வழங்கும் வகையிலும் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
அசுஸ் இந்தியா நிறுவனம் ஆறு புதிய லேப்டாப் மாடல்களை பிரீமியம் எக்ஸ்பர்ட்புக் சீரிசில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய லேப்டாப்கள் B5, B7, B2, B3 மற்றும் 12th Gen B9 மற்றும் B1 என அழைக்கப்படுகின்றன. ஹைப்ரிட் வொர்க் முறையை கருத்தில் கொண்டு வொர்க்ஸ்டேஷன் மற்றும் கன்வெர்டிபில் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் புது லேப்டாப்கள் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
இந்த லேப்டாப்கள் நீடித்த ப்ரோடக்டிவிட்டி மற்றும் பயனர் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்கின்றன. இவற்றில் பில்ட்-இன் கைரேகை சென்சார், face recognition வசதிக்காக IR கேமரா, வெப்கேமரா, டேட்டா செக்யுரிட்டிக்காக டிரஸ்டட் பிளாட்ஃபார்ம் மாட்யுல் (TPM) 2.0 சிப் வழங்கப்பட்டு இருக்கிறது.

எக்ஸ்பர்ட்புக் B5 சீரிஸ் மாடல்களில் இண்டெல் 12th Gen CoreTM i7-P சீரிஸ் 28W பிராசஸர், தண்டர்போல்ட் 4, ஐரிஸ் Xe கிராஃபிக்ஸ், அதிகபட்சம் 40 ஜிபி குயிக் DDR ரேம், வைபை 6 சப்போர்ட் உள்ளிட்டவை எக்ஸ்பர்ட் B5 மற்றும் B5 ஃப்ளிப் மாடல்களில் வழங்கப்பட்டு இருக்கிறது. எக்ஸ்பர்ட்புக் B5 மற்றும் B5 ஃப்ளிப் மாடல்களில் 14 இன்ச் FHD+ ஸ்கரீன், ஆண்டி-கிலேர் கோட்டிங் உள்ளது. B5 ஃப்ளிப் மாடலில் டச் சப்போர்ட் கொண்ட டிஸ்ப்ளே, ஸ்டெப்லெஸ் கன்வெர்டிபில் ஹின்ஜ் உள்ளது.
எக்ஸ்பர்ட்புக் B7 ஃப்ளிப் மாடலில் 5ஜி கனெக்டிவிட்டி உள்ளது. இத்துடன் அதிநவீன 12th Gen இண்டெல் கோர் i7 28-வாட் P சீரிஸ் பிராசஸர், வைபை 6, ப்ளூடூத் 5.2 கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் 14 இன்ச் QHD+ 2560x1600 பிக்சல் ஆண்டி கிலேர் டச் ஸ்கிரீன், அசுஸ் பென், 360-டிகிரி ஹின்ஜ் உள்ளது.
எக்ஸ்பர்ட்புக் B2 மாடல் கிளாம்ஷெல் டிசைன் அல்லது ஃப்ளிப் வடிவில் வழங்கப்படுகிறது. இவற்றில் முறையே 15.6 இன்ச் அல்லது 14 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. இத்துடன் 12th Gen இண்டெல் கோர் vப்ரோ பிராசஸர்கள் உள்ளன. இத்துடன் பேக்லிட் கீபோர்டு, IR HD வெப்கேமரா, ஸ்மார்ட் கார்டு ரீடர், ஹார்டுவேர் TMP 2.0 சிப் வழங்கப்பட்டு இருக்கிறது.
எக்ஸ்பர்ட்புக் B3 ஃப்ளிப் 14 இன்ச் ஸ்கிரீன், TUV ரெயின்லாந்து சான்று, 12th Gen இண்டெல் கோர் i7 பிராசஸர், 360 டிகிரி டேப்லெட் மோட், ரி-இன்ஃபோர்ஸ் செய்யப்பட்ட கீபோர்டு, வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. எக்ஸ்பர்ட்புக் B9 மாடலில் 12th Gen இண்டெல் கோர் i7 பிராசஸர் ஐரிஸ் Xe கிராஃபிக்ஸ், 32 ஜிபி LPDDR5 5200 ரேம், அதிகபட்சம் ட்வின் 2TB எஸ்எஸ்டி, இண்டெல் வைபை 6 வழங்கப்பட்டுள்ளது.
- ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மேக் மாடல்கள் உருவாக்கப்பட்டு வருவது சமீபத்தில் அம்பலமாகி இருக்கிறது.
- புதிய ஆப்பிள் மேக் சாதனம் M2 மேக்ஸ் பிராசஸர் கொண்டிருக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்பிள் நிறுவனம் முற்றிலும் புதிய அடுத்த தலைமுறை மேக் சாதனங்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. புதிய சாதனங்கள் அடுத்த ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என புளூம்பர்க் வல்லுனரான மார்க் குர்மேன் தெரிவித்து இருந்தார். புது மேக் மாடல்கள் வெளியீடு பற்றி ஆப்பிள் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.
இந்த நிலையில், இதுவரை ஆப்பிள் அறிவிக்காத M2 மேக்ஸ் பிராசஸர் கொண்ட புது மேக் மாடல் விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் இடம்பெற்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கீக்பென்ச் 5 டேட்டாபேசில் வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய மேக் மாடல் "Mac14.6" எனும் பெயர் கொண்டிருக்கிறது. இந்த மாடலில் ஆப்பிள் M2 மேக்ஸ் CPU கொண்டிருக்கும்.

பென்ச்மார்க்கிங் வலைதள விவரங்களின் படி M2 மேக்ஸ் பிராசஸரில் 12-கோர் CPU, 3.54GHz மற்றும் 96 ஜிபி ரேம் கொண்டிருக்கிறது. இந்த சாதனம் சிங்கில் கோரில் 1853 புள்ளிகளையும், மல்டி கோர் டெஸ்டில் 13 ஆயிரத்து 855 புள்ளிகளையும் பெற்று இருக்கிறது. மேக்புக் ப்ரோ மாடலில் உள்ள M1 மேக்ஸ் பிராசஸரில் 10-கோர்கள், 3.2GHz டியூனிங்கில் இயங்குகின்றன. இவை சிங்கில் கோரில் 1746 புள்ளிகளையும், மல்டி கோர் டெஸ்டிங்கில் 12 ஆயிரத்து 154 புள்ளிகளை பெற்று இருக்கிறது.
அந்த வகையில் கீக்பென்ச் முடிவுகளின் படி புதிய M2 மேக்ஸ் பிராசஸர் அதன் முந்தைய வெர்ஷனை விட 14 சதவீதம் வேகமாக இருக்கும் என தெரியவந்துள்ளது. புதிய M2 மேக்ஸ் முந்தைய M1 மேக்ஸ் மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். ஆப்பிள் இந்த ஆண்டு அறிமுகம் செய்த M2 சிப் புதிய மேக்புக் ஏர் மாடல்களில் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த பிராசஸரின் வேகம் மற்றும் செயல்திறன் அசாத்தியமாகவே உள்ளது.
- மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய சர்ஃபேஸ் லேப்டாப் விற்பனையை துவங்கி இருக்கிறது.
- புதிய சர்ஃபேஸ் லேப்டாப் விற்பனை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் விற்பனை மையங்களில் நடைபெற்று வருகிறது.
மைக்ரோசாப்ட் நிறுவனம் கடந்த மாதம் சர்ஃபேஸ் லேப்டாப் 5 மற்றும் சர்ஃபேஸ் ப்ரோ 9 மாடல்களை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. பல்வேறு நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இவற்றின் இந்தியம முன்பதிவு இந்த மாத துவக்கத்தில் துவங்கியது.
தற்போது புதிய லேப்டாப் மாடல்களின் விற்பனை இந்தியாவில் துவங்கி நடைபெற்று வருகிறது. விற்பனை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என அமேசான், ரிலையன்ஸ் டிஜிட்டல், க்ரோமா, விஜய் சேல்ஸ் மற்றும் தேர்வு செய்யப்பட்ட மல்டி-பிராண்டு ரிடெயில் ஸ்டோர்களில் நடைபெற்று வருகிறது.

விலையை பொருத்தவரை சர்ஃபேஸ் லேப்டாப் 5 இந்திய சந்தையில் ரூ. 1 லட்சத்து 07 ஆயிரத்து 999 என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 1 லட்சத்து 88 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. சர்ஃபேஸ் ப்ரோ 9 மாடலின் பேஸ் வேரியண்ட் விலை ரூ. 1 லட்சத்து 05 ஆயிரத்து 999 என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 2 லட்சத்து 69 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
மைக்ரோசாப்ட் சர்ஃபேஸ் ப்ரோ 9 வாங்குவோருக்கு ரூ. 14 ஆயிரத்து 999 மதிப்புள்ள சர்ஃபேஸ் ப்ரோ கீபோர்டு (பிளாக்) இலவசமாக வழங்கப்படுகிறது. சர்ஃபேஸ் லேப்டாப் 5 வாங்குவோருக்கு ரூ. 7 ஆயிரத்து 499 மதிப்புள்ள சர்ஃபேஸ் பாப் ரெட் ஆர்க் மவுஸ் இலவசமாக வழங்கப்படுகிறது.
சர்ஃபேஸ் லேப்டாப் மைடல் 13.3 மற்றும் 15 இன்ச் டிஸ்ப்ளே ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இது 2256x1504 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டுள்ளது. இத்துடன் ஹெச்டி கேமரா, விண்டோஸ் ஹெல்லோ வசதி உள்ளது. மேலும் டால்பி அட்மோஸ் மற்றும் டூயல் ஃபார்-ஃபீல்டு மைக்ரோபோன்களை கொண்ட ஆம்னிசோனிக் ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 12th Gen கோர் i7 பிராசஸர், இண்டெல் ஐரிஸ் X கிராஃபிக்ஸ், 16 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது.
மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் 9 ப்ரோ 2-இன்-1 கன்வெர்டிபில் மாடல் ஆகும். இதில் 13 இன்ச் டச் ஸ்கிரீன், 2880x1920 பிக்சல் ரெசல்யூஷன், 120Hz ரிப்ரெஷ் ரேட், 12th Gen கோர் i5 அல்லது கோர் i7 பிராசஸர், 32 ஜிபி ரேம், 1 டிபி எஸ்எஸ்டி வசதியுடன் கிடைக்கிறது. இவைதவிர மற்ற அம்சங்கள் சர்ஃபேஸ் 9 ப்ரோ மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது.
- வாட்ஸ்அப் செயலியில் ஏற்கனவே சோதனை செய்யப்பட்டு வந்த சூப்பர் அம்சம் தற்போது ஸ்டேபில் வெர்ஷனில் வழங்கப்படுகிறது.
- புது அம்சம் கொணஅடு பயனர்கள் தங்களுக்கு முக்கியமான தகவல்களை வாட்ஸ்அப் செயலியிலேயே குறித்து வைத்துக் கொள்ளலாம்.
வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் கடந்த மாதம் சோதனை செய்யப்பட்டு வந்த மெசேஜ் யுவர்செல்ஃப் (Message Yourself) அம்சம் தற்போது வெளியாகிறது. புதிய 1:1 அம்சம் கொண்டு உங்களுக்கு நீங்களே மெசேஜ் அனுப்பிக் கொள்ள முடியும். இந்த அம்சம் மூலம் குறிப்புகளை உங்களுக்கே அனுப்பிக் கொள்வதோடு, நினைவூட்டிகள் மற்றும் மிக முக்கிய தகவல்களையும் அனுப்பிக் கொள்ளலாம்.
இந்த அம்சம் கொண்டு பயனர்கள் தாங்கள் செய்ய வேண்டிய பணி சார்ந்த விவரங்களை குறித்துக் கொள்ள உதவும். இந்த அம்சத்தில் ஷாப்பிங் செய்ய வேண்டிய பொருட்களின் பட்டியல், ரிமைண்டர் உள்ளிட்டவைகளை குறித்து வைத்துக் கொள்ளலாம். முதற்கட்டமாக இந்த அம்சம் பீட்டா வெர்ஷனில் வழங்கப்பட்ட போது, வாட்ஸ்அப் உங்களின் போன் நம்பருக்கு மெசேஜ் அனுப்பிக் கொள்வதை குறிக்கும் வகையில் தனி கேப்ஷனை வழங்கியது.

மேலும் சிலருக்கு தங்களின் சாட் பாக்ஸ்-இல் சொந்த மொபைல் நம்பர் சிறிது காலத்திற்கு தெரிந்தது. மல்டி டிவைஸ் வசதி இருப்பதால் உங்களது மொபைல் நம்பருக்கு மெசேஜ் அனுப்பிக் கொள்ளும் போது, அந்த மெசேஜ் நீங்கள் சின்க் செய்திருக்கும் மற்ற சாதனங்களிலும் காண்பிக்கப்படும்.
புதிய மெசேஜ் யுவர்செல்ஃப் அம்சத்தை இயக்குவது எப்படி?
வாட்ஸ்அப்-ஐ திறக்கவும்
புதிய சாட்-ஐ உருவாக்க வேண்டும்
பட்டியலில் உங்களின் காண்டாக்ட் முதலில் காண்பிக்கப்படும்
நம்பர் மீது க்ளிக் செய்து மெசேஜ் செய்ய துவங்கலாம்
வாட்ஸ்அப் செயலியில் மெசேஜ் யுவர்செல்ஃப் அம்சம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோனில் வழங்கப்பட்டு வருகிறது. வரும் வாரங்களில் இந்த அம்சம் அனைவருக்கும் வழங்கப்பட்டு விடும். இதுதவிர மெசேஜ்களை எடிட் செய்யும் வசதி, வாய்ஸ் ஸ்டேட்டஸ் அப்டேட் என ஏராளமான புது அம்சங்கள் வாட்ஸ்அப்-இல் வழங்கப்பட இருக்கிறது.
- இன்பினிக்ஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் டிவி மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
- புதிய ஸ்மார்ட் டிவி ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது.
இன்பினிக்ஸ் நிறுவனம் ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து லேப்டாப் மற்றும் ஸ்மார்ட் டிவி என பல்வேறு சாதனங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வரிசையில், தற்போது இன்பினிக்ஸ் 43Y1 ஸ்மார்ட் டிவி மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஸ்மார்ட் டிவி FHD டிஸ்ப்ளே, 20 வாட் டால்பி ஸ்டீரியோ என ஏராளமான அம்சங்களை கொண்டிருக்கிறது. புதிய 43 இன்ச் ஸ்மார்ட் டிவி ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
இன்பினிக்ஸ் Y1 சீரிஸ் குறைந்த விலையில் ஸ்மார்ட் டிவி-க்களை விற்பனை செய்து வருகிறது. முன்னதாக 32 இன்ச் மாடல் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது 43 இன்ச் மாடல் அறிமுகமாகி இருக்கிறது. புதிய இன்பினிக்ஸ் 43Y1 ஸ்மார்ட் டிவி விலை ரூ. 13 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது இந்திய சந்தையில் கிடைக்கும் குறைந்த விலை ஸ்மார்ட் டிவி மாடல்களில் ஒன்றாகும்.

இன்பினிக்ஸ் 43Y1 அம்சங்கள்:
43- இன்ச் எல்இடி ஸ்கிரீன், 300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், FHD ரெசல்யூஷன்
குவாட் கோர் பிராசஸர்
4 ஜிபி ரேம்
அமேசான் பிரைம் வீடியோ
யூடியூப், நெட்ஃப்ளிக்ஸ்
ஸ்டீரியோ சவுண்ட் சிஸ்டம்
20 வாட் டால்பி ஸ்டீரியோ
யூடியூப், பிரைம் வீடியோ ஹாட் கீ கொண்ட ரிமோட்
ஸ்கிரீன் மிரரிங் வசதி
2x HDMI போர்ட்
1 ARC சப்போர்ட்
2x USB போர்ட்கள், 1 RF இன்புட்
ஹெட்போன் ஜாக், 1 COAX அவுட்
LAN, ப்ளூடூத் மற்றும் வை-பை
- வாட்ஸ்அப் செயலியில் பல்வேறு புது அம்சங்கள் வழங்குவதற்கான சோதனைகள் அதன் பீட்டா வெர்ஷனில் நடைபெற்று வருகிறது.
- சமீபத்தில் தான் வாட்ஸ்அப் செயலியில் கம்யுனிடிஸ் பெயரில் புது அம்சம் வழங்கப்பட்டு இருந்தது.
வாட்ஸ்அப் நிறுவனம் தனது மெசேஜிங் செயலியில் ஏராளமான புது அம்சங்களை வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. புது அம்சங்கள் செயலியின் ஸ்டேபில் வெர்ஷனில் வழங்கப்படும் முன்பே பீட்டா வெர்ஷனில் சோதனை முயற்சியாக வழங்கப்பட்டு விடும். அந்த வகையில் வாட்ஸ்அப் ஐஒஎஸ் பீட்டா வெர்ஷனில் புது அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதுபற்றிய தகவல்களை WABetaInfo வெளியிட்டு இருக்கிறது. இதில் புது அம்சம் எப்படி காட்சியளிக்கும் என்ற ஸ்கிரீன்ஷாட் இடம்பெற்று இருக்கிறது. அதன்படி பயனர்கள் அதிகபட்சம் 30 நொடிகள் கொண்ட வாய்ஸ் ஸ்டேட்டஸ்களை பதிவிட முடியும் என தெரியவந்துள்ளது. மற்றவர்கள் திரையின் கீழ்புறம் வலதுபக்கமாக இருக்கும் மைக்ரோபோன் ஐகானை க்ளிக் செய்து வாய்ஸ் ஸ்டேட்டஸ்களை பார்க்க முடியும்.

இதுவரை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பாரில் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் மட்டுமே இடம்பெற்று இருந்தது. தற்போது வாய்ஸ் ஸ்டேட்டஸ் இந்த பட்டியலில் புதிதாக இணைய இருக்கிறது. தற்போது பீட்டா வெர்ஷனில் இந்த அம்சம் தேர்வு செய்யப்பட்ட சில பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது. வழக்கமான ஸ்டேட்டஸ்கள் 24 மணி நேரத்திற்கு மட்டுமே காண்பிக்கும். இதே போன்ற நிலையை புதிய வாய்ஸ் ஸ்டேட்டஸ்-இலும் தொடரும் என எதிர்பார்க்கலாம்.
முன்னதாக இதே அம்சம் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.22.21.5 வெர்ஷனில் வழங்கப்பட்டு இருந்தது. இது மட்டுமின்றி வாட்ஸ்அப் நிறுவனம் மேலும் சில அம்சங்களை வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. எனினும், இவை எப்போது செயலியின் ஸ்டேபில் வெர்ஷனில் வழங்கப்படும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
Photo Courtesy: WABetaInfo
- வோடபோன் ஐடியா நிறுவனம் புதிய IR ரோமிங் சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
- புது சலுகைகள் உலக கோப்பை கால்பந்து தொடரை ஒட்டி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
வோடபோன் ஐடியா நிறுவனம் புதிதாக நான்கு சர்வதேச ரோமிங் சலுகைகளை அறிவித்து இருக்கிறது. கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடரை காண செல்லும் வாடிக்கைாயளர்களுக்காக புது சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேம்பட்ட சர்வதேச ரோமிங் சலுகைகளின் கீழ், ஏழு நாட்கள் துவங்கி அதிகபட்சம் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன.
அதன்படி வோடபோன் ஐடியா ரூ. 2 ஆயிரத்து 999 விலை சர்வதேச ரோமிங் சலுகையில் 2 ஜிபி டேட்டா, 200 நிமிடங்களுக்கு வாய்ஸ் கால், இலவச இன்கமிங் அழைப்புகள் வழங்கப்படுகறது. இத்துடன் அவுட்கோயிங் அழைப்புகள் நிமிடத்திற்கு ரூ. 35 கட்டணத்திலும், 25 எஸ்எம்எஸ் உள்ளிட்டவைகளை ஏழு நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது.

வோடபோன் ஐடியா ரூ. 3 ஆயிரத்து 999 சலுகையில் 3 ஜிபி டேட்டா, 300 நிமிடங்களுக்கு உள்ளூர் மற்றும் இந்தியாவுக்கு அவுட்கோயிங் அழைப்புகள், இலவச இன்கமிங் அழைப்புகள் வழங்கப்படுகின்றன. இந்த லுகையிலும் அழைப்புகள் நொடிக்கு ரூ. 35, 50 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பலன்களை பத்து நாட்களுக்கு வழங்குகிறது.
ரூ. 4 ஆயிரத்து 499 விலை கொண்ட வோடபோன் ஐடியா சலுகையில் 5 ஜிபி டேட்டா, 500 நிமிடங்களுக்கு உள்ளூர் மற்றும் இந்தியாவுக்கான அவுட்கோயிங் அழைப்புகள் மற்றும் இன்கமிங் அழைப்புகள் வழங்கப்படுகிறது. இதில் அவுட்கோயிங் அழைப்புகள் நிமிடத்திற்கு ரூ. 35, 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை 14 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
வோடபோன் ஐடியா ரூ. 5 ஆயிரத்து 999 சலுகையில் 500 நிமிடங்களுக்கு உள்ளூர் மற்றும் இந்தியாவுக்கான அவுட்கோயிங் அழைப்புகள் மற்றும் இலவச இன்கமிங் அழைப்புகள் வழங்கப்படுகிறது. இதிலும் நொடிக்கு ரூ. 35 விலையில் அவுட்கோயிங் அழைப்புகள், 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. முன்னதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் கால்பந்து உலக கோப்பை தொடருக்காக இதே போன்ற ரோமிங் சலுகைகளை அறிவித்து இருந்தது.
- ஃபயர் போல்ட் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது.
- பெயருக்கு ஏற்றார் போல் புதிய ஸ்மார்ட்வாட்ச் ப்ளூடூத் காலிங் வசதியுடன், ஏராளமான அம்சங்களை கொண்டிருக்கிறது.
ஃபயர் போல்ட் நிறுவனம் தனது அணியக்கூடிய சாதனங்கள் பிரிவில் புதிதாக "நின்ஜா கால் ப்ரோ பிளஸ்" பெயர் கொண்ட ஸ்மார்ட்வாட்ச்-ஐ அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஃபயர் போல்ட் நின்ஜா கால் ப்ரோ பிளஸ் மாடலில் 1.83 இன்ச் டிஸ்ப்ளே, ப்ளூடூத் காலிங், 100-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள், அதிகபட்சம் ஆறு நாட்களுக்கான பேட்டரி லைஃப் போன்ற அம்சங்கள் உள்ளன.
இத்துடன் மேம்பட்ட அளவில் உடல் ஆரோக்கியம் பற்றிய விவரங்களை டிராக் செய்யும் வசதி கொண்டுள்ளது. இதில் SpO2, இதய துடிப்பு மற்றும் ஸ்லீப் மாணிட்டரிங் வசதி உள்ளது. வியர்வை, நீர் மற்றும் டஸட் ப்ரூஃப் வழங்கும் வகையில் இந்த ஸ்மார்ட்வாட்ச் IP67 ரேட்டிங் கொண்டிருக்கிறது. மேலும் வானிலை நோட்டிஃபிகேஷன்களை வழங்குகிறது.

இதில் AI சார்ந்து இயங்கும் வாய்ஸ் அசிஸ்டண்ட், பில்ட்-இன் கேம்ஸ், ஆறு நாட்களுக்கு பேட்டரி லைஃப் வழங்குகிறது. இத்துடன் 15 நாட்களுக்கு ஸ்டாண்ட்-பை பேட்டரி லைஃப் கொண்டுள்ளது.
ஃபயர் போல்ட் நின்ஜா கால் ப்ரோ பிளஸ் அம்சங்கள்:
1.83 இன்ச் 240x280 பிக்சல் LCD ஸ்கிரீன்
100-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள்
இதய துடிப்பு, SpO2 மற்றும் ஸ்லீப் மாணிட்டரிங்
ஆக்டிவிட்டி டிராக்கர், கலோரி டிராக்கர்
ப்ளூடூத் காலிங் வசதி
பில்ட்-இன் மைக் மற்றும் ஸ்பீக்கர்
IP67 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட்
ஸ்மார்ட் நோட்டிஃபிகேஷன், வாய்ஸ் அசிஸ்டண்ட்
கேம்ஸ், ஃபைண்ட் மோட், கேமரா கண்ட்ரோல்
மியூசிக் பிளேயர், அலாரம்
அதிகபட்சம் ஆறு நாட்களுக்கு பேட்டரி லைஃப்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
ஃபயர் போல்ட் நின்ஜா கால் ப்ரோ பிளஸ் மாடல் பிளாக், கோல்டு பிளாக், பின்க், கிரே மற்றும் நேவி புளூ நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் விலை அறிமுக சலுகையாக ரூ. 1,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை அமேசான் மற்றும் ஃபயர் போல்ட் அதிகாரப்பூர்வ வலைதளங்களில் நடைபெற்று வருகிறது.
- இந்திய டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனங்கள் 5ஜி சேவையை வெளியிடும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.
- நாட்டின் பல்வேறு நகரங்களில் 5ஜி சேவையை வழங்கப்பட்டு விட்டதாக நிறுவனங்கள் தினந்தோரும் அறிவித்து வருகின்றன.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பூனேவில் 5ஜி சேவைகள் வழங்கப்பட்டதாக அறிவித்து இருக்கிறது. இந்த பகுதியில் 5ஜி சேவை வழங்கிய முதல் நிறுவனம் ஜியோ தான் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. நகரின் பெரும்பாலான பகுதிகளில் ஸ்டாண்ட்அலோன் ட்ரூ 5ஜி நெட்வொர்க் கிடைத்தால் மட்டுமே ட்ரூ 5ஜி நெட்வொர்க்கில் பீட்டா டெஸ்டிங் துவங்கப்படுகிறது என்றும் ரிலையன்ஸ் ஜியோ தெரிவித்துள்ளது.
முன்னதாக டெல்லி-NCR பகுதிகளான- டெல்லி, குருகிராம், நொய்டா, காசியாபாத், ஃபரிதாபாத் உள்ளிட்ட பகுதிகளில் 5ஜி சேவைகள் வழங்கப்பட்டன. இவை மட்டுமின்றி பெங்களூரு, ஐதராபாத் நகரங்களிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே மும்பை, டெல்லி, கொல்கத்தா, வாரனாசி மற்றும் சென்னை போன்ற நகரங்களில் கடந்த மாதம் ஜியோ 5ஜி சேவைகள் வழங்கப்பட்டன.

பூனே அதிக மாணவர்கள் வசிக்கும் பகுதியாக திகழ்கிறது. இதோடு முன்னணி தகவல் தொழில்நுட்ப பகுதியாகவும் விளங்குகிறது. இந்தியாவில் ஆட்டோமொபைல் உற்பத்தியின் பெரும்பாலான பகுதிகள் பூனே சுற்றுவட்டார பகுதிகளிலேயே நடைபெறுகிறது. அந்த வகையில், ஜியோ 5ஜி வெளியீடு இந்த பகுதிவாசிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
சேவைகள் வழங்கப்பட்டதை அடுத்து பூனேவில் வசிக்கும் ஜியோ பயனர்கள் ஜியோ வெல்கம் ஆஃபருக்கு இன்வைட் செய்யப்படுவர். இந்த திட்டத்தின் கீழ் பயனர்கள் அதிகபட்சம் 1Gbps+ வேகத்தில் மொபைல் டேட்டா பயன்படுத்த முடியும். இதற்கு எந்த விதமான கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படவில்லை.
- வு நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் எல்இடி டிவி இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
- புதிய ஸ்மார்ட் டிவியில் இன்பில்ட் 84 வாட் ஸ்பீக்கர், டிஜெ கிலாஸ் சப்வூஃபர் உள்ளது.
வு நிறுவனம் GloLED 43 இன்ச் 4K டிவியை இந்தியாவில் அறிமுகம் செய்து இருக்கிறது. முன்னதாக செப்டம்பர் மாத வாக்கில் வு GloLED 50 இன்ச், 55 இன்ச் மற்றும் 65 இன்ச் 4K டிவி மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது 43 இன்ச் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
புதிய 43 இன்ச் 4K டிவி-யில் 84 வாட் சவுண்ட் அவுட்-புட், இன்-பில்ட் டிஜெ கிலாஸ் சப்வூஃபர் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த டிவி-யின் வால்யூம் 100-இல் வைக்கப்பட்டாலும் டிவி வைப்ரேட் அல்லது கிராக் ஆகாது என வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் உள்ள Glo பேனல் மற்றும் Glo A.I. பிராசஸர் பிரைட்னஸ் அளவை 60 சதவீதம் அதிகரித்து, மின் பயன்பாட்டை குறைக்கும்.

வு Glo AI பிராசஸர் OTT தரவுகளை மேம்பட்ட AI தொழில்நுட்பத்தில் அப்-ஸ்கேல் செய்து ஃபுல் கலர் கமுட் வழங்குகிறது. மேலும் மேம்பட்ட கிரிகெட் மோட் 100 சதவீதம் பால் விசிபிலிட்டி மற்றும் லைவ் ஸ்டேடியம் எக்ஸ்பீரியன்ஸ், டால்பி அட்மோஸ் விர்ச்சுவலைசேஷன் போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது.
ஃபிரேம்லெஸ் டிசைன் கொண்டிருக்கும் வு GloLED டிவி வியூவிங் ஏரியாவை அதிகப்படுத்துகிறது. இதில் உள்ள டிஜெ சப்வூஃபர் டிவி-யின் ஃபிரேமிற்குள் கச்சிதமாக பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
வு GloLED டிவி அம்சங்கள்:
43 இன்ச் 3840x2160 பிக்சல் 4K LED டிஸ்ப்ளே
குவாட் கோர் பிராசஸர்
டூயல் கோர் GPU
2 ஜிபி ரேம்
16 ஜிபி மெமரி
கூகுள் டிவி
OTT ஹாட்கீ கொண்ட ரிமோட்
வை-ஃபை, ப்ளூடூத் 5.0
84 வாட் அவுட்புட் கொண்ட ஸ்பீக்கர்கள்
டால்பி ஆடியோ, டால்பி அட்மோஸ் விர்ச்சுவலைசேஷன்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
புதிய வு GloLED 43 இன்ச் 4K டிவி விலை ரூ. 29 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் நவம்பர் 27 ஆம் தேதி துவங்குகிறது.






