search icon
என் மலர்tooltip icon

    கணினி

    சர்ஃபேஸ் லேப்டாப் 5 இந்திய விற்பனை துவக்கம் - மைக்ரோசாப்ட் அசத்தல்!
    X

    சர்ஃபேஸ் லேப்டாப் 5 இந்திய விற்பனை துவக்கம் - மைக்ரோசாப்ட் அசத்தல்!

    • மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய சர்ஃபேஸ் லேப்டாப் விற்பனையை துவங்கி இருக்கிறது.
    • புதிய சர்ஃபேஸ் லேப்டாப் விற்பனை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் விற்பனை மையங்களில் நடைபெற்று வருகிறது.

    மைக்ரோசாப்ட் நிறுவனம் கடந்த மாதம் சர்ஃபேஸ் லேப்டாப் 5 மற்றும் சர்ஃபேஸ் ப்ரோ 9 மாடல்களை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. பல்வேறு நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இவற்றின் இந்தியம முன்பதிவு இந்த மாத துவக்கத்தில் துவங்கியது.

    தற்போது புதிய லேப்டாப் மாடல்களின் விற்பனை இந்தியாவில் துவங்கி நடைபெற்று வருகிறது. விற்பனை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என அமேசான், ரிலையன்ஸ் டிஜிட்டல், க்ரோமா, விஜய் சேல்ஸ் மற்றும் தேர்வு செய்யப்பட்ட மல்டி-பிராண்டு ரிடெயில் ஸ்டோர்களில் நடைபெற்று வருகிறது.

    விலையை பொருத்தவரை சர்ஃபேஸ் லேப்டாப் 5 இந்திய சந்தையில் ரூ. 1 லட்சத்து 07 ஆயிரத்து 999 என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 1 லட்சத்து 88 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. சர்ஃபேஸ் ப்ரோ 9 மாடலின் பேஸ் வேரியண்ட் விலை ரூ. 1 லட்சத்து 05 ஆயிரத்து 999 என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 2 லட்சத்து 69 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    மைக்ரோசாப்ட் சர்ஃபேஸ் ப்ரோ 9 வாங்குவோருக்கு ரூ. 14 ஆயிரத்து 999 மதிப்புள்ள சர்ஃபேஸ் ப்ரோ கீபோர்டு (பிளாக்) இலவசமாக வழங்கப்படுகிறது. சர்ஃபேஸ் லேப்டாப் 5 வாங்குவோருக்கு ரூ. 7 ஆயிரத்து 499 மதிப்புள்ள சர்ஃபேஸ் பாப் ரெட் ஆர்க் மவுஸ் இலவசமாக வழங்கப்படுகிறது.

    சர்ஃபேஸ் லேப்டாப் மைடல் 13.3 மற்றும் 15 இன்ச் டிஸ்ப்ளே ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இது 2256x1504 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டுள்ளது. இத்துடன் ஹெச்டி கேமரா, விண்டோஸ் ஹெல்லோ வசதி உள்ளது. மேலும் டால்பி அட்மோஸ் மற்றும் டூயல் ஃபார்-ஃபீல்டு மைக்ரோபோன்களை கொண்ட ஆம்னிசோனிக் ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 12th Gen கோர் i7 பிராசஸர், இண்டெல் ஐரிஸ் X கிராஃபிக்ஸ், 16 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது.

    மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் 9 ப்ரோ 2-இன்-1 கன்வெர்டிபில் மாடல் ஆகும். இதில் 13 இன்ச் டச் ஸ்கிரீன், 2880x1920 பிக்சல் ரெசல்யூஷன், 120Hz ரிப்ரெஷ் ரேட், 12th Gen கோர் i5 அல்லது கோர் i7 பிராசஸர், 32 ஜிபி ரேம், 1 டிபி எஸ்எஸ்டி வசதியுடன் கிடைக்கிறது. இவைதவிர மற்ற அம்சங்கள் சர்ஃபேஸ் 9 ப்ரோ மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது.

    Next Story
    ×