என் மலர்

  கணினி

  இந்திய ஸ்மார்ட் டிவி சந்தையில் முன்னணி இடத்தை தட்டித்தூக்கிய சியோமி!
  X

  இந்திய ஸ்மார்ட் டிவி சந்தையில் முன்னணி இடத்தை தட்டித்தூக்கிய சியோமி!

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இந்திய ஸ்மார்ட் டிவி சந்தையில் விற்பனை நிலவரம் பற்றிய புது அறிக்கை வெளியாகி இருக்கிறது.
  • இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டு நிலவரப்பிடி இந்தியாவில் ஸ்மார்ட் டிவி விற்பனை குறித்த விவரங்கள் அதில் இடம்பெற்றுள்ளது.

  2021 ஆண்டின் மூன்றாவது காலாண்டுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் இந்திய ஸ்மார்ட் டிவி சந்தை கணிசமான வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது. இந்த காலக்கட்டத்தில் சியோமி நிறுவனம் மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது வளர்ச்சியை பெற்றுள்ளது.

  கவுண்ட்டர்பாயிண்ட் ரிசர்ச் வெளியிட்டு இருக்கும் சமீபத்திய அறிக்கையின் படி, 2022 மூன்றாவது காலாண்டில் சியோமி நிறுவனம் இந்திய ஸ்மார்ட் டிவி சந்தையில் தொடர்ந்து முன்னணியில் நீடிக்கிறது. இந்திய ஸ்மார்ட் டிவி சந்தையில் சியோமி நிறுவனம் 11 சதவீத பங்குகளை பெற்று இருக்கிறது. சியோமி நிறுவன சாதனங்களில் 4K டிஸ்ப்ளே மற்றும் டால்பி ஆடியோ & விஷன் கொண்ட மாடல்களின் விற்பனை அதிகரித்து இருக்கிறது.

  சியோமியின் பேட்ச்வால் மென்பொருள் தற்போது 300-க்கும் அதிக லைவ் சேனல்களை வழங்குகிறது. இதன் மூலம் சியோமி Mi 4A ஹாரிசான் எடிஷன், 5A சீரிஸ் மற்றும் ரெட்மி ஸ்மார்ட் டிவி சீரிஸ் விற்பனையும் கணிசமாக அதிகரித்து இருக்கிறது. இந்த காலாண்டில் ஒட்டுமொத்தமாக இந்திய ஸ்மார்ட் டிவி சந்தை 38 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இதில் வெளிநாட்டு நிறுவனங்கள் ஆதிக்கம் தொடர்ந்து நீடிக்கிறது.

  இந்திய ஸ்மார்ட் டிவி சந்தையில் வெளிநாட்டு நிறுவனங்களின் பங்கு 40 சதவீதமாக உள்ளது. இவற்றை தொடர்ந்து சீன நிறுவனங்கள் 38 சதவீத பங்குகளை பெற்றுள்ளன. இறுதியில் இந்திய நிறுவனங்கள் 22 சதவீத விற்பனையை பதிவு செய்துள்ளன. எனினும், இந்த காலாண்டில் பங்குகள் இருமடங்கு அதிகரித்துள்ளன.

  Next Story
  ×