என் மலர்
கணினி
- வாட்ஸ்அப் செயிலியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட புது வசதி தற்போது வெளியிடப்பட்டு வருகிறது.
- முன்னதாக இந்த அம்சம் வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் சிறிது காலம் சோதனை செய்யப்பட்டு வந்தது.
வாட்ஸ்அப் பீட்டா v2.22.18.13 வெர்ஷனில் இருந்தே அழிக்கப்பட்ட குறுந்தகவல்களை மீட்க செய்யும் வசதியை வாட்ஸ்அப் சோதனை செய்து வருகிறது. தற்போது இந்த அம்சம் "Accidental Delete" எனும் பெயரில் வாட்ஸ்அப் ஸ்டேபில் வெர்ஷன்களில் வழங்கப்பட்டு வருகிறது. வாட்ஸ்அப் செயலியின் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் வெர்ஷன்களில் இந்த அம்சம் வழங்கப்பட்டு வருகிறது.

நீண்ட காலமாக அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அம்சம், ஏற்கனவே "delete for me" ஆப்ஷனை தேர்வு செய்யும் போது, நீங்கள் அழித்த குறுந்தகவல் அனுப்பியவருக்கு தெரியும் வகையில் வழங்கப்பட்டு இருந்தது. "delete for everyone" அம்சம் அனுப்பியவருக்கும், அதனை பெற்றவருக்கும் குறுந்தகவலை அழித்து விடும். இவை தவிர குறுந்தகவல்களை அழிக்க வாட்ஸ்அப் வேறு எந்த வசதியையும் வழங்கவில்லை. இதன் காரணமாக க்ரூப்களில் குறுந்தகவல் அனுப்பியவருக்கு சங்கடமாக இருந்து வந்தது.
தற்போது புது அப்டேட் மூலம், "delete for me" ஆப்ஷனை க்ளிக் செய்தால், அழிக்கப்பட்ட குறுந்தகவல்களை Undo செய்யலாம். குறுந்தகவலை "delete for me" ஆப்ஷன் மூலம் அழித்து இருந்தால், வாட்ஸ்அப் திரையின் கீழ்புறம் உள்ள undo ஆப்ஷன் மூலம் அதனை திரும்ப பெற முடியும். இந்த வழிமுறையை மேற்கொள்ள ஐந்து நொடிகள் வரை வழங்கப்படும். இந்த அம்சம் சீராக இயங்க குறுந்தகவல் அனுப்பியவர் மற்றும், அதனை பெற்றவர் வாட்ஸ்அப்-இன் புது வெர்ஷனை பயன்படுத்த வேண்டும்.
- ஆப்பிள் நிறுவனம் உருவாக்கி வரும் புது மாணிட்டர்கள் பற்றிய புது தகவல் வெளியாகி உள்ளது.
- இந்த ஆண்டு துவக்கத்தில் ஆப்பிள் ஸ்டூடியோ டிஸ்ப்ளே மாடலை அறிமுகம் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆப்பிள் நிறுவனம் ப்ரோ டிஸ்ப்ளே XDR மாடலை சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்து இருந்தது. ஆப்பிள் தண்டர்போல்ட் டிஸ்ப்ளே நிறுத்தப்பட்ட பின் அறிமுகமான முதல் உயர் ரக ஃபிலாட் டிஸ்ப்ளே கொண்ட மாணிட்டர் என்ற பெருமையை XDR பெற்று இருந்தது.
பின் இந்த ஆண்டு துவக்கத்தில் ஆப்பிள் ஸ்டூடியோ டிஸ்ப்ளே அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது ஆப்பிள் வல்லுனரான மார்க் குர்மன் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் பல்வேறு புது மாணிட்டர்களை உருவாக்கி வருவதாக தெரிவித்து இருக்கிறார். இதில் மேம்பட்ட ப்ரோ டிஸ்ப்ளே XDR மாடல், புதிய எக்ஸ்டர்னல் மாணிட்டர்கள் அடங்கும் என கூறப்படுகிறது. புதிய மாணிட்டர்கள் ஆப்பிள் சிலிகான் பிராசஸர்களை கொண்டிருக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது ஸ்டூடியோ டிஸ்ப்ளே மாடலில் ஆப்பிள் ஏ13 பயோனிக் சிப் வழங்கப்பட்டு இருப்பதை போன்றே புது மாடல்களில் சக்திவாய்ந்த சிலிகான் பிராசஸர்கள் வழங்கப்பட இருக்கின்றன. தற்போது புதிய டிஸ்ப்ளேக்கள் பற்றி அதிக விவரங்கள் வெளியாகவில்லை. மேலும் ஆப்பிள் நிறுவனத்தின் எக்ஸ்டர்னல் டிஸ்ப்ளேக்கள் எப்போது வெளியாகும் என்பது பற்றிய தகவல்களும் மர்மமாகவே உள்ளன.
முந்தைய தகவல்களின் படி ஆப்பிள் நிறுவனம் புதிதாக 27 இன்ச் அளவில் மினி எல்இடி டிஸ்ப்ளேவை அடுத்த ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. எனினும், இந்த மாடல் பற்றிய விவரங்களும் மர்மமாகவே உள்ளன. இந்த மாணிட்டர் ப்ரோமோஷன் போன்ற அம்சங்களுடன் புதிய ஸ்டூடியோ டிஸ்ப்ளேவாக இருக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
- வாட்ஸ்அப் செயலியின் ஐபோன் வெர்ஷனில் ஏராள மாற்றங்கள் அடங்கிய அப்டேட் வெளியிடப்பட்டு இருக்கிறது.
- தற்போது புது அம்சங்கள் வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் சோதனை செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
உலகின் முன்னணி குறுந்தகவல் செயலியான வாட்ஸ்அப், ஐபோனில் புது மாற்றங்களை பெற இருக்கிறது. அதன்படி ஐபோனிற்கான வாட்ஸ்அப் செயலியில் PiP மோட் சோதனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய அம்சம் வாட்ஸ்அப் ஐஒஎஸ் பீட்டா வெர்ஷனில் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த அம்சம் மூலம் பயனர்கள் வீடியோ கால் பேசிக் கொண்டே மற்ற செயலிகளை தொடர்ந்து பயன்படுத்த வழி செய்கிறது.
தற்போது வீடியோ கால் பேசும் போதே வாட்ஸ்அப் மற்ற செயலிகளை பயன்படுத்த வழி செய்கிறது. எனினும், இவ்வாறு செய்யும் போது வாட்ஸ்அப் செயலிக்கான கேமரா அக்சஸ் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு விடும். இதன் காரணமாக பயனர்கள் மற்ற சேவைகளை பயன்படுத்த துவங்கும் போது வீடியோவை பார்க்க முடியாது. எனினும், புது அம்சம் மூலம் இந்த நிலை விரைவில் மாறும் நிலை வந்துள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் சொந்த ஃபேஸ் டைம் வீடியோ காலிங் மற்றும் கான்ஃபெரன்சிங் செயலிகள் ஐஒஎஸ்-இல் இயங்குவதை போன்றே வாட்ஸ்அப் செயலியிலும் இயங்கும். ஏற்கனவே கான்ஃபெரன்சிங் செயலி வீடியோ கால் பேசும் போதே PiP மோட் மூலம் மற்ற செயலிகளை பயன்படுத்த வழி செய்கிறது.
தற்போது வாட்ஸ்அப் செயலியில் இந்த அம்சம் வழங்கப்படுவதோடு, லின்க் மூலம் க்ரூப் கால்களில் இணைந்து கொள்ளும் வசதி, வீடியோ கால் பேசும் போது 32 பேரை இணைத்துக் கொள்வது மற்றும் வீடியோ காலில் யாரையாவது மியூட் அல்லது மற்றவருக்கு மெசேஜ் அனுப்புவது உள்ளிட்டவைகளை மேற்கொள்ளலாம். PiP மோடில் வீடியோ கால் அம்சம் மேலும் மேம்படுத்தப்படும் என தெரிகிறது.
எனினும், தற்போது இந்த அம்சங்கள் அனைத்தும் பீட்டா வெர்ஷனிலேயே வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில், வாட்ஸ்அப் ஸ்டேபில் வெர்ஷனில் இவை கிடைக்க மேலும் சில காலம் ஆகலாம். வெளியாகும் போதே புது அம்சங்கள் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் வெர்ஷன்களில் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.
- விங்ஸ் நிறுவனத்தின் புதிய கேமிங் ஹெட்போன் டூயல் பேரிங் வசதி, லோ-லேடன்சி மற்றும் பிரத்யேக கேமிங் மோட்களை கொண்டிருக்கிறது.
- இந்த கேமிங் ஹெட்போனில் நாய்ஸ் கேன்சலேஷன் வசதியை வழங்க ENC மைக், வாய்ஸ் அசிஸ்டண்ட் போன்ற அம்சங்கள் உள்ளன.
விங்ஸ் ஃபேண்டம் 110 நெக்பேண்ட் ஹெட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. விங்ஸ் ஃபேண்டம் 200 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் வெளியீட்டை தொடர்ந்து புதிய நெக்பேண்ட் ஹெட்போன் அறிமுகமாகி இருக்கிறது. இந்த ஹெட்போன் 20 மணி நேர பேட்டரி பேக்கப் வழங்கும் திறன் கொண்டிருக்கிறது. ஃபேண்டம் 110 மாடலில் அல்ட்ரா லோ லேடன்சி அதிகபட்சம் 50ms மற்றும் பிரத்யேக கேமிங் மோட், ஜீரோ ஆடியோ லேக் வசதி உள்ளது.
இதில் உள்ள அதிநவீன ப்ளூடூத் 5.3 சிப் டூயல் பேரிங் வசதி, ஸ்பீடு சின்க் ஹை-ஸ்பீடு கனெக்டிவிட்டி போன்ற வசதிகளை வழங்குகிறது. இது இரு சாதனங்கள் இடையே விரைவில் ஸ்விட்ச் செய்வதை வேகமாக செய்து முடிக்கிறது. அதிவேக கனெக்ஷன் மற்றும் மிக குறைந்த லேடன்சி மட்டுமின்றி புதிய ஃபேண்டம் 110 மாடலில் 13mm டிரைவர்கள் உள்ளன. இவை தலைசிறந்த ஆடியோ மற்றும் சிறப்பான பேஸ் அனுபவத்தை வழங்குகின்றன.

மேலும் பாஸ் பூஸ்ட் மோட் மூலம் சிறப்பான ஆடியோ அனுபவம் பெற ஹை பேஸ் மோடிற்கு மாறிக் கொள்ளும் வசதி உள்ளது. இதன் ஸ்டெம் பகுதியில் உள்ள டேக்டிக்கல் பட்டன்கள் ஆடியோ கண்ட்ரோல் ஆப்ஷன்களை வழங்குகின்றன. இதோடு ஸ்டெம் பகுதியில் ENC மைக் உள்ளது. இது நாய்ஸ் கேன்சலேஷன் வசதியை வழங்குகிறது. இதில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 20 மணி நேரத்திற்கு பேக்கப் பெறலாம்.
இதில் உள்ள டைப் சி போர்ட் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம், ஹெட்போனை 15 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் ஏழு மணி நேரத்திற்கு பயன்படுத்தும் வசதியை வழங்குகிறது. ஃபேண்டம் 110 ப்ளூடூத் நெக்பேண்ட் ஹெட்போன் மென்மையான, சருமத்திற்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாத, வியர்வைகளால் பாதிக்காமல் இருக்கும் சிலிகான் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இது நாள் முழுக்க பயன்படுத்தினாலும் எவ்வித அசௌகரியத்தையும் ஏற்படுத்தாது.
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
இந்திய சந்தையில் புதிய விங்ஸ் ஃபேண்டம் 110 நெக்பேண்ட் ஹெட்போன் ரூ. 699 எனும் சிறப்பு விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த ஹெட்போன் நான்கு வித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விற்பனை நெக்பேண்ட் வலைதளம், ப்ளிப்கார்ட் மற்று் அமேசான் தளங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.
- ஜெபிஎல் நிறுவனம் இந்திய சந்தை விற்பனையில் புது மைல்கல் எட்டியதாக அறிவித்து இருக்கிறது.
- ஹார்மன் இண்டர்நேஷனல் குழுமத்தின் அங்கமாக செயல்பட்டு வரும் ஜெபிஎல் பிராண்டு ஏராளமான சாதனங்களை விற்பனை செய்து வருகிறது.
சாம்சங் எலெக்டிரானிக்ஸ் கோ லிமிடெட் அங்கம் ஹார்மண் இண்டர்நேஷனல் ஆட்டோமோடிவ், நுகர்வோர் மற்றும் தொழில்துறை செயலிகள், கனெக்டெட் தொழில்நுட்பங்கள் பிரிவில் கவனம் செலுத்தி வருகிறது. வளர்ந்து வரும் ஹெட்போன் சந்தையில், அதிக தரமுள்ள ஆடியோ சாதனங்கள் துறையில் சிறப்பாக செயல்பட்டதோடு, வாடிக்கையாளர் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ததன் அங்கமாக ஜெபிஎல் பிராண்டு 20 கோடி ஹெட்போன்களை விற்பனை செய்து இருக்கிறது.
ஆடியோ பிரிவில் ஒவ்வொருத்தரின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற குறிக்கோளுடன் கடந்த தசாப்தத்தை கடந்து வந்துள்ளதாக ஜெபிஎல் தெரிவித்து இருக்கிறது. 2020 முதல் ஹெட்போன்களுக்கான தட்டுப்பாடு தொடர்ந்து அதிகரிக்க துவங்கியது. பெருந்தொற்று காரணமாக ஹெச்டி மியூசிக் ஸ்டிரீமிங், இன்-கேம் மியூசிக், பாட்காஸ்ட், வீட்டில் இருந்தே பணியாற்றும் முறை என வாழ்க்கை முறை முழுவதும் வீட்டை சார்ந்தே மாறி போயின.

இதன் காரணமாக தற்போதில் இருந்து 2028-க்குள் ஹெட்போன் சந்தையில் 17.6 சதவீதம் வளர்ச்சி ஏற்படும் என கணிக்கப்பட்டு இருக்கிறது. இது ஜெபிஎல் முடிவுகளிலும் எதிரொலிக்கும். இரண்டாவது காலாண்டு வாக்கில் சர்வதேச ஜெபிஎல் நிறுவனம் முன்னிலையில் இருந்தது. இதன்படி ஆப்பிளுக்கு அடுத்த இடத்தில் ஜெபிஎல் முன்னணி ஆடியோ பிராண்டாக உள்ளது. சமீபத்தில் தான் ஜெபிஎல் டியூன் ஃபிளெக்ஸ் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
தலைசிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்க செய்வதில் கவனம் செலுத்திய நிறுவனங்களில் முதன்மையானதாக ஜெபிஎல் இருக்கிறது. ஜெபிஎல் பிராண்டு ஹெட்போன்கள் வாடிக்கையாளர் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. இந்த ஹெட்போன்கள் பலதரப்பட்ட பயனர்களுக்கும் சிறப்பான தேர்வாக அமைந்தது.
- ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் மாடல்களில் 5ஜி வசதியை வழங்குவதற்கான பீட்டா டெஸ்டிங்கை மேற்கொண்டு வந்தது.
- தற்போது ஐஒஎஸ் 16.2 மற்றும் ஐபேட் ஒஎஸ் 16.2 வெர்ஷன்களை ஆப்பிள் வெளியிட துவங்கி இருக்கிறது.
ஆப்பிள் நிறுவனம் கடந்த சில வாரங்களாக பீட்டா முறையில் டெஸ்டிங் செய்து வந்த ஐஒஎஸ் 16.2 மற்றும் ஐபேட் ஒஎஸ் 16.2 அப்டேட்களின் ஸ்டேபில் வெர்ஷன்களை ஐபோன் மற்றும் ஐபேட் மாடல்களுக்கு வெளியிட்டு உள்ளது. இந்த அப்டேட் மூலம் ஏர்டெல் மற்றும் ஜியோ நெட்வொர்க் பயன்படுத்துவோர் ஐபோன் 14, ஐபோன் 13, ஐபோன் 12 மற்றும் ஐபோன் SE 3 மாடல்களில் 5ஜி அப்டேட் பெற முடியும்.
எனினும், சில பயனர்களுக்கு ஐபேட் ஒஎஸ் 16.2 தங்களுக்கு 5ஜி சப்போர்ட் வழங்கவில்லை என குற்றம்சாட்டி வருகின்றனர். 2022 ஐபேட் மற்றும் ஐபேட் ப்ரோ மாடல்களின் செல்லுலார் வெர்ஷன்களில் 5ஜி சப்போர்ட் உள்ளது. புது அப்டேட் 5ஜி கனெக்டிவிட்டியை வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த பிரச்சினை குறித்து பயனர்கள் தகவல் தெரிவித்து வருகின்றனர்.
5ஜி மட்டுமின்றி புதிய அப்டேட் ஃபிரீடம் ஆப் வழங்குகிறது. இதை கொண்டு பயனர்கள் தரவுகளை கேன்வாஸ் ஒன்றில் ஒருங்கிணைத்து வைத்துக் கொள்ளலாம். பின் இங்கிருந்தபடி அவற்றை பார்ப்பது, ஷேர் மற்றும் கொலாபரேட் உள்ளிட்டவைகளை மேற்கொள்ள முடியும். இதில் ஏராளமான ஃபைல்களுக்கான சப்போர்ட், அவற்றை பிரீவியூ பார்க்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. ஃபிரீடம் போர்டுகள் ஐகிளவுடில் ஸ்டோர் செய்யப்பட்டு இருக்கும்.
இவற்றை ஃபேஸ்டைம் அழைப்புகளின் போதும் இயக்க முடியும். இதை கொண்டு மற்றவர்களுடன் இணைந்து குறிப்பிட்ட போர்டில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளை மேற்கொள்ளலாம். ஐகிளவுடில் ஸ்டோர் செய்யப்பட்டு இருப்பதால், இவை தானாக மற்ற சாதனங்களிடையேயும் சின்க் செய்யப்பட்டு விடும். இந்த அப்டேட்டில் ஆப்பிள் மியூசிக் சிங் ஆப்ஷனும் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஐகிளவுடிற்கு மேம்பட்ட டேட்டா பாதுகாப்பு வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
- ட்விட்டரில் ட்விட் செய்வதற்கான எழுத்துக்களின் அளவை எலான் மஸ்க் விரைவில் மாற்றுகிறார்.
- முன்னதாக ட்விட்களின் அளவு 140 எழுத்துக்களாக வைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டரில் ட்விட் செய்வதற்கான எழுத்துக்களின் அளவு 280-இல் இருந்து 4 ஆயிரமாக அதிகரிக்கப்பட இருப்பதாக எலான் மஸ்க் அறிவித்து இருக்கிறார். ட்விட்டரில், ட்விட் செய்வதற்கான அளவு நீட்டிக்கப்படுமா என்ற கேள்விக்கு எலான் மஸ்க் பதில் அளித்து இருந்தார். அதில், ஆம் என்று குறிப்பிட்டு இருந்தார். 2017 வாக்கில் ட்விட் அளவை 280 ஆக அதிகரிக்கும் முன் ட்விட் செய்வதற்கான எழுத்துக்களின் எண்ணிக்கை 140 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக ட்விட்டரில், ட்விட் செய்ய 140 எழுத்துக்களை மட்டுமே பயன்படுத்த முடியும். பின் 2018, நவம்பர் 8 ஆம் தேதி இந்த எண்ணிக்கை 280 ஆக அதிகரிக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக செயல்படாமல் இருந்த சுமார் 1.5 பில்லியன் அக்கவுண்ட்கள் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என எலான் மஸ்க் சமீபத்தில் அறிவித்து இருந்தார்.

இவைதவிர ட்விட்டர் புளூ சேவையை மீண்டும் வெளியிடும் பணிகளில் ட்விட்டர் ஈடுபட்டு வருகிறது. ட்விட்டர் புளூ மூலம் பயனர்கள் புளூ செக்மார்க் பெற முடியும். எனினும், இம்முறை ட்விட்டர் புளூ சேவைக்கான கட்டணம் ஐஒஎஸ் தளத்தில் அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. தற்போது ஐஒஎஸ் பயனர்களுக்கு ட்விட்டர் புளூ கட்டணம் 11 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
வலைதளத்தில் ட்விட்டர் புளூ சேவையில் இணையும் போது பயனர்கள் 8 டாலர்களை கட்டணமாக செலுத்தினால் போதுமானது. ஆப்பிள் நிறுவனம் அறிவித்த 30 சதவீத கமிஷன் தொகையை கருத்தில் கொண்டு ட்விட்டர் விலை உயர்வை அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
- சியோமி நிறுவனம் சீன சந்தையில் ஏராளமான புது சாதனங்களை ஒரே நிகழ்வில் அறிமுகம் செய்து இருக்கிறது.
- சியோமி 13 சீரிஸ் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸருடன் அறிமுகம் செய்யப்பட்டது.
சியோமி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சியோமி 13 மற்றும் சியோமி 13 ப்ரோ ஸ்மார்ட்போன்களுடன் சியோமி மினி PC அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இது மட்டுமின்றி சியோமி பட்ஸ் 4, சியோமி 10 ஜிகாபிட் ரௌட்டர் உள்ளிட்ட சாதனங்களும் இதே நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டன. ஏராளமான புது சாதனங்களில் அனைவரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மிகவும் சக்திவாய்ந்த கம்ப்யூட்டரை சியோமி நிறுவனம் அளவில் சிறியதாக உருவாக்கி அறிமுகம் செய்து இருக்கிறது.
புதிய சியோமி மினி PC அளவில் 112x112*38mm ஆக உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதன் ஒட்டுமொத்த எடை 437 கிராம்கள் ஆகும். இதன் மெயின் பாடி அலுமினியம் அலாய் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் CNC, மெட்டல் சாண்ட்பிலாஸ்டிங் மற்றும் அனோட் ஆக்சிடேஷன் என ஏராளமான வழிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன. இதன் காரணமாக சியோமி மினி PC தோற்றத்தில் மிகவும் எளிமையாகவும், அழகாகவும் காட்சியளிக்கிறது.

மினி PC மாடலில் சியோமி நிறுவனம் 12th Gen இண்டெல் கோர் i5 பிராசஸர், இண்டெல் ஐரிஸ் Xe கிராஃபிக் சப்போர்ட் வழங்கி இருக்கிறது. இத்துடன் 16 ஜிபி 3200MHz DDR4 ரேம், 512 ஜிபி PCIe NVM2 SSD, பின்புறம் 2x HDMI 2.1 இண்டர்ஃபேஸ், 1x 2.5G நெட்வொர்க் போர்ட், 1x யுஎஸ்பி 3.0 ஜென் 2, 1X யுஎஸ்பி 2.0 போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. முன்புறம் 2x யுஎஸ்பி 3.0 ஜென் 2 போர்ட், 3.5mm ஹெட்போன் ஜாக் வழங்கப்பட்டுள்ளது.
சியோமி மினி PC விண்சோஸ் 11 ஹோம் சைனீஸ் எடிஷன் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டே வழங்கப்படுகிறது. இதில் அதிகபட்சம் 100 வாட் வரையிலான பவர் இன்புட் வசதி உள்ளது. இதன் விலை 531 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 43 ஆயிரத்து 906 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விரைவில் இதன் விற்பனை சீன சந்தையில் துவங்குகிறது.
- ஒன்பிளஸ் நிறுவனத்தின் புது ஸ்மார்ட் டிவி ஆண்ட்ராய்டு டிவி 10.0, கூகுள் அசிஸ்டண்ட் வசதிகளை கொண்டிருக்கிறது.
- இத்துடன் 230-க்கும் அதிக லைவ் சேனல்கள் ஆக்சிஜன் பிளே 2.0 மூலம் வழங்கப்படுகிறது.
ஒன்பிளஸ் நிறுவனம் இந்திய சந்தையில் ஒன்பிளஸ் டிவி 55 Y1S ப்ரோ 4K ஸ்மார்ட் டிவி மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இது அந்நிறுவனத்தின் புதிய Y1S ப்ரோ சீரிஸ் டிவி ஆகும். முன்னதாக Y1S ப்ரோ சீரிசில் 50 இன்ச் மாடல் ஜூலை மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
புதிய ஒன்பிளஸ் டிவி பெசல்-லெஸ் டிசைன், HDR 10+, HDR 10, HLG, ALLM, காமா என்ஜின் போன்ற வசதிகளை வழங்குகிறது. இத்துடன் அதிக தெளிவான காட்சிகளை டைனமிக் காண்டிராஸ்ட் மற்றும் வைப்ரண்ட் நிறங்களை வழங்குகிறது. MEMC தொழில்நுட்பத்துடன் வேகமாக நகரும் சீன்கள் மேம்படுத்தப்படுவதாக ஒன்பிளஸ் தெரிவித்து இருக்கிறது. இந்த டிவி ஆண்ட்ராய்டு 10.0 பிளாட்ஃபார்ம் கொண்டிருக்கிறது.

இத்துடன் கூகுள் அசிஸ்டண்ட், ஸ்மார்ட் மேனேஜர், ஒன்பிளஸ் பட்ஸ், ஒன்பிளஸ் வாட்ச் உள்ளிட்டவைகளை ஒன்பிளஸ் கனெக்ட் 2.0 மூலம் கனெக்ட் செய்து கொள்ளலாம். ஆக்சிஜன்பிளே 2.0 230-க்கும் அதிக லைவ் சேனல்களை வழங்குகிறது.
ஒன்பிளஸ் Y1S ப்ரோ 55 இன்ச் அம்சங்கள்:
55-இன்ச் 3840x2160 பிக்சல் LED டிஸ்ப்ளே, HDR10+, HDR10, HLG, ALLM, MEMC
காமா என்ஜின்
64-பிட் மீடியாடெக் MT 9216 பிராசஸர்
2 ஜிபி ரேம்
8 ஜிபி மெமரி
ஆண்ட்ராய்டு டிவி 10 மற்றும் ஆக்ஜின்பிளே 2.0
கூகுள் அசிஸ்டண்ட் பில்ட்-இன்
வைபை, ப்ளூடூத், 2x USB, ஆப்டிக்கல், ஈத்தர்நெட்
24வாட் ஸ்பீக்கர், டால்பி ஆடியோ
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
ஒன்பிளஸ் டிவி Y1S ப்ரோ 55 இன்ச் மாடலின் விலை இந்தியாவில் ரூ. 39 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ஒன்பிளஸ், அமேசான், ப்ளிப்கார்ட் வலைதளங்கள், ஆஃப்லைன் விற்பனை மையங்களில் நடைபெற இருக்கிறது. விற்பனை டிசம்பர் 12 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு துவங்குகிறது.
புதிய ஒன்பிளஸ் டிவியை வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்து்ம போது ரூ. 3 ஆயிரம் வரையிலான உடனடி தள்ளுபடி பெறலாம். இந்த சலுகை டிசம்பர் 25 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது. இத்துடன் முன்னணி வங்கி பரிவர்த்தனைகளில் அதிகபட்சம் ஒன்பது மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதியும் வழங்கப்படுகிறது.
- பெபில் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் மிக குறைந்த விலையில் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கிறது.
- புதிய பெபில் ஸ்மார்ட்வாட்ச் போட், நாய்ஸ், ஃபயர் போல்ட் நிறுவன மாடல்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது.
பெபில் நிறுவனம் இந்திய சந்தையில் முற்றிலும் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. பெபில் ஃபிராஸ்ட் என அழைக்கப்படும் புது ஸ்மார்ட்வாட்ச் ரூ. 2 ஆயிரம் பட்ஜெட்டில் கிடைக்கிறது. தோற்றத்தில் இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆப்பிள் வாட்ச் போன்றே காட்சியளிக்கிறது. இதில் மெட்டாலிக் கேசிங், மல்டி-ரோடேடிங் கிரவுன் பட்டன் உள்ளது.
IP67 தரச் சான்று பெற்று இருக்கும் பெபில் ஃபிராஸ்ட் சதுரங்க வடிவம் கொண்ட டயல், 1.87 இன்ச் டிஸ்ப்ளே, HD ரெசல்யூஷன், 100-க்கும் அதிக வாட்ச் ஃபேஸ்கள் உள்ளன. இத்துடன் இதய துடிப்பு சென்சார், SpO2 சென்சார், ஸ்லீப் டிராக்கர், செடண்டரி ரிமைண்டர், பல்வேறு ஸ்போர்ட்ஸ் மோட்கள், கலோரி டிராக்கர், பயண விவரங்கள் மற்றும் எத்தனை பயனர் தூரம் நடந்தார் என்ற விவரங்களை டிராக் செய்யும்.

பெபில் ஃபிராஸ்ட் பில்ட்-இன் மைக்ரோபோன் மற்றும் ஸ்பீக்கர் கொண்டிருக்கிறது. இதை கொண்டு ப்ளூடூத் காலிங் வசதி செயல்படுத்தப்பட்டு இருக்கிறது. இத்துடன் டயல் பேட் மற்றும் சமீபத்திய அழைப்பு விவரங்களை காண்பிக்கிறது. இதில் ஏஐ சார்ந்த வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி, வானிலை விவரங்கள், நோட்டிஃபிகேஷன்கள், மியூசிக் பிளேபேக் கண்ட்ரோல், கால்குலேட்டர் என ஏராள அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்திய சந்தையில் பெபில் ஃபிராஸ்ட் ஸ்மார்ட்வாட்ச் பிளாக், புளூ, கிரே மற்றும் ஆரஞ்சு என நான்கு வித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் பெபில் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் நடைபெறுகிறது.
- இன்ஸ்டாகிராம் செயலியில் சமீப காலங்களில் அதிகளவு புது அம்சங்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன.
- அந்த வரிசையில், இன்ஸ்டாவில் புது அம்சத்திற்கான அப்டேட் வெளியிடப்பட்டு வருகிறது.
உலகின் முன்னணி சமூக வலைதள செயலிகளில் ஒன்றாக இன்ஸ்டாகிராம் விளங்குகிறது. இன்ஸ்டாகிராம் செயலியில் வழங்கப்பட்டு இருக்கும் புது அப்டேட் உங்களின் பதிவுகளை ஏன் யாரும் பார்க்கவில்லை என்பதை தெரிவிக்கும் வசதி கொண்டுள்ளது. இன்ஸ்டாகிராம் தலைவர் ஆடம் மொசெரி புது அப்டேட் பற்றிய தகவல்களை வெளியிட்டு உள்ளார்.
புது அப்டேட் மூலம் இன்ஸ்டாவின் "Account Status" ஆப்ஷனில் கூடுதல் அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இது நீங்கள் பதிவிட்ட போஸ்ட் ஏதேனும் னஉங்களின் அக்கவுண்ட்-ஐ மக்கள் பார்க்க விடாமல் செய்கிறதா என்பதை தெரிவிக்கும். சமீபத்தில் மெட்டா நிறுவனம் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் இளைஞர்களை பாதுகாக்கும் வகையில் புதிய பிரைவசி அப்டேட்களை வெளியிட்டது.

அந்த வகையில், தற்போது Professional Account-களில் இருந்து பதிவுகள் மற்றவர்களுக்கு பரிந்துரைக்கப்படுவதை நிறுத்தி இருக்கிறதா என்பதை இன்ஸ்டாவின் Settings -- Account -- Account Status ஆப்ஷனில் காண்பிக்கிறது. டிக்டாக்கிற்கு பெரும் போட்டியாளராக விளங்கும் நிலையில், இன்ஸ்டாவில் பரிந்துரைகள் Explore பக்கம், Home Feed உள்ளிட்டவைகளில் காண்பிக்கப்பட்டு வருகிறது.
மேலும் அக்கவுண்ட்களின் தரவுகள் பரிந்துரைக்கப்படுவதை மெட்டா நிறுவனம் அடுத்த ஆண்டு இறுதிவரை இருமடங்கு அதிகரிக்க முடிவு செய்து இருக்கிறது. இன்ஸ்டாகிராமின் மிக கடினமான நிபந்தணைகளுக்கு முழுமையாக பூர்த்தியாகும் பதிவுகள் Explore பக்கத்தில் தோன்ற சரியானதாக இருக்கும் பட்சத்தில் அவை பரிந்துரைக்கப்படுகின்றன.
- ஸ்மார்ட்போன் சந்தையில் முன்னணி நிறுவனங்கள் பட்டியலில் ஒன்றாக ஆப்பிள் நிறுவனம் இருக்கிறது.
- இதே போன்று ஸ்மார்ட்வாட்ச் மற்றும் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் பரிவிலும் ஆப்பிள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் முன்னணி நிறுவனமாக இருப்பதோடு, ஸ்மார்ட்வாட்ச் மற்றும் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் போன்ற சாதனங்கள் பிரிவிலும் ஆப்பிள் தொடர்ந்து அதிரடியான விற்பனையை பதிவு செய்து வருகிறது. அந்த வரிசையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்பாட்ஸ் ப்ரோ 2 மாடல் சந்தையில் நல்ல வரவேற்பை பெற்று இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

சந்தையில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆப்பிள் நிறுவனத்தின் இரண்டாம் தலைமுறை ஏர்பாட்ஸ் ப்ரோ 2 வெளியிடப்பட்டது. இதன் காரணமாகவே ஏர்பாட்ஸ் ப்ரோ 2 விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. ஒரு வார காலத்திற்குள் ஏர்பாட்ஸ் ப்ரோ 2 மாடல் சுமார் 40 லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் மட்டும் 2 கோடியே 38 லட்சம் அணியக்கூடிய சாதனங்களை விற்பனை செய்துள்ளது.
இதன் மூலம் ஆப்பிள் நிறுவனம் சந்தையில் 30.9 சதவீத புள்ளிகளை பெற்று இருக்கிறது. இதன் மூலம் கடந்த ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடும் போது ஆப்பிள் நிறுவனம் 34 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இவற்றில் சுமார் 42 லட்சம் யூனிட்கள் ஏர்பாட்ஸ் ப்ரோ 2 ஆகும். இரண்டாம் தலைமுறை ஏர்பாட்ஸ் ப்ரோ மாடல் செப்டம்பர் 23 ஆம் தேதி விற்பனைக்கு வந்தது. சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி பட்ஸ் 2 ப்ரோ மாடல் இந்த காலாண்டில் சரிவை சந்தித்துள்ளது.






