என் மலர்
கணினி

இந்திய ஐபோன்களுக்கு 5ஜி அப்டேட் வழங்கும் ஐஒஎஸ் 16.2 வெளியீடு!
- ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் மாடல்களில் 5ஜி வசதியை வழங்குவதற்கான பீட்டா டெஸ்டிங்கை மேற்கொண்டு வந்தது.
- தற்போது ஐஒஎஸ் 16.2 மற்றும் ஐபேட் ஒஎஸ் 16.2 வெர்ஷன்களை ஆப்பிள் வெளியிட துவங்கி இருக்கிறது.
ஆப்பிள் நிறுவனம் கடந்த சில வாரங்களாக பீட்டா முறையில் டெஸ்டிங் செய்து வந்த ஐஒஎஸ் 16.2 மற்றும் ஐபேட் ஒஎஸ் 16.2 அப்டேட்களின் ஸ்டேபில் வெர்ஷன்களை ஐபோன் மற்றும் ஐபேட் மாடல்களுக்கு வெளியிட்டு உள்ளது. இந்த அப்டேட் மூலம் ஏர்டெல் மற்றும் ஜியோ நெட்வொர்க் பயன்படுத்துவோர் ஐபோன் 14, ஐபோன் 13, ஐபோன் 12 மற்றும் ஐபோன் SE 3 மாடல்களில் 5ஜி அப்டேட் பெற முடியும்.
எனினும், சில பயனர்களுக்கு ஐபேட் ஒஎஸ் 16.2 தங்களுக்கு 5ஜி சப்போர்ட் வழங்கவில்லை என குற்றம்சாட்டி வருகின்றனர். 2022 ஐபேட் மற்றும் ஐபேட் ப்ரோ மாடல்களின் செல்லுலார் வெர்ஷன்களில் 5ஜி சப்போர்ட் உள்ளது. புது அப்டேட் 5ஜி கனெக்டிவிட்டியை வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த பிரச்சினை குறித்து பயனர்கள் தகவல் தெரிவித்து வருகின்றனர்.
5ஜி மட்டுமின்றி புதிய அப்டேட் ஃபிரீடம் ஆப் வழங்குகிறது. இதை கொண்டு பயனர்கள் தரவுகளை கேன்வாஸ் ஒன்றில் ஒருங்கிணைத்து வைத்துக் கொள்ளலாம். பின் இங்கிருந்தபடி அவற்றை பார்ப்பது, ஷேர் மற்றும் கொலாபரேட் உள்ளிட்டவைகளை மேற்கொள்ள முடியும். இதில் ஏராளமான ஃபைல்களுக்கான சப்போர்ட், அவற்றை பிரீவியூ பார்க்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. ஃபிரீடம் போர்டுகள் ஐகிளவுடில் ஸ்டோர் செய்யப்பட்டு இருக்கும்.
இவற்றை ஃபேஸ்டைம் அழைப்புகளின் போதும் இயக்க முடியும். இதை கொண்டு மற்றவர்களுடன் இணைந்து குறிப்பிட்ட போர்டில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளை மேற்கொள்ளலாம். ஐகிளவுடில் ஸ்டோர் செய்யப்பட்டு இருப்பதால், இவை தானாக மற்ற சாதனங்களிடையேயும் சின்க் செய்யப்பட்டு விடும். இந்த அப்டேட்டில் ஆப்பிள் மியூசிக் சிங் ஆப்ஷனும் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஐகிளவுடிற்கு மேம்பட்ட டேட்டா பாதுகாப்பு வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.