என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆப்பிள் மாணிட்டர்"

    • ஆப்பிள் நிறுவனம் உருவாக்கி வரும் புது மாணிட்டர்கள் பற்றிய புது தகவல் வெளியாகி உள்ளது.
    • இந்த ஆண்டு துவக்கத்தில் ஆப்பிள் ஸ்டூடியோ டிஸ்ப்ளே மாடலை அறிமுகம் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

    ஆப்பிள் நிறுவனம் ப்ரோ டிஸ்ப்ளே XDR மாடலை சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்து இருந்தது. ஆப்பிள் தண்டர்போல்ட் டிஸ்ப்ளே நிறுத்தப்பட்ட பின் அறிமுகமான முதல் உயர் ரக ஃபிலாட் டிஸ்ப்ளே கொண்ட மாணிட்டர் என்ற பெருமையை XDR பெற்று இருந்தது.

    பின் இந்த ஆண்டு துவக்கத்தில் ஆப்பிள் ஸ்டூடியோ டிஸ்ப்ளே அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது ஆப்பிள் வல்லுனரான மார்க் குர்மன் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் பல்வேறு புது மாணிட்டர்களை உருவாக்கி வருவதாக தெரிவித்து இருக்கிறார். இதில் மேம்பட்ட ப்ரோ டிஸ்ப்ளே XDR மாடல், புதிய எக்ஸ்டர்னல் மாணிட்டர்கள் அடங்கும் என கூறப்படுகிறது. புதிய மாணிட்டர்கள் ஆப்பிள் சிலிகான் பிராசஸர்களை கொண்டிருக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

    தற்போது ஸ்டூடியோ டிஸ்ப்ளே மாடலில் ஆப்பிள் ஏ13 பயோனிக் சிப் வழங்கப்பட்டு இருப்பதை போன்றே புது மாடல்களில் சக்திவாய்ந்த சிலிகான் பிராசஸர்கள் வழங்கப்பட இருக்கின்றன. தற்போது புதிய டிஸ்ப்ளேக்கள் பற்றி அதிக விவரங்கள் வெளியாகவில்லை. மேலும் ஆப்பிள் நிறுவனத்தின் எக்ஸ்டர்னல் டிஸ்ப்ளேக்கள் எப்போது வெளியாகும் என்பது பற்றிய தகவல்களும் மர்மமாகவே உள்ளன.

    முந்தைய தகவல்களின் படி ஆப்பிள் நிறுவனம் புதிதாக 27 இன்ச் அளவில் மினி எல்இடி டிஸ்ப்ளேவை அடுத்த ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. எனினும், இந்த மாடல் பற்றிய விவரங்களும் மர்மமாகவே உள்ளன. இந்த மாணிட்டர் ப்ரோமோஷன் போன்ற அம்சங்களுடன் புதிய ஸ்டூடியோ டிஸ்ப்ளேவாக இருக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

    ×