என் மலர்

  கணினி

  வாட்ஸ்அப் ஐபோனில் PiP மோட் - புது அப்டேட் வெளியீடு!
  X

  வாட்ஸ்அப் ஐபோனில் PiP மோட் - புது அப்டேட் வெளியீடு!

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வாட்ஸ்அப் செயலியின் ஐபோன் வெர்ஷனில் ஏராள மாற்றங்கள் அடங்கிய அப்டேட் வெளியிடப்பட்டு இருக்கிறது.
  • தற்போது புது அம்சங்கள் வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் சோதனை செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

  உலகின் முன்னணி குறுந்தகவல் செயலியான வாட்ஸ்அப், ஐபோனில் புது மாற்றங்களை பெற இருக்கிறது. அதன்படி ஐபோனிற்கான வாட்ஸ்அப் செயலியில் PiP மோட் சோதனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய அம்சம் வாட்ஸ்அப் ஐஒஎஸ் பீட்டா வெர்ஷனில் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த அம்சம் மூலம் பயனர்கள் வீடியோ கால் பேசிக் கொண்டே மற்ற செயலிகளை தொடர்ந்து பயன்படுத்த வழி செய்கிறது.

  தற்போது வீடியோ கால் பேசும் போதே வாட்ஸ்அப் மற்ற செயலிகளை பயன்படுத்த வழி செய்கிறது. எனினும், இவ்வாறு செய்யும் போது வாட்ஸ்அப் செயலிக்கான கேமரா அக்சஸ் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு விடும். இதன் காரணமாக பயனர்கள் மற்ற சேவைகளை பயன்படுத்த துவங்கும் போது வீடியோவை பார்க்க முடியாது. எனினும், புது அம்சம் மூலம் இந்த நிலை விரைவில் மாறும் நிலை வந்துள்ளது.

  ஆப்பிள் நிறுவனத்தின் சொந்த ஃபேஸ் டைம் வீடியோ காலிங் மற்றும் கான்ஃபெரன்சிங் செயலிகள் ஐஒஎஸ்-இல் இயங்குவதை போன்றே வாட்ஸ்அப் செயலியிலும் இயங்கும். ஏற்கனவே கான்ஃபெரன்சிங் செயலி வீடியோ கால் பேசும் போதே PiP மோட் மூலம் மற்ற செயலிகளை பயன்படுத்த வழி செய்கிறது.

  தற்போது வாட்ஸ்அப் செயலியில் இந்த அம்சம் வழங்கப்படுவதோடு, லின்க் மூலம் க்ரூப் கால்களில் இணைந்து கொள்ளும் வசதி, வீடியோ கால் பேசும் போது 32 பேரை இணைத்துக் கொள்வது மற்றும் வீடியோ காலில் யாரையாவது மியூட் அல்லது மற்றவருக்கு மெசேஜ் அனுப்புவது உள்ளிட்டவைகளை மேற்கொள்ளலாம். PiP மோடில் வீடியோ கால் அம்சம் மேலும் மேம்படுத்தப்படும் என தெரிகிறது.

  எனினும், தற்போது இந்த அம்சங்கள் அனைத்தும் பீட்டா வெர்ஷனிலேயே வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில், வாட்ஸ்அப் ஸ்டேபில் வெர்ஷனில் இவை கிடைக்க மேலும் சில காலம் ஆகலாம். வெளியாகும் போதே புது அம்சங்கள் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் வெர்ஷன்களில் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

  Next Story
  ×