என் மலர்
கணினி

ட்விட்டர் புளூ சேவையை இந்தியா கொண்டு வந்த எலான் மஸ்க் - விலை எவ்வளவு தெரியுமா?
- ட்விட்டர் நிறுவனத்தின் புதிய ட்விட்டர் புளூ சந்தா முறை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
- புதிய ட்விட்டர் புளூ சந்தாவுக்கான இந்திய விலை விவரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
ட்விட்டர் நிறுவனம் "புளூ" சேவையின் கீழ் வெரிபிகேஷன் சேவையை இந்தியாவில் வழங்க துவங்கி விட்டது. அமெரிக்காவில் இந்த சேவை ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. அங்கு இதற்கான கட்டணம் எட்டு டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கும் நிலையில், இந்தியாவில் இதன் விலை மாதம் ரூ. 719 ஆகும்.
இந்தியாவில் ட்விட்டர் பயன்படுத்தி வரும் சில பயனர்களுக்கு ட்விட்டர் புளூ சேவையில் இணைய கோரிக்கை விடுக்கப்பட்டதாக பயனர்கள் தங்களின் ட்விட்டர் பதிவில் தெரிவித்து வருகின்றனர். எனினும், இந்த அப்டேட் தற்போது ஐபோன்களில் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. வரும் நாட்களில் அனைவருக்கும் இந்த அம்சம் வழங்கப்படலாம்.
ட்விட்டர் புளூ சேவையில் இணையும் பயனர்களுக்கு எந்த விதமான வெரிபிகேஷன் இன்றி புளூ டிக் வழங்கப்பட்டு விடும். இத்துடன் புளூ சேவையில் இருப்பவர்கள் அதிக பயனர்களை அடைவதில் முன்னுரிமை அளிக்கப்படும் என ட்விட்டர் நிறுவனத்தின் புதிய உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்து இருக்கிறார்.
ட்விட்டரில் மாதாந்திர கட்டண முறை அறிமுகம் செய்யப்பட்டு இருப்பதற்கு உலகம் முழுக்க பயனர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ட்விட்டரை விலைக்கு வாங்கியதும் எலான் மஸ்க் அந்நிறுவனத்தில் பணியாற்றி வந்த முன்னால் உயர் அதிகாரிகளை அதிரடியாக பணி நீக்கம் செய்தார்.






