என் மலர்tooltip icon

    கணினி

    • வாட்ஸ்அப் செயலியில் சோதனை செய்யப்பட்டு வந்த புது அம்சம் பெரும்பாலான பயனர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
    • வாட்ஸ்அப் கால் லின்க்ஸ் அம்சத்தை பேஸ்புக் இணை நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க் கடந்த மாதம் அறிவித்து இருந்தார்.

    மார்க் ஜூக்கர்பர்க் வாட்ஸ்அப் செயலியில் கால் லின்க்ஸ் எனும் புது அம்சம் வழங்கப்பட இருப்பதாக கடந்த மாதம் அறிவித்து இருந்தார். இந்த அம்சம் கொண்டு பயனர்கள் புதிதாக கால் செய்யவும், ஏற்கனவே உள்ள அழைப்பில் எளிதில் இணைந்து கொள்ளவும் வழி செய்கிறது. பீட்டா வெர்ஷனில் சோதனை செய்யப்பட்டு வந்த நிலையில், இந்த அம்சம் தற்போது பெரும்பாலான பயனர்களுக்கு வழங்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    புதிய வாட்ஸ்அப் கால் லின்க்ஸ் கொண்டு அதிகபட்சம் 32 பேர் ஒரே சமயத்தில் அழைப்பில் பேச முடியும். மேலும் இந்த லின்க்ஸ் வேலிடிட்டி 90 நாட்கள் ஆகும். வாட்ஸ்அப் செயலியின் கால்ஸ் டேபில் புதிதாக கால் லின்க் அம்சம் சேர்க்கப்பட்டு உள்ளது. இதை கொண்டு அழைப்பிற்கான லின்க்-ஐ உருவாக்கிக் கொள்ள முடியும். இதற்கு "கிரியேட் கால் லின்க்" ஆப்ஷனை க்ளிக் செய்தாலே போதுமானது.

    மேலும் லின்க் உருவாக்கும் போதே அது வீடியோ அல்லது வாய்ஸ் கால் என்பதை தேரிவு செய்து கொள்ள முடியும். இவ்வாறு உருவாக்கப்படும் லின்க்-களை எளிதில் மற்றவர்களுக்கு ஷேர் செய்யும் வசதியும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த அம்சம் வாட்ஸ்அப் டெஸ்க்டாப் வெர்ஷனில் வழங்கப்படவில்லை. இவ்வாறு செய்ய முற்பட்ட போது கால் லின்க்-இல் இணைய க்யூ ஆர் கோட் காண்பிக்கப்படுகிறது.

    முன்னதாக வாட்ஸ்அப் வாய்ஸ் கால் சேவையில் 32 பேருடன் பேசும் அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், புதிய கால் லின்க்ஸ் அம்சம் பற்றிய தகவலை பேஸ்புக் இணை நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க் அறிவித்து இருந்தார். அந்த வரிசையில், இந்த அம்சம் தற்போது அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

    • ஐடெல் நிறுவனத்தின் இரண்டு புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
    • இரு ஸ்மார்ட்வாட்ச் மாடல்களும் வெவ்வேறு டிசைன் கொண்டு வித்தியாசப்படுத்தப்பட்டு உள்ளன.

    ஐடெல் நிறுவனம் இந்திய சந்தையில் இரண்டு புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. இரு ஸ்மார்ட்வாட்ச் மாடல்களும் வித்தியாசமான டிசைன் கொண்டுள்ளன. எனினும், இவற்றின் விலை குறைவாகவே நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புது ஸ்மார்ட்வாட்ச் மாடல்கள் ஸ்மார்ட்வாட்ச் 1GS மற்றும் ஸ்மார்ட்வாட்ச் 2 என அழைக்கப்படுகின்றன.

    புதிய ஐடெல் ஸ்மார்ட்வாட்ச் 1GS மாடலில் பாரம்பரியமிக்க வட்ட வடிவம் கொண்ட டிசைன், அலுமினியம் பிரேம், 1.32 இன்ச் 360x360 பிக்சல் எல்சிடி ஸ்கிரீன், SpO2 மற்றும் இதய துடிப்பு விவரங்களை வழங்கும் டிராக்கர்களுடன் ஏராளமான சென்சார்கள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த ஸ்மார்ட்வாட்ச் 250 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. ப்ளூடூத் அழைப்புகளை இயக்கும் போதும் இந்த ஸ்மார்ட்வாட்ச் ஐந்து மணி நேரத்திற்கு பேக்கப் வழங்கும் என ஐடெல் தெரிவித்து உள்ளது.

    ஸ்மார்ட்வாட்ச் 2 மாடலில் 1.8 இன்ச் அளவில் செவ்வக வடிவம் கொண்ட ஐபிஎஸ் பேனல், 240x296 பிக்சல் ரெசல்யூஷன், 230 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் 128MB ஸ்டோரேஜ் வசதி, ப்ளூடூத் ஆடியோ ஸ்டிரீமிங், கூடுதலாக மென்பொருள் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இரு ஸ்மார்ட்வாட்ச் மாடல்களிலும் IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி உள்ளது.

    இந்திய சந்தையில் புதிய ஐடெல் ஸ்மார்ட்வாட்ச் 1GS விலை ரூ. 2 ஆயிரத்து 999 என்றும் ஸ்மார்ட்வாட்ச் 2 விலை ரூ. 2 ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இரு சாதனங்களும் ஐடெல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது.

    • ஆப்பிள் நிறுவனம் ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதை போன்றே புதிய ஐபேட் ப்ரோ மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது.
    • புதிய ஐபேட் ப்ரோ மற்றும் புது ஐபேட் மாடல்களுடன் ஆப்பிள் டிவி 4K மாடலும் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

    ஆப்பிள் நிறுவனம் தனது ஆப்பிள் டிவி மாடலை இருவித வேரியண்ட்களில் விற்பனை செய்து வந்தது. 2017 வாக்கில் டிவி 4K மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடல் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட நான்காம் தலைமுறை ஆப்பிள் டிவி HD மாடலுடன் விற்பனை செய்யப்பட்டு வந்தது. சமீபத்தில் ஆப்பிள் புதிய டிவி 4K மாடலை அறிமுகம் செய்த நிலையில், பழைய HD வேரியண்ட் விற்பனையை நிறுத்தி இருக்கிறது.

    புதிய ஐபேட் ப்ரோ மற்றும் ஐபேட் (10th Gen) மாடல்களுடன் ஆப்பிள் நிறுவனம் முற்றிலும் புதிய டிவி 4K மாடலை அறிமுகம் செய்தது. இதைத் தொடர்ந்து ஆப்பிள் டிவி HD வேரியண்ட் ஆப்பிள் வலைதளத்தில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறது. டிவி ஒஎஸ் கொண்ட முதல் டிவி மற்றும் டிவி சீரிசில் நான்காம் தலைமுறை மாடலாக ஆப்பிள் டிவி HD விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதில் ஏ8 சிப் மற்றும் 2 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    நான்காம் தலைமுறை ஆப்பிள் டிவி HD மாடலுடன் சிரி வசதி கொண்ட ரிமோட் வழங்கப்பட்டது. இதில் டச்பேட் மற்றும் மோஷன் சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் 32 ஜிபி மாடல் விலை 149 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 12 ஆயிரத்து 358 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இதை தொடர்ந்து ஆப்பிள் நிறுவனம் டிவி 4K மாடலை அறிமுகம் செய்தது. இதில் 4K ரெசல்யூஷன், ஏ10எக்ஸ் பியுஷன் சிப்செட், HDR வசதி வழங்கப்பட்டு இருந்தது.

    தற்போது புதிய ஆப்பிள் டிவி 4K 2022 மாடலில் மேலும் சக்திவாய்ந்த ஏ15 பயோனிக் பிராசஸர், யுஎஸ்பி டைப் சி சார்ஜிங் போர்ட் கொண்ட புதிய சிரி ரிமோட் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் 64 ஜிபி மற்றும் 128 ஜிபி மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் விலை இந்தியாவில் ரூ. 14 ஆயிரத்து 900 என துவங்குகிறது. இதன் முன்பதிவு ஏற்கனவே துவங்கி விட்ட நிலையில், விற்பனை நவம்பர் 4 ஆம் தேதி துவங்க இருக்கிறது.

    • ஆப்பிள் நிறுவனம் இந்திய சந்தையில் முற்றிலும் புதிய ஐபேட் டேப்லெட் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.
    • இந்த டேப்லெட் மாடல் ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதை போன்று ஏ14 பயோனிக் பிராசஸர் கொண்டிருக்கிறது.

    ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபேட் ப்ரோ மாடலுடன் புதிய ஐபேட் மாடலையும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஐபேட் மாடல் 10.9 இன்ச் லிக்விட் ரெட்டினா டிஸ்ப்ளே, ஏ14 பயோனிக் பிராசஸர் கொண்டிருக்கிறது. இத்துடன் மேம்பட்ட 12MP அல்ட்ரா வைடு செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

    யுஎஸ்பி சி போர்ட் கொண்டிருக்கும் புது ஐபேட் மாடல் வைபை 6 கனெக்டிவிட்டி, 5ஜி செல்லுலார் வசதி உள்ளிட்ட அம்சங்களை கொண்டிருக்கிறது. ஐபேட் ஒஎஸ் 16 கொண்டிருக்கும் புதிய ஐபேட் மாடலுடன் ஆப்பிள் பென்சில் முதல் தலைமுறை மாடலுக்கான சப்ரோர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஐபேட் (10th Gen) அம்சங்கள்

    10.9 இன்ச் 2360x1640 பிக்சல் லிக்விட் ரெட்டினா டிஸ்ப்ளே

    ஏ14 பயோனிக் பிராசஸர்

    64 ஜிபி மற்றும் 256 ஜிபி மெமரி

    ஐபேட் ஒஎஸ் 16

    12MP பிரைமரி கேமரா

    12MP செல்பி கேமரா

    டூயல் மைக்ரோபோன்

    5ஜி (ஆப்ஷன்), வைபை 6, ப்ளூடூத் 5.2

    டச் ஐடி

    28.6 வாட் லித்தியம் அயன் பேட்டரி

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    புதிய ஐபேட் மாடல் புளூ, பின்க், சில்வர் மற்றும் எல்லோ போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இதன் முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. விற்பனை அக்டோபர் 26 ஆம் தேதி துவங்க இருக்கிறது. புதிய ஐபேட் மாடல் விலை ரூ. 44 ஆயிரத்து 900 என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 74 ஆயிரத்து 900 ஆகும்.

    • குறுந்தகவல் செயலிகளில் முதன்மையானதாக விளங்கும் வாட்ஸ்அப் பாதுகாப்பு குறித்து மார்க் ஜூக்கர்பர்க் கருத்து தெரிவித்துள்ளார்.
    • முன்னதாக இந்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் கூகுள் நிறுவன அதிகாரி ஒருத்தர் ஐமெசேஜ் குறித்து கருத்து தெரிவித்து இருந்தார்.

    ஐபோன் மற்றும் மேம்பட்ட ஐமெசேஜ் ஆப் பற்றிய தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில், பேஸ்புக் இணை நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க் ஆப்பிள் நிறுவனத்திற்கு எதிரான கருத்துக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். இதோடு தான் சொந்தமாக நடத்தி வரும் வாட்ஸ்அப் செயலி பயனர்களுக்கு அதிக பாதுகாப்பான மற்றும் நம்பத்தகுந்த சூழலை வழங்கி வருவதாக தெரிவித்து இருக்கிறார்.

    இத்துடன் ஐமெசேஜ் செயலியுடன் வாட்ஸ்அப் எவ்வாறு பாதுகாப்பாக இருக்கிறது என்பதையும் தெரிவித்து இருக்கிறார். வாட்ஸ்அப் வழங்கி வரும் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் சேவையை விளம்பரப்படுத்தும் வகையிலும், புளூ மற்றும் கிரீன் நிற சாட் பபுள்கள் மூலம் ஆப்பிள் ஐமெசேஜை சீண்டும் வகையிலான வரைபடத்தை மார்க் ஜூக்கர்பர்க் பகிர்ந்து இருக்கிறார். ஐமெசேஜ் உடன் ஒப்பிடும் போது தனியுரிமை மற்றும் பாதுகாப்பை வழங்குவதில் வாட்ஸ்அப் சிறப்பானது என அவர் தெரிவித்து இருக்கிறார்.

    வாட்ஸ்அப்-இன் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் வசதி ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு தளத்தில் இயங்குகிறது. மேலும் க்ரூப் சாட்களிலும் இந்த அம்சம் தொடர்ந்து செயல்படும் என அவர் மேலும் தெரிவித்தார். ஒரு பட்டனை க்ளிக் செய்ததும், புது சாட்களை மறைந்து போகச் செய்யும் வசதி வாட்ஸ்அப்-இல் வழங்கப்பட்டு இருப்பதாக அவர் தெரிவித்து இருக்கிறார். இன்னமும் ஐமெசேஜ் செயலியில் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் வசதி வழங்கப்படவில்லை.

    மார்க் ஜூக்கர்பர்க்-ஐ தொடர்ந்து வாட்ஸ்அப் தலைவர் கேத்கார்ட் தனது ட்விட்டரில், வாட்ஸ்அப் மற்றும் ஐமெசேஜ் செயலிகளை ஒப்பிட்டுள்ளார். இதில் ஐமெசேஜ் செயலியில் மறைந்து போகச் செய்யும் அம்சம் வழங்கப்படவில்லை என்று தெரிவித்து இருக்கிறார். மெட்டா மட்டும் இன்றி சமீபத்தில் கூகுள் நிறுவனமும் ஆப்பிள் நிறுவனத்தை சீண்டும் கருத்துக்களை தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • ஆப்பிள் நிறுவனம் தனது ஐபேட் மாடலை ஸ்மார்ட் டிஸ்ப்ளே போன்று பயன்படுத்த புது வசதியை வழங்க இருக்கிறது.
    • அடுத்த ஆண்டு இதற்கான வசதி வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

    ஆப்பிள் நிறுவனம் ஐபேட் சாதனத்திற்கான டாக் ஒன்றை உருவாக்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை கொண்டு ஐபேட் மாடலை ஸ்மார்ட் டிஸ்ப்ளே போன்றும் பயன்படுத்தலாம் என கூறப்படுகிறது. ஐபேட் மாடலுக்கான டாக் அடுத்த ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது. முன்னதாக ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபேட் ப்ரோ மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.

    இத்துடன் ஆப்பிள் நிறுவனம் டேப்லெட்-ஐ ஸ்பீக்கர் ஹப் உடன் இணைக்க செய்யும் அம்சத்தை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அமேசான் நிறுவனம் தனது ஃபயர் டேப்லெட் மாடல்களில் இதே போன்ற அம்சத்தை ஏற்கனவே வழங்கி வருகிறது. இந்த சாதனம் பயனர்கள் டேப்லெட்-ஐ சார்ஜ் செய்ய டாக் செய்து அதனை ஸ்மார்ட் டிஸ்ப்ளே போன்று பயன்படுத்த வழி செய்கிறது.

    கூகுள் நிறுவனம் சமீபத்தில் தான் தனது பிக்சல் டேப்லெட்-க்கு டாக்-ஐ அறிமுகம் செய்யப் போவதாக அறிவித்தது. இது காந்த வசதி கொண்ட சார்ஜிங் ஸ்டேஷன் மற்றும் ஸ்பீக்கர் போன்று செயல்படும். டேப்லெட் டாக்-இன் மீது வைத்தால் அதனை ஸ்மார்ட் டிஸ்ப்ளே போன்று பயன்படுத்தலாம். இதில் கூகுள் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் ஸ்மார்ட் ஹோம் சாதனங்களை வாய்ஸ் மூலம் இயக்க முடியும்.

    கடந்த ஆண்டு வெளியான தகவல்களின் படி ஆப்பிள் நிறுவனம் ஆப்பிள் டிவி மற்றும் ஸ்மார்ட் ஸ்பீக்கர் சாதனத்தை அறிமுகம் செய்வதாக கூறப்பட்டது. இதில் பில்ட்-இன் கேமரா வழங்கப்பட இருப்பதாகவும், இந்த சாதனம் தொடர்ந்து உருவாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

    • ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபேட் ப்ரோ மாடல்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • மேலும் புதிய ஐபேட் ப்ரோ மாடல்கள் சத்தமின்றி வித்தியாச முறையில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    ஆப்பிள் நிறுவனம் புதிய 2022 ஐபேட் ப்ரோ டேப்லெட் சீரிசை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இவை 11 இன்ச் மற்றும் 12.9 இன்ச் என இரு வேரியண்ட்களில் கிடைக்கும் என்றும் J617 மற்றும் J620 குறியீட்டு பெயர்களில் உருவாக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. புதிய ஐபேட் ப்ரோ மாடல்கள் செய்தி குறிப்பு வாயிலாக எளிமையாக அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

    இதன் காரணமாக செப்டம்பரில் நடைபெற்ற ஐபோன் 14, ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8, ஆப்பிள் வாட்ச் SE (2022) மற்றும் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா சாதனங்களின் அறிமுக நிகழ்வு போன்ற நேரலை நடத்தப்படாது என கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப் போகும் புதிய மிக்சட்-ரியலிட்டி ஹெட்செட் அறிமுக நிகழ்வுக்காக இந்த ஆண்டு அறிமுகம் செய்யும் மற்ற சாதனங்களுக்கு செய்தி குறிப்பு மட்டும் வெளியிட ஆப்பிள் முடிவு செய்துள்ளதாக மார்க் குர்மேன் தெரிவித்து இருக்கிறார்.

    புதிய ஐபேட் ப்ரோ (2022) மாடலில் N5P மேம்பட்ட 5nm முறையில் ஒவ்வொரு பாகங்களிலும் 20 பில்லியன் டிரான்சிஸ்டர்கள் அடங்கிய ஆப்பிள் M2 பிராசஸர் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார். இந்த பிராசஸரை TSMC உருவாக்கும் என்றும் இது முந்தைய M1 பிராசஸரை விட 25 சதவீதம் அதிக டிரான்சிஸ்டர்களை கொண்டிருக்கிறது. இதன் காரணமாக M2 செயல்திறன் முந்தைய பிராசஸரை விட அதிகமாக இருக்கும்.

    2022 ஐபேட் ப்ரோ மாடல்கள் வரிசையில் புதிய எண்ட்ரி லெவல் டேப்லெட்-ஐ ஆப்பிள் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஐபேட் 10 மாடலின் வடிவமைப்பு ஐபேட் ப்ரோ-வை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் என்றும் இதில் யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. முன்னதாக இந்த மாடலின் ரெண்டர் இணையத்தில் வெளியாகி இருந்தது. அதில் இந்த டேப்லெட் அளவில் சிறிய பெசல், லோசெஞ் வடிவ கேமரா பம்ப்ப, எல்இடி பிளாஷ் உள்ளிட்டவைகளை கொண்டிருப்பதும் தெரியவந்தது.

    Photo Courtesy: mysmartprice

    • அசுஸ் நிறுவனம் இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட போல்டபில் லேப்டாப் மாடலை விரைவில் விற்பனைக்கு கொண்டு வருகிறது.
    • புதிய அசுஸ் போல்டபில் லேப்டாப் உலகின் முதல் இண்டெல் இவோ சான்று பெற்ற சாதனம் ஆகும்.

    உலகின் முதல் 17.3 இன்ச் போல்டபில் OLED லேப்டாப்- ஜென்புக் 17 போல்டு OLED சமீபத்தில் நடந்து முடிந்த 2022 சிஇஎஸ் நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த போல்டபில் லேப்டாப்பிற்கான இந்திய முன்பதிவு அதிகாரப்பூர்வமாக துவங்கி உள்ளது.

    புதிய போல்டபில் லேப்டாப்-ஐ உருவாக்க பிஒஇ டெக்னாலஜி மற்றும் இண்டெல் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றியதாக அசுஸ் தெரிவித்து இருக்கிறது. இதில் 17 இன்ச் 2.5K ஸ்கிரீன் உள்ளது. இதனை மடிக்கும் போது 12.5 இன்ச் லேப்டாப் போன்று பயன்படுத்த முடியும்.

    அசுஸ் எர்கோசென்ஸ் ப்ளூடுத் கீபோர்டு, டச்பேட் உள்ளிட்டவைகள் அடங்கிய போல்டிங் டிசைன் இருப்பதால், இந்த சாதனத்தை கணினி, லேப்டாப், டேப்லெட், ஆன்-ஸ்கிரீன் கீபோர்டு, புக் மற்றும் எக்ஸ்டெண்ட் என ஏராளமோன மோட்களில் பயன்படுத்த முடியும். இந்த லேப்டாப் உலகின் முதல் 17.3 இன்ச் மடிக்கக்கூடிய OLED இண்டெல் இவோ சான்று பெற்ற சாதனம் ஆகும்.

    புதிய ஜென்புக் 17 போல்டு மாடலில் இரண்டு யுஎஸ்பி சி தண்டர்போல்ட் 4 போர்ட்கள், பெரிய 75Wh பேட்டரி, 12th Gen இண்டெல் கோர் i7 பிராசஸர், இண்டெல் ஐரிஸ் XE GPU மற்றும் இண்டெல் வைபை 6E போன்ற அம்சங்கள் உள்ளன.

    அசுஸ் ஜென்புக் 17 போல்டு OLED அம்சங்கள்:

    17.3 இன்ச் 2560x1920 பிக்சல் FOLED டிஸ்ப்ளே

    இண்டெல் கோர் i7 பிராசஸர்

    இண்டெல் ஐரிஸ் Xe கிராபிக்ஸ்

    16 ஜிபி LPDDR5 ரேம்

    1 டிபி (1000 ஜிபி) NVMe PCie 4.0 SSD

    விண்டோஸ் 11 ஹோம் / ப்ரோ

    சாஃப்ட் கீபோர்டு, 1.4mm கீ-டிராவல்

    5MP பிரைமரி கேமரா, IR அம்சம்

    US MIL-STD 810H ராணுவ தரம்

    வைபை 6E, ப்ளூடூத் 5.2, 2x தண்டர்போல்ட் 4

    1x 3.5mm காம்போ ஆடியோ ஜாக்

    75 வாட் ஹவர் பேட்டரி

    யுஎஸ்பி டைப் சி, 65 வாட் ஏசி அடாப்டர்

    முன்புதிவு விவரங்கள்:

    புதிய அசுஸ் ஜென்புக் 17 போல்டு OLED மாடலை முன்பதிவு செய்வோர், இதனை ரூ. 2 லட்சத்து 84 ஆயிரத்து 290 என்ற விலையில் வாங்கிட முடியும். இத்துடன் ரூ. 5 ஆயிரம் வரை கேஷ்பேக் மற்றும் ரூ. 40 ஆயிரத்து 700 வரை எக்சேன்ஜ் மதிப்பு வழங்கப்படுகிறது. இத்துடன் முன்பதிவு செய்வோருக்கு ரூ. 19 ஆயிரத்து 500 மதிப்புள்ள 500 ஜிபி SSD மற்றும் ரூ. 7 ஆயிரத்து 600 மதிப்புள்ள வாரண்டி எக்ஸ்டென்ஷன் வழங்கப்படுகிறது.

    முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வரும் நிலையில், இதன் விற்பனை நவம்பர் 10 ஆம் தேதி துவங்குகிறது. இதன் விலை ரூ. 3 லட்சத்து 29 ஆயிரத்து 990 ஆகும். விற்பனை அசுஸ் இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் நடைபெறும்.

    • ஃபயர் போல்ட் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடல் இந்திய சந்தையில் அறிமுகமாகி இருக்கிறது.
    • புதிய ஸ்மார்ட்வாட்ச் ப்ளூடூத் காலிங், வளைந்த டிஸ்ப்ளே என ஏராளமான அம்சங்களை கொண்டிருக்கிறது.

    ஃபயர் போல்ட் நிறுவனம் இந்திய சந்தையில் டேசில் பிளஸ் பெயரில் புது ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் டிசைன் அதன் முந்தைய மாடல்களில் இருப்பதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது. சதுரங்க வடிவம் கொண்ட டயல் கொண்டிருக்கும் ஸ்மார்ட்வாட்ச் 1.83 இன்ச் அளவில் வளைந்த டிஸ்ப்ளே, ப்ளூடூத் காலிங் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.

    புதிய ஃபயர் போல்ட் டேசில் பிளஸ் ஸ்மார்ட்வாட்ச் 60-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்களை கொண்டிருக்கிறது. எனினும், இவை பற்றி எந்த தகவலும் வழங்கப்படவில்லை. இத்துடன் IP68 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, SpO2 மாணிட்டரிங், ஹார்ட் ரேட் டிராக்கிங், ஸ்லீப் மாணிட்டரிங் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

    வானிலை விவரங்கள், செடண்டரி ரிமைண்டர் மற்றும் வாட்டர் ரிமைண்டர் போன்ற தகவல்களை வழங்க ஸ்மார்ட் அசிஸ்டண்ட் வசதியும் இந்த ஸ்மார்ட்வாட்ச்-இல் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் முழு சார்ஜ் செய்தால் 5 முதல் 8 நாட்கள் வரையிலான பேட்டரி பேக்கப் வழங்குகிறது. ஸ்டாண்ட்-பை மோடில் இந்த ஸ்மார்ட்வாட்ச் 30 நாட்கள் வரையிலான பேக்கப் வழங்குகிறது.

    புதிய ஃபயர் போல்ட் டேசில் பிளஸ் ஸ்மார்ட்வாட்ச் பிளாக், புளூ, கோல்டு, சில்வர் மற்றும் பிளாக் கோல்டு போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1,599 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை அமேசான் தளத்தில் நடைபெறுகிறது.

    • இன்பினிக்ஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் டிவி மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
    • இந்த ஸ்மார்ட் டிவியில் பில்ட்-இன் ஒடிடி ஆப்ஸ் மற்றும் டால்பி ஆடியோ வசதிகளை கொண்டிருக்கிறது.

    டிரான்சிஷன் குரூப் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய இன்பினிக்ஸ் 43 Y1 ஸ்மார்ட் டிவி மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஸ்மார்ட் டிவி 43 இன்ச் FHD LED டிஸ்ப்ளே, 300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்டிருக்கிறது. ஸ்மார்ட் டிவி என்ற போதிலும் இந்த மாடல் லினக்ஸ் ஒஎஸ் கொண்டிருக்கிறது.

    இத்துடன் பிரைம் வீடியோ, சோனிலிவ், ஜீ5, இரோஸ் நௌ போன்ற முன்னணி ஒடிடி சேவைகள் பில்ட்-இன் செய்யப்பட்டுள்ளன. இதில் 20 வாட் பாக்ஸ் ஸ்பீக்கர்கள், டால்பி ஆடியோ போன்ற வசதிகளை கொண்டிருக்கிறது. இத்துடன் ஏராளமான கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த டிவி ரிமோட்-இல் யூடியூப் மற்றும் பிரைம் வீடியோ போன்ற சேவைகளுக்கான ஹாட்-கீ உள்ளது.

    இன்பினிக்ஸ் 43 Y1 அம்சங்கள்:

    43 இன்ச் 1920x1080 பிக்சல் FHD டிஸ்ப்ளே

    குவாட் கோர் பிராசஸர்

    மாலி ஜி31 GPU

    4 ஜிபி மெமரி

    லினக்ஸ் ஒஎஸ்

    யூடியூப், பிரைம் வீடியோ, ஜீ5, ஆஜ் டக், சோனி லிவ், இரோஸ் நௌ, ஹங்காமா, பிலெக்ஸ், யப் டிவி

    வைபை, 2x HDMI, 2x USB போர்ட்கள், 1 RF இன்புட், 1 AV இன்புட், 1 ஹெட்போன் ஜாக்

    20 வாட் (2x10 வாட்) ஸ்பீக்கர்கள், டால்பி ஆடியோ

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    இன்பினிக்ஸ் 43 Y1 மாடலின் விலை இந்திய சந்தையில் ரூ. 13 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை விரைவில் ப்ளிப்கார்ட் தளத்தில் துவங்க இருக்கிறது.

    • ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் புதிய ஜி11 பிளஸ் ஸ்மார்ட்போனுடன் நோக்கியா டி10 டேப்லெட்டின் புது வெர்ஷனை அறிமுகம் செய்தது.
    • இந்திய சந்தையில் புதிய நோக்கியா டி10 டேப்லெட் எல்டிஇ வேரியண்ட் விற்பனை விரைவில் துவங்க இருக்கிறது.

    ஹெச்எம்டி குளோபல் நஇறுவனம் நோக்கியா டி10 டேப்லெட்-ஐ கடந்த மாதம் அறிமுகம் செய்து இருந்தது. தற்போது இந்த டேப்லெட்டின் எல்டிஇ வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. புதிய நோக்கியா டி10 எல்டிஇ வேரியண்ட் விற்பனை அக்டோபர் 15 ஆம் தேதி துவங்க இருக்கிறது.

    நோக்கியா டி10 அம்சங்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இதில் 8 இன்ச் ஹெச்டி ஸ்கிரீன், யுனிசாக் டி606 பிராசஸர், அதிகபட்சம் 4ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 12 ஒஎஸ், 8MP பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், 2MP செல்பி கேமரா மற்றும் 5250 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த டேப்லெட்டிற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒஎஸ் அப்டேட் மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு மாதாந்திர செக்யுரிட்டி அப்டேட் வழங்கப்படுகிறது.

    இந்த டேப்லெட் கைரேகை சென்சார் கொண்டிருக்கவில்லை, மாறாக பேஸ் அன்லாக் வசதியுடன் கிடைக்கிறது. இத்துடன் மாஸ்க் மோட் உள்ளது. இதை கொண்டு முகக் கவசம் அணிந்த நிலையிலும் டேப்லெட்-ஐ அன்லாக் செய்ய முடியும்.

    நோக்கியா டி10 அம்சங்கள்:

    8 இன்ச் 1280x800 பிக்சல் HD ஸ்கிரீன்

    1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் யுனிசாக் டி606 பிராசஸர்

    மாலி ஜி57 MP1 GPU

    3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி

    4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    ஆண்ட்ராய்டு 12

    8MP பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்

    2MP செல்பி கேமரா

    3.5 எம்எம் ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஒசோ பிளேபேக்

    ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்

    4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத் 5

    யுஎஸ்பி டைப் சி

    5250 எம்ஏஹெச் பேட்டரி

    10 வாட் சார்ஜிங்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    நோக்கியா டி10 3ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி எல்டிஇ மாடல் விலை ரூ. 12 ஆயிரத்து 799 என்றும் 4 ஜிபி ரேம், 64 ஜிபி எல்டிஇ மாடல் விலை ரூ. 13 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை அக்டோபர் 15 ஆம் தேதி நோக்கியா வலைதளம் மற்றும் முன்னணி வலைதளங்கள், ஆப்லைன் விற்பனை மையங்களில் நடைபெறுகிறது.

    • இந்திய நிறுவனமான ஸ்வாட் புதிய வயர்லெஸ் இயர்பட்ஸ்-ஐ அறிமுகம் செய்து இருக்கிறது.
    • இந்தியாவில் தனது சாதனங்களை விளம்பரப்படுத்த கிரிகெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவை ஸ்வாட் நிறுவனம் நியமித்து இருக்கிறது.

    இந்திய ஸ்மார்ட்-வியபில் பிராண்டு ஸ்வாட் வயர்லெஸ் இயர்பட்ஸ் பிரிவில் புதிதாக ஏர்லிட் 004 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்-ஐ அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஏர்லிட் 004 தலைசிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும் திறன் கொண்டிருக்கிறது. அன்றாட பணிகளில் கவனம் செலுத்துவோருக்கு ஏற்ற மியூசிக் வழங்க ஏதுவாக புது இயர்பட்ஸ் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    சமீபத்தில் ஸ்வாட் நிறுவனம் இந்தியாவில் தனது சாதனங்களை விளம்பரப்படுத்த இந்திய அணியின் பிரபல கிரிகெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவை விளம்பர தூதராக நியமனம் செய்தது. இத்துடன் ஆர்மர் 007 பெயரில் புது ஸ்மார்ட்வாட்ச் மாடலையும் ஸ்வாட் அறிமுகம் செய்து இருக்கிறது. இது ப்ளூடூத் காலிங் வசதி கொண்டிருக்கிறது.

    ஸ்வாட் ஏர்லிட் 004 இயர்பட்ஸ் காதுகளில் மிகவும் சவுகரிய அனுபவம் வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த இயர்பட்ஸ் IPX4 தர ஸ்வெட் ப்ரூப் வசதி கொண்டிருக்கிறது. இதில் ப்ளூடூத் 5.0 வசதி உள்ளது. இதை கொண்டு பத்து மீட்டர்கள் தொலைவில் உள்ள சாதனங்களுடனும் இணைப்பில் இருக்க முடியும். ஏர்லிட் 004 இயர்பட்ஸ் உடன் காந்த வசதி கொண்ட சார்ஜர் வழங்கப்படுகிறது.

    இதனுடன் வழங்கப்படும் சார்ஜிங் கேசில் 400 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இதனை முழுமைாக சார்ஜ் செய்ய 60 நிமிடங்கள் ஆகும். இதன் இயர்பட்களில் 40 எம்ஏஹெச் பேட்டரி உள்ளது. இத்துடன் 10 மில்லிமீட்டர் டைனமிக் டிரைவர்கள் உள்ளன. முன்னதாக ஸ்வாட் நிறுவனம் ஏர்லிட் 005 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்-ஐ இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருந்தது.

    இந்திய சந்தையில் புதிய ஸ்வாட் ஏர்லிட் 004 இயர்பட்ஸ் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1099 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை ஸ்வாட் லைப்ஸ்டைல் மற்றும் அமேசான் வலைதளத்தில் நடைபெறுகிறது. இதோடு முன்னணி ஆப்லைன் ஸ்டோர்களிலும் விற்பனைக்கு கிடைக்கிறது.

    ×