search icon
என் மலர்tooltip icon

    கணினி

    ஐபேட்-இல் டாக் அம்சம் - இணையத்தில் லீக் ஆன சூப்பர் தகவல்
    X

    ஐபேட்-இல் டாக் அம்சம் - இணையத்தில் லீக் ஆன சூப்பர் தகவல்

    • ஆப்பிள் நிறுவனம் தனது ஐபேட் மாடலை ஸ்மார்ட் டிஸ்ப்ளே போன்று பயன்படுத்த புது வசதியை வழங்க இருக்கிறது.
    • அடுத்த ஆண்டு இதற்கான வசதி வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

    ஆப்பிள் நிறுவனம் ஐபேட் சாதனத்திற்கான டாக் ஒன்றை உருவாக்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை கொண்டு ஐபேட் மாடலை ஸ்மார்ட் டிஸ்ப்ளே போன்றும் பயன்படுத்தலாம் என கூறப்படுகிறது. ஐபேட் மாடலுக்கான டாக் அடுத்த ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது. முன்னதாக ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபேட் ப்ரோ மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.

    இத்துடன் ஆப்பிள் நிறுவனம் டேப்லெட்-ஐ ஸ்பீக்கர் ஹப் உடன் இணைக்க செய்யும் அம்சத்தை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அமேசான் நிறுவனம் தனது ஃபயர் டேப்லெட் மாடல்களில் இதே போன்ற அம்சத்தை ஏற்கனவே வழங்கி வருகிறது. இந்த சாதனம் பயனர்கள் டேப்லெட்-ஐ சார்ஜ் செய்ய டாக் செய்து அதனை ஸ்மார்ட் டிஸ்ப்ளே போன்று பயன்படுத்த வழி செய்கிறது.

    கூகுள் நிறுவனம் சமீபத்தில் தான் தனது பிக்சல் டேப்லெட்-க்கு டாக்-ஐ அறிமுகம் செய்யப் போவதாக அறிவித்தது. இது காந்த வசதி கொண்ட சார்ஜிங் ஸ்டேஷன் மற்றும் ஸ்பீக்கர் போன்று செயல்படும். டேப்லெட் டாக்-இன் மீது வைத்தால் அதனை ஸ்மார்ட் டிஸ்ப்ளே போன்று பயன்படுத்தலாம். இதில் கூகுள் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் ஸ்மார்ட் ஹோம் சாதனங்களை வாய்ஸ் மூலம் இயக்க முடியும்.

    கடந்த ஆண்டு வெளியான தகவல்களின் படி ஆப்பிள் நிறுவனம் ஆப்பிள் டிவி மற்றும் ஸ்மார்ட் ஸ்பீக்கர் சாதனத்தை அறிமுகம் செய்வதாக கூறப்பட்டது. இதில் பில்ட்-இன் கேமரா வழங்கப்பட இருப்பதாகவும், இந்த சாதனம் தொடர்ந்து உருவாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

    Next Story
    ×