search icon
என் மலர்tooltip icon

    கணினி

    நோக்கியா டி10 எல்டிஇ வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம் - விலை எவ்வளவு தெரியுமா?
    X

    நோக்கியா டி10 எல்டிஇ வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம் - விலை எவ்வளவு தெரியுமா?

    • ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் புதிய ஜி11 பிளஸ் ஸ்மார்ட்போனுடன் நோக்கியா டி10 டேப்லெட்டின் புது வெர்ஷனை அறிமுகம் செய்தது.
    • இந்திய சந்தையில் புதிய நோக்கியா டி10 டேப்லெட் எல்டிஇ வேரியண்ட் விற்பனை விரைவில் துவங்க இருக்கிறது.

    ஹெச்எம்டி குளோபல் நஇறுவனம் நோக்கியா டி10 டேப்லெட்-ஐ கடந்த மாதம் அறிமுகம் செய்து இருந்தது. தற்போது இந்த டேப்லெட்டின் எல்டிஇ வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. புதிய நோக்கியா டி10 எல்டிஇ வேரியண்ட் விற்பனை அக்டோபர் 15 ஆம் தேதி துவங்க இருக்கிறது.

    நோக்கியா டி10 அம்சங்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இதில் 8 இன்ச் ஹெச்டி ஸ்கிரீன், யுனிசாக் டி606 பிராசஸர், அதிகபட்சம் 4ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 12 ஒஎஸ், 8MP பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், 2MP செல்பி கேமரா மற்றும் 5250 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த டேப்லெட்டிற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒஎஸ் அப்டேட் மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு மாதாந்திர செக்யுரிட்டி அப்டேட் வழங்கப்படுகிறது.

    இந்த டேப்லெட் கைரேகை சென்சார் கொண்டிருக்கவில்லை, மாறாக பேஸ் அன்லாக் வசதியுடன் கிடைக்கிறது. இத்துடன் மாஸ்க் மோட் உள்ளது. இதை கொண்டு முகக் கவசம் அணிந்த நிலையிலும் டேப்லெட்-ஐ அன்லாக் செய்ய முடியும்.

    நோக்கியா டி10 அம்சங்கள்:

    8 இன்ச் 1280x800 பிக்சல் HD ஸ்கிரீன்

    1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் யுனிசாக் டி606 பிராசஸர்

    மாலி ஜி57 MP1 GPU

    3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி

    4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    ஆண்ட்ராய்டு 12

    8MP பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்

    2MP செல்பி கேமரா

    3.5 எம்எம் ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஒசோ பிளேபேக்

    ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்

    4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத் 5

    யுஎஸ்பி டைப் சி

    5250 எம்ஏஹெச் பேட்டரி

    10 வாட் சார்ஜிங்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    நோக்கியா டி10 3ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி எல்டிஇ மாடல் விலை ரூ. 12 ஆயிரத்து 799 என்றும் 4 ஜிபி ரேம், 64 ஜிபி எல்டிஇ மாடல் விலை ரூ. 13 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை அக்டோபர் 15 ஆம் தேதி நோக்கியா வலைதளம் மற்றும் முன்னணி வலைதளங்கள், ஆப்லைன் விற்பனை மையங்களில் நடைபெறுகிறது.

    Next Story
    ×