என் மலர்tooltip icon

    கணினி

    • கூகுள் நிறுவனத்தின் பிக்சல் பட்ஸ் A இயர்போன் முற்றிலும் புதிய நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
    • முன்னதாக இந்த இயர்போன் வைட் மற்றும் டார்க் ஆலிவ் என இரண்டு நிறங்களில் மட்டும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

    கூகுள் நிறுவனம் கடந்த ஆண்டு ஜூலை மாத வாக்கில் பிக்சல் பட்ஸ் A மாடலை அறிமுகம் செய்து இருந்தது. ஏராளமான சுவாரஸல்ய அம்சங்களுடன் பிக்சல் பட்ஸ் A விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் இதன் விலையும் சந்தையில் போட்டியை ஏற்படுத்தும் வகையிலேயே நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    முன்னதாக கூகுள் பிக்சல் பட்ஸ் A மாடல் க்ளியர்லி வைட் மற்றும் டார்க் ஆலிவ் என இரண்டு நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது கூகுள் நிறுவனம் பிக்சல் பட்ஸ் A மாடலை சார்கோல் எனும் புதிய நிறத்தில் அறிமுகம் செய்து இருக்கிறது. பிக்சல் 7, பிக்சல் 7 ப்ரோ, பிக்சல் வாட்ச் சாதனங்களுடன் பிக்சல் பட்ஸ் A சார்கோல் நிற வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டது.

    பிக்சல் பட்ஸ் A சார்கோல் நிற வேரியண்ட் விலையும் 99 டாலர்கள் என்றே நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. க்ளியர்லி வைட் மற்றும் டார்க் ஆலிவ் நிற வேரியண்ட்களும் இதே விலையில் தான் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. சார்கோல் நிற பிக்சல் பட்ஸ் A முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு அமெரிக்கா, கனடா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஐயர்லாந்து, ஸ்பெயின் என பல்வேறு நாடுகளில் நடைபெறுகிறது.

    2019 ஆண்டு கூகுள் அறிமுகம் செய்த பிக்சல் பட்ஸ் மாடலின் குறைந்த விலை எடிஷனாக கடந்த ஆண்டு பிக்சல் பட்ஸ் A அறிமுகம் செய்யப்பட்டது. பிக்சல் பட்ஸ் A மாடலில் 12 மில்லிமீட்டர் டைனமிக் டிரைவர்கள் உள்ளன. இத்துடன் அடாப்டிவ் சவுண்ட், IPX4 வாட்டர் மற்றும் ஸ்வெட் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. கனெக்டிவிட்டிக்கு ப்ளூடூத் 5 வழங்கப்பட்டு உள்ளது.

    • சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய கேமிங் மானிட்டரை விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது.
    • இந்த மானிட்டரில் அதிகபட்சம் 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வசதி வழங்கப்பட்டு உள்ளது.

    சாம்சங் நிறுவனத்தின் ஒடிசி ஆர்க் கேமிங் மானிட்டர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. முன்னதாக இந்த மானிட்டர் 2022 ஐஎப்ஏ நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. இதில் 55 இன்ச் வளைந்த ஸ்கிரீன், QVGA தொழில்நுட்பம் மற்றும் மினி எல்இடி லைட்டிங் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் இதில் 14-பிட் VA QLED டிஸ்ப்ளே, HDR10+, AMD பிரீசின்க் பிரீமியம் ப்ரோ, 165Hz ரிப்ரெஷ் ரேட், 1 மில்லி செகண்ட் கிரே-டு-கிரே ரெஸ்பான்ஸ் டைம் மற்றும் 4K ரெசல்யூஷன் உள்ளது.

    இதில் உள்ள கேம் பார் கொண்டு டிஸ்ப்ளே செட்டிங்களை மாற்றிக் கொள்ளலாம். இத்துடன் ஆக்டிவேட் செய்யப்பட்ட ஒடிசி ஆர்க் மூலம் நான்கு வீடியோ இன்புட்களை இயக்க முடியும். இதில் உள்ள சாம்சங் கேமிங் ஹப் மூலம் அமேசான் லூனா, மைக்ரோசாப்ட் எக்ஸ்பாக்ஸ் கிளவுட் மற்றும் என்விடியா ஜீஃபோர்ஸ் நௌ உள்ளிட்டவைகளை இயக்க முடியும். இத்துடன் டால்பி அட்மோஸ், 60 வாட் 2.2.2 சேனல் ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இந்த மானிட்டர் டைசன் ஒஎஸ் மூலம் இயங்குகிறது. இதன் மூலம் ஆப்பிள் டிவி பிளஸ், டிஸ்னி பிளஸ், நெட்ப்ளிக்ஸ், பிரைம் வீடியோ உள்ளிட்டவைகளை பயன்படுத்த முடியும். இத்துடன் அலெக்சா வசதியும் உள்ளது. இதில் சாம்சங் ஹெல்த், ஸ்மார்ட்திங்ஸ், வைபை 5, மிராகேஸ்ட், ப்ளூடூத் 5.2, என்எப்சி, யுஎஸ்பி டைப் சி கனெக்டர், ஈத்தர்நெட் போர்ட், நான்கு ஹெச்டிஎம்ஐ 2.1 கனெக்‌ஷன்கள் உள்ளன.

    புதிய சாம்சங் ஒடிசி ஆர்க் மானிட்டருடன் உயரத்தை அட்ஜஸ்ட் செய்வதோடு பல வழிகளில் வசதியாக வைத்துக் கொள்ள உதவும் ஸ்டாண்ட் வழங்கப்படுகிறது. இந்திய சந்தையில் சாம்சங் ஒடிசி ஆர்க் 55 இன்ச் பிளாக்‌ஷிப் கேமிங் மானிட்டர் விலை ரூ. 2 லட்சத்து 19 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.

    • கூகுள் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி பிக்சல் வாட்ச் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.
    • புதிய பிக்சல் வாட்ச் பிக்சல் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது.

    கூகுள் நிறுவனத்தின் மேட் பை கூகுள் 22 நிகழ்வில் பிக்சல் வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டது. இது கூகுள் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்வாட்ச் ஆகும். பிரீமியம் ஸ்மார்ட்வாட்ச் பிரிவில் அறிமுகமாகி இருக்கும் பிக்சல் வாட்ச் வியர் ஒஎஸ் 3.5 மற்றும் 4ஜி எல்டிஇ கனெக்டிவிட்டி கொண்டிருக்கிறது. இத்துடன் உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் சார்ந்த அம்சங்களை வழங்க பிட்பிட் இண்டகிரேஷன் வழங்கப்பட்டு உள்ளது.

    புதிய பிக்சல் வாட்ச் மாடலில் வட்வ வடிவில் 3டி டோம்டு கிளாஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இது ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாடி கொண்டிருக்கிறது. பிக்சல் வாட்ச் ஸ்கிராட்ச் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது. இது வலதுபுறம் கிரவுனிற்கு மேல் பட்டன் ஒன்று வழங்கப்பட்டு இருக்கிறது. இது சமீபத்தில் பயன்படுத்தப்பட்ட செயலிகளை காண்பிக்கும். இத்துடன் 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட AMOLED டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது.

    இந்த ஸ்மார்ட்வாட்ச் இதய துடிப்பு விவரங்களை கச்சிதமாக டிராக் செய்வதோடு, ஜிபிஎஸ் வசதி, இசிஜி ஆப் சப்போர்ட், உறக்கத்தை டிராக் செய்யும் சென்சார்களை கொண்டிருக்கிறது. இத்துடன் பிட்பிட் செயலியுடன் இணைந்து செயல்படும் வசதியை பிக்சல் வாட்ச் கொண்டிருக்கிறது. புதிய பிக்சல் வாட்ச் 32 ஜிபி மெமரி, மூன்று மாதங்களுக்கு இலவச யூடியூப் பிரீமியம் சந்தா வழங்கப்பட்டு இருக்கிறது.

    கூகுள் பிக்சல் வாட்ச் மாடல் ஷேம்பெயின் கோல்டு கேஸ் மற்றும் ஹசெல் ஆக்டிவ் பேண்ட், மேட் பிளாக் கேஸ் மற்றும் அப்சிடியன் ஆக்டிவ் பேண்ட், பாலிஷ்டு சில்வர் கேஸ் மற்றும் சார்கோல் ஆக்டிவ் பேண்ட் மற்றும் சாக் ஆக்டிவ் பேண்ட் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் 20-க்கும் மேற்பட்ட பேண்ட் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

    புதிய பிக்சல் வாட்ச் ப்ளூடூத் வெர்ஷன் விலை 349.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 28 ஆயிரத்து 750 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் எல்டிஇ வெர்ஷன் விலை 399.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 32 ஆயிரத்து 870 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை அக்டோபர் 13 ஆம் தேதி துங்குகிறது. இதன் இந்திய வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.

    • ஆப்பிள் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக தனது ஐபோன் உற்பத்தியை இந்தியாவிலும் மேற்கொண்டு வருகிறது.
    • சமீபத்திய ஐபோன் 14 சீரிஸ் உற்பத்தியும் இந்தியாவில் துவங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    ஆப்பிள் நிறுவனம் கடந்த ஆண்டுகளில் தனது ஐபோன் உற்பத்தியை சீனாவில் இருந்து மாற்றுவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வரிசையில், ஐபோன் உற்பத்தி சீனா மட்டுமின்றி இந்தியா மற்றும் சில ஆசிய நாடுகளில் மாற்றப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், ஐபோன் மட்டுமின்றி ஏர்பாட்ஸ் மற்றும் பீட்ஸ் உற்பத்தியையும் இந்தியாவுக்கு மாற்ற ஆப்பிள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    புதிய பீட்ஸ் ஹெட்போன்களின் உற்பத்தியை இந்தியாவில் மேற்கொள்ள ஆப்பிள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஏர்பாட்ஸ் உற்பத்தியையும் இந்தியாவுக்கு மாற்ற ஆப்பிள் திட்டமிட்டு வருவதாக தெரிகிறது. சீன உற்பத்தியாளரான லக்ஸ்ஷேர் பிரெசிஷன் இண்டஸ்ட்ரி இந்தியாவில் ஏர்பாட்ஸ் உற்பத்தியை துவங்க இருப்பதாக கூறப்படுகிறது.

    இது தவிர ஃபாக்ஸ்கான் நிறுவனம் பீட்ஸ் ஹெட்போன்களை இந்தியாவில் உற்பத்தி செய்ய இருக்கிறது. முதற்கட்டமாக லக்ஸ்ஷேர் நிறுவனம் ஏர்பாட்ஸ் உற்பத்தியை வியட்நாமில் மேற்கொள்ள இருக்கிறது. அதன் பின் மெல்ல இந்தியாவிலும் ஏர்பாட்ஸ் உற்பத்தி துவங்கும் என தெரிகிறது. இந்த நிறுவனம் சீனாவில் இருந்து தனது உற்பத்தி ஆலையை மெல்ல மற்ற நாடுகளுக்கு மாற்றும் பணிகளை துவங்கி உள்ளது.

    ஆப்பிள் நிறுவனம் தனது சாதனங்களின் உற்பத்திக்காக சீனாவை சார்ந்து இருக்கும் நிலையை மெல்ல மாற்றிக் கொள்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாகவே சீனாவை அடுத்து இந்தியா, மெக்சிகோ மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளில் தனது சாதனங்களின் உற்பத்தியை மேற்கொள்ள ஆப்பிள் முடிவு செய்துள்ளது.

    • சியோமி நிறுவனத்தின் ரெட்மிபேட் டேப்லெட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
    • புதிய ரெட்மிபேட் மாடல் நான்கு ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ் வசதி கொண்டிருக்கிறது.

    சியோமி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் ரெட்மிபேட் மாடலை அறிமுகம் செய்தது. புதிய ரெட்மிபேட் மாடலில் 10.6 இன்ச் 2K LCD ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் ஹீலியோ ஜி99 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 8MP பிரைமரி கேமரா, 8MP செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

    ரெட்மிபேட் மாடல் ஆண்ட்ராய்டு 12 மற்றும் MIUI13 ஒஎஸ் கொண்டிருக்கிறது. இத்துடன் இரண்டு ஆண்ட்ராய்டு ஒஎஸ் அப்டேட் மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு செக்யுரிட்டி அப்டேட்கள் வழங்குவதாக சியோமி அறிவித்து இருக்கிறது. இந்த டேப்லெட் 8000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. ரெட்மிபேட் டேப்லெட் உடன் 22.5 வாட் சார்ஜர் வழங்கப்படுகிறது.

    ரெட்மிபேட் அம்சங்கள்:

    10.61 இன்ச் 2000x1200 பிக்சல் LCD ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட்

    ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி99 பிராசஸர்

    Arm மாலி G57 Mc2

    3 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி

    4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி

    6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    ஆண்ட்ராய்டு 12 மற்றும் MIUI 13

    8MP பிரைமரி கேமரா

    8MP செல்பி கேமரா

    யுஎஸ்பி டைப் சி ஆடியோ, டால்பி அட்மோஸ், குவாட் ஸ்பீக்கர்கள்

    வைபை, ப்ளூடூத் 5.3, யுஎஸ்பி டைப் சி

    8000 எம்ஏஹெச் பேட்டரி

    18 வாட் சார்ஜிங்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    ரெட்மி பேட் மாடல் கிராபைட் கிரே, மூன்லைட் சில்வர் மற்றும் மிண்ட் கிரீன் என மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் 3 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 14 ஆயிரத்து 999 என்றும் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 17 ஆயிரத்து 999 என்றும் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 19 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    அறிமுக சலுகையாக ரெட்மி பேட் விலை முறையே ரூ. 12 ஆயிரத்து 999, ரூ. 14 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 16 ஆயிரத்து 999 என மாற்றப்பட்டு இருக்கிறது. விற்பனை ப்ளிப்கார்ட், Mi அதிகாரப்பூர்வ வலைதளங்கள், Mi ஹோம் ஸ்டோர், ஆப்லைன் ஸ்டோர்களில் இன்று (அக்டோபர் 5) முதல் கிடைக்கிறது.

    • ஒன்பிளஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய நார்டு வாட்ச் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.
    • புதிய நார்டு வாட்ச் மாடலில் 100-க்கும் அதிக ஆன்லைன் கஸ்டமைசேஷன் வசதி கொண்ட வாட்ச் பேஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.

    ஒன்பிளஸ் நிறுவனம் இந்தியாவில் நார்டு சீரிசில் முதல் ஸ்மார்ட்வாட்ச்-ஐ இந்தியாவில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய நார்டு வாட்ச் மாடலில் 1.78 இன்ச் 325PPI AMOLED ஸ்கிரீன், 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 60Hz ரிப்ரெஷ் ரேட் மற்றும் ஆன்லைன் கஸ்டமைசேஷன் வசதியுடன் 100-க்கும் அதிக வாட்ச் பேஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இந்த ஸ்மார்ட்வாட்ச் கேஸ் சின்க் அலாய் மற்றும் பிளாஸ்டிக் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதன் வலதுபுறம் ஒரு பட்டன் மற்றும் சிலிகான் ஸ்டிராப் மற்றும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பக்கிள் வழங்கப்பட்டுள்ளது. இது 105-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்களை கொண்டுள்ளது. இதில் நடைபயிற்சி, ஓட்ட பயிற்சி, யோகா, கிரிகெட் உள்பட பல்வேறு விளையாட்டுகள் அடங்கும்.

    ஒன்பிளஸ் நார்டு வாட்ச் அம்சங்கள்:

    1.78 இன்ச் 325PPI AMOLED ஸ்கிரீன், 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 60Hz ரிப்ரெஷ் ரேட்

    SF32LB555V406 பிராசஸர்

    ஆண்ட்ராய்டு 6.0 மற்றும் ஐஒஎஸ் 11 மற்றும் அதன் பின் வெளியான ஒஎஸ் சப்போர்ட்

    ப்ளூடூத் 5.2 LE

    105-க்கும் அதிக வொர்க்அவுட் மோட்கள்

    வாட்டர் ரெசிஸ்டண்ட் IP68

    3 ஆக்சிஸ் அக்செல்லோமீட்டர், இதய துடிப்பு சென்சார், SpO2 மாணிட்டரிங் சென்சார்

    மியூசிக் கண்ட்ரோல்கள்

    52.4 கிராம் எடை

    230 எம்ஏஹெச் பேட்டரி

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    ஒன்பிளஸ் நார்டு வாட்ச் மாடல் மிட்நைட் பிளாக் மற்றும் டீப் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 4 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை அக்டோபர் 4 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு ஒன்பிளஸ் மற்றும் அமேசான் வலைதளங்களில் துவங்குகிறது.

    புதிய ஒன்பிளஸ் நார்டு வாட்ச் வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 500 உடனடி தள்ளுபடி பெறலாம். எனினும், இந்த சலுகை ஒன்பிளஸ் அதிகாரப்பூர்வ வலைதளம், ஒன்பிளஸ் ஸ்டோர் ஆப் மற்றும் தேர்வு செய்யப்பட்ட ஒன்பிளஸ் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர்களில் மட்டுமே பொருந்தும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி அமேசான் தளத்தில் நார்டு வாட்ச் வாங்கும் போது ரூ. 500 உடனடி தள்ளுபடி பெறலாம்.

    • ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்திய சந்தையில் 5ஜி சேவையை வெளியிடும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • முதற்கட்டமாக ஜியோ 5ஜி சேவைகள் இந்தியாவின் நான்கு முக்கிய நகரங்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

    இந்திய டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ விரைவில் 5ஜி சேவைகளை வெளியிட இருக்கிறது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் முகேஷ் அம்பானி ஜியோ 5ஜி சேவைகள் முதற்கட்டமாக டெல்லி, மும்பை, சென்னை மற்றும் கொல்கத்தா என நான்கு நகரங்களில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்து இருக்கிறார்.

    முதற்கட்டமாக நான்கு நகரங்களில் அறிமுகம் செய்யப்பட்டதும், நாட்டின் மற்ற பகுதிகளிலும் ஜியோ 5ஜி சேவைகள் வெளியிடப்பட உள்ளன. இந்த பணிகள் டிசம்பர் 2023 வாக்கில் நிறைவு பெறும் என தெரிகிறது. ஜியோ 5ஜி சேவைகள் முதலில் 5ஜி எஸ்ஏ எனப்படும் ஸ்டாண்ட்-அலோன் நெட்வொர்க்குகளில் அறிமுகம் செய்யப்படும்.

    முன்னதாக 2016 வாக்கில் 4ஜி சேவைகள் வெளியீட்டின் போது ரிலையன்ஸ் ஜியோ அனைவரும் அதிர்ச்சியடைய செய்தது. இதே பானியை 5ஜி வெளியீட்டின் போதும் ஜியோ மேற்கொள்ளும் என தெரிகிறது. கட்டண ரீதியில் ஜியோ 5ஜி சேவைகள் பெரும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருக்கும் என கூறப்படுகிறது. இது மட்டுமின்றி பல்வேறு இதர வழிகளிலும் ஜியோ தனது திட்டங்களின் மூலம் அதிர்ச்சி அளிக்கும் என தெரிகிறது.

    4ஜி சேவைகளை வெளியிடும் போது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 4ஜி சிம் கார்டுகளை இலவசமாக வழங்கியதோடு, டேட்டா மற்றும் வாய்ஸ் கால் உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்படும் என்றும் அறிவித்தது. இதே போன்ற திட்டத்தை 5ஜி வெளியீட்டிலும் ரிலையன்ஸ் ஜியோ மேற்கொள்ளலாம் என தகவல் வெளியாகி உள்ளது. எனினும், இது பற்றி ரிலையன்ஸ் ஜியோ சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.

    வர்த்தக பயனர்கள் மட்டுமின்றி தொழில்துறை பயனர்களுக்கும் ஜியோ 5ஜி சேவைகள் வழங்கப்பட உள்ளன. டெலிகாம் சந்தையில் 5ஜி வெளியீட்டில் ஜியோவுக்கு போட்டியளிக்கும் வகையில் பல்வேறு நிறுவனங்களும் 5ஜி சேவையை வழங்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளன.

    • சியோமி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ரெட்மி பேட் டேப்லெட் மாடல் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது.
    • புதிய ரெட்மி பேட் டேப்லெட் மொத்தத்தில் மூன்று விதமான நிறங்களில் விற்பனைக்கு வரும் என தெரிகிறது.

    சியோமி நிறுவனம் ரெட்மி பேட் டேப்லெட் மாடலின் இந்திய வெளியீடு அக்டோபர் 4 ஆம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. புதிய ரெட்மி பேட் மாடல் பொழுதுபோக்கு, கேமிங், கல்வி மற்றும் பிரவுசிங் உள்ளிட்டவைகளுக்கு ஏற்ற வகையில் இருக்கும் என சியோமி தெரிவித்து இருக்கிறது. மேலும் இதற்கான டீசரில் ரெட்மி பேட் மாடல் கிரீன் நிறத்தில் கிடைக்கும் என தெரியவந்துள்ளது.

    எனினும், கிரீன் மட்டுமின்றி கிராபைட் கிரே மற்றும் மூன்லைட் சில்வர் போன்ற நிறங்களிலும் ரெட்மி பேட் மாடல் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ரெட்மி பேட் மாடல் 10.6 இன்ச் 2K LCD ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட், 10-பிட் கலர் டெப்த், 400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், மீடியாடெக் ஹீலியோ ஜி99 பிராசஸர், அதிகபட்சம் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    இத்துடன் 8MP பிரைமரி கேமரா, 8MP செல்பி கேமரா, முன்புற கேமரா ஃபோக்கஸ்ஃபிரேம் தொழில்நுட்பத்துடன் வரும் என்றும் இது 105 டிகிரியில் ஃபீல்டு ஆப் வியூ வழங்கும் என தெரிகிறது. ரெட்மி பேட் மாடல் நான்கு ஸ்பீக்கர்கள் மற்றும் டால்பி அட்மோஸ் வசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. பேட்டரியை பொருத்தவரை ரெட்மி பேட் மாடல் 8000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கும் என்றும், 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

    புதிய ரெட்மி பேட் இந்திய விலை விவரங்கள் அடுத்த வாரம் நடைபெற இருக்கும் அறிமுக நிகழ்வில் தெரியவரும். வரும் நாட்களில் இந்த டேப்லெட் பற்றிய கூடுதல் விவரங்களை சியோமி டீசர்கள் வடிவில் வெளியிடும் என்றும் எதிர்பார்க்கலாம்.

    • இண்டெல் மற்றும் சாம்சங் நிறுவனங்கள் இணைந்து உலகின் முதல் ஸ்லைடபில் டிஸ்ப்ளேவை அறிமுகம் செய்துள்ளன.
    • இந்த ஸ்லைடபில் டிஸ்ப்ளே கணினிகளுக்காக உருவாக்கப்பட்டவை ஆகும்.

    இண்டெல் இன்னோவேஷன் டே நிகழ்வை ஒட்டி இண்டெல், சிஇஒ பேட் கெல்சிங்கர் மற்றும் சாம்சங் நிறுவன தலைமை செயல் அதிகாரி ஜெஎஸ் சோய் இணைந்து ஸ்லைடபில் டிஸ்ப்ளே ப்ரோடோடைப்-ஐ அறிமுகம் செய்தனர். இது உலகின் முதல் 17 இன்ச் ஸ்லைடபில் டிஸ்ப்ளே ப்ரோடோடைப் ஆகும்.

    இந்த ஸ்லைடபில் டிஸ்ப்ளேவை ஜன்னல் போன்று பக்கவாட்டு பகுதியில் திறக்க முடியும். கடந்த ஆண்டு சாம்சங் டிஸ்ப்ளே நிறுவனம் ஸ்மார்ட்போனில் சிறிய அளவில் ஸ்லைடபில் டிஸ்ப்ளே ப்ரோடோடைப்-ஐ காட்சிப்படுத்தி இருந்தது. அகலமான மற்றும் செங்குத்தான ஸ்லைடபில் போர்டபில் ப்ரோடோடைப்கள் 2022 மே மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. எனினும், பெரிய டிஸ்ப்ளே கொண்ட சாதனமாக இது அமைந்துள்ளது.

    தென் கொரியா வந்திருந்த போது இந்த ப்ரோடோடைப்-ஐ பார்த்ததாக ஜெஎஸ் சோய் தெரிவித்து இருக்கிறார். இது எதிர்கால கணினிக்கான தலைசிறந்த எடுத்துக் காட்டு தான் இந்த ஸ்லைடபில் டிஸ்ப்ளே என அவர் மேலும் தெரிவித்தார். முன்னதாக அசுஸ் நிறுவனம் சென்புக் 17 போல்டு OLED மடிக்கக்கூடிய லேப்டாப் மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் விற்பனை விரைவில் துவங்க உள்ளது.

    ஸ்லைடபில் டிஸ்ப்ளே மாடல் எப்போது வர்த்தக பயன்பாட்டுக்காக எப்போது அறிமுகம் செய்யப்படும் என இண்டெல் அல்லது சாம்சங் தரப்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. எதிர்காலத்தில் இந்த டிஸ்ப்ளே விற்பனைக்கும் அறிமுகம் செய்யப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றன.

    • ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய நோக்கியா டேப்லெட் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
    • இந்த டேப்லெட் ஆண்ட்ராய்டு 12 ஒஎஸ், 2 ஆண்டுகளுக்கு ஒஎஸ் அப்டேட்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா T10 டேப்லெட் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்து இருக்கிறது. பட்ஜெட் பிரிவில் அறிமுகமாகி இருக்கும் புது டேப்லெட் ஜூலை மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதில் 8 இன்ச் ஹெச்டி ஸ்கிரீன், யுனிசாக் டி606 பிராசஸர், 4 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 12, இரண்டு ஆண்டுகளுக்கு ஒஎஸ் அப்டேட்கள், மூன்று ஆண்டுகளுக்கு மாதாந்திர செக்யுரிட்டி அப்டேட்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இந்த டேப்லெட் 8MP பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், 2MP செல்பி கேமரா, பாலிகார்போனேட் பாடி, யுனிபாடி பாலிமர் டிசைன், நானோ-டெக்ஸ்ச்சர் பினிஷ் மற்றும் 5250 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 10 வாட் சார்ஜிங் வழங்கப்பட்டு இருக்கிறது.

    நோக்கியா T10 அம்சங்கள்:

    8 இன்ச் 1280x800 பிக்சல் ஹெச்டி ஸ்கிரீன்

    1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் யுனிசாக் டி606 பிராசஸர்

    மாலி G57 MP1 GPU

    3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி

    4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    ஆண்ட்ராய்டு 12

    8MP பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்

    2MP செல்பி கேமரா

    3.5 எம்எம் ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்

    ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் (IPX2)

    4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத் 5

    யுஎஸ்பி டைப் சி

    5250 எம்ஏஹெச் பேட்டரி

    10 வாட் சார்ஜிங்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    நோக்கியா T10 டேப்லெட் ஓசன் புளூ நிறத்தில் கிடைக்கிறது. இதன் 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி கொண்ட வைபை மாடல் விலை ரூ. 11 ஆயிரத்து 799 என்றும் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி கொண்ட வைபை மாடல் விலை ரூ. 12 ஆயிரத்து 799 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை நோக்கியா மற்றும் அமேசான் வலைதளங்களில் நடைபெறுகிறது. இதன் எல்டிஇ மற்றும் வைபை மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என நோக்கியா தெரிவித்து உள்ளது.

    • வாட்ஸ்அப் செயலியில் பல்வேறு புது அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.
    • இத்துடன் சில அம்சங்களுக்கான சோதனை துவங்கி நடைபெற்று வருகிறது.

    வாட்ஸ்அப் நிறுவனம் தனது செயலியில் கால் லின்க்ஸ் பெயரில் புது அம்சம் வழங்குவதாக அறிவித்து இருக்கிறது. இந்த புது அம்சம் கொண்டு பயனர்கள் புதிதாக அழைப்பை உருவாக்கவோ அல்லது ஏற்கனவே உள்ள அழைப்பில் இணையவும் முடியும். கால் லின்க்ஸ் ஆப்ஷன் வாட்ஸ்அப் செயலியின் கால்ஸ் டேபில் சேர்க்கப்படுகிறது. இதை கொண்டு ஆடியோ அல்லது வீடியோ அழைப்பிற்கான லின்க்-ஐ உருவாக்க முடியும்.

    இந்த அம்சம் வரும் வாரங்களில் அனைவருக்கும் வழங்கப்படும் என வாட்ஸ்அப் தெரிவித்து இருக்கிறது. எனினும், இதனை பயன்படுத்த பயனர்கள் வாட்ஸ்அப் செயலியின் புது வெர்ஷனை இன்ஸ்டால் செய்திருக்க வேண்டும். இது மட்டுமின்றி வாட்ஸ்அப் செயலியின் க்ரூப் வீடியோ கால் அம்சத்தில் அதிகபட்சம் 32 பேருடன் பேசும் வசதி விரைவில் வழங்கப்பட இருக்கிறது. இதற்கான சோதனையும் துவங்கி இருக்கிறது.

    கால் லின்க்ஸ்-ஐ உருவாக்கி அதனை பல்வேறு தளங்களில் உள்ள நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பி எளிதில் வாட்ஸ்அப் கால் மேற்கொள்ளலாம். கால் லின்க்ஸ்-ஐ ஒரு முறை க்ளிக் செய்தால் நேரடியாக அழைப்பில் இணைய முடியும். இந்த அம்சம் கூகுள் மீட் அல்லது மைக்ரோசாப்ட் டீம்ஸ் தளங்களில் செயல்படுவதை போன்றே இயங்குகிறது. இந்த அம்சம் எந்தெந்த தளங்களில் இயங்கும் என்பது குறித்து வாட்ஸ்அப் எந்த தகவலையும் வழங்கவில்லை.

    வாட்ஸ்அப் க்ரூப் வாய்ஸ் கால் அம்சத்தில் ஏற்கனவே 32 பேருடன் பேசும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த அம்சம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் பயனர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. வாய்ஸ் கால் வரிசையில் தற்போது க்ரூப் வீடியோ கால் சேவையிலும் 32 பேருடன் பேசும் வசதி வழங்கப்பட இருக்கிறது. தற்போது இந்த அம்சம் உருவாக்கப்பட்டு வருகிறது.

    • மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் டிவி மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.
    • இவற்றில் போட் நிறுவனத்தின் சவுண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    மோட்டோரோலா நிறுவனம் இந்திய சந்தையில் ரெவோ2 சீரிசில் ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. இவை சவுண்ட் பை போட் அம்சம் கொண்டுள்ளன. ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் மற்றும் பண்டிகை கால சிறப்பு விற்பனையின் அங்கமாக அறிமுகமாகி இருக்கிறது.

    ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் கொண்டிருக்கும் மோட்டோரோலா ரெவோ2 ஸ்மார்ட் டிவிக்கள் 32 இன்ச் HD, 40 இன்ச் மற்றும் 43 இன்ச் FHD, 43 இன்ச் UHD வேரியண்ட்களில் கிடைக்கின்றன. இந்த ஸ்மார்ட் டிவிக்களில் மீடியாடெக் குவாட் கோர் பிராசஸர் மற்றும் 2 ஜிபி ரேம் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் டால்பி விஷன், HDR10 சப்போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இவை தவிர ஆட்டோ லோ லேடன்சி மோட், மோஷன் எஸ்டிமேஷன் மற்றும் மோஷன் கம்பன்சேஷன், 4K மாடல்களில் லோ புளூ லைட் அம்சம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. HD மற்றும் FHD டிவிக்களில் 24 வாட் ஸ்பீக்கர்கள், டால்பி ஆடியோ, UHD மாடலில் டால்பி அட்மோஸ் வசதி உள்ளது. இவை தலைசிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்குகின்றன. இத்துடன் போட் ஆப்டிமைஸ் செய்த சவுண்ட் கொண்டுள்ளன.

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    மோட்டோரோலா ரெவோ2 32 இன்ச் HD டிவி விலை ரூ. 10 ஆயிரத்து 999 என்றும், 40 இன்ச் மற்றும் 43 இன்ச் FHD டிவி மாடல்கள் விலை முறையே ரூ. 16 ஆயிரத்து 999, ரூ. 19 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன. 43 இன்ச் 4K UHD டிவி விலை ரூ. 22 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய மோட்டோரோலா ரெவோ2 ஸ்மார்ட் டிவி விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெற்று வருகிறது.

    ×