search icon
என் மலர்tooltip icon

    கணினி

    ஏர்பாட்ஸ் உற்பத்தியை இந்தியாவுக்கு மாற்றும் ஆப்பிள்?
    X

    ஏர்பாட்ஸ் உற்பத்தியை இந்தியாவுக்கு மாற்றும் ஆப்பிள்?

    • ஆப்பிள் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக தனது ஐபோன் உற்பத்தியை இந்தியாவிலும் மேற்கொண்டு வருகிறது.
    • சமீபத்திய ஐபோன் 14 சீரிஸ் உற்பத்தியும் இந்தியாவில் துவங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    ஆப்பிள் நிறுவனம் கடந்த ஆண்டுகளில் தனது ஐபோன் உற்பத்தியை சீனாவில் இருந்து மாற்றுவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வரிசையில், ஐபோன் உற்பத்தி சீனா மட்டுமின்றி இந்தியா மற்றும் சில ஆசிய நாடுகளில் மாற்றப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், ஐபோன் மட்டுமின்றி ஏர்பாட்ஸ் மற்றும் பீட்ஸ் உற்பத்தியையும் இந்தியாவுக்கு மாற்ற ஆப்பிள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    புதிய பீட்ஸ் ஹெட்போன்களின் உற்பத்தியை இந்தியாவில் மேற்கொள்ள ஆப்பிள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஏர்பாட்ஸ் உற்பத்தியையும் இந்தியாவுக்கு மாற்ற ஆப்பிள் திட்டமிட்டு வருவதாக தெரிகிறது. சீன உற்பத்தியாளரான லக்ஸ்ஷேர் பிரெசிஷன் இண்டஸ்ட்ரி இந்தியாவில் ஏர்பாட்ஸ் உற்பத்தியை துவங்க இருப்பதாக கூறப்படுகிறது.

    இது தவிர ஃபாக்ஸ்கான் நிறுவனம் பீட்ஸ் ஹெட்போன்களை இந்தியாவில் உற்பத்தி செய்ய இருக்கிறது. முதற்கட்டமாக லக்ஸ்ஷேர் நிறுவனம் ஏர்பாட்ஸ் உற்பத்தியை வியட்நாமில் மேற்கொள்ள இருக்கிறது. அதன் பின் மெல்ல இந்தியாவிலும் ஏர்பாட்ஸ் உற்பத்தி துவங்கும் என தெரிகிறது. இந்த நிறுவனம் சீனாவில் இருந்து தனது உற்பத்தி ஆலையை மெல்ல மற்ற நாடுகளுக்கு மாற்றும் பணிகளை துவங்கி உள்ளது.

    ஆப்பிள் நிறுவனம் தனது சாதனங்களின் உற்பத்திக்காக சீனாவை சார்ந்து இருக்கும் நிலையை மெல்ல மாற்றிக் கொள்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாகவே சீனாவை அடுத்து இந்தியா, மெக்சிகோ மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளில் தனது சாதனங்களின் உற்பத்தியை மேற்கொள்ள ஆப்பிள் முடிவு செய்துள்ளது.

    Next Story
    ×