என் மலர்
கணினி
- நத்திங் நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கும் புது சாதனத்திற்கான டீசர் வெளியிடப்பட்டு உள்ளது.
- இந்த சாதனம் நத்திங் இயர் (ஸ்டிக்) எனும் பெயரில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
லண்டனை சேர்ந்த நுகர்வோர் தொழில்நுட்ப நிறுவனமான நத்திங் சில தினங்களுக்கு முன்பு தான் நத்திங் இயர் (ஸ்டிக்) மாடலை அறிமுகம் செய்து இருந்தது. கடந்த ஆண்டு நத்திங் இயர் (1) மாடல் அறிமுகமானதை அடுத்து நத்திங் இயர் (ஸ்டிக்) அறிமுகமானது.
நத்திங் இயர் (ஸ்டிக்) மிகவும் குறைந்த எடை, சவுகரியமான அனுபவத்தை வழங்கும் வடிவமைப்பு கொண்டிருக்கிறது. இந்த இயர்போன் மிகவும் வித்தியாசமான சார்ஜிங் கேஸ் உடன் வருகிறது. இந்த இயர்போன் எளிதில் கொண்டு செல்லும் வகையிலான டிசைன் கொண்டிருக்கிறது. இதனுடன் வரும் கேஸ் தோற்றத்தில் நோக்கியா 705 ட்ரூ வயர்லெஸ் ப்ளூடூத் இயர்பட்ஸ் போன்றே காட்சியளிக்கிறது.
நத்திங் இயர் (ஸ்டிக்) மாடல் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. எனினும், இந்த இயர்போனின் மற்ற விவரங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. வரும் வாரங்களில் புதிய நத்திங் இயர் (ஸ்டிக்) மாடல் பற்றிய கூடுதல் விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
- கிஸ்மோர் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
- இந்த ஸ்மார்ட்வாட்ச் குறுகிய காலக்கட்டத்திற்கு மட்டும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது.
கிஸ்மோர் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய கிஸ்பிட் குளோ ஸ்மார்ட்வாட்ச்-ஐ அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய கிஸ்பிட் குளோ மாடலில் மெல்லிய, எடை குறைந்த மற்றும் ஸ்போர்ட் டிசைன், அலுமினியம் அலாய் பாடி வழங்கப்பட்டு உள்ளது. இதில் 1.37 இன்ச் வட்ட வடிவம் கொண்ட AMOLED டிஸ்ப்ளே, 420x420 பிக்சல் ரெசல்யூஷன், லெதர் ஸ்டிராப்களை கொண்டிருக்கிறது.
இத்துடன் IP68 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, பல்வேறு வாட்ச் பேஸ்கள், பயோமெட்ரிக் சென்சார்கள், இதய துடிப்பு மாணிட்டரிங், SpO2 சென்சார், ஸ்டிரெஸ் டிராக்கிங் என ஏராளமான சுகாதார அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்வாட்ச் ஏராளமான ஸ்போர்ட்ஸ் மோட்களை கொண்டிருக்கிறது.

தற்போது கிஸ்பிட் குளோ மாடல் ரூ. 2 ஆயிரத்து 499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெறுகிறது. ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சிறப்பு விற்பனையின் போது மட்டும் கிஸ்பிட் குளோ வாட்ச் இந்த விலையில் விற்பனை செய்யப்படும். அதன் பின் இந்த ஸ்மார்ட்வாட்ச் ரூ. 3 ஆயிரத்து 499 விலையில் விற்பனை செய்யப்படும்.
கிஸ்பிட் குளோ ஸ்மார்ட்வாட்ச் பிளாக், பிரவுன், பர்கண்டி போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் உடன் பல்வேறு ஸ்டிராப் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.
- சோனி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நாய்ஸ் கேன்சலிங் ஹெட்போன் மாடல் இந்தியாவில் அறிமுகம்.
- முன்னதாக இந்த ஹெட்போன் மே மாத வாக்கில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சோனி நிறுவனத்தின் WH 1000XM5 நாய்ஸ் கேன்சலேஷன் வசதி கொண்ட புது ஹெட்போன் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. மே மாத வாக்கில் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தான் இந்த மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய சோனி WH 1000XM5 மாடலில் இண்டகிரேடெட் பிராசஸர் வி1 உள்ளது. இது சோனியின் ஹெச்டி தர நாய்ஸ் கேன்சலிங் பிராசஸரின் முழு திறனை வெளிக்கொண்டு வரும்.
பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட 30 மில்லிமீட்டர் டிரைவர் யூனிட், எடை குறைந்த, உறுதியான டோம் கார்பன் பைபர் பாகங்களை பயன்படுத்தி சவுண்ட் தரத்தை அதிக இயற்கையாக மாற்றுகிறது. இதில் கூகுள் பாஸ்ட் பேர் அம்சம் உள்ளது. இதை கொண்டு ஆண்ட்ராய்டு சாதனங்களுடன் மிக எளிதில் கனெக்ட் செய்து விட முடியும். இத்துடன் LDAC கோடெக் சப்போர்ட், DSEE எக்ஸ்டிரீம் மற்றும் நுனுக்கமாக வாய்ஸ் பிக்கப் செய்யும் திறன் உள்ளிட்டவை இந்த ஹெட்போனின் சிறப்பம்சங்கள் ஆகும்.

சோனி WH 1000XM5 மாடலில் அடாப்டிவ் சவுண்ட் கண்ட்ரோல் அம்சம் உள்ளது. இது ஆம்பியண்ட் சவுண்ட் செட்டிங்ஸ்-ஐ தலைசிறந்த அனுபவம் கிடைக்கச் செய்யும் வகையில் மாற்றுகிறது. மேலும் மல்டி பாயிண்க் கனெக்ஷன் இருப்பதால் ஒரே சமயத்தில் இரு ப்ளூடூத் சாதனங்களுடன் கனெக்ட் செய்ய முடியும். இந்த ஹெட்போன்களை எங்கு வேண்டுமானாலும் எளிதில் கொண்டு செல்லும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
எனினும், டிசைன் மாற்றப்பட்டு இருப்பதால், சோனி WH 1000XM5 ஹெட்போனை மடிக்க முடியாது. இதில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 30 மணி நேரத்திற்கான பேட்டரி பேக்கப் கிடைக்கும். இத்துடன் யுஎஸ்பி சி பவர் டெலிவரி மூலம் மூன்று நிமிடங்கள் சார்ஜ் செய்தால் மூன்று மணி நேரத்திற்கு பயன்படுத்தலாம்.
இந்தியாவில் சோனி WH 1000XM5 ஹெட்போன் பிளாக் மற்றும் சில்வர் என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் உண்மை விலை ரூ. 34 ஆயிரத்து 990 ஆகும். இதன் விற்பனை அக்டோபர் 8 ஆம் தேதி துவங்குகிறது. அமேசான் மற்றும் shopatsc வலைதளங்களில் இந்த ஹெட்போனிற்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது. அறிமுக சலுகையாக இந்த ஹெட்போன் ரூ. 26 ஆயிரத்து 990 எனும் சிறப்பு விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது.
- ஹானர் நிறுவனம் பல்வேறு டீசர்களை தொடர்ந்து இந்தியாவில் தனது புதிய டேப்லெட் மாடலை அறிமுகம் செய்தது.
- ஜூலை மாத வாக்கில் இதே டேப்லெட் மாடல் சீன சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஹானர் பிராண்டின் புதிய பேட் 8 டேப்லெட் இந்திய சந்தையில் அறிமுகமாகி இருக்கிறது. இது ஹானர் நிறுவனத்தின் புதிய டேப்லெட் மாடல் ஆகும். இதில் 12 இன்ச் 2K எல்சிடி ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 12 சார்ந்த மேஜிக் யுஐ 6.1 ஒஎஸ் கொண்டிருக்கிறது. இத்துடன் 5MP பிரைமரி மற்றும் செல்பி கேமரா சென்சார்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
6.9 மில்லிமீட்டர் அளவில் மெட்டல் பாடி கொண்டிருக்கும் ஹானர் பேட் 8 மாடலில் மொத்தம் எட்டு ஸ்பீக்கர்கள், ஹானர் உருவாக்கிய ஹிஸ்டன் ஆடியோ டியுனிங், டிடிஎஸ் எக்ஸ் அல்ட்ரா சவுண்ட் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் 7250 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 22.5 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.

ஹானர் பேட் 8 அம்சங்கள்:
12 இன்ச் 2000x1200 பிக்சல் 2K டிஸ்ப்ளே
ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர்
அட்ரினோ 610 GPU
4 ஜிபி / 6 ஜிபி ரேம்
128 ஜிபி மெமரி
ஆண்ட்ராய்டு 12 சார்ந்த மேஜிக் யுஐ 6.1
5MP பிரைமரி கேமரா
5MP செல்பி கேமரா
8 ஸ்பீக்கர்கள், ஹானர் ஹிஸ்டன் சவுண்ட், டிடிஎஸ் எக்ஸ் அல்ட்ரா
வைபை, ப்ளூடூத் 5, ஜிபிஎஸ்
யுஎஸ்பி டைப் சி
7250 எம்ஏஹெச் பேட்டரி
22.5 வாட் பாஸ்ட் சார்ஜிங்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
ஹானர் பேட் 8 மாடல் புளூ நிறத்தில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 19 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 21 ஆயிரத்து 999 ஆகும். இதன் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் செப்டம்பர் 23 ஆம் தேதி துவங்குகிறது.
- அமேஸ்பிட் நிறுவனத்தின் புதிய GTS 4 ஸ்மார்ட்வாட்ச் இந்திய சந்தையில் அறிமுகமாகி இருக்கிறது.
- இந்த ஸ்மார்ட்வாட்ச் தலைசிறந்த ஜிபிஎஸ் டிராக்கிங் வசதி கொண்டிருக்கிறது.
அமேஸ்பிட் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய GTS 4 ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. முன்னதாக இதே ஸ்மார்ட்வாட்ச் IFA நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. புதிய அமேஸ்பிட் GTS 4 ஸ்மார்ட்வாட்ச் மேம்பட்ட ஜிபிஎஸ் பொசிஷனிங், 150-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள், ப்ளூடூத் காலிங் மற்றும் ஸ்டான்ட் அலோன் மியூசிக் பிளேபேக் போன்ற வசதிகளை கொண்டிருக்கிறது.
இந்த ஸ்மார்ட்வாட்ச்-இன் ரெகுலர் வெர்ஷனில் 1.75 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, சதுரங்க வடிவம் கொண்ட டயல், மெட்டாலிக் ஃபிரேம், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் நேவிகேஷன் கிரவுன், அதிகபட்சம் 5 மீட்டர்கள் வரை வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 24 மணி நேரத்திற்கான இதய துடிப்பு சென்சார் மற்றும் SpO2 சென்சார், மன உளைச்சல் மற்றும் உறக்க முறைகள் பற்றிய விவரங்களை டிராக் செய்யும் வசதி வழங்கப்பட்டு உள்ளது.

புதிய அமேஸ்பிட் GTS 4 மாடலில் அதிகபட்சம் 150 ஸ்போர்ட்ஸ் மோட்கள், டூயல் பேண்ட் ஜிபிஎஸ் ஆண்டெனா, ஆறு செயற்கைக் கோள் சிஸ்டம்களை சார்ந்து ரூட் ஃபைல் இம்போர்ட் மற்றும் ரியல் டைம் நேவிகேஷன் போன்ற வசதிகள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த ஸ்மார்ட்வாட்ச் ப்ளூடூத் காலிங் வசதி, பில்ட் இன் அலெக்சா வாய்ஸ் அசிஸ்டண்ட், ஜெப் ஒஎஸ் 2.0 கொண்டிருக்கிறது. இதில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் எட்டு நாட்கள் வரையிலான பேட்டரி பேக்கப் கிடைக்கிறது.
அமேஸ்பிட் GTS 4 அம்சங்கள்:
1.75 இன்ச் 390x450 பிக்சல் AMOLED ஸ்கிரீன்
செப் ஒஎஸ் 2.0
150-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள்
பயோ டிராக்கர் 4.0 பயோமெட்ரிக் சென்சார்
வாட்டர் ரெசிஸ்டண்ட்
ப்ளூடூத் 5.0 LE, வைபை, டூயல் பேண்ட் ஜிபிஎஸ்
2.3 ஜிபி பில்ட் இன் மெமரி
மைக்ரோபோன்
ஆப்லைன் வாய்ஸ் அசிஸ்டண்ட்
ப்ளூடூத் மூலம் வாய்ஸ் காலிங்
300 எம்ஏஹெச் பேட்டரி
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
அமேஸ்பிட் GTS 4 ஸ்மார்ட்வாட்ச் இன்பனைட் பிளாக் மற்றும் ரோஸ்பட் பின்க் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 16 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு ஓஉள்ளது. இதன் முன்பதிவு அமேசான் மற்றும் அமேஸ்பிட் இந்தியா வலைதளங்களில் நடைபெறுகிறது. விற்பனை செப்டம்பர் 22 ஆம் தேதி துவங்குகிறது.
- விங்ஸ் நிறுவனத்தின் புதிய நெக்பேண்ட் இயர்போன் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
- இந்த இயர்போன் அதிகபட்சமாக 40 மணி நேர பிளேபேக் வசதி கொண்டுள்ளது.
விங்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் பேண்டம் 210 பெயரில் புது நெக்பேண்ட் இயர்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த இயர்போன் டூயல் பேரிங், 50ms லேக்-ஃபிரீ ஆடியோ சின்க், 40 மணி நேர பேட்டரி பேக்கப் வழங்குகிறது. முன்னதாக விங்ஸ் நிறுவனம் விங்ஸ் 500 கேமிங் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
புதிய விங்ஸ் பேண்டம் 210 மாடல் எடை குறைந்த பாகங்களால் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த இயர்போன் IPX5 கேசிங் கொண்டுள்ளது. மென்மையான சிலிகான் மற்றும் ABS பிளாஸ்டிக் மூலம் விங்ஸ் பேண்டம் 210 இயர்பட்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது. இயர்பட்ஸ்-இன் இரு இயர்பட்களிலும் 13 மில்லிமீட்டர் டிரைவர்கள் வழங்கப்பட்டுள்ளன. பேண்டம் இயர்போன் மற்றும் நெக்பேண்ட்களில் எல்இடி ஹைலைட்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

பேண்டம் 210 மாடலில் உள்ள ப்ளூடூத் 5.3 சிப்செட் அதிவேக டூயல் பேரிங் வசதியை வழங்குகிறது. மேலும் 15 மீட்டர்கள் வரை சீரான கனெக்டிவிட்டியை உறுதிப்படுத்துகிறது. இத்துடன் என்விரான்மெண்டல் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி வழங்கப்பட்டு உள்ளது. இந்த நெக்பேண்ட் இயர்போன் முழு சார்ஜ் செய்தால் 40 மணி நேரத்திற்கான பேக்கப் வழங்குகிறது. விங்ஸ் பேண்டம் 210 மாடலில் யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது.
விங்ஸ் பேண்டம் 210 நெக்பேண்ட் கேமிங் இயர்பட்ஸ் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வருகிறது. இதன் விலை அறிமுக சலுகையாக ரூ. 899 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய விங்ஸ் பேண்டம் 210 மாடல் பிளாக் மற்றும் புளூ - கிரே நிறங்களில் கிடைக்கிறது.
- ட்விட்டர் தளத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட எடிட் ட்விட் வசதி ஒருவழியாக வழங்கப்பட இருக்கிறது.
- முதற்கட்டமாக எடிட் ட்விட் வசதி ட்விட்டர் புளூ சந்தாதாரர்களுக்கு மட்டுமே வழங்கப்பட இருக்கிறது.
ட்விட்டர் நிறுவனம் தனது தளத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட எடிட் ட்விட் வசதியை செப்டம்பர் 21 ஆம் தேதி முதல் வழங்க இருக்கிறது. முதற்கட்டமாக எடிட் ட்விட் வசதி புளூ சந்தாதாரர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. ட்விட்டர் புளூ சந்தாவுக்கான மாதாந்திர கட்டணம் 4.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 397.4 ஆகும்.
எடிட் ட்விட் வசதி மூலம் பயனர்கள் பதிவிட்ட ட்விட்களை குறிப்பிட்ட நேரத்திற்கு பின் மாற்றிக் கொள்ளலாம். இவ்வாறு எடிட் செய்யப்பட்ட ட்விட்ள் மாற்றப்பட்ட விவரம் ஐகான், டைம்-ஸ்டாம்ப் மற்றும் லேபல் மூலம் மற்ற பயனர்களுக்கு தெரியப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் பயனர்கள் ட்விட் எடிட் செய்யப்பட்டு இருப்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம்.

இதோடு எடிட் செய்யப்பட்ட ட்விட் வரலாற்றை பார்க்கும் வசதியும் பயனர்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் ட்விட் பதிவிடப்பட்ட நேரம், எடிட் செய்யப்பட்ட நேரம், எத்தனை முறை எடிட் செய்யப்பட்டுள்ளது போன்ற விவரங்கள் இடம்பெற்று இருக்கும். "ட்விட்டர் தளத்தில் எடிட் ட்விட் வசதி செப்டம்பர் 21 ஆம் தேதி முதல் பொது மக்களிடையே சோதனைக்கு வழங்கப்பட இருக்கிறது" என பிளாட்பார்மர் கேசி நியூடன் தெரிவித்து இருக்கிறார்.
புது அம்சம் மூலம் ட்விட்களை எடிட் செய்து மாற்றிக் கொள்ள முடியும், ஆனாலும் அவற்றை எத்தனை முறை எடிட் செய்ய முடியும் என்பதில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக ட்விட் செய்த முப்பது நிமிடங்கள் கழித்தே அவற்றை எடிட் செய்ய முடியும். கூடுதலாக அடுத்த முப்பது நிமிடங்களில் ட்விட்களை ஐந்து முறை மட்டுமே எடிட் செய்ய முடியும்.
- அமேஸ்பிட் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய GTR 4 ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.
- இந்த ஸ்மார்ட்வாட்ச் 150-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட் மற்றும் ப்ளூடூத் காலிங் வசதிகளை கொண்டிருக்கிறது.
அமேஸ்பிட் நிறுவனத்தின் புதிய GTR 4 ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. சில வாரங்களுக்கு முன்பு தான் இந்த ஸ்மார்ட்வாட்ச் IFA சர்வதேச நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டது. இதில் மேம்பட்ட ஜிபிஎஸ் பொசிஷனிங், 150-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள், ப்ளூடூத் காலிங் வசதி மற்றும் ஸ்டாண்ட்-அலோன் மியூசிக் பிளேபேக் வசதி கொண்டிருக்கிறது.
இந்த ஸ்மார்ட்வாட்ச்-இல் பயோடிராக்கர் 4.0 PPG ஆப்டிக்கல் சென்சார், ஐந்து செயற்கைக்கோள் சிஸ்டம்களுடன் இணைந்து செயல்படும் ஆற்றல் மிக்க மேம்பட்ட ஜிபிஎஸ் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் அதிகபட்சமாக பத்து ஸ்போர்ட்ஸ் மோட்கள், மேம்பட்ட பிட்னஸ் அம்சங்கள் மற்றும் செப் ஆப் மூலம் கூடுதல் வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

இத்துடன் புதிய அமேஸ்பிட் GTR 4 மாடலில் அட்வான்ஸ்டு டிராக் ரன் மோட், புதிய கொல்ப் ஸ்விங் மோட், அடிடாஸ் ரன்னிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் ஸ்டார்வா சேவைக்கான சப்போர்ட் அப்டேட் மூலம் விரைவில் வழங்கப்பட இருக்கிறது. இதே போன்று செப் ஆப் மூலம் வழித்தடங்களை இம்போர்ட் செய்யும் வசதியும் வழங்கப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்வாட்ச் 1.43 இன்ச் AMOLED ஸ்கிரீன், அதிகபட்சம் 14 நாட்களுக்கான பேட்டரி லைஃப், பில்ட் இன் அலெக்சா வாய்ஸ் அசிஸ்டண்ட் போன்ற வசதிகளை கொண்டிருக்கிறது. அமேஸ்பிட் GTR 4 ஸ்மார்ட்வாட்ச் சூப்பர்ஸ்பீடு பிளாக் மற்றும் விண்டேஜ் பிரவுன் லெதர் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 16 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
- போல்ட் ஆடியோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.
- புது இயர்பட்ஸ் ப்ளூடூத் 5.3 கனெக்டிவிட்டி மற்றும் 35 மணி நேர பேட்டரி பேக்கப் வழங்குகிறது.
போல்ட் ஆடியோ நிறுவனம் மவெரிக் பெயரில் புது ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய போல்ட் ஆடியோ மவெரிக் இயர்பட்ஸ் ப்ளூடூத் 5.3, 45ms அல்ட்ரா-லோ லேடன்சி, அதிகபட்சமாக 35 மணி நேர பேட்டரி பேக்கப் வழங்குகிறது.
இன்-இயர் ரக ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலாக உருவாகி இருக்கும் மவெரிக் பட்ஸ்-இல் டச் கண்ட்ரோல் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் 10 மில்லிமீட்டர் டைனமிக் டிரைவர், பூம் எக்ஸ் சூப்பர் பேஸ் தொழில்நுட்பம் உள்ளது. இத்துடன் காம்பேட் கேமிங் மோட் உள்ளது. இந்த மோடில் இயர்பட்ஸ் 45ms வரை லேடன்சியை எட்டும். இதன் மூலம் கேமிங்கின் போது தலைசிறந்த அனுபவம் கிடைக்கும்.

வால்யும் மற்றும் பாடல்களை மாற்ற டச் கண்ட்ரோல் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி, IPX5 சான்று உள்ளது. போல்ட் ஆடியோ மவெரிக் இயர்பட்ஸ்-இல் நான்கு மைக்ரோபோன்கள் உள்ளன. இத்துடன் என்விரான்மெண்டல் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. யுஎஸ்பி டைப் சி சார்ஜிங் கொண்ட போல்ட் ஆடியோ மவெரிக் அதிகபட்சம் 35 மணி நேரத்திற்கான பிளேபேக் வழங்குகிறது.
போல்ட் ஆடியோ மவெரிக் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் பிளாக் நிறத்தில் மட்டும் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1,799 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை அமேசான், ப்ளிப்கார்ட் மற்றும் போல்ட் ஆடியோ வலைதளங்களில் இன்று (செப்டம்பர் 15) முதல் துவங்குகிறது.
- கோடக் நிறுவனத்தின் முதல் QLED ஸ்மார்ட் டிவி சீரிஸ் இந்திய சந்தையில் அறிமுகமாகி இருக்கிறது.
- இவற்றில் மொத்தம் மூன்று மாடல்கள் இடம்பெற்றுள்ளன.
கோடக் நிறுவனம் இந்திய சந்தையில் தனது முதல் QLED ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஸ்மார்ட் டிவி மாடல்கள் மேட்ரிக்ஸ் QLED எனும் பெயரில் 50 இன்ச், 55 இன்ச் மற்றும் 65 இன்ச் என மூன்று வித அளவுகளில் கிடைக்கின்றன. இந்த ஸ்மார்ட் டிவி மாடல்களில் கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் கூகுள் டிவி வசதி வழங்கப்பட்டுள்ளன.
பண்டிகை காலத்தை ஒட்டி நடைபெறும் ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சிறப்பு விற்பனையின் கீழ் கோடக் நிறுவனத்தின் ஏழாவது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் இந்த ஸ்மார்ட் டிவிக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. புதிய மேட் இன் இந்தியா QLED டிவிக்கள் டால்பி அட்மோஸ் மற்றும் டால்பி விஷன் சான்று பெற்றுள்ளன. இவை தரமான ஆடியோ மற்றும் பிக்சர் அனுபவத்தை வழங்குவதை உறுதி செய்கின்றன.

இத்துடன் மேம்பட்ட சவுண்ட் அனுபவம் கிடைக்க இவற்றில் டிடிஎஸ் ட்ரூசரவுண்ட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 10-பிட் 4K QLED பேனல்கள், டால்பி MS12 மற்றும் HDR10+ டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. புதிய கோடக் ஸ்மார்ட் டிவிக்கள் 2 ஜிபி ரேம், 16 ஜிபி மெமரி கொண்டிருக்கின்றன.
இவற்றில் MT9062 பிராசஸர், யுஎஸ்பி 2.0, HDMI (ARC,CEC) மற்றும் ப்ளூடூத் டூயல் பேண்ட் என ஏராளமான கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள் உள்ளன. இந்த ஸ்மார்ட் டிவிக்களில் கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் க்ரோம்காஸ்ட் இண்டகிரேஷன் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. கோடக் QLED ஸ்மார்ட் டிவிக்களில் பெசல் லெஸ் டிசைன் மற்றும் 40 வாட் டால்பி அட்மோஸ் பாக்ஸ் ஸ்பீக்கர்கள் உள்ளன.
இந்த டிவியுடன் வரும் ரிமோட் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி மற்றும் நெட்ப்ளிக்ஸ், பிரைம் வீடியோ மற்றும் யூடியூப் போன்ற சேவைகளுக்கு பிரத்யேக பட்டன்களை கொண்டிருக்கிறது. கூகுள் டிவி இண்டர்பேஸ் கொண்டிருப்பதால் இந்த டிவியில் கூகுள் சார்ந்த அம்சங்கள் மற்றும் வாய்ஸ் கண்ட்ரோல் போன்ற சேவைகள் வழங்கப்படுகின்றன.
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
புதிய கோடக் 50 இன்ச் QLED டிவி மாடல் விலை ரூ. 33 ஆயிரத்து 999 என்றும் 55 இன்ச் மாடல் விலை ரூ. 40 ஆயிரத்து 999 என்றும் 65 இன்ச் QLED மாடல் விலை ரூ. 59 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் டிவிக்கள் ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சிறப்பு விற்பனையின் போது விற்பனைக்கு வருகின்றன.
- மிவி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய இயர்பட்ஸ் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது.
- புது இயர்பட்ஸ் மேட் இன் இந்திய திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டவை ஆகும்.
மிவி நிறுவனம் இந்தியாவில் டுயோபாட்ஸ் M30 மற்றும் காலர் பிளாஷ் ப்ரோ மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. இரு சாதனங்களும் மிவி நிறுவனத்தின் மேட் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டவை ஆகும். மிவி டுயோபாட்ஸ் A550, F70 மற்றும் காலர் கிளாசிக் ப்ரோ போன்ற மாடல்களும் அறிமுகமாகி இருக்கின்றன.
புதிய டுயோபாட்ஸ் மாடலில் உள்ள 10.5 எம்எம் டிரைவர்கள் தரமான சவுண்ட் வழங்குகிறது. இத்துடன் இதன் இயர்பட் ஒவ்வொன்றிலும் 35 எம்ஏஹெச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளன. சார்ஜிங் கேசில் 380 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் மைக்ரோ யுஎஸ்பி சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது. இதை கொண்டு 42 மணி நேரத்திற்கு பயன்படுத்த முடியும்.

காலர் பிளாஷ் ப்ரோவில் உள்ள 13 எம்எம் டிரைவர் சிறப்பான ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது. நெக்பேண்ட் 250 மணி நேரம் வரை ஆன் செய்யப்பட்டு இருக்கலாம். இதன் இயர்பட்களில் 190 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. காலர் உடன் யுஎஸ்பி டைப் சி சார்ஜிங் கேபிள் வழங்கப்படுகிறது. காலர் கிளாசிக் ப்ரோ- பிளாக், புளூ, கிரீன், கிரே மற்றும் ரெட் என ஐந்து விதமான நிறங்களில் கிடைக்கிறது.
இரு இயர்போன்களிலும் ப்ளூடூத் 5.1 வழங்கப்பட்டுள்ளது. இதை கொண்டு 30 மீட்டர்கள் வரை தொலைவில் இருக்கும் சாதனங்களையும் இணைக்கலாம். இத்துடன் PNC நாய்ஸ் கேன்சலேஷன் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. மிவி டுயோபாட்ஸ் M30 மாடல்- பிளாக், புளூ, பெய்க் மற்றும் பின்க் நிறங்களில் கிடைக்கிறது.
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
மிவி டுயோபாட்ஸ் அறிமுக சலுகையாக ரூ. 999 விலையில் விற்பனைக்கு வர இருக்கிறது. மிவி காலர் பிளாஷ் ப்ரோ மாடலும் ரூ. 999 எனும் விலையில் வஇற்பனை செய்யப்பட உள்ளன. இந்த விலை அக்டோபர் 20 ஆம் தேதி வரை அமலில் இருக்கும். அதன் பின் இரு இயர்போன்களின் விலை ரூ. 2 ஆயிரத்து 999 என மாறி விடும். இரு இயர்போன்களும் மிவி அதிகாரப்பூர்வ வலைதளத்திலும் விற்பனைக்கு கிடைக்கும்.
- ட்விட்டர் நிறுவனம் தனது சேவையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வந்த எடிட் செய்யும் வசதியை சமீபத்தில் அறிமுகம் செய்தது.
- தற்போது ட்விட்டர் எடிட் அம்சத்தை பயன்படுத்துவது பற்றி புது தகவல் வெளியாகி உள்ளது.
ட்விட்டர் நிறுவனம் தனது தளத்தில் ட்விட்களை எடிட் செய்யும் வசதியை சமீபத்தில் அறிவித்தது. இது ட்விட்டரில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வந்த அம்சமாகும். இது பற்றிய வலைதள பதிவில் ட்விட்டர் நிறுவனம் எடிட் வசதி வழங்குவதை உறுதிப்படுத்தி இருக்கிறது. முன்னதாக தேர்வு செய்யப்பட்ட சில பயனர்களை வைத்து எடிட் வசதி சோதனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்த அம்சம் வெளியீட்டுக்கு தயாராகி விட்டது.
ட்விட்களை எடிட் செய்ய முடியும், ஆனாலும் அவற்றை எத்தனை முறை எடிட் செய்ய முடியும் என்பதில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக ட்விட் செய்த முப்பது நிமிடங்கள் கழித்தே அவற்றை எடிட் செய்ய முடியும். கூடுதலாக அடுத்த முப்பது நிமிடங்களில் ட்விட்களை ஐந்து முறை மட்டுமே எடிட் செய்ய முடியும். இத்துடன் ட்விட் எடிட் செய்யப்பட்டு இருப்பதை அனைவரும் அறிந்து கொள்ள முடியும்.

எடிட் செய்யப்பட்ட ட்விட்களை தெரியப்படுத்தும் வகையில் டைம்ஸ்டாம்ப், ஐகான் மற்றும் லேபல் இடம்பெறும். உண்மையான ட்விட்டர் பதிவு எடிட் செய்யப்பட்டு இருக்கிறது என்பதை வாசகரக்கள் எளிதில் அறிந்து கொள்ள முடியும். அந்த லேபிலை க்ளிக் செய்ததும், ட்விட்களின் எடிட் வரலாற்றை பார்க்க முடியும். அதில் ட்விட் எத்தனை முறை எடிட் செய்யப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம். தற்போதைக்கு இந்த அம்சம் அனைவருக்கும் வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
முதற்கட்டமாக எடிட் செய்யும் வசதி ட்விட்டர் புளூ சந்தாதாரர்களுக்கு மட்டும் வழங்கப்படும். அதன் பின் தளத்தில் அனைவருக்கும் இந்த வசதியை வழங்குவது பற்றி ட்விட்டர் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. பயனர்கள் இந்த அம்சத்தை எவ்வாறு பயன்படுத்துகின்றனர் என்பதை பொருத்து, மேலும் அதிக பகுதிகளில் இந்த அம்சத்தை வழங்குவது பற்றி ட்விட்டர் முடிவு செய்ய இருக்கிறது. இதன் மூலம் எதிர்காலத்தில் இந்த அம்சம் அனைவருக்கும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கலாம்.
இந்தியாவில் ட்விட்டர் புளூ சந்தா வசதி இன்னும் அறிமுகம் செய்யப்படவில்லை என்பதால், ட்விட்களை எடிட் செய்யும் வசதி தற்போதைக்கு கிடைக்கவில்லை. அமெரிக்கா, கனடா, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா என தேர்வு செய்யப்பட்ட நாடுகளில் மட்டுமே ட்விட்டர் புளூ சந்தா வழங்கப்பட்டு இருக்கிறது. மற்ற நாடுகளிலும் இந்த சேவை வழங்கப்படுமா என்பது தெளிவற்ற நிலையிலேயே உள்ளது.






