என் மலர்
கணினி
- லாவா நிறுவனத்தின் புதிய ப்ரோபட்ஸ் N11 நெக்பேண்ட் இயர்போன் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகமாகி இருக்கிறது.
- அறிமுக சலுகையாக இந்த இயர்பட்ஸ் மிக குறைந்த விலையில் விற்பனைக்கு வருகிறது.
லாவா நிறுவனம் இந்திய சந்தையில் ப்ரோபட்ஸ் N11 நெக்பேண்ட் இயர்போனை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய நெக்பேண்ட் ஹெட்செட் அந்நிறுவனம் இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்த N3 மாடலை தொடர்ந்து அறிமுகமாகி உள்ளது. இந்த இயர்போன் டூயல் ஹால்ஸ்விட்ச் - டேஷ் ஸ்விட்ச், டர்போ லேடன்சி மற்றும் ப்ரோ கேம் மோட் என ஏராளமான அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
இதில் உள்ள ப்ரோ கேம் மோட் 60 மில்லி செகண்ட் வரையிலான லேடன்சி மற்றும் என்விரான்மெண்டல் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி வழங்குகிறது. இத்துடன் 12 மில்லிமீட்டர் டைனமிக் டிரைவர்கள், ப்ளூடூத் 5.2, டூயல் டிவைஸ் கனெக்டிவிட்டி, IPX6 வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, என்விரான்மெண்டல் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி உள்ளது. இதை கொண்டு அதிக கூட்ட நெரிசல் உள்ள பகுதிகளிலும் அழைப்புகளில் எவ்வித தொந்தரவும் இன்றி மேற்கொள்ள முடியும்.

மேலும் மேக்னடிக் ஹால்ஸ்விட்ச் - டேஷ் ஸ்விட்ச் பயனர்கள் மியூசிக் பிளே / பாஸ் அல்லது அழைப்புகளை ஏற்பது / நிராகரிப்பது உள்ளிட்டவைகளை மேக்னடிக் பட்ஸ்-ஐ ஒன்றாக இணைத்தாலோ அல்லது சேர்க்கப்பட்ட நிலையில் இருப்பின் அவற்றை தனியே எடுப்பதன் மூலம் மேற்கொள்ள முடியும். ஒற்றை பட்டன் க்ளிக் செய்து வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதியை ஆக்டிவேட் செய்யும் வசதியும் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த ஹெட்செட் 280 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கிறது. இதில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 13 மணி நேரத்திற்கான பிளேபேக், சார்ஜிங் கேஸ் சேர்க்கும் போது 42 மணி நேரத்திற்கான பிளேபேக் கிடைக்கிறது. புதிய லாவா ப்ரோபட்ஸ் N11 மாடல் ஃபயர்ஃபிளை கிரீன், கை ஆரஞ்சு மற்றும் பேந்தர் பிளாக் என மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது.
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
லாவா ப்ரோபட்ஸ் N11 மாடல் இந்திய சந்தையில் அறிமுக சலுகையாக ரூ. 11 விலையில் விற்பனைக்கு வருகிறது. விற்பனை இன்று (செப்டம்பர் 10) காலை 11 மணிக்கு அமேசான் தளத்தில் நடைபெற இருக்கிறது. அதன்பின் செப்டம்பர் 13 முதல் செப்டம்பர் 16 ஆம் தேதி வரை லாவா ப்ரோபட்ஸ் N11 மாடல் ரூ. 999 விலையில் விற்பனைக்கு வருகிறது. அதன்பின் இந்த இயர்போன் ரூ. 1,499 விலையில் லாவா இ ஸ்டோர், அமேசான் மற்றும் ஆப்லைன் ஸ்டோர்களில் விற்பனைக்கு வர இருக்கிறது
.புதிய லாவா ப்ரோப்ட்ஸ் N11 மாடலுக்கு 12 மாதங்கள் வாரண்டி மற்றும் இரு மாதங்களுக்கு கூடுதலாக நீட்டிக்கப்பட்ட வாரண்டி, இயர்போன் வாங்கிய 30 நாட்களில் பதிவு செய்யும் பட்சத்தில் கானா சேவைக்கான சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
- தாம்சன் நிறுவனத்தின் புதிய QLED டிவி மாடல்கள் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
- புதிய டிவி மாடல்கள் டால்பி விஷன், 40 வாட் ஸ்டீரியோ பாக்ஸ் ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டுள்ளன.
சூப்பர் பிளாஸ்டிரோனிக்ஸ் பிரைவேட் லிமிடெட் புதிய தாம்சன் QLED ஸ்மார்ட் டிவிக்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட் டிவி மாடல்களில் கூகுள் டிவி வசதி உள்ளது. இவை 50 இன்ச், 55 இன்ச் மற்றும் 65 இன்ச் ஸ்கிரீன் அளவுகளில் கிடைக்கின்றன. மேலும் இவற்றில் டால்பி விஷன், HDR10+, 40 வாட் ஸ்டீரியோ பாக்ஸ் ஸ்பீக்கர் மற்றும் டால்பி அட்மோஸ் வசதி உள்ளது.
இந்த மாடல்களில் மெல்லிய, பெசல்-லெஸ் டிசைன் மற்றும் மெட்டாலிக் ஸ்டாண்ட் வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் ஏ53 மீடியாடெக் எம்டி9602 பிராசஸர், மாலி G52 MC1 GPU மற்றும் டூயல் பேண்ட் வைபை வழங்கப்பட்டு இருக்கிறது.

தாம்சன் QLED டிவி அம்சங்கள்:
50 இன்ச், 55 இன்ச் மற்றும் 65 இன்ச் 3840x2160 பிக்சல் 4K QLED டிஸ்ப்ளே, டால்பி விஷன்
1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் மீடியாடெக் எம்டி 9602 பிராசஸர்
மாலி G52 MC1 GPU
2 ஜிபி ரேம்
16 ஜிபி மெமரி
கூகுள் டிவி
நெட்ப்ளிக்ஸ், பிரைம் வீடியோ மற்றும் யூடியூப் ஷார்ட்க்ட் கொண்ட வாய்ஸ் ரிமோட்
வைபை, ப்ளூடூத் 5.0
3x HDMI, 2x யுஎஸ்பி, S/PDIF, AV இன்புட், 1x ஈத்தர்நெட்
40 வாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டிடிஎஸ், டால்பி ஆடியோ, டால்பி அட்மோஸ்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
புதிய தாம்சன் QLED டிவி 50 இன்ச், 55 இன்ச் மற்றும் 65 இன்ச் மாடல்களின் விலை முறையே ரூ. 33 ஆயிரத்து 999, ரூ. 40 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 59 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இவை ப்ளிப்கார்ட் தளத்தின் பிக் பில்லியன் டேஸ் சிறப்பு விற்பனையின் போது விற்பனைக்கு வருகிறது.
- ஆப்பிள் நிறுவனத்தின் மூன்று புது வாட்ச் மாடல்கள் ஐபோன் 14 சீரிஸ் அறிமுக நிகழ்வில் வெளியிடப்பட்டன.
- மூன்று வாட்ச் மாடல்களின் இந்திய விலை விவரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஆப்பிள் நிறுவனம் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8, ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா மற்றும் வாட்ச் SE மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. ஏராளமான மாற்றங்களுடன் அறிமுகமாகி இருக்கும் புது ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 ஆல்வேஸ் ஆன் ரெட்டினா டிஸ்ப்ளே, அதிக உறுதியான க்ரிஸ்டல் கொண்டிருக்கிறது. இத்துடன் உடல் ஆரோக்கியத்துக்கு சம்பந்தப்பட்ட ஏராளமான டிராக்கர் மற்றும் சென்சார்களுடன் புது வாட்ச் மாடல்கள் உருவாகி இருக்கின்றன.
ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 அம்சங்கள்:
45 அல்லது 41 மில்லிமீட்டர் அலுமினியம் கேஸ் மற்றும் ஸ்போர்ட் பேண்ட்
ஆல்வேஸ் ஆன் ரெட்டினா டிஸ்ப்ளே
IP6X டஸ்ட் ரெசிஸ்டண்ட் மற்றும் ஸ்விம் ப்ரூப்
இசிஜி, ஹார்ட் ரேட், டெம்பரேச்சர் சென்சிங், பிலட் ஆக்சிஜன் மற்றும் சைக்கில் டிராக்கிங்
எமர்ஜன்சி SOS, இண்டர்நேஷனல் எமர்ஜன்சி காலிங், ஃபால் டிடெக்ஷன், கிராஷ் டிடெக்ஷன்
ஜிபிஎஸ் மற்றும் செல்லுலார் கனெக்டிவிட்டி

ஆப்பிள் வாட்ச் SE அம்சங்கள்:
44 அல்லது 41 மில்லிமீட்டர் அலுமினியம் கேஸ் மற்றும் ஸ்போர்ட் பேண்ட்
ஸ்விம் ப்ரூப்
ஹை மற்றும் லோ ஹார்ட் ரேட் நோட்டிபிகேஷன்
எமர்ஜன்சி SOS, இண்டர்நேஷனல் எமர்ஜன்சி காலிங், ஃபால் டிடெக்ஷன், கிராஷ் டிடெக்ஷன்
ஜிபிஎஸ் மற்றும் செல்லுலார் கனெக்டிவிட்டி

ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா அம்சங்கள்:
49 மில்லிமீட்டர் டைட்டானியம் கேஸ் மற்றும் ஃபிளாட் சபையர் முன்புறம்
ஆல்வேஸ் ஆன் ரெட்டினா டிஸ்ப்ளே
கஸ்டமைஸ் செய்யக்கூடிய ஆக்ஷன் பட்டன்
அதிகபட்சம் 36 மணி நேரத்திற்கான பேட்டரி பேக்கப்
டிரையல் லூப், ஆல்பைன் லூப் மற்றும் ஓஷன் பேண்ட் என மூன்று புது பேண்ட்கள்
பிரெசிஷன் டூயல் பேண்ட் ஜிபிஎஸ், எல்டிஇ
நைட் மோட், காம்பஸ், ப்ரோ ரன்னிங் அம்சங்கள், டெப்த் காஜ், கிராஷ் டிடெக்ஷன்
இசிஜி, டெம்பரேச்சர் சென்சிங், பிலட் ஆக்சிஜன்
ஸ்விம் ப்ரூப் (100 மீட்டர்), IP6X டஸ்ட் ரெசிஸ்டண்ட்
வாட்ச் ஒஎஸ் 9
EN13319, WR100, MIL-STD 810 சான்றுகள்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா மாடலின் இந்திய விலை ரூ. 89 ஆயிரத்து 900 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 மற்றும் வாட்ச் SE மாடல்கள் மிட்நைட் பிளாக், ஸ்டார்லைட் மற்றும் சில்வர் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இந்திய சந்தையில் புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 விலை ரூ. 45 ஆயிரத்து 900 என துவங்குகிறது. ஆப்பிள் வாட்ச் SE மாடல் விலை ரூ. 29 ஆயிரத்து 900 என துவங்குகிறது. மூன்று புதிய ஆப்பிள் வாட்ச் மாடல்களின் விற்பனை செப்டம்பர் 23 ஆம் தேதி துவங்குகிறது.
- ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் தனது புது ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.
- புது ரியல்மி வாட்ச் பெரிய டிஸ்ப்ளே, ப்ளூடூத் காலிங் வசதி கொண்டிருக்கிறது.
ரியல்மி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ப்ளூடூத் காலிங் மற்றும் ஜிபிஎஸ் வசதி கொண்ட ரியல்மியின் முதல் மாடல் ஆகும். புதிய ரியல்மி வாட்ச் 3 ப்ரோ கடந்த ஆண்டு ரியல்மி அறிமுகம் செய்த ரிய்லமி வாட்ச் 2 ப்ரோ மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். ரியல்மி வாட்ச் 3 ப்ரோ மாடலில் 1.78 இன்ச் AMOLED ஸ்கிரீன், ஏஐ நாய்ஸ் கேன்சலேஷன், வளைந்த டிசைன் வழங்கப்பட்டு உள்ளது.
இத்துடன் 110-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள், SpO2 லெவல், ஹார்ட் ரேட் லெவல், ஸ்டிரெஸ் மற்றும் ஸ்லீப் குவாலிட்டி உள்ளிட்டவைகளை டிராக் செய்யும் சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் 100-க்கும் அதிக வாட்ச் ஃபேஸ்கள், IP68 தர வாட்டர் ரெசிஸ்டண்ட், 345 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது.

ரியல்மி வாட்ச் 3 ப்ரோ அம்சங்கள்:
1.78 இன்ச் 368x448 பிக்சல் டச் கலர் AMOLED வளைந்த டிஸ்ப்ளே
3 ஆக்சிஸ் அக்செல்லோமீட்டர், ஹார்ட் ரேட் மற்றும் SpO2 சென்சார்
ரோட்டார் வைப்ரேஷன் மோட்டார்
ப்ளூடூத் 5.3
ஸ்பீக்கர் மற்றும் மைக்ரோபோன்
டூயல் மோட் ப்ளூடூத்
110-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள்
மல்டி சிஸ்டம் ஜிபிஎஸ்
24 மணி நேர ரியல்டைம் ஹார்ட் ரேட், லோ ஹார்ட் ரேட் ரிமைண்டர்
மியூசிக் கண்ட்ரோல், வானிலை விவரங்கள்
IP68 தர வாட்டர் ரெசிஸ்டண்ட்
345 எம்ஏஹெச் பேட்டரி
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
ரியல்மி வாட்ச் 3 ப்ரோ மாடல் கிரே மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 4 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எனினும், அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்வாட்ச் ரூ. 4 ஆயிரத்து 499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் விற்பனை செப்டம்பர் 9 ஆம் தேதி ப்ளிப்கார்ட், ரியல்மி வலைதளங்கள் மற்றும் ஆப்லைன் ஸ்டோர்களில் துவங்க உள்ளது.
- போட் நிறுவனம் இந்திய சந்தையில் புது ஸ்மார்ட்வாட்ச் மாடலை குறைந்த விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது.
- புது ஸ்மார்ட்வாட்ச் ப்ளூடூத் மூலம் அழைப்புகளை பேசும் வசதி மற்றும் பல்வேறு அம்சங்களை கொண்டிருக்கிறது.
போட் நிறுவனம் ஸ்டார்ம் ப்ரோ கால் பெயரில் புது ஸ்மார்ட்வாட்ச்-ஐ அறிமுகம் செய்து இருக்கிறது. பெயருக்கு ஏற்றார் போல் இந்த ஸ்மார்ட்வாட்ச் ப்ளூடூத் காலிங் வசதி கொண்டிருக்கிறது. மேலும் 1.78 இன்ச் 368x448 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே, 60Hz ரிப்ரெஷ் ரேட், 2.5D வளைந்த டிஸ்ப்ளே, மெட்டாலிக் பாடி மற்றும் இண்டர்சேன்ஜ் சிலிகான் ஸ்டிராப் கொண்டிருக்கிறது.
பில்ட்-இன் ஸ்பீக்கர் மற்றும் மைக்ரோபோன் கொண்ட ஸ்மார்ட்வாட்ச் ப்ளூடூத் காலிங் அம்சத்தை வழங்குகிறது. இத்துடன் 700-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள், 24x7 இதய துடிப்பு சென்சார், SpO2 சென்சார், ஸ்லீப் மாணிட்டரிங் போன்ற வசதிகளை கொண்டிருக்கிறது. மேலும் நேரலை கிரிகெட் ஸ்கோர்களை வழங்குகிறது.

ஸ்டார்ம் ப்ரோ கால் ஸ்மார்ட்வாட்ச்-இல் வழங்கப்பட்டு இருக்கும் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சம் பத்து நாட்களுக்கு பேக்கப் வழங்குகிறது. இதில் உள்ள ASAP சார்ஜ் ஸ்மார்ட்வாட்ச்-ஐ 30 நிமிடங்களில் சார்ஜ் செய்து விடுகிறது. கூகுள் பிட் மற்றும் ஆப்பிள் ஹெல்த் போன்ற வசதிகளை கொண்டிருக்கிறது.
இத்துடன் 100-க்கும் அதிக கிளவுட் சார்ந்த வாட்ச் பேஸ்கள், வானிலை விவரங்கள், கேமரா கண்ட்ரோல், கால், டெக்ஸ்ட் மற்றும் நோட்டிபிகேஷன்களை வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் IP68 தர ரேட்டிங் கொண்டிருக்கிறது. போட் ஸ்டார்ம் ப்ரோ கால் ஸ்மார்ட்வாட்ச் விலை ரூ. 3 ஆயிரத்து 799 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் போட் வலைதளங்களில் நடைபெறுகிறது.
- அமேஸ்பிட் நிறுவனம் விரைவில் புது ஸ்மார்ட்வாட்ச் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
- புது அமேஸ்பிட் ஸ்மார்ட்வாட்ச் அமேசான் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது.
அமேஸ்பிட் நிறுவனம் GTS மற்றும் GTR ஸ்மார்ட்வாட்ச் மாடல்களின் நான்காவது தலைமுறை வெர்ஷன்களை கடந்த வாரம் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. இவை கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட GTS 3 மற்றும் GTR 3 மாடல்களின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். சர்வதேச வெளியீட்டை தொடர்ந்து அமேஸ்பிட் GTS 4 மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
புது ஸ்மார்ட்வாட்ச் வெளியீட்டை உணர்த்தும் டீசரை அமேசான் இந்தியா தனது வலைதளத்தில் வெளியிட்டு உள்ளது. புது ஸ்மார்ட்வாட்ச் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் இதன் வெளியீட்டு தேதி மற்றும் விலை போன்ற விவரங்கள் வரும் நாட்களில் அறிவிக்கப்படும். கடந்த மாதம் தான் அமேஸ்பிட் GTS 4 மினி மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த ஸ்மார்ட்வாட்ச்-இன் ரெகுலர் வெர்ஷனில் 1.75 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, சதுரங்க வடிவம் கொண்ட டயல், மெட்டாலிக் ஃபிரேம், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் நேவிகேஷன் கிரவுன், அதிகபட்சம் 5 மீட்டர்கள் வரை வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 24 மணி நேரத்திற்கான இதய துடிப்பு சென்சார் மற்றும் SpO2 சென்சார், மன உளைச்சல் மற்றும் உறக்க முறைகள் பற்றிய விவரங்களை டிராக் செய்யும் வசதி வழங்கப்பட்டு உள்ளது.
புதிய அமேஸ்பிட் GTS 4 மாடலில் அதிகபட்சம் 150 ஸ்போர்ட்ஸ் மோட்கள், டூயல் பேண்ட் ஜிபிஎஸ் ஆண்டெனா, ஆறு செயற்கைக் கோள் சிஸ்டம்களை சார்ந்து ரூட் ஃபைல் இம்போர்ட் மற்றும் ரியல் டைம் நேவிகேஷன் போன்ற வசதிகள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த ஸ்மார்ட்வாட்ச் ப்ளூடூத் காலிங் வசதி, பில்ட் இன் அலெக்சா வாய்ஸ் அசிஸ்டண்ட், ஜெப் ஒஎஸ் 2.0 கொண்டிருக்கிறது. இதில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் எட்டு நாட்கள் வரையிலான பேட்டரி பேக்கப் கிடைக்கிறது.
- எல்ஜி நிறுவனம் ஐஎப்ஏ 2022 நிகழ்வில் அசத்தலான புது குளிர்சாதன பெட்டியை அறிமுகம் செய்து இருக்கிறது.
- இதில் எல்இடி லைட் பேனல்கள் மற்றும் ப்ளூடூத் ஸ்பீக்கர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.
எல்ஜி நிறுவனத்தின் புதிய குளிர்சாதன பெட்டி - எஸ்ஜி மூட்அப் ஃப்ரிட்ஜ் எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த குளிர்சாதன பெட்டி தற்போது நடைபெற்று வரும் ஐஎப்ஏ 2022 நிகழ்வில் அறிமுகமாகி இருக்கிறது. இந்த குளிர்சாதன பெட்டியின் முன்புறம் உள்ள எல்இடி பேனல்களை கொண்டு பல்வேறு நிறங்களை ஒளிர விடுவது, வித்தியாசமான சிறப்பம்சம் ஆகும். இதில் ஆர்ஜிபி பேனல்கள் உள்ளன.
இவற்றை கொண்டு 22 நிறங்களில் ஒன்றை மேலே உள்ள கதவுகளுக்கும், லோயர் பேனல்களில் 19 நிறங்களில் ஒன்றையும் தேர்வு செய்து கொள்ளலாம். நிறம் மற்றும் தீம் அடிப்படையில் நிறங்களை மாற்றிக் கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டு இருக்கிறது. இது மட்டுமின்றி எல்ஜி மூட்அப் ஃப்ரிட்ஜ் ப்ளூடூத் ஸ்பீக்கர் கொண்டிருக்கிறது. இதை கொண்டு ஃப்ரிட்ஜ்-ஐ ஸ்மார்ட்போனுடன் இணைத்துக் கொண்டு மியூசிக் ஸ்டிரீமிங் செய்யலாம்.

சாம்சங் நிறுவனமும் தனது பிஸ்போக் குளிர்சாதன பெட்டியில் இதே போன்ற வசதியை வழங்கும் நிலையில், புதிய எல்ஜி மூட்அப் ஃப்ரிட்ஜ் பயனர்கள் தங்களின் ஸ்மார்ட்போனை இணைத்து குளிர்சாதன பெட்டியின் நிறத்தை விரும்பிய நேரத்தில் மாற்றிக் கொள்ளும் வசதியை வழங்கி இருக்கிறது. இந்த குளிர்சாதன பெட்டியின் விலை மற்றும் விற்பனை விவரங்கள் பற்றி இதுவரை அறிவிக்கப்படவில்லை. மேலும் இதன் இந்திய வெளியீடு பற்றியும் எந்த தகவலும் இல்லை.
ப்ளூடூத் வசதி கொண்ட ஸ்பீக்கர் பொருத்தப்பட்டு இருப்பதால், புதிய எல்ஜி குளிர்சாதன பெட்டியை ஸ்மார்ட்போன், டேப்லெட், லேப்டாப் உள்ளிட்டவைகளுடன் இணைத்துக் கொண்டு பாடல்களை கேட்க முடியும். இவ்வாறு செய்யும் போது குளிர்சாதன பெட்டியில் உள்ள எல்இடி பேனல்கள் பாடலுக்கு ஏற்ற வகையில் மாறிக் கொண்டே இருக்கும். பேனல்கள் ஆப் செய்து விட்டால், லக்ஸ் கிரே மற்றும் லக்ஸ் வைட் டிசைனில் காட்சியளிக்கும்.
- அமேஸ்பிட் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடல் ஐந்து விதமான செயற்கைக்கோள் சிஸ்டம்களுடன் தொடர்பு கொள்ளும் திறன் கொண்டுள்ளது.
- இத்துடன் பயோடிராக்கர் 4.0 ஆப்டிக்கல் சென்சார் மற்றும் மேம்பட்ட ஜிபிஎஸ் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
உலகின் பிரபல நுகர்வோர் மின்சாதன கண்காட்சியான 2022 ஐஎப்ஏ விழா இன்று துவங்குகிறது. இதையொட்டி பல்வேறு நிறுவனங்களும் தங்களின் சாதனங்களை அறிமுகம் செய்ய துவங்கி விட்டன. இந்த வரிசையில் தான் அமேஸ்பிட் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் அமேஸ்பிட் GTR 4 என அழைக்கப்படுகிறது.
புதிய அமேஸ்பிட் GTR 4 ஸ்மார்ட்வாட்ச் பயோடிராக்கர் 4.0 PPG ஆப்டிக்கல் சென்சார், ஐந்து செயற்கைக்கோள் சிஸ்டம்களுடன் இணைந்து செயல்படும் ஆற்றல் மிக்க மேம்பட்ட ஜிபிஎஸ் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் அதிகபட்சமாக பத்து ஸ்போர்ட்ஸ் மோட்கள், மேம்பட்ட பிட்னஸ் அம்சங்கள் மற்றும் செப் ஆப் மூலம் கூடுதல் வசதிகள் உள்ளன. GTR 4 மாடலில் அட்வான்ஸ்டு டிராக் ரன் மோட், புதிய கொல்ப் ஸ்விங் மோட், அடிடாஸ் ரன்னிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது.

இத்துடன் ஸ்டார்வா சேவைக்கான சப்போர்ட் அப்டேட் மூலம் விரைவில் வழங்கப்பட இருக்கிறது. இதே போன்று செப் ஆப் மூலம் வழித்தடங்களை இம்போர்ட் செய்யும் வசதியும் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் 1.43 இன்ச் AMOLED ஸ்கிரீன், அதிகபட்சம் 14 நாட்களுக்கான பேட்டரி லைஃப், பில்ட் இன் அலெக்சா வாய்ஸ் அசிஸ்டண்ட் போன்ற வசதிகளை கொண்டிருக்கிறது.
அமேஸ்பிட் GTR 4 ஸ்மார்ட்வாட்ச் கிரே, பிளாக் மற்றும் பிரவுன் லெதர் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 200 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 15 ஆயிரத்து 932 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் சர்வதேச வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.
- சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் புது ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது.
- புதிய ஸ்மார்ட் டிவிக்களில் மெட்டாலிக் பெசல்-லெஸ் பினிஷ் செய்யப்பட்டு உள்ளது.
சியோமி நிறுவனம் புதிய X சீரிஸ் 4K டிவி மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய 4K டிவி மாடலில் பிரீமியம் மெட்டாலிக் பெசல் லெஸ் பினிஷ், டால்பி விஷன், HDR10+, ஹைப்ரிட் லாக் காமா சப்போர்ட், அதிகபட்சம் ஒரு பில்லியன் நிறங்களை சப்போர்ட் செய்யும் வசதி வழங்கப்பட்டு இறுக்கிறது. இத்துடன் மற்ற சியோமி ஸ்மார்ட் டிவிக்களை போன்றே இந்த மாடலிலும் விவிட் பிக்ச்சர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த டிவியில் அதிநவீன பேட்ச்வால் 4, 75-க்கும் அதிக நேரலை சேனல்கள், 30-க்கும் அதிக ஒடிடி செயலிகளில் தரவுகளை தேடும் வசதி, கிட்ஸ் மோட், லைவ் டிவி மற்றும் ஸ்மார்ட் பரிந்துரை போன்ற அம்சங்கள் உள்ளது. புதிய ஸ்மார்ட் டிவியில் ஆண்ட்ராய்டு டிவி 10 மற்றும் பில்ட்-இன் க்ரோம்காஸ்ட் மற்றும் பிளே ஸ்டோர் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 30 வாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி ஆடியோ, புதிய HDMI 2.1 eARC மற்றும் அதிக பேண்ட்வித் ஆடியோ வசதி உள்ளது.

சியோமி டிவி X சீரிஸ் அம்சங்கள்:
43 இன்ச் / 50 இன்ச் / 55 இன்ச் 3840x2160 பிக்சல் 4K டிஸ்ப்ளே
178 டிகிரி வியூவிங் ஆங்கில், விவிட் பிக்ச்சர் என்ஜின், டால்பி விஷன், HDR10+, HDR 10, HLG, MEMC
குவாட்கோர் A55 பிராசஸர்
மாலி G52 MC 1 GPU
2 ஜிபி ரேம்
8 ஜிபி மெமரி
ஆண்ட்ராய்டு டிவி 10 மற்றும் பேட்ச்வால் 4
வைபை, ப்ளூடூத் 5, 3x HDMI 2.1, 2x யுஎஸ்பி, ஆப்டிக்கல், ஈத்தர்நெட்
Mi வாய்ஸ் ரிமோட்
30 வாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி ஆடியோ, டிடிஎஸ் ஹெச்டி மற்றும் டிடிஎஸ் விர்ச்சுவல் X
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
சியோமி ஸ்மார்ட் டிவி சீரிஸ் X 43 இன்ச் மாடல் விலை ரூ. 28 ஆயிரத்து 999 என்றும் 50 இன்ச் மாடல் விலை ரூ. 34 ஆயிரத்து 999 என்றும் 55 இன்ச் வெர்ஷன் விலை ரூ. 39 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய ஸ்மார்ட் டிவி விற்பனை செப்டம்பர் 14 ஆம் தேதி துவங்குகிறது.
- ஹானர் பிராண்டின் புது இயர்பட்ஸ் மாடல் இந்திய வெளியீடு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
- இந்த இயர்பட்ஸ் அமேசான் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது.
ஹூவாய் நிறுவனத்தில் இருந்து பிரிந்தது முதல் இந்திய சந்தையில் ஹானர் பிராண்டு நிலையற்று காணப்படுகிறது. இந்த நிலையை மாற்றும் நோக்கில் ஹானர் பிராண்டு புது ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்-ஐ இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புது இயர்பட்ஸ் ஹானர் சாய்ஸ் இயர்பட்ஸ் X என அழைக்கப்பட இருக்கிறது. வெளியீடு மட்டுமின்றி இந்த இயர்பட்ஸ் அம்சங்கள் பற்றிய விவரங்களும் டீசரில் இடம்பெற்று உள்ளது.
அந்த வகையில் புது ஹானர் சாய்ஸ் இயர்பட்ஸ் X மாடலில், 12 எம்எம் டிரைவர்கள், அதிகபட்சம் 28 மணி நேரத்திற்கான பிளேபேக் போன்ற அம்சங்கள் வழங்கப்படுகிறது. இந்திய சந்தை தவிர ஹானர் சாய்ஸ் இயர்பட்ஸ் X மாடல் சர்வதேச சந்தையில் தேர்வு செய்யப்பட்ட நாடுகளில் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. இது ஹானர் பிராண்டின் எண்ட்ரி லெவல் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடல் ஆகும்.

இதில் 12 எம்எம் பயோ-டயபிராம் டைனமிக் டிரைவர்கள், குறைந்த எடை செம்பு முலாம் பூசப்பட்ட அலுமினியம் அர்மேச்சர் கொண்டிருக்கிறது. இத்துடன் ப்ளூடூத் 5.2, ஏஏசி மற்றும் எஸ்பிசி கோடெக் மற்றும் IPX4 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது. இந்த இயர்பட்ஸ் 13 டிகிரி வளைந்த டிசைன் மற்றும் நேச்சுரல் பிட் கொண்டிருக்கிறது. இந்த இயர்பட் ஒன்றின் இடை 4.3 கிராம் ஆகும்.
இந்த இயர்போனில் டச் கண்ட்ரோல் வசதி உள்ளது. இத்துடன் டூயல்-மைக் நாய்ஸ் ரிடக்ஷன் வசதி, அதிகபட்சம் 28 மணி நேரத்திற்கான பேட்டரி லைப் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. ஹானர் சாய்ஸ் இயர்பட்ஸ் X மாடலில் உள்ள கேமிங் மோட் 125 மில்லி செகண்ட் வரையிலான லோ லேடன்சி வழங்குகிறது. இதன் இந்திய விலை விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.
- ஒன்பிளஸ் நிறுவனம் இந்திய சந்தையில் நார்டு இயர்போன் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது.
- புதிய நார்டு இயர்போன் 3.5 எம்எம் வயர்டு கனெக்டிவிட்டி கொண்டுள்ளது.
ஒன்பிளஸ் நார்டு வயர்டு இயர்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய வயர்டு இயர்போன் ஒன்பிளஸ் நிறுவனத்தின் குறைந்த விலை சாதனமாக அறிமுகமாகி இருக்கிறது. இந்த இயர்போன் 3.5 எம்எம் வயர்டு கனெக்டிவிட்டி கொண்டுள்ளது. வயர்லெஸ் ஆடியோ பிரிவில் கவனம் செலுத்தி வரு்ம நிலையிலும், ஒன்பிளஸ் புதிதாக வயர்டு இயர்போனை அறிமுகம் செய்து இருக்கிறது.
புதிய ஒன்பிளஸ் நார்டு வயர்டு இயர்போன்களில் 3.5 எம்எம் வயர்டு கனெக்டிவிட்டி, 9.2 எம்எம் டைனமிக் டிரைவர்கள் உள்ளன. இதன் டிசைன் மற்றும் ஸ்டைலிங் ஒன்பிளஸ் புல்லட்ஸ் வயர்லெஸ் Z2 போன்றே காட்சியளிக்கிறது. எனினும், இந்த இயர்போனில் வயர்டு கனெக்டிவிட்டி, இன்-லைன் ரிமோட், மைக்ரோபோன் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

இன்-லைன் ரிமோட் மற்றும் மைக்ரோபோன் தவிர ஒன்பிளஸ் நார்டு வயர்டு இயர்போன் மேக்னடிக் க்ளிப் உள்ளது. இதை கொண்டு இயர்போன் பயன்படுத்தாத சமயத்தில் சவுகரியமாக வைத்துக் கொள்ளலாம். இந்த இயர்போனுடன் மூன்று வித அளவுகளில் சிலிகான் இயர் டிப்கள் வழங்கப்படுகிறது.
ஒன்பிளஸ் நார்டு வயர்டு இயர்போன்களின் விலை ரூ. 799 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது ஒன்பிளஸ் நிறுவனத்தின் குறைந்த விலை இயர்போன் ஆகும். இதன் விற்பனை செப்டம்பர் 1 ஆம் தேதி தொடங்குகிறது. விற்பனை ஒன்பிளஸ் வலைதளம் மற்றும் ஆப்லைன் விற்பனை மையங்களில் நடைபெற இருக்கிறது.
- ஜெப்ரானிக்ஸ் நிறுவனத்தின் புதிய டவர் ஸ்பீக்கர் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
- இந்த ஸ்பீக்கருடன் நான்கு இக்வலைசர் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
ஜெப்ரானிக்ஸ் இந்தியா நிறுவனம் ஜெப் ஆக்டேவ் பெயரில் சக்திவாய்ந்த 340 வாட் டவர் ஸ்பீக்கர் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. டவர் ஸ்பீக்கரில் டால்பி தொழில்நுட்பம் பயன்படுத்தி இருக்கும் முதல் இந்திய பிராண்டு என்ற பெருமையை ஜெப்ரானிக்ஸ் பெற்று உள்ளது. சமீபத்தில் தான் ஜெப்ரானிக்ஸ் ஜெப் ஜூக் பார் 4050 75 வாட் சவுண்ட்பார் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
புதிய ஜெப் ஆக்டேவ் ஸ்பீக்கரில் 3-வே, 340 வாட் அவுட்புட் உள்ளது. இது தலைசிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது. இதில் அழகிய பிளாக் மற்றும் கோல்டு கேஸ், டச் கண்ட்ரோல்கள் மற்றும் எல்இடி ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. இது டால்பி மற்றும் விர்ச்சுவல் 3டி வசதிகளை கொண்டுள்ளது.

இதில் உள்ள ட்வீட்டர்கள், டபுல்-மிட்ரேன்ஜ் டிரைவர்கள் மற்றும் சக்திவாய்ந்த சப்-வூபர்கள் சிறப்பான சவுண்ட் வழங்குகிறது. இந்த டவர் ஸ்பீக்கரில் இரண்டு வயர்லெஸ் மைக்குகளை இணைத்துக் கொள்ளும் வசதி உள்ளது. இத்துடன் ரிமோட் கண்ட்ரோல், நான்கு இக்வலைசர் ஆப்ஷ்கள் உள்ளது. இதை கொண்டு பயனர்கள் ஸ்பீக்கர்களை அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம்.
இந்திய சந்தையில் புதிய ஜெப் ஆக்டேவ் மாடலின் விலை ரூ. 24 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் ஜெப்ரானிக்ஸ் வலைதளத்தில் நடைபெறுகிறது.






