என் மலர்tooltip icon

    கணினி

    விலை ரூ. 89 ஆயிரம் தான் - ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8, வாட்ச் SE மற்றும் வாட்ச் அல்ட்ரா மாடல்கள் இந்தியாவில் அறிமுகம்
    X

    விலை ரூ. 89 ஆயிரம் தான் - ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8, வாட்ச் SE மற்றும் வாட்ச் அல்ட்ரா மாடல்கள் இந்தியாவில் அறிமுகம்

    • ஆப்பிள் நிறுவனத்தின் மூன்று புது வாட்ச் மாடல்கள் ஐபோன் 14 சீரிஸ் அறிமுக நிகழ்வில் வெளியிடப்பட்டன.
    • மூன்று வாட்ச் மாடல்களின் இந்திய விலை விவரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

    ஆப்பிள் நிறுவனம் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8, ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா மற்றும் வாட்ச் SE மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. ஏராளமான மாற்றங்களுடன் அறிமுகமாகி இருக்கும் புது ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 ஆல்வேஸ் ஆன் ரெட்டினா டிஸ்ப்ளே, அதிக உறுதியான க்ரிஸ்டல் கொண்டிருக்கிறது. இத்துடன் உடல் ஆரோக்கியத்துக்கு சம்பந்தப்பட்ட ஏராளமான டிராக்கர் மற்றும் சென்சார்களுடன் புது வாட்ச் மாடல்கள் உருவாகி இருக்கின்றன.

    ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 அம்சங்கள்:

    45 அல்லது 41 மில்லிமீட்டர் அலுமினியம் கேஸ் மற்றும் ஸ்போர்ட் பேண்ட்

    ஆல்வேஸ் ஆன் ரெட்டினா டிஸ்ப்ளே

    IP6X டஸ்ட் ரெசிஸ்டண்ட் மற்றும் ஸ்விம் ப்ரூப்

    இசிஜி, ஹார்ட் ரேட், டெம்பரேச்சர் சென்சிங், பிலட் ஆக்சிஜன் மற்றும் சைக்கில் டிராக்கிங்

    எமர்ஜன்சி SOS, இண்டர்நேஷனல் எமர்ஜன்சி காலிங், ஃபால் டிடெக்‌ஷன், கிராஷ் டிடெக்‌ஷன்

    ஜிபிஎஸ் மற்றும் செல்லுலார் கனெக்டிவிட்டி


    ஆப்பிள் வாட்ச் SE அம்சங்கள்:

    44 அல்லது 41 மில்லிமீட்டர் அலுமினியம் கேஸ் மற்றும் ஸ்போர்ட் பேண்ட்

    ஸ்விம் ப்ரூப்

    ஹை மற்றும் லோ ஹார்ட் ரேட் நோட்டிபிகேஷன்

    எமர்ஜன்சி SOS, இண்டர்நேஷனல் எமர்ஜன்சி காலிங், ஃபால் டிடெக்‌ஷன், கிராஷ் டிடெக்‌ஷன்

    ஜிபிஎஸ் மற்றும் செல்லுலார் கனெக்டிவிட்டி


    ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா அம்சங்கள்:

    49 மில்லிமீட்டர் டைட்டானியம் கேஸ் மற்றும் ஃபிளாட் சபையர் முன்புறம்

    ஆல்வேஸ் ஆன் ரெட்டினா டிஸ்ப்ளே

    கஸ்டமைஸ் செய்யக்கூடிய ஆக்‌ஷன் பட்டன்

    அதிகபட்சம் 36 மணி நேரத்திற்கான பேட்டரி பேக்கப்

    டிரையல் லூப், ஆல்பைன் லூப் மற்றும் ஓஷன் பேண்ட் என மூன்று புது பேண்ட்கள்

    பிரெசிஷன் டூயல் பேண்ட் ஜிபிஎஸ், எல்டிஇ

    நைட் மோட், காம்பஸ், ப்ரோ ரன்னிங் அம்சங்கள், டெப்த் காஜ், கிராஷ் டிடெக்‌ஷன்

    இசிஜி, டெம்பரேச்சர் சென்சிங், பிலட் ஆக்சிஜன்

    ஸ்விம் ப்ரூப் (100 மீட்டர்), IP6X டஸ்ட் ரெசிஸ்டண்ட்

    வாட்ச் ஒஎஸ் 9

    EN13319, WR100, MIL-STD 810 சான்றுகள்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா மாடலின் இந்திய விலை ரூ. 89 ஆயிரத்து 900 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 மற்றும் வாட்ச் SE மாடல்கள் மிட்நைட் பிளாக், ஸ்டார்லைட் மற்றும் சில்வர் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இந்திய சந்தையில் புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 விலை ரூ. 45 ஆயிரத்து 900 என துவங்குகிறது. ஆப்பிள் வாட்ச் SE மாடல் விலை ரூ. 29 ஆயிரத்து 900 என துவங்குகிறது. மூன்று புதிய ஆப்பிள் வாட்ச் மாடல்களின் விற்பனை செப்டம்பர் 23 ஆம் தேதி துவங்குகிறது.

    Next Story
    ×