என் மலர்
கணினி
- கூகுள் பிளே ஸ்டோரில் செயல்பட்டு வந்த 2 ஆயிரம் போலி செயலிகள் கண்டறியப்பட்டு உள்ளன.
- இவை தனி நபர் கடன் வழங்குவதாக கூறி பணம் பறிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வந்துள்ளன.
கூகுள் நிறுவனம் தனி நபர் கடன் வழங்கும் சுமார் 2 ஆயிரம் செயலிகள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்து உள்ளது. ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.
இந்திய பயனர்களை போலி தகவல் கொண்டு மிரட்டி பணம் பறிக்கும் செயல்களில் தனி நபர் கடன் வழங்கும் செயலிகள் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், கூகுள் நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. சட்டத்துறை நிறுவனங்களுடன் ஆலோசனை செய்த பின் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என கூகுள் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

கூகுள் மட்டுமின்றி மத்திய அரசும் சுமார் 300 கடன் வழங்கும் செயலிகளுக்கு தடை விதிக்க திட்டமிட்டு வருகிறது. இந்த செயலிகள் பெரும்பாலும் சீனாவுடன் தொடர்பு கொண்டிருக்கும் காரணத்தாலேயே தடை விதிக்கப்பட உள்ளது. இவற்றில் பெரும்பாலான செயலிகள் பணம் அபகரிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட செயலிகள் இந்திய பயனர்களை குறிவைப்பது கண்டறியப்பட்டது. இது போன்ற செயலிகள் எதிர்காலத்தில் பிளே ஸ்டோரில் அதிகரிக்காமல் தடுக்க பிளே ஸ்டோர் விதிகளில் மாற்றம் செய்யப்படும் என கூகுள் ஆசியா பசிபிக் பகுதிக்கான நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு பிரிவு மூத்த இயக்குனரும், தலைவருமான சைகித் மித்ரா தெரிவித்து இருக்கிறார்.
- ட்ரூக் நிறுவனத்தின் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
- சமீபத்தில் தான் 7ஆர்ஜிபி லைட்டிங் கொண்ட ட்ரூக் பிடிஜி ஆல்பா இயர்போன் இந்தியாவில் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.
இந்திய சந்தையில் முன்னணி ஆடியோ நிறுவனங்களில் ஒன்றான ட்ரூக் இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பட்ஸ் ப்ரோ இயர்போன்களை அறிமுகம் செய்தது. இந்த இயர்பட்ஸ் அதிகபட்சம் 30 டிபி வரையிலான ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி கொண்டிருக்கிறது. இத்துடன் குவாட் மைக் என்விரான்மெண்டல் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி கொண்டுள்ளது. இது அழைப்புகளின் போது 90 சதவீத வெளிப்புற சத்தத்தை தடுக்கிறது.
இத்துடன் 12.4 மில்லிமீட்டர் ஜென்யூன் டைட்டானியம் ஸ்பீக்கர் டிரைவர்கள் வழங்கப்பட்டு இருப்பதால், இந்த இயர்பட்ஸ் சினிமா தர மியூசிக் அனுபவத்தை வழங்கும். இதில் பிரத்யேக கேமிங் மோட் மற்றும் அல்ட்ரா லோ லேடன்சி வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள இன்ஸ்டண்ட் பேரிங் தொழில்நுட்பம், அதிவேக இணைப்பு மற்றும் ஸ்டேபிலிட்டியை வழங்குகிறது.

இதில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 48 மணி நேரத்திற்கான பேக்கப் கிடைக்கிறது. இதன் கேசில் டிஜிட்டல் பேட்டரி இண்டிகேட்டர் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் பாஸ்ட் சார்ஜிங் வசதி இருப்பதால் பத்து நிமிட சார்ஜ் செய்தால் அதிகபட்சம் இரண்டு மணி நேரத்திற்கான கேம்பிளே வழங்குகிறது. இந்த இயர்பட்ஸ் உடன் ஒரு வருடத்திற்கான வாரண்டி வழங்கப்படுகிறது.
ட்ரூக் பட்ஸ் ப்ரோ இயர்பட்ஸ் பிளாக் மற்றும் புளூ என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் விற்பனை அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் வலைதளங்களில் நடைபெறுகிறது. அறிமுக சலுகையாக இந்த இயர்பட்ஸ் விலை ரூ. 1,799 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அதன் பின் இந்த இயர்பட்ஸ் விலை ரூ. 1999 என மாறி விடும்.
- பிட்ஷாட் நிறுவனம் இந்திய சந்தையில் பெரிய ஸ்கிரீன் கொண்ட புது ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.
- மேலும் இதில் சோலோ சின்க் தொழில்நுட்பம், மேம்பட்ட ப்ளூடூத் காலிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது.
பிட்ஷாட் நிறுவனத்தின் க்ரிஸ்டல் ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கிறது. இதில் 1.8 இன்ச் AMOLED காஸ்மிக் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. இந்திய சந்தையில் கிடைக்கும் பெரிய ஸ்கிரீன் ஸ்மார்ட்வாட்ச்களில் இதுவும் ஒன்று ஆகும்.
புதிய பிட்ஷாட் க்ரிஸ்டல் ஸ்மார்ட்வாட்ச் மாடலில் அட்வான்ஸ்டு ப்ளூடூத் காலிங் மற்றும் சோலோசின்க் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச்-இல் இன்பில்ட் ஸ்பீக்கர், மைக், ரேபிட் டயலர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த வாட்ச்-ஐ ஹவோபிட் (HaWoFit) செயலியுடன் சின்க் செய்து கொள்ளலாம்.

இதில் 1.8 இன்ச் AMOLED காஸ்மிக் டிஸ்ப்ளே, 60Hz ரிப்ரெஷ் ரேட் உள்ளது. இதன் ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ 70 சதவீதம் ஆகும். இதில் 368x448 பிக்சல் ரெசல்யூஷன், 100-க்கும் அதிக வாட்ச் பேஸ்கள், 560 நிட்ஸ் பிரைட்னஸ் உள்ளது. இதில் பெரிய சதுரங்க வடிவம் கொண்ட டயல் மற்றும் பக்கவாட்டில் ரோடரி பட்டன் வழங்கப்பட்டு இருக்கிறது.
பிட்ஷாட் க்ரிஸ்டல் ஸ்மார்ட்வாட்ச் மாடலில் 100-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள், பில்ட்-இன் 24 மணி நேர இதய துடிப்பு சென்சார், SpO2 மாணிட்டர், ஸ்லீப் டிராக்கர், ஸ்டெப் கவுண்ட்டர் என ஏராளமான ஆரோக்கியம் சார்ந்த அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளது. இதில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் ஏழு நாட்களுக்கு ஸ்டான்ட்-பை கிடைக்கும். இத்துடன் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதியும் உள்ளது.
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
பிட்ஷாட் க்ரிஸ்டல் ஸ்மார்ட்வாட்ச் கிரே, பிளாக் மற்றும் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 2 ஆயிரத்து 999 ஆகும். விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் ஆகஸ்ட் 28 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு துவங்குகிறது.
- நாய்ஸ் நிறுவனத்தின் புதிய நெக்பேண்ட் ரக இயர்போன் மாடல் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
- இந்த இயர்போன் என்விரான்மெண்டல் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி கொண்டுள்ளது.
நாய்ஸ் எக்ஸ்டிரீம் இயர்போன் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இது ப்ளூடூத் மூலம் இயங்கும் நெக்பேண்ட் ரக இயர்போன்கள் ஆகும். நாய்ஸ்பிட் கோர் 2 ஸ்மார்ட்வாட்ச் மாடலுடன் இந்த இயர்போன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த இயர்போன் நீண்ட நேர பேட்டரி பேக்கப் வழங்கும் திறன் கொண்டுள்ளது.
புதிய நாய்ஸ் எக்ஸ்டிரீம் நெக்பேண்ட் இயர்போன்கள் ரியல்மி, ஒன்பிளஸ், போட் மற்றும் இதர பிராண்டு இயர்போன்களுக்கு போட்டியை ஏற்படுத்தும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த இயர்போன் IPX5 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது. இதில் உள்ள இயர்பட்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்ள ஏதுவாக காந்தம் வழங்கப்பட்டு உள்ளது.

இதில் உள்ள ஹைப்பர்சின்க் தொழில்நுட்பம் சமீபத்தில் கனெக்ட் செய்யப்பட்ட சாதனத்துடன் தானாக கனெக்ட் ஆகும் வசதி கொண்டது, நாய்ஸ் எக்ஸ்டிரீம் நெக்பேண்ட் இயர்போன்களில் 10 மில்லிமீட்டர் டிரைவர் உள்ளது. இவை என்விரான்மெண்டல் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி கொண்டுள்ளது. அழைப்புகளின் போது ஏற்படும் வெளிப்புற சத்தத்தை இந்த அம்சம் பெருமளவு குறைத்து விடும்.
முழு சார்ஜ் செய்தால் நாய்ஸ் எக்ஸ்டிரீம் இயர்போன் 100+ அதிக மணி நேர பிளேபேக் வழங்கும். இந்த இயர்போன் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. இதை கொண்டு பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தாலே 20 மணி நேரத்திற்கான பேக்கப் வழங்குகிறது.
நாய்ஸ் எக்ஸ்டிரீம் நெக்பேண்ட் இயர்போன் தண்டர் பிளாக், பிலேசிங் பர்பில் மற்றும் ரேஜிங் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1,599 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை நாய்ஸ் அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் ப்ளிப்கார்டில் நடைபெறுகிறது.
- வாட்ஸ்அப் செயலியில் பயனர்களுக்கு அசத்தலான புது அம்சம் வழங்கப்பட்டு வருகிறது.
- இந்த அம்சம் கொண்டு ஈசியாக ஸ்டேட்டஸ் பார்க்க முடியும்.
மெட்டா நிறுவனத்தின் மெசேஜிங் செயலியான வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்-ஐ நேரடியாக வாட்ஸ்அப் சாட் லிஸ்ட்டில் இருந்தே பார்க்கும் வசதியை வழங்கி வருகிறது. இந்த அம்சம் தற்போது ஐஓஎஸ் பீட்டா பயனர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு இருக்கிறது.
வாட்ஸ்அப் ஐஓஎஸ் பீட்டா 22.18.0.70 வெர்ஷனில் ஸ்டேட்டஸ் அப்டேட்களை சாட் லிஸ்ட்டில் இருந்தே நேரடியாக பார்க்க வழி செய்கிறது. இந்த அம்சம் தேர்வு செய்யப்பட்ட சில பயனர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு இருக்கிறது. இதை பயன்படுத்தி ஸ்டோரிஸ் போன்றே புகைப்படம் மற்றும் வீடியோ உள்ளிட்டவைகளை 24 மணி நேரத்தில் மறையும் வகையில் செட் செய்து கொள்ளலாம்.

Photo Courtesy: WABetainfo
இந்த அப்டேட் சாட் லிஸ்ட் ஓரத்தில் ஸ்டேட்டஸ் வைக்கப்பட்டு இருப்பதை காண்பிக்கும். இந்த அம்சம் பீட்டா வெர்ஷன் பயன்படுத்தி வரும் சில பயனர்களுக்கு மட்டும் தான் வழங்கப்பட்டு இருக்கிறது. மற்ற பீட்டா பயனர்களுக்கு விரைவில் வழங்கப்பட்டு அதன் பின் தான் அனைவருக்குமான ஸ்டேபில் வெர்ஷனில் வழங்கப்பட உள்ளது.
இது தவிர சாட்டில் இருந்து அழிக்கப்பட்ட குறுந்தகவலை மீண்டும் பெற செய்யும் வசதியை வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. மிக முக்கிய உரையாடலின் போது தவறுதலாக குறுந்தகவலை அழித்து விட்டால் அதனை இந்த அம்சம் கொண்டு மீண்டும் பெற முடியும்.
- கூகுள் பிளே ஸ்டோரில் தீங்கு விளைவிக்கும் செயலிகள் பற்றி புது தகவலை சைபர்செக்யுரிட்டி வல்லுனர்கள் கண்டறிந்துள்ளனர்.
- இந்த செயலிகளை பெரும்பாலும் 20 லட்சத்திற்கும் அதிகமானோர் டவுன்லோட் செய்துள்ளனர்.
பல லட்சம் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மால்வேர் வழங்கி வரும் 35 செயலிகளை சைபர்செக்யுரிட்டி ஆராய்ச்சியாளர்கள் அடங்கிய குழு கண்டறிந்து இருக்கிறது. ரோமானிய சைபர்செக்யுரிட்டி தொழில்நுட்ப நிறுவனமான பிட்-டிபெண்டர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், கூகுள் பிளே ஸ்டோரில் புதிய மால்வேர் பிரச்சாரம் நடைபெற்று வருவதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
அதன்படி சில செயலிகள் பயனர்களை தவறான தகவல் கொடுத்து ஏமாற்றி அவர்களை இன்ஸ்டால் செய்ய வைக்கின்றன. இன்ஸ்டால் ஆனதும் பெயரை மாற்றிக் கொண்டு மிகத் தீவிரமாக விளம்பரங்களை வெளியிட்டு வருகின்றன. கூகுள் பிளே மூலம் வருவாய் பெறுவதோடு பயனர் அனுபவத்தையும் கெடுக்கின்றன. இந்த விளம்பரங்கள் நேரடியாக மால்வேருடன் தொடர்புடையவை ஆகும்.

கூகுள் பிளே ஸ்டோரில் சுமார் 20 லட்சத்தற்கும் அதிக டவுன்லோட்களை பெற்று இருக்கும் 35 செயலிகள் இவ்வாறு செயல்பட்டு வருவதாக பிட்-டிபெண்டர் தெரிவித்து இருக்கிறது. இவை முதலில் ஆண்ட்ராய்டு பயனர்களை நம்ப வைத்து இன்ஸ்டால் செய்ய கோருகிறது. இன்ஸடால் ஆனதும் பெயர் மற்றும் ஐகானை மாற்றிக் கொண்டு விளம்பரங்களை வெளியிட்டு வருகின்றன. இவற்றை கண்டறிவது மற்றும் அன்-இன்ஸ்டால் செய்வது மிகவும் கடினம் ஆகும்.
"பல்வேறு செயலிகளும் பயனர்களுக்கு விளம்பரங்களை காண்பிக்கின்றன. எனினும், இந்த செயலிகள் தங்களின் சொந்த பிரேம்வொர்க்கில் இருந்து விளம்பரங்களை காண்பிக்கும். இவை பயனர்களுக்கு மால்வேர்களையும் வழங்க வாய்ப்புகள் அதிகம் தான். பிடிக்காத செயலிகளை பயனர்கள் அழித்து விடலாம். ஆனால் இந்த செயலிகளை கண்டறிந்து அவற்றை அழிக்கும் ஆப்ஷனை டெவலப்பர்கள் மிக கடினமாக வைத்திருப்பர்," என பிட்-டிபெண்டர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
- ஒப்போ நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கலர்ஓஎஸ் 13 ஆண்ட்ராய்டு 13-ஐ சார்ந்து உருவாக்கப்பட்டு இருக்கிறது.
- புது கலர்ஓஎஸ் 13 அம்சங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளன.
ஒப்போ நிறுவனம் ஆண்ட்ராய்டு 13 சார்ந்து உருவாக்கப்பட்ட கலர்ஓஎஸ் 13-ஐ தனது ஸ்மார்ட்போன்களுக்காக அறிவித்து இருக்கிறது. கலரோஒஎஸ் 13 மற்றும் ஆக்சிஜன்ஒஎஸ் 13 ஒரே மாதிரியே காட்சியளிக்கின்றன. எனினும், இரு ஒஎஸ்களின் அம்சங்களில் எந்த அளவுக்கு மாற்றங்கள் இருக்கும் என்பதை பார்க்க வேண்டும்.
தண்ணீரின் திரவத் தன்மையை சார்ந்து கலர்ஒஎஸ் 13 டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது. இதில் ஒப்போ நிறுவனத்தின் முற்றிலும் புதிய அக்வாமார்பிக் டிசைன் உள்ளது. ஆக்சிஜன்ஒஎஸ் 13 தண்ணீர் மற்றும் இயற்கை சார்ந்து டிசைன் செய்யப்பட்டு இருந்தது. புதிய தீம் நிறங்கள் கடற்பரப்பில் சூரிய உதயம் மற்றும் மறைவின் போது ஏற்படும் நிற மாற்றங்களை தழுவி உருவாக்கப்பட்டுள்ளன. கலர்ஒஎஸ் 13-இல் கார்டு ஸ்டைல் லே-அவுட் உள்ளது.

இத்துடன் ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே வசதி உள்ளது. இதற்காக ஹோம்லேண்ட் பெயரில் புகைப்படங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் அனிமேஷன்கள் வெப்பநிலையை பொருத்து தானாக மாறும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. பயனர்களுக்கு சீரான அனுபவத்தை வழங்க ஏதுவாக டைனமிக் கம்ப்யுடிங் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
ஒரே ஆண்டில் ஒப்போ நிறுவனத்தின் 33 ஸ்மார்ட்போன்களுக்கு கலர்ஒஎஸ் 13-ஐ முதற்கட்டமாக வெளியிட அந்நிறுவனம் முடிவு செய்து இருக்கிறது. இதன் மூலம் 60 நாடுகளில் சுமார் 160 மில்லியன் பயனர்கள் புது ஒஎஸ்-ஐ பயன்படுத்த முடியும். கலர்ஒஎஸ் வரலாற்றில் இது மிகப் பெரிய அப்டேட் திட்டம் என ஒப்போ தெரிவித்து இருக்கிறது. 2023 வாக்கில் 20-க்கும் அதிக சாதனங்களில் கலர்ஒஎஸ் 13 வழங்கப்பட இருக்கிறது.
- ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய டெக்லைப் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.
- இந்த இயர்பட்ஸ் IPX5 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது.
ரியல்மி டெக்லைப் பட்ஸ் T100 மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ரியல்மி 9i 5ஜி ஸ்மார்ட்போனுடன் இந்த புது இயர்பட்ஸ் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புது டெக்லைப் இயர்பட்ஸ் எர்கோனோமிக் டிசைன், டூயல் டோன் மற்றும் 10 மில்லிமீட்டர் டிரைவர்களை கொண்டிருக்கிறது.
இத்துடன் ஏஐ சார்ந்து இயங்கும் என்விரான்மெண்டல் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி, IPX5 ஸ்வெட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, 28 மணி நேரத்திற்கான பேட்டரி பேக்கப் வழங்குகிறது. புதிய டெக்லைப் பட்ஸ் T100 மாடலில் ஏர்பாட்ஸ்-இல் இருப்பதை போன்ற ஸ்டெம் டிசைன் மற்றும் டைட்டானியம் பிளேட் செய்யப்பட்ட டையகிராம் கொண்டிருக்கிறது. இந்த இயர்பட்ஸ் 2500UIC சிப் கொண்டுள்ளது.

புதிய ரியல்மி டெக்லைப் பட்ஸ் T100 இயர்பட்ஸ் ப்ளூடூத் 5.3 கனெக்டிவிட்டி, குறைந்த எடையில் எர்கோனோமிக் டிசைன், கேமிங்கின் போது 88 மில்லி செகண்ட்ஸ் லேடன்சி ரேட் வழங்குகிறது. இந்த இயர்பட்ஸ் அழைப்புகளை ஏற்பது, நிராகரிப்பது, வால்யும் கண்ட்ரோல், போன்ற ஆப்ஷன்களுக்கு டச் கண்ட்ரோல் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
ரியல்மி டெக்லைப் பட்ஸ் T100 மாடலின் விலை ரூ. 1,499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த இயர்பட்ஸ் பாப் வைட் மற்றும் பன்க் பிளாக் என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் விற்பனை ஆகஸ்ட் 24 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு துவங்குகிறது. அறிமுக சலுகையாக இதன் விலை ரூ. 1299 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
- சியோமி நிறுவனத்தின் புதிய 32 இன்ச் ஸ்மார்ட் டிவி இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
- இந்த டிவி குவாட் கோர் கார்டெக்ஸ் பிராசஸர் கொண்டிருக்கிறது.
சியோமி ஸ்மார்ட் டிவி 5ஏ ப்ரோ 32 இன்ச் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இது சியோமி நிறுவனத்தின் புது ஸ்மார்ட் டிவி மாடல் ஆகும். இந்த ஸ்மார்ட் டிவி கடந்த ஆண்டு ஏப்ரல் மாத வாக்கில் சியோமி அறிமுகம் செய்த சியோமி ஸ்மார்ட் டிவி 5ஏ மாடலை விட மேம்பட்ட அம்சங்களை கொண்டிருக்கிறது. இத்துடன் பேட்ச்வால் 4 சார்ந்த ஆண்ட்ராய்டு டிவி 11, டிடிஎஸ் எக்ஸ், டால்பி ஆடியோ, விவிட் பிக்சர் என்ஜின் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளது.
இந்த டிவி பெசல்கள் இன்றி ஹெச்டி ரெடி டிஸ்ப்ளே கொண்டுள்ளது. சியோமி ஸ்மார்ட் டிவி 5ஏ ப்ரோ மாடலில் குவாட் கோர் கார்டெக்ஸ் ஏ55 பிராசஸர், 1.5 ஜிபி ரேம், 8 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. கனெக்டிவிட்டியை பொருத்தவரை இரண்டு ஹெச்டிஎம்ஐ 2.0, இரண்டு யுஎஸ்பி போர்ட்கள், ஏவிஐ இன்புட், 3.5 எம்எம் ஆடியோ ஜாக், ஈத்தர்நெட் போர்ட், டூயல் பேண்ட் வைபை மற்றும் ப்ளூடூத் 5.0 வழங்கப்பட்டு இருக்கிறது.

சியோமி ஸ்மார்ட் டிவி 5ஏ ப்ரோ 32 இன்ச் மாடலில் 24 வாட் ஆடியோ அவுட்புட் வழங்கும் இரண்டு ஸ்பீக்கர்கள் உள்ளன. இத்துடன் டால்பி ஆடியோ, டிடிஎஸ் எக்ஸ் சப்போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. இது லோ லேடன்சி மோட், டால்பி அட்மோஸ் பாஸ் த்ரூ வழங்குகிறது. முந்தைய ஸ்மார்ட் டிவி மாடல்களை போன்றே சியோமி ஸ்மார்ட் டிவி 5ஏ ப்ரோ 32 இன்ச் மாடலிலும் ஆண்ட்ராய்டு அல்லது ஐஓஎஸ் சாதனத்தில் இருந்து ஸ்கிரீன் காஸ்ட் செய்யும் வசதி உள்ளது.
மேலும் கூகுள் அசிஸ்டண்ட் சேவைக்கு ஹேண்ட்ஸ் பிரீ அக்சஸ், ரிமோட் கண்ட்ரோல், கூகுள் பிளே ஸ்டோர் பயன்படுத்தும் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் ஏராளமான செயலிகளை பயனர்கள் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இதில் உள்ள டிஸ்ப்ளே 768x1366 பிக்சல் ரெசல்யூஷன் மற்றும் 60Hz ரிப்ரெஷ் ரேட் கொண்டுள்ளது.
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
சியோமி ஸ்மார்ட் டிவி 5ஏ ப்ரோ 32 இன்ச் மாடல் விலை இந்திய சந்தையில் ரூ. 16 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட் டிவி அமேசான், ப்ளிப்கார்ட், Mi மற்றும் Mi ஹோம் ஸ்டோர் மற்றும் சில்லறை விற்பனை மையங்களில் விற்பனைக்கு வருகிறது. விரைவில் இதன் விற்பனை துவங்க உள்ளது. இந்த டிவி பிளாக் நிறத்தில் மட்டும் கிடைக்கிறது. தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டு கொண்டு பணம் செலுத்துவோருக்கு தள்ளுபடி மற்றும் மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது.
- கூகுள் நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஓஎஸ் பிக்சல் போன் பயனர்களுக்கு வெளியிடப்பட்டு வருகிறது.
- பலக்கட்ட சோதனைக்கு பின் வெளியாகி இருக்கும் புது ஓஎஸ் பல்வேறு பயனுள்ள அம்சங்களை கொண்டிருக்கிறது.
பிக்சல் போன் வைத்திருப்பவர்களுக்கு கூகுள் நிறுவனம் முற்றிலும் புதிய ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-ஐ வெளியிட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஆண்ட்ராய்டு 12 அக்டோபர் 19 ஆம் தேதி வரை வெளியிடப்படாமலேயே இருந்தது. அந்த வகையில், இந்த ஆண்டு புது ஓஎஸ் அப்டேட் யாரும் எதிர்பாராத சமயத்தில் வெளியாகி உள்ளது.
பிக்சல் 6 சீரிஸ் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோருக்கு இந்த ஓஎஸ் பல்வேறு பயனுள்ள அம்சங்களை வழங்குகிறது. குறிப்பாக ஆண்ட்ராய்டு 12 வெர்ஷனில் அண்டர் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் ஏராளமான பிரச்சினையை ஏற்படுத்தி வந்தது.
தற்போது புது ஓஎஸ் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 13 பீட்டா 4.1 வெர்ஷனிலேயே கைரேகை சென்சார் அதிகளவு மேம்பட்டு இருப்பதை உணர முடிந்ததாக பலர் சமூக வலைதளங்களில் தகவல் தெரிவித்து வந்தனர்.
ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-இல் சில மூன்றாம் தரப்பு செயலிகளின் ஐகான்கள் போன் டிஸ்ப்ளேவுக்கு ஏற்ற வகையில் மாறிக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. செயலிகள் எவ்வளவு தகவல்களை சேகரித்து இயக்குகின்றன என்பதை சிறப்பாக இயக்க முடியும். மேலும் குறிப்பிட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் க்ளிப்-போர்டு ஹிஸ்ட்ரி போன்ற விவரங்களை சேகரிக்க முடியாது.
- சாம்சங் நிறுவனம் சில தினங்களுக்கு முன் கேலக்ஸி போல்டு மற்றும் கேலக்ஸி வாட்ச் 5 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்தது.
- புதிய சாதனங்களின் இந்திய வெளியீட்டு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி வாட்ச் 5 சீரிஸ் - கேலக்ஸி வாட்ச் 5 மற்றும் கேலக்ஸி வாட்ச் 5 ப்ரோ மாடல்களை இந்திய சந்தையில் வெளியிட்டது. சில நாட்களுக்கு முன்பு தான் இரு சாதனங்களும் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன. இவற்றில் முறையே 1.2 இன்ச் மற்றும் 1.4 இன்ச் அளவு கொண்ட சூப்பர் AMOLED ஸ்கிரீன், எக்சைனோஸ் W920 பிராசஸர், சபையர் கிளாஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு இருக்கின்றன.
வியர் ஒஎஸ் சார்ந்த ஒன் யுஐ 4.5 கொண்டிருக்கும் கேலக்ஸி வாட்ச் 5 சீரிஸ் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான அம்சங்களை கொண்டுள்ளன. எனினும், கேலக்ஸி வாட்ச் 5 ப்ரோ மாடலில் சற்றே அதிக உறுதியான டைட்டானியம் கேசிங் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 5ஏடிஎம்+IP 68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் MIL-STD-810G சான்று பெற்று இருக்கின்றன.
இரு வாட்ச்களிலும் பயோ-ஆக்டிவ் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இது பல்வேறு உடல் ஆரோக்கிய அம்சங்களை ஒருங்கிணைத்த பிரத்யேக சிப்செட் ஆகும். கேலக்ஸி வாட்ச் 5 மற்றும் கேலக்ஸி வாட்ச் 5 ப்ரோ மாடல்களில் உள்ள பேட்டரிகள் முறையே 13 சதவீதம் மற்றும் 60 சதவீதம் பெரியது ஆகும்.

விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
- கேலக்ஸி வாட்ச் 5 40mm ப்ளூடூத் (கிராபைட், பின்க் கோல்டு மற்றும் சில்வர்) ரூ. 27 ஆயிரத்து 999
- கேலக்ஸி வாட்ச் 5 40mm எல்டிஇ (கிராபைட், பின்க் கோல்டு மற்றும் சில்வர்) ரூ. 32 ஆயிரத்து 999
- கேலக்ஸி வாட்ச் 5 44mm ப்ளூடூத் (கிராபைட், சபையர் மற்றும் சில்வர்) ரூ. 30 ஆயிரத்து 999
- கேலக்ஸி வாட்ச் 5 44mm எல்டிஇ (கிராபைட், சபையர் மற்றும் சில்வர்) ரூ. 35 ஆயிரத்து 999
- கேலக்ஸி வாட்ச் 5 ப்ரோ 45mm ப்ளூடூத் (பிளாக் டைட்டானியம் மற்றும் கிரே டைட்டானியம்) ரூ. 35 ஆயிரத்து 999
- கேலக்ஸி வாட்ச் 5 ப்ரோ 45mm எல்டிஇ (பிளாக் டைட்டானியம் மற்றும் கிரே டைட்டானியம்) ரூ. 49 ஆயிரத்து 999
இவற்றின் முன்பதிவு சாம்சங் மற்றும் முன்னணி ஆன்லைன் விற்பனை வலைதளங்கள் மற்றும் சில்லறை விற்பனை மையங்களில் ஆகஸ்ட் 16 ஆம் தேதி துவங்குகிறது. விற்பனை ஆகஸ்ட் 26 ஆம் தேதி துவங்குகிறது.
அறிமுக சலுகை விவரங்கள்:
கேலக்ஸி வாட்ச் 5 சீரிஸ் மாடல்களை முன்பதிவு செய்வோர் ரூ. 11 ஆயிரத்து 999 மதிப்புள்ள கேலக்ஸி பட்ஸ் 2 மாடலை ரூ. 2 ஆயிரத்து 999 விலையில் வாங்கிட முடியும். இத்துடன் ரூ. 5 ஆயிரம் கேஷ்பேக் உடன் எளிய கடன் வசதி, பழைய சாதனங்களை எக்சேன்ஜ் செய்து மேலும் ரூ. 5 ஆயிரம் வரை கேஷ்பேக் பெற முடியும்.
- சியோமி நிறுவனம் தனது பெரிய டேப்லெட் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது.
- இந்த டேப்லெட் முற்றிலும் மெட்டல் பாடி மற்றும் வளைந்த ஓரங்களை கொண்டிருக்கிறது.
சியோமி நிறுவனத்தின் புதிய சியோமி பேட் 5 ப்ரோ சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. மிக்ஸ் போல்டு 2, ரெட்மி K50 எக்ஸ்டிரீம் எடிஷன், வாட்ச் S1 ப்ரோ மற்றும் பட்ஸ் 4 ப்ரோ போன்ற சாதனங்களுடன் புதிய பேட் 5 ப்ரோ மாடலும் அறிமுகமாகி இருக்கிறது. புதிய பேட் 5 ப்ரோ சியோமி இதுவரை வெளியிட்டதில் அளவில் பெரிய மாடல் ஆகும்.
சியோமி பேட் 5 ப்ரோ மாடலில் TÜV ரெயின்லாந்து சான்று பெற்ற 12.4 இன்ச், 2.5K ஹெச்டி டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்டிருக்கிறது. இத்துடன் வளைந்த ஓரங்கள் மற்றும் நான்கு புறமும் மெட்டல் பாடி கொண்டிருக்கிறது. இந்த டேப்லெட்டில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி வரையிலான ரேம், 512 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது.

சியோமி பேட் 5 ப்ரோ அம்சங்கள்:
- 12.4 இன்ச் 2.5K 120Hz டிஸ்ப்ளே, அதிகபட்சம் 500நிட்ஸ் பிரைட்னஸ்
- 50MP பிரைமரி கேமரா, 1/2.76″, 1.28μm, f/1.8, PDAF
- 2MP டெப்த் கேமரா
- 20MP செல்பி கேமரா, 1.6μm
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர்
- 6/8/12 ஜிபி ரேம்
- 128 ஜிபி /256 ஜிபி /512 ஜிபி (UFS 3.1) மெமரி
- வைபை 6,5,4, ப்ளூடூத் 5.2 - AAC/LDAC /LHDC2.0/3.0
- ஹைரெஸ் டால்பி அட்மோஸ் வசதி
- ஆண்ட்ராய்டு- 12 சார்ந்த எம்ஐயுஐ பேட் 13
- 10000 எம்ஏஹெச் ரேட்டரி
- 64 வாட் பாஸ்ட் டார்ங்[ிங்
விலை விவரங்கள்:
சியோமி டேல்லெட் மாடல் பிளாக், சில்வர் மற்றும் மொரியமா நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 444 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 35 ஆயிரத்து 380 துவங்குகிறது.டாப் எண்ட் மாடல் விலை 49 ஆயிரத்து 535 ஆகும்.






